உங்கள் Meta அவதாரை நட்சத்திர அவதாராக்குங்கள்

ரேச்சல் F ரோட்ஜர்ஸ், PhD

நவம்பர் 12, 2024

அறிமுகம்: Metaverseக்கான உண்மையான அடையாள வெளிப்பாடு

எல்லிஸ் டிக், Reality Labs கொள்கை மேலாளர் மற்றும் ஜாக்லின் டோய்க்-கீஸ், பாதுகாப்புக் கொள்கை மேலாளர்

இந்த ஆண்டு, Facebook, Instagram, WhatsApp, Meta Horizon மற்றும் பிற மெய்நிகர் மற்றும் கலவையான நிஜம் போல் தோன்றும் அனுபவங்களில் மக்கள் தங்களைப் குறிப்பிடுவதற்கு கூடுதல் விருப்பத்தேர்வுகளை வழங்குவதற்காக எங்கள் Meta அவதார்களைப் புதுப்பித்துள்ளோம். இந்த அடுத்த தலைமுறை அவதார்கள் புதிய விதிமுறை வடிவத்தை அறிமுகப்படுத்தி, மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள அதிக சக்தியை வழங்குகின்றன.

அவதார்கள் என்பன ஆன்லைனில் தொடர்புகொள்ள உங்களை நீங்கள் டிஜிட்டல் முறையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்துபவை என நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் வருங்கால metaverse இல், இவை செயலிகள் மற்றும் அனுபவங்கள் அனைத்திலும் உள்ள அடையாளத்தின் முக்கிய பகுதியாக இருக்கும். அதனால்தான் உங்களின் தனித்துவமான படைப்பாற்றல், ஆர்வங்கள் மற்றும் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அவதார்களை வடிவமைப்பதை எளிதாக்க விரும்புகிறோம்.

மக்களுக்கு அவர்களின் உண்மையான சுயத்தைக் குறிப்பிடும் அவதார்களை உருவாக்கத் தேவையான கருவிகளை வழங்க விரும்புகிறோம். ஆனால் அடையாளத்தின் வெவ்வேறு பகுதிகள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு மெய்நிகர் இடங்களில் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை பாதிக்கக்கூடிய விதத்தினையும் நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம். இதைச் செய்ய எங்களுக்கு உதவுவதற்கு, நாங்கள் இளம் நபர்கள் மற்றும் பிற டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த வழிகாட்டியை உருவாக்க, மீடியா மற்றும் இளம் நபர்களின் நலனில் கவனம் செலுத்துவதைத் தம் பணியாகக் கொண்ட கல்வியாளரான டாக்டர் ரேச்சல் ரோட்ஜர்ஸ் உடன் குழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதில், அவதார்கள் மூலம் அடையாளத்தைப் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வெளிப்படுத்தும் விதம் குறித்து பதின்மவயதினருக்கான உதவிக்குறிப்புகளையும் பெற்றோருக்கான வழிகாட்டுதலையும் காணலாம்.

இந்த வழிகாட்டி இளம் நபர்களும் அவர்களது பெற்றோரும் கூட்டாக, மெய்நிகர் சுய வெளிப்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவதார் அனுபவங்களில் பாதுகாப்பாக ஈடுபடுவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்கவும் உதவும் என நம்புகிறோம். ஒவ்வொரு அவதாரும் உங்கள் உண்மையான சுயத்தைப் பிரகாசிக்க வைக்கும் நட்சத்திரமாகும் - இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தித் தொடங்கி, உங்கள் கற்பனை உங்களை எந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பாருங்கள்!

Meta அவதார்கள் உங்களை டிஜிட்டல் உலகில் புதிய மற்றும் அற்புதமான வழிகளில் வெளிப்படுத்துவதை அனுமதிக்கின்றன.


உங்கள் Meta அவதாரை நட்சத்திர அவதாராக்குவது எப்படி என்பதைப் பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள்: பாதுகாப்பான, கவனத்துடன் உருவாக்கப்பட்ட, உண்மையான மற்றும் மரியாதைக்குரிய அவதார்.


நட்சத்திர அவதார்களை ஏன் உருவாக்க வேண்டும்?

நீங்கள் அறிந்திருக்கக்கூடிய வகையில், மக்கள் தங்கள் அவதார்கள் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டுமென்பதில் உண்மையில் குறிப்பிட்ட நோக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் தோற்றத்தை உருவாக்கலாம் அல்லது அவர்கள் தங்களின் பகட்டான பதிப்பாகத் தோன்றக்கூடிய அவதாரை உருவாக்கலாம்

பெரும்பாலான அவதார்கள் ஒருவருக்குள்ளேயும் உள்ள சுயம், உடல் ரீதியான பண்புகள், அதிக உத்வேகமூட்டும் சில விஷயங்கள் ஆகியவற்றின் கலவையாகவே இருக்கும். நிஜ உலகில் உங்களால் வெளிப்படுத்த முடியாத வழிகளில் உங்களை வெளிப்படுத்துவதற்கு அவதார்கள் சிறந்த வழியாக இருக்கும்.

