உங்கள் குழந்தைகளுடன் அவர்களின் டிஜிட்டல் ஆளுமையைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்குதல்

நமது பிள்ளைகளுடன் வெளிப்படையான மற்றும் தொடர்ச்சியான உரையாடல்களை மேற்கொள்வது டிஜிட்டல் நலமுடன் வாழ்தலை வளர்ப்பதில் இன்றியமையாத பகுதியாகும். அந்த உரையாடலின் ஒரு முக்கிய பகுதியாக ஆன்லைன் பாதுகாப்பு இருக்க வேண்டும், ஆனால் பாதுகாப்பு மட்டுமல்லாமல் டிஜிட்டல் நலமுடன் வாழ்தலின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக, நமது உரையாடல்களை நாம் விரிவுபடுத்த வேண்டும். நமது வாழ்க்கையை வளமாக்கவும், நமது சமூகங்களை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய உரையாடல்களைக் கொண்டிருப்பதும் இதில் அடங்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான ஆரோக்கியமான உறவுகளைக் கட்டமைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பேசுவதும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் சரியான தகவல்களுக்கான மூலங்களை விரைவாகக் கண்டறிவதும் இதில் உள்ளடங்கும். இது எங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகளைச் சரியான முறையில் சமநிலைப்படுத்துவது பற்றியதாகும்.

டிஜிட்டல் குடியுரிமைக் கூட்டிணைவு நமது வீடுகளிலும் பள்ளிகளிலும் நாம் கற்பிக்க வேண்டிய ஆரோக்கியமான டிஜிட்டல் குடிமக்களின் 5 திறன்களைக் கண்டறிந்துள்ளது. நமது குழந்தைகள் தங்கள் தொழில்நுட்பப் பயன்பாட்டில் சீரான நிலையில் இருத்தல், தகவலறிந்திருத்தல், உள்ளடக்கியிருத்தல், ஈடுபாட்டுடன் இருத்தல் மற்றும் எச்சரிக்கையுடன் இருத்தல் ஆகியவற்றை கற்றுக்கொள்ள உதவுவதில் திறன்கள் கவனம் செலுத்துகின்றன. உங்களது குடும்பத்தினரின் டிஜிட்டல் கலாச்சாரத்தைப் பற்றி சிந்திக்கும்போது, உரையாடலில் குழந்தைகள் ஈடுபடுவதுடன் அவர்கள் தங்களின் சொந்த டிஜிட்டல் அனுபவங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவது முக்கியம் ஆகும். பயனுள்ள டிஜிட்டல் குடிமகனாக இருப்பதற்கான பண்புகளைப் பயிற்சி செய்வது ஏன் முக்கியமானது என்பது பற்றி பேசுங்கள். மெய்நிகர் உலகில் அவர்களின் நடத்தைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்விலும் மற்றவர்களின் வாழ்விலும் அவர்கள் உருவாக்கக்கூடிய மாற்றத்தைப் பார்க்க அவர்களுக்கு உதவுங்கள்.

ஒரு குடும்பத்தின் தொழில்நுட்பக் கலாச்சாரத்தை மாற்றுதல் என்பது ஒரே பேச்சில் நிகழாது, ஆனால் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் நிகழும். நீங்கள் தொடங்குவதற்கு உதவ, 5 டிஜிட்டல் குடியுரிமைத் திறன்களுடன் ஒத்துப்போகும், உங்கள் சொந்த உரையாடல்களைத் தொடங்குவதற்கு உதவக்கூடிய, சில உரையாடலைத் தொடங்கும் விஷயங்கள் இங்கே உள்ளன;


சீரான நிலையில் இருத்தல்

  1. உங்கள் குறிப்பிட்ட செயலிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதை உங்களுக்கு கடினமாக்கும் சில விஷயங்கள் யாவை?
  2. ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் செயல்பாடானது, மிகவும் முக்கியமான மற்ற விஷயங்களை நீங்கள் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும் தருணங்கள் உள்ளனவா?
  3. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இருந்து இடைவேளை எடுக்க வேண்டிய நேரம் இது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
  4. நமது நாளில் சாதனத்தின் துணை தேவைப்படாத தருணங்கள் யாவை?
  5. எந்தச் செயலிகள் அல்லது டிஜிட்டல் செயல்பாடுகள் உங்கள் நேரத்திற்கு ஏற்றவை என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?

தகவலறிந்திருத்தல்

  1. நீங்கள் சமீபத்தில் ஆன்லைனில் கற்றுக்கொண்ட ஒரு புதிய விஷயம் என்ன?
  2. புதிய விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்பும்போது ஆன்லைனில் செல்ல உங்களுக்கு விருப்பமான இடங்கள் யாவை?
  3. ஆன்லைனில் நாம் கண்டறியும் தகவல்கள் தவறாக வழிநடத்துவதாகவோ துல்லியமாற்றதாகவோ இருக்கும்போது, அவற்றை அடையாளம் காணாமல் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் யாவை?
  4. தவறானதாகத் தோன்றும் தகவல்களை யாரேனும் பகிரும்போது நீங்கள் எவ்வாறு பதிலளிக்கலாம்?
  5. நீங்கள் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து, பின்னர் அது உண்மையல்ல என்று கண்டறியும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உள்ளடக்கியிருத்தல்

  1. ஆன்லைனில் நீங்கள் எழுதிய அல்லது சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டுள்ளீர்களா?
  2. நீங்கள் மதிக்கும் ஒருவர் உங்களை ஏமாற்றமடையச் செய்யும் வகையிலான ஒரு விஷயத்தை ஆன்லைனில் செய்வதையோ சொல்வதையோ நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
  3. ஆன்லைனில் அல்லது நேரில் ஒருவரிடம் இரக்கமின்றி நடந்துகொள்வதில் எது எளிதானது என்று நினைக்கிறீர்களா?
  4. உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஒருவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க முடியுமா?
  5. ஆன்லைனில் விலக்கப்பட்டதாக அல்லது நிராகரிக்கப்பட்டதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

ஈடுபாட்டுடன் இருத்தல்

  1. ஆன்லைனில் மற்றொருவருக்கு உதவுவதற்கான வாய்ப்பை நீங்கள் எப்போதாவது கண்டுபிடித்துள்ளீர்களா?
  2. உங்கள் பள்ளியில் ஒரு சிக்கலை நீங்கள் தீர்க்க முடிந்திருந்தால், அது என்னவாக இருக்கும்?
  3. அந்தச் சிக்கலைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி?
  4. உலகத்தை மேம்படுத்தக்கூடிய புதிய செயலியை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், அது என்ன விஷயத்தைச