மீண்டு எழும் தன்மை என்பது "கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாலோ…அல்லது இன்றைய உலகின் சாதாரண மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாலோ மீண்டு வருவதற்கான திறன், எதிர்த்துத்தாக்குதல், துன்பக் காலத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக மாற்றியமைத்து, அத்துடன் சமூக மற்றும் கல்வித் திறனை வளர்த்துக் கொள்ளுதல்" ஆகும்.1 இளைஞர்கள் தங்கள் பள்ளிப்படிப்பிலும், ஆரோக்கியத்திலும், அவர்கள் சமூக வாழ்விலும் – வளரும்போது சந்தேகத்திற்கு இடமின்றி துன்பக் காலத்தை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பாராதவிதமாக, மீண்டு எழும் தன்மையின் முக்கியத்துமானது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. வாழ்க்கை பல்வேறு போராட்டங்களால் நிரம்பியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை உறவுகளால் ஏற்படுபவை. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த வகையான வலியிலிருந்தும் பாதுகாக்க முற்படுகிறார்கள், அவர்களுடன் சேர்ந்து பேசவேண்டிய இடங்களில், அவர்களுக்குப் பதிலாகப் பேசுகிறார்கள், அவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக கற்பிக்கக்கூடிய முக்கியமான தருணங்களில் குறுக்கிடுகிறார்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இதைச் செய்வது, உங்கள் பதின்மவயதினருக்கு கெடுதல் செய்வதாக அமையக்கூடும் – மேலும் அவர்களை வயதுவந்த பருவத்திற்குத் தயார் படுத்தாமல் விட்டுவிடக்கூடும். ஏனென்றால் வாழ்க்கையானது எல்லோரும் எப்போதுமே அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும் சூழலில் அமைந்துவிடாது.
எங்களது ஆராய்ச்சியில் 2 ஒரு பதின்மவயது பிள்ளைக்கு அதிக மீண்டு எழும் தன்மை இருந்தால் இணைய வழி கொடுமைப்படுத்துதல் மூலம் அவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவு குறைவு என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கூடுதலாக, மோசமாக நடத்தப்படும் சூழலை எதிர்கொள்ளும்போது மாணவர்கள் செய்யவேண்டும் என பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் விரும்பியஅனைத்து விஷயங்களையும் அதிக அளவிலான மீண்டு எழும் தன்மை கொண்ட பதின்மவயதினர் செய்தார்கள். அவர்கள் இதுகுறித்து பள்ளிக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து தளம்/செயலிக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தங்களது திரைப்பெயரை மாற்றிக்கொண்டனர், பாதிப்பை ஏற்படுத்துபவரைத் தடுத்தனர் அல்லது வெளியேறினர். மறுபுறம், மிகக் குறைந்த அளவிலான மீண்டு எழும் தன்மையைக் கொண்டவர்கள் இணையவழி கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகும்போது பெரும்பாலும் எதுவும் செய்யாமல் இருந்தனர்.
உங்களது பதின்மவயது பிள்ளை தனது சமூக ஊடகக் கணக்கில் புண்படுத்தக்கூடிய கருத்துகளை எதிர்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை இயல்புநிலையாகவே, உங்களது பதின்மவயது பிள்ளை மனதளவில் உடைந்து போக வாய்ப்புள்ளது. அத்துடன் இன்னலுக்கு உள்ளாவதற்கு தகுதியான ஒரு "தோல்வியடைந்தவராக" தான்இருப்பதாகவும், கொடுமைப்படுத்தப்படுதல் என்பது வாழ்க்கையில் தனக்காக விதிக்கப்பட்டது என்றும், தன்னைப் பற்றிய பெரும்பாலான நபர்களின் கருத்தின் பிரதிநிதியாக தான் இருப்பதாகவும் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளத் தொடங்கலாம். பொதுவாகவே, அவர்கள் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி சிந்தித்து, அதை நேர்மறையான முறையில் அதிலிருந்து மீண்டுவருவது அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தன்னை இணையவழி கொடுமைப்படுத்துபவர், எடுத்துக்காட்டாக, அந்த நபர் தனது சொந்த பாதுகாப்பின்மை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மற்றவர்களை மனதளவில் காயப்படுத்துவதன் மூலம் மட்டுமே தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி நிம்மதியாக உணர முடியும் என்று அவர்கள் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளக்கூடும். எல்லாக் கோணங்களிலும் சிந்தித்துப் பார்க்கும்போது பாதிப்பை ஏற்படுத்துபவரின் கருத்தும் செயல்களும் உண்மையில் முக்கியமில்லை என்பதையும், அந்த நபர் தனது எண்ணத்தை "எப்போதும் ஆட்கொள்வதற்கு" விடக்கூடாது என்பதையும் அவர்கள் தனக்குத் தானே நினைவூட்டிக்கொள்ளலாம்.