உங்கள் ஆளுமை மற்றும் அடையாளத்தில் நீங்கள் அக்கறை காட்டும் பகுதிகளைப் பற்றி அவதார் மூலம் சிந்திப்பது, தொடங்குவதற்கான நல்ல இடமாக இருக்கும்! இதைக் கண்டறிவது சில சமயங்களில் கடினமாக இருக்கலாம் என்றாலும், ஏதோவொன்றை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால் பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவரிடம் எப்போதும் பேசுங்கள்.

நட்சத்திர அவதாரின் சரிபார்ப்பு:


  • என்னைப் பற்றி பிறர் பார்க்க வேண்டும் அல்லது தெரிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்பும் பகுதிகள் யாவை? அவை ஏன் எனக்கு முக்கியமானவை?
  • என்னை வெளிப்படுத்தும் வகையில் நான் எதைச் சரிசெய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும், ஏன்?
  • எனது அவதார் அனைவருக்கும் தெரிய வேண்டுமா அல்லது குறிப்பிட்ட குழுவில் உள்ள நபர்களுக்குத் தெரிய வேண்டுமா? இது எந்த அவதாரைப் பொறுத்துள்ளது?

பாதுகாப்பாக இருத்தல்

ஆன்லைனில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்துக்கொள்வதில் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்கலாம். நட்சத்திர அவதார்களுக்கும் இது பொருந்தும். கார்ட்டூன் போன்ற அவதாரும் உங்களைக் குறிப்பிடும் படத்திற்கு வேடிக்கையான மாற்றீடாக இருக்கும்.

நாம் ஆன்லைனில் இருக்கும்போது, ​​நம்மைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நாம் யார், நாம் எதைப் பற்றி அக்கறை கொள்கிறோம், நாம் எவ்வாறான அபிப்ராயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம், நாம் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தலாம்.

அவதார்களும் இதனைச் செய்யும்! மற்றவர்களின் அவதார்கள் அவர்களைப் பற்றி நமக்குச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்குப் பிடித்த அணி அல்லது இசைக்குழுவின் சட்டையை அணிவது, நீங்கள் அதனுடைய ரசிகர் என்று மற்றவர்களுக்குக் கூறுகிறது. உங்கள் அவதார் உங்கள் அடையாளத்தின் முக்கியமான பகுதிகளையும் பகிரலாம். உங்கள் இனம், இனத்தோற்றம் மற்றும் கலாச்சாரம், வயது, பாலின வெளிப்பாடு, திறன் அல்லது மதம் ஆகியவற்றைப் பற்றி இது மற்றவர்களுக்குச் சொல்லக்கூடும்.

நிஜ அல்லது மெய்நிகர் உலகில் சுயத்தை முன்வைப்பது என்பது உங்கள் குரலைப் போலவே தகவல்தொடர்புக் கருவியாகச் செயல்படுகிறது, மேலும் நீங்கள் இதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

சில நேரங்களில் மற்றவர்கள் நம் தோற்றத்தை, அவர்கள் உணராவிட்டாலும் கூட, சமூக ரீதியாக ஒரே மாதிரியான விதங்களில் அமைந்திருப்பதாகக் காண்கிறார்கள். உலகத்தை விரைவாக விளக்குவதற்கு நம் மனம் உருவாக்கும் குறுக்குவழிகள் இவை. ஆனால் இவை நியாயமானவையாக, துல்லியமானவையாக அல்லது எப்போதும் உதவியானவையாக இல்லாமல் இருக்கலாம். உங்களின் அவதார் தேர்வுகளைப் பற்றி நீங்களே ஒன்றை அனுமானித்துக் கொள்ளாமல், பிறரிடம் கேட்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்! மற்றவர்கள் உங்களைப் பற்றி சரியானவை அல்லாத அனுமானங்களைக் கூறலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அவதாரின் உடல் வடிவம், முகம் மற்றும் உடைகள் உட்பட உங்கள் அவதார் தோற்றமளிக்கும் விதம், மற்றவர்களுக்கு நீங்கள் எத்தனை வயதுடையவராகத் தோன்றுகிறீர்கள் என்பதைப் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, சில தேர்வுகள் உங்கள் உண்மை வயதை விட உங்களை சற்று வயதானவராகவோ அல்லது இளமையாகவோ காட்டலாம்.

உங்கள் அவதாரை உருவாக்கும்போது, ​​மற்றவர்களுடன் எதைப் பகிர விரும்புகிறீர்கள், மக்கள் எவ்வாறு பார்க்க வேண்டும், யாருடன் ஈடுபட விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

நட்சத்திர அவதாரின் சரிபார்ப்பு: பாதுகாப்பாக இருத்தல்

ஆன்லைன் உட்பட எந்த இடத்திலும், உங்கள் தோற்றத்தின் அடிப்படையில் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, உங்கள் அவதாரை நீங்கள் வடிவமைக்கும் விதத்தைப் பொறுத்து, மக்கள் உங்கள் நிஜ வயதை விட உங்களை வயதானவராக நினைக்கலாம் அல்லது வயதுக்கு ஏற்றவாறு இல்லாமல் பிற விதங்களில் உங்களுடன் ஈடுபடலாம். இது அசௌகரியமாக இருக்கலாம். உங்களைப் பற்றி நீங்கள் எவ்வாறான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் மற்றும் மக்கள் உங்களைப் பற்றி என்னென்ன விஷயங்களை "கவனிக்கலாம்" என்று இரண்டையும் கவனத்தில் கொள்ளுங்கள்!

உங்களிடம் நீங்களே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • சில உடல் ரீதியான குணாதிசயங்களைக் கொண்டவர்களைப் பற்றி நான் ஏதேனும் அனுமானங்களை ஏற்படுத்துகிறேனா?
  • நான் என்னை முன்வைக்கும் விதத்தைப் பார்த்து மக்கள் என்னைப் பற்றி எவ்வாறான அனுமானங்களைச் செய்யலாம்?
  • என் அவதார் மற்றும் அதன் ஊடாக நான் மேற்கொள்ளும் செயல்கள் மூலம் நான் எதனை வெளிப்படுத்துகிறேன்?

உங்களையும் உங்கள் நண்பர்களையும் ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க உங்களிடம் ஏற்கனவே உத்திகள் இருக்கலாம்! நீங்கள் "நிஜத்தில்" எப்படி இருக்கிறீர்கள் என்பதை யாராவது தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்களுக்கு உங்களுடைய படத்தை அனுப்பும் முன் இருமுறை யோசியுங்கள். நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்கள் என்பதில் கவனத்துடன் இருங்கள் மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் கற்றுக்கொண்ட உத்திகளைப் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரியாவிட்டால் நம்பகமான பெரியவரிடம் கேளுங்கள்.


கவனத்துடன் இருத்தல்

உங்கள் அவதார் உங்களைப் பற்றிய சில விஷயங்களை எவ்வாறு தெரிவிக்கலாம் மற்றும் யாரெல்லாம் உங்களைப் பார்ப்பார்கள் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

வேடிக்கைக்காகவும், மற்றவர்களுடன் பேசவும், நம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் மெய்நிகர் இடங்களைப் பயன்படுத்துகிறோம். ​பள்ளி, குடும்ப இரவு விருந்து, பணியிடம் அல்லது ஹேங்-அவுட் செய்தல் போன்ற இடங்களில் நீங்கள் வித்தியாசமாக இருப்பதைப் போலவே, இந்த இடங்களுக்கு வெவ்வேறு "சுயங்களைக்" கொண்டு வரலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் எவ்வாறு உங்களைக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள், ஏன் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

அவதார் வடிவத் தேர்வுகள் சில இடங்களுக்கு அதிகமான அல்லது குறைவான பொருத்தமுடையதாக இருக்கலாம். தீவிரமாக ஈடுபடுவதற்கு இன்னும் மெருகூட்டப்பட்ட அவதாரை நீங்கள் விரும்பலாம் அல்லது கேம்களுக்கு அதிக விளையாட்டுத்தனமான அவதாரை நீங்கள் விரும்பலாம்.

எல்லா இடங்களிலும் ஒரே Meta அவதாரை நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது வெவ்வேறு செயலிகள் அல்லது இடங்களுக்குத் தனித்துவமான அவதாரைப் பயன்படுத்தலாம். Facebook, Instagram, WhatsApp அல்லது Meta Horizon இல் நீங்கள் யாருடன் செயலை மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த இடங்களில் உள்ளவர்களுடன் உங்களைப் பற்றி என்னென்ன விஷயங்களைப் பகிர விரும்புகிறீர்கள்? நீங்கள் எதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புகிறீர்கள்?

வெவ்வேறு மனநிலைகளைப் பதிவு செய்ய பல அவதார்களை உருவாக்குங்கள் அல்லது உங்கள் அடையாளத்தின் வெவ்வேறு பகுதிகளை ஹைலைட் செய்யுங்கள்!

நட்சத்திர அவதாரின் சரிபார்ப்பு: கவனத்துடன் இருத்தல்

உங்களிடம் நீங்களே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • எனது அவதாரின் அம்சங்கள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் நான் யார் என்பதை எவ்வாறு தெரிவிக்கின்றன?
  • இந்த இடத்தில் நான் யாருடன் செயலை மேற்கொள்கிறேன்? எனது கணக்கு தனிப்பட்டதாக உள்ளதா அல்லது எனது அவதாரை யாரேனும் பார்க்க முடியுமா?
  • இந்தச் சூழலுக்குப் பொருத்தமான தேர்வுகளை நான் கவனத்துடன் செய்கிறேனா?