அங்குதான் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் தலையிட வேண்டியிருக்கும், மேலும் அங்குதான் உறுதியான நோக்கத்துடன், நிதானமாக மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் உண்மையாகவே பயனுள்ளதாக இருக்கும். பிறரது கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பதின்மவயதினரின் நம்பிக்கைகளில் எது பாராட்டத்தக்கது அல்ல என்பதை அடையாளம் காண அவர்களுக்கு உதவும் சூழல் அமையும்போது அவர்களின் ஆரோக்கியமற்ற சிந்தனை முறைகளைத் திசைதிருப்ப, தகர்த்தெறிய மற்றும் மறுப்பதற்கான தேவைக்கு அவர்களின் திறன்களின் கருவிப்பெட்டியில் கூடுதல் கருவிகளைச் சேர்ப்போம்.3 பின்னர் அவர்கள் ஆரோக்கியமான பயனளிக்கும் வகையிலான சிந்தனைகளாக அவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது தற்போதும் எதிர்காலத்திலும் வாழ்க்கைக்கான நேர்மறையான மனப்பான்மைகளாகவும் அணுகுமுறைகளாகவும் மாற்றப்படுகிறது.
பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் மீண்டு எழும் தன்மையைக் கற்பிக்க திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் இளையோர், பாப் கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுடன் கிட்டத்தட்ட பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துள்ளனர். நாம் இயற்கையாகவே கதையின் கட்டமைப்போடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். மேலும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் கேட்ட, பார்த்த அல்லது படித்த மிகச்சிறந்த கதைகளால் மிகப்பெரிய அளவில் பிரம்மிப்படைகிறோம். பல குழந்தைகள் தொடக்கப் பள்ளியில் தேவதைக் கதைகள் மற்றும் கிரேக்க புராணக் கதைகளாலும், வளர்ந்து பெரியவர் ஆகும்போது விடலைப்பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் சூப்பர் ஹீரோ கதைகளாலும், வாழ்வின் பிற்காலத்தில் விளையாட்டு பின்னணியிலான மற்றும் போர் சார்ந்த திரைப்படங்கள் போன்றவற்றாலும் கவரப்படுகின்றனர். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அவர்கள் ஒரு சிறந்த கதையாக தங்கள் சொந்த வாழ்க்கையை வாழுமாறு ஊக்குவிக்கின்றன. பின்வருவன எங்களுக்குப் பிடித்தவற்றுள் சில, வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளன.
நடுநிலைப் பள்ளி
உயர்நிலைப் பள்ளி
நடுநிலைப் பள்ளி
உயர்நிலைப் பள்ளி
பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும், பதின்மவயதினர் தாங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு ஆன்லைன் (அல்லது ஆஃப்லைன்!) துன்பக் காலத்தையும் மிகவும் நேர்மறையான முறையில் மறுவடிவமைக்க உதவுவதன் மூலம் மற்றும் இவற்றை வெற்றிகரமாக கடந்து வந்தவர்களின் அணுகுமுறைகள், செயல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தொடர்புடைய கதைகளை வழங்க ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மீண்டு எழும் தன்மையைக் கட்டமைப்பதற்கு முன்னுரிமை அளிப்பது சிறந்த விஷயமாகும். அவ்வாறு செய்வது அவர்களின் சொந்த ஆன்லைன் அனுபவங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு அவர்களைத் ஆயத்தப்படுத்தும், மேலும் தீங்குகளிலிருந்து தங்களைச் சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ள தயார்படுத்தும். கூடுதலாக, இவ்வாறான வழிகளில் மீண்டு எழும் தன்மையை வளர்ப்பது என்பது உங்களது குழந்தையின் தன்னம்பிக்கை, சிக்கலைத் தீர்க்கும் திறன், சுயசார்பு மற்றும் வாழ்வின் நோக்கத்தை உணர்தல் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் – இவை அனைத்தும் ஆரோக்கியமான இளையோரின் வளர்ச்சிக்கு முக்கியமானவை ஆகும்.
1 ஹென்டர்சன், N., & மில்ஸ்டீய்ன், M. M. (2003). பள்ளிகளில் மீண்டு எழும் தன்மை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அது நிகழுமாறு செய்தல்.
தவுசண்ட் ஓக்ஸ், CA: சேஜ் பப்ளிக்கேஷன்ஸ் (கார்வின் பிரஸ்)
2 ஹிந்துஜா, S. & பட்சின், J. W. (2017). கொடுமைப்படுத்துதல் மற்றும் இணைவழி கொடுமைப்படுத்துதலால் பாதிக்கப்படுவதைத் தடுக்க இளையோரின் மீண்டு எழும் தன்மையை வளர்த்தல். குழந்தை வன்கொடுமை & புறக்கணிப்பு, 73, 51-62.
3 ஆல்பர்ட் எல்லிஸின் ABC (துன்பக் காலம், நம்பிக்கைகள் மற்றும் விளைவுகள்) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. எல்லிஸ், A-ஐப் பாருங்கள். (1991). பகுத்தறியும்-உணர்வுசார் சிகிச்சை (RET) இன் திருத்தப்பட்ட ABCகள். பகுத்தறியும்-உணர்வுசார் மற்றும் அறிவாற்றல்சார்-நடத்தை சிகிச்சைக்கான இதழ், 9(3), 139-172.