புதிதாக ஓர் அவதாரை உருவாக்க நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது உங்களைப் போலவே மிகவும் தோற்றமளிக்க செல்ஃபியுடன் தொடங்கலாம்!


உண்மைத்தன்மையுடன் இருத்தல்

அவதார்களைப் பற்றிய அருமையான விஷயங்களில் ஒன்று, எந்த இடத்திலும் மற்றவர்கள் நம்மை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நம்மை அனுமதிக்கின்றன. ஒவ்வொருவரும் முக அம்சங்கள் மற்றும் முடி, மேக்அப் மற்றும் ஆடைகளைக் கொண்டு பரிசோதனை செய்து பார்க்கலாம். நிஜ உலகில் இருப்பதை விட, அவதாரின் மூலம் உங்களின் சில பகுதிகள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்க இவை உதவும்.

அவதார்கள் என்பன வித்தியாசமான தோற்றங்களை முயற்சி செய்வதற்கும் அவற்றைப் பற்றி நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதைப் பார்ப்பதற்குமான வேடிக்கையான மற்றும் எளிதான வழியாக உள்ளன. சில நேரங்களில் நமது உடல் தோற்றம் நமது "உண்மையான சுயத்தை" நன்கு வெளிப்படுத்துவது போன்ற உணர்வைத் தரும். ஆனால், நம்மைப் பற்றிய அம்சங்கள் நிஜ உலகில் பிரகாசிக்காத சில சமயங்களும் உள்ளன. உங்கள் அவதார் உங்கள் உள்ளுணர்வை கிட்டத்தட்ட பிரதிபலிக்கலாம்!

நீங்கள் உங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதையும், மற்றவர்கள் உங்களை எவ்வாறு பார்க்க விரும்புகிறீர்கள் என்பதையும் உண்மையாக்கும் வகையில் உங்கள் அவதாரை வடிவமைக்கலாம். இது இடங்கள் அனைத்திலும் இடத்திற்கு ஏற்ப வேறுபட்டதாக இருக்கலாம்! இது காலப்போக்கில் மாறுபடவும் செய்யலாம். சில நாட்களில் நாம் வித்தியாசமாக உணர்கிறோம், நாம் அனைவரும் மாறுகிறோம், வளர்கிறோம். உங்களுக்கு எது உண்மைத்தன்மை உடையதாகத் தோன்றுகிறதோ அதைக் கண்டறிய வெவ்வேறு விருப்பத்தேர்வுகளை முயற்சி செய்யுங்கள் - இது நீங்கள் நிஜ வாழ்க்கையில் செய்வது போல் இருக்கலாம் அல்லது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்! இங்கு விதிகள் என்று எதுவும் இல்லை.

நீங்கள் நிஜம் போல் தோன்றுதல் அல்லது விளையாட்டுத்தனம் மூலம் பரிசோதனை செய்து பார்க்க விரும்பலாம். எடுத்துக்காட்டாக, கேசத்தின் நிறங்கள் சில, மற்ற நிறங்களை விட குறைந்தளவு நிஜம் போல் தோன்றுவதாக இருக்கும். இவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நிஜம் போல் தோன்றுவதை விட விளையாட்டுத்தனமான படத்தை வரையலாம். இல்லையெனில், ரோபோ அல்லது உங்களுக்குப் பிடித்த திரைப்படக் கதாபாத்திரம் போன்ற அற்புதமான அவதாராக நீங்கள் மாறலாம்! மீண்டும் கூறுகையில், உங்கள் அவதாரைப் பயன்படுத்தும் இடங்களின் சூழலை எப்போதும் கவனியுங்கள்.

நட்சத்திர அவதாரின் சரிபார்ப்பு: உண்மையானவராக இருத்தல்

நிஜ உலகில் உங்களை ஏற்கனவே தெரிந்தவர்கள் உங்கள் அவதாருக்கு எவ்வாறு ரியாக்ட் செய்யலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் நிஜத்தில் இருப்பதை விட உங்கள் மெய்நிகர் அவதார் வித்தியாசமாக இருந்தால் அவர்கள் ஆச்சரியப்படலாம். உங்கள் "நிஜ" வாழ்க்கையில் உள்ள யாராவது நீங்கள் உங்களை ஆன்லைனில் வித்தியாசமாக முன்வைத்திருப்பதைக் கண்டால், உங்களைப் பற்றி பேசப்படக்கூடிய உரையாடல்களைப் பற்றி சிந்தியுங்கள்.

மறுபுறம், சிலர் உங்களை உங்கள் மெய்நிகர் சுயத்தை மட்டுமே அறிந்திருக்கலாம் மற்றும் உங்கள் அடையாளத்தைப் பற்றி வேறு எந்த விஷயமும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த நபர்கள் உங்களை அவதாரைப் பார்த்து என்ன "நினைப்பார்கள்" என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். எவ்வாறு வேண்டுமானாலும் உங்களை நீங்கள் முன்வைத்துக் கொள்ளலாம் - ஆனால் நீங்கள் பல இடங்களுக்குள் நுழையும்போது கவனத்துடனும் தயாராகவும் இருப்பது முக்கியம்.

உத்வேகமளிப்பவராக இருத்தல்

உ என்பது உண்மைத்தன்மையை மட்டும் குறிக்கவில்லை, உத்வேகத்தையும் குறிக்கிறது. அவதார்கள் இவை இரண்டையும் குறிக்கலாம்!

மக்கள் தங்கள் அவதார் அவர்களின் உடல் தோற்றத்தில் இருந்து வித்தியாசமாக "நன்றாக" இருக்க வேண்டும் என்று விரும்பலாம். வித்தியாசமான தோற்றங்களைப் பரிசோதனை செய்து பார்க்க இது ஒரு வேடிக்கையான வழியாக இருக்கும்! ஆனால், "அழகாக தோற்றமளிப்பது" என்று நாம் நினைப்பது பெரும்பாலும் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது செல்வாக்கு செலுத்துபவர்களின் படங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தப் படங்கள் பெரும்பாலும் நிஜ உலகில் உள்ள பெரும்பாலான மக்களிடம் இல்லாத "சிறந்த" அம்சங்களைக் கொண்டுள்ளன.

இது நிஜ வாழ்க்கையில் கிட்டத்தட்ட யாரும் அடைய முடியாத "ஒரே தன்மையுடைய இலட்சியத்" தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த இலட்சியத் தோற்றம் உண்மையாகத் தோன்றினாலும் நிஜமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்! உங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் கூட கேமராவின் முன் இல்லாதபோது வித்தியாசமாகத் தோற்றமளிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், எடிட்டிங் கருவிகள் மிகவும் மேம்பட்டதாக இருப்பதால், ஆன்லைன் தோற்றங்கள் நிஜ உலகில் குறைந்தளவு நிஜம் போல் தோன்றுவதாக இருக்கும். நீங்கள் ஆன்லைனில் ஒருவரைப் பார்க்கும்போது, ​​அந்த இடத்தில் நீங்கள் எவ்வாறு அவரைக் காண வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதைக் குறிப்பிடுவதாக அது இருக்கும். அவர்கள் உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

உங்கள் அவதாரை விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வழிகள் உள்ளன! உங்கள் உண்மையான சுயத்தைப் பிரகாசிக்க அனுமதிக்கும் ஒன்றை உருவாக்க வெவ்வேறு விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்திப் பாருங்கள்.

உங்கள் அவதாரின் முகம், கண்கள் அல்லது மூக்கின் வடிவத்தையும் அளவையும் மாற்றலாம் அல்லது ஒல்லியான அல்லது குண்டான உடலை உருவாக்கலாம். இந்தக் கருவிகள் ஒருவர் உண்மையில் தோற்றமளிக்கும் விதத்தை மாற்றியமைக்கப் பயன்படுத்தலாம் என்பதையும், இத்தகைய "தோற்றங்கள்" நிஜமானவை அல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு வடிவமும் அம்சமும் அழகுதான்.

நினைவில் கொள்ளுங்கள்: ஊக்கமளிக்கும் நபர்கள் எல்லா விதமான உடல் அமைப்பிலும் இருக்கிறார்கள். நம்பிக்கை உள்ளிருந்து வருகிறது.

நட்சத்திர அவதார் சரிபார்ப்பு - உத்வேகமளிக்கும் அவதார்கள்

கலை, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தில் பல நூற்றாண்டுகளாக அழகு ஒரு முக்கிய மதிப்பு மிக்கதாக இருந்து வருகிறது. ஆனால் உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் "நான் ஏன் "நன்றாகத் தோற்றமளிக்க" முயற்சிக்கிறேன்? இத்தகைய தோற்றங்கள்தான் மக்களைக் கவர்ந்திழுக்கும் என்று நான் உண்மையில் நம்புகிறேனா? எது கவர்ச்சியானது மற்றும் தோற்றம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றிய எனது நம்பிக்கைகளைப் பற்றி நான் எவ்வாறான விஷயங்களை வெளிப்படுத்துகிறேன்?

ஒரு நண்பர் அவரது தோற்றம் குறித்து மகிழ்ச்சியடையவில்லை எனில், ஆன்லைனில் ஒரு நபர் தன்னை முன்வைக்கும் விதம் நிஜ தோற்றத்திற்குச் சமமானதல்ல என்பதை அவருக்கு நினைவூட்டுங்கள். பலர் ஃபில்ட்டர்கள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் பிரச்சனைகளுக்கு நம்பகமான பெரியவரிடம் உதவி கேட்குமாறு அவர்களிடம் கூறுங்கள்.

ஊக்கமளிக்கும் நபர்கள் எல்லா விதமான உடல் தோற்றம், அளவு, வடிவம் மற்றும் அம்சங்களில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! (முடி, சருமத்தின் தொனி, கண் அல்லது மூக்கு வடிவம் போன்றவை)!

நீங்கள் ஓர் அவதாரை உருவாக்கும்போது உங்களுக்கு எது முக்கியமானது மற்றும் அழகானதாக இருக்கும்? அழகானதாக நீங்கள் நினைப்பவற்றுக்கு ஏற்றவாறு உங்கள் அவதார் இருக்கிறதா?

உங்களிடம் நீங்களே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • உங்கள் அவதார் "கவர்ச்சியானதாக" நினைப்பவற்றின் அச்சு போல் உள்ளதா அல்லது நீங்கள் யார் என்பதைத் தனித்துவமாய் காட்டுகிறதா?
  • அழகைப் பற்றி நாங்கள் நினைக்கும் விதத்தை விரிவுபடுத்தும் வகையில் உங்கள் அவதாரை நீங்கள் பயன்படுத்த முடியுமா?

உங்களுக்கு இருக்கும் பல விதமான அவதார் விருப்பத்தேர்வுகள் சுதந்திரத்தை அளிக்கலாம், ஆனால் நீங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றிய சிக்கலான உணர்வுகளையும் இது கொண்டு வரலாம். நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்றால் நம்பகமான பெரியவரை அணுகுங்கள்.

மரியாதைக்குரியதாக இருத்தல்

நிஜ மனிதர்களை விட பல்வேறு விதமான அவதார்கள் உள்ளன! மக்கள் தோற்றமளிக்கக்கூடிய வெவ்வேறு வழிகளைக் கொண்டாடுவதற்கான அற்புதமான வழி இது. உண்மையில் சொல்லப்போனால், பகட்டான Meta அவதாரை உருவாக்க ஆயிரக் கணக்கில் வெவ்வேறு வழிகள் உள்ளன!

மெய்நிகர் இடத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களைக் குறிப்பிடுவதாக உணர வைக்கும் அவதாரை உருவாக்கியுள்ளனர். மெய்நிகர் உலகில் உள்ள அனைவரையும் அவர்கள் எவ்விதத்தில் தோற்றமளித்தாலும், நாம் அவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.

தோற்றத்தின் சில அம்சங்கள் வெவ்வேறு குழுக்களுக்கு வலுவான கலாச்சார அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இவை உங்கள் அவதாரை உங்கள் உண்மையான சுயத்தையும் உங்கள் மதிப்புகளையும் குறிப்பிட உதவும். ஆனால் மற்றவர்களுக்கு ஒரு முக்கியமான அர்த்தத்தைக் கொடுக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது, அது உங்கள் நோக்கமாக இல்லாவிட்டாலும் மரியாதை குறைவாகப் பார்க்கப்படலாம்!

உங்கள் அவதாருக்கு நீங்கள் பயன்படுத்தும் விஷயங்களைப் பற்றி மற்றவர்களுக்கு வெவ்வேறு புரிதல்கள் இருக்கலாம். தவறான புரிதல்கள் ஏற்படலாம். வெவ்வேறு குறியீடுகள் மற்றவர்களுக்கு என்ன அர்த்தத்தை ஏற்படுத்தும் என்று கேட்பது உதவியாக இருக்கும், குறிப்பாக தவறான புரிதல்கள் இருந்தால்.

ஆன்லைனில் மற்றவர்களுடன் நீங்கள் ஈடுபடும்போது, ​​அவர்கள் தங்களை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் நீங்கள் என்னென்ன அனுமானங்களைச் செய்கிறீர்கள்? இத்தகைய அனுமானங்கள் நீங்கள் அவர்களுடன் செயலை மேற்கொள்வதைப் பாதிக்கிறதா? எதையும் அனுமானிக்கும் முன் நீங்கள் எப்போதும் வெளிப்படையாகக் கேட்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நட்சத்திர அவதார் சரிபார்ப்பு - மரியாதைக்குரியதாக இருத்தல்

நிஜ உலகில் நீங்கள் தோற்றமளிப்பதை விட வித்தியாசமாக தோற்றமளிக்கும் அவதாரை நீங்கள் தேர்வுசெய்தால், உடல் தோற்றம் இப்படி இருக்கும் நபர்களைப் பற்றி நீங்கள் எவ்வாறான விஷயங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைச் சரிபாருங்கள். "இது இன்னொருவருக்கு வருத்தமாக இருக்குமா?" என்று பெரியவர் அல்லது நண்பரிடம் கேளுங்கள்.

உங்களிடம் நீங்களே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • இந்த அவதார் மூலம் நான் என்ன சொல்ல/வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்? இது பணிவானதாக, உண்மையானதாக மற்றும் மரியாதைக்குரியதாக உள்ளதா? மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடுமா?
  • யாரேனும் இப்படி அவமரியாதையாக நடந்து கொண்டால் எனது சமூக உறுப்பினர்களை நான் எப்படி ஆதரிக்க முடியும்?
  • இந்த அவதார் எனது உண்மையான சுயத்தையும் மதிப்புகளையும் வெளிப்படுத்துகிறதா? ஒட்டுமொத்தமாக நான் நானாக இருப்பது என்னைச் சுதந்திரமாக்குகிறதா? இது சமூக நெறிமுறைகளுடன் ஒத்துப்போகிறதா அல்லது எதிராக இருக்கிறதா?

நீங்களே அனுமானித்துக் கொள்ளாதீர்கள்! வேறொருவரின் அடையாளங்களைப் பற்றி எப்போதும் கேளுங்கள். மெய்நிகர் இடங்களில் அவமரியாதையாக செயலை மேற்கொள்வதை நீங்கள் கண்டால், நம்பகமான பெரியவரை ஈடுபடுத்துங்கள். மெய்நிகர் இடங்கள் மரியாதைக்குரிய நடத்தைக்கான விதிகளையும் அவற்றை மீறும் நபர்களைப் புகாரளிப்பதற்கான கருவிகளையும் கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நட்சத்திர அவதார்!

நினைவில் கொள்ளுங்கள், உங்கள் அவதார்களைக் கவனமாக உருவாக்குங்கள். உங்கள் மதிப்புகள் மற்றும் நமது சமூகத்தின் மதிப்புகளின் அடிப்படையில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்.

நட்சத்திர அவதாரின் இறுதிச் சரிபார்ப்பு:


  • உங்கள் அவதார் சரியான உள்ளுணர்வை வெளிப்படுத்துகிறது என உங்களுக்குத் தெரியாவிட்டால், பெற்றோர், பாதுகாவலர் அல்லது பிற நம்பகமான பெரியவரைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் அவதார் என்ன சொல்கிறது என்று மற்றவர்களிடம் கேளுங்கள்? நீங்கள் மனதில் எண்ணியிருக்கும் விஷயத்தை அது வெளிப்படுத்துகிறதா?
  • மற்றவர்களுக்கும் அது அதே மெசேஜைத்தான் சொல்லுகிறதா? உங்கள் நண்பரின் அவதார் மற்றவர்களிடம் உள்நோக்கம் இல்லாத ஒன்றை அல்லது அவமரியாதையான ஏதாவது ஒன்றைப் பேசுவதாக நீங்கள் நினைத்தால், அவர்கள் கவனத்துடன் செயல்படுவதற்கு உதவுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் தங்களின் அவதாரை வடிவமைத்தபோது அவர்கள் என்ன நினைத்தார்கள் அல்லது மற்றவர்கள் அதைப் “பார்க்கும்போது" என்ன நினைப்பார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள்.
  • உங்கள் அவதார் அனுபவங்களை, குறிப்பாக அவை உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், நம்பகமான பெரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் பதின்மவயதினர் "நட்சத்திர" அவதார்களை உருவாக்க உதவுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான அடிப்படை வழிகாட்டுதல்கள்

பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: உங்கள் பதின்மவயதினரிடம் அவர்களின் அவதார் (அவதார்கள்) பற்றி கேளுங்கள்:

  1. உங்கள் பதின்மவயதினர் அவர்களின் எந்தெந்த பகுதிகளை அவர்களின் அவதாரில் காட்டுவது முக்கியம், ஏன்? அது மக்களைச் சிரிக்க வைப்பதாக இருக்க வேண்டுமா? அடையாளம் அல்லது குழுவுடன் இணைக்கக்கூடியதாக வேண்டுமா? முற்றிலும் மாறுபட்ட அல்லது உத்வேகமளிக்கும் நபரை முயற்சி செய்து பார்க்க வேண்டுமா? அவர்களின் உடல் தோற்றத்துடன் பொருந்துவதாக நீங்கள் கண்டறிந்த அம்சத்தையும், பொருந்தாத ஒன்றையும் ஹைலைட் செய்துக்காட்டி, அந்தத் தேர்வுகளைப் பற்றிக் கேளுங்கள்.

பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: “உங்கள் அவதாரைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள். உங்களைப் பற்றி மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

  1. உங்கள் பதின்மவயதினரிடம், மற்றவர்கள் அவர்களின் அவதாரில் எவ்வாறு செயலை மேற்கொள்வார்கள் மற்றும் மெய்நிகர் இடங்களில் அவர்கள் பெறும் அனுபவத்தைப் பற்றி பேசுங்கள். ஊடாடல்களின் சூழல் முக்கியமானது என்பதை அவர்களுக்கு நினைவூட்டி, அனைத்து ஊடாடல்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அவர்களின் சுய வெளிப்பாட்டை மாற்றியமைக்க அவர்களுக்கு உதவுங்கள். உங்கள் பதின்மவயதினர் பல அவதார்களைக் கொண்டிருக்கலாம் என்பதால், அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் செய்யும் தேர்வுகளைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள்.

பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: “உங்கள் புதிய அவதாருக்கு மக்கள் எவ்வாறு உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்? யார் செயலை மேற்கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கும் நிலையில், இந்தச் செயலிக்கு இதனை ஏன் தேர்வுசெய்தீர்கள்?"

ஈடுபாட்டுடன் இருங்கள்: உங்கள் பதின்மவயதினர் அவதாரை உருவாக்கும் போது அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவராக இருங்கள். நீங்களே சொந்தமாக உருவாக்க முயற்சித்து, அவர்களை உங்களுக்கு உதவிடச் செய்யுங்கள்! அம்சங்களைப் பயன்படுத்திப் பாருங்கள் மற்றும் அவர்களின் சுய வெளிப்படுத்துதல் மூலம் சிந்திப்பதற்கு அவர்களுக்கு உதவுங்கள்.

ஈடுபாட்டுடன் இருங்கள்: உங்கள் பதின்மவயதினருடன் சேர்ந்து ஒரு பின்னணி வடிவமைப்பு அல்லது மனநிலையைத் தேர்ந்தெடுத்து, அதை வெளிப்படுத்தும் அவதார்களை உருவாக்க ஒன்றாகச் செயல்படுங்கள். நிஜ உலகில் நீங்கள் இருக்கும் விதத்திற்கு ஒத்த அல்லது வித்தியாசமான தேர்வுகளைச் செய்ய ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். சில அம்சங்களை வித்தியாசமாகக் குறிப்பிட்டால் எப்படி இருக்குமென்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளுங்கள்.

பதின்மவயதினரிடம், மற்றவர்களை அவர்களின் அவதார்களை வைத்து முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டாம் என்று கூறுங்கள். அதற்குப் பதிலாக, மற்ற நபர் அல்லது அவர்களுக்கு வழிகாட்டுபவருடன் பேசுவதன் மூலம் அவர்களின் விருப்பங்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தை ஆராய அவர்களுக்கு உதவுங்கள்.

ஈடுபாட்டுடன் இருங்கள்: மற்றவர்களின் அவதார்களின் அர்த்தங்களைப் பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் கேளுங்கள்: “அதைப் பற்றி என்னிடம் சொல்கிறாயா? வேறு விளக்கங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறாயா?"

மாதிரியானது, கலாச்சார அடையாளங்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்துவது பற்றி மற்றவர்களிடம் சிந்தனைமிக்க கேள்விகளைக் கேட்கிறது: “உங்கள் அவதாரின் [பொருள்] என்பதைக் கவனித்தேன். இது உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று என்னிடம் சொல்ல முடியுமா?

கட்டுப்பாடுகள்: பெற்றோர்கள் மற்றும் பதின்மவயதினர் தங்களுடைய அவதாரைப் பயன்படுத்தும் அனுபவங்களைப் பெற, Meta அவர்களுக்குக் கருவிகளை வழங்குகிறது. உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவும் அமைப்புகளைக் கண்டறிய உங்கள் பதின்மவயதினருடன் இணைந்து செயல்படுங்கள்.

இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்!

பதின்மவயதினர் தங்கள் அடையாளத்தையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பதின்மவயதினர் வளருகையில், இந்த அம்சங்களைப் பயன்படுத்திப் பார்ப்பது பொதுவானதே.

மெய்நிகர் இடங்கள், சமூக விதிகளையும் புகார் செய்வதற்கும் அமலாக்கம் செய்வதற்குமான கருவிகளையும் கொண்டுள்ளன, இவை நிஜ இடங்களில் இல்லாமல் இருக்கலாம். இந்த அனுபவங்கள் உங்கள் பதின்மவயதினர் தங்களின் வெவ்வேறு பகுதிகளையும் அவர்களின் ஆளுமையையும் பாதுகாப்பாகப் பரிசோதிக்க நல்ல இடமாக இருக்கும்.

இருப்பினும், கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் அல்லது மிகவும் இலட்சியப்படுத்தப்பட்ட அவதார்களைப் பார்த்த பிறகு அவர்களின் தோற்றத்தின் மீதான அதிருப்தி போன்ற கடினமான தலைப்புகளைப் பற்றி உங்கள் பதின்மவயதினருடன் உரையாடுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்கான உதவிக்குறிப்புகள்

  1. பதின்வயதினர் தங்களுடைய அவதாருக்கு சில பண்புகளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை விவரிக்க அவர்களை அழைப்பதன் மூலம் அவர்களின் மதிப்புகளுக்கு ஏற்றவாறு தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவுங்கள்.
  2. மற்றவர்களிடமும் இதைச் செய்ய பதின்மவயதினரைத் தூண்டுங்கள். தோற்றத்தின் அடிப்படையில் அனுமானங்களைச் செய்வதை விட அடையாளத்தைப் பற்றிய கேள்விகள் கேட்குமாறு உற்சாகப்படுத்துங்கள்.
  3. வெவ்வேறு சமூகங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்தலுக்கான விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்தக்கூடிய வழிகளைப் பற்றியும், அந்தச் சமூகங்களின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், அவற்றை மரியாதையுடன் பயன்படுத்துவதைப் பற்றியும் பேசுங்கள்.
உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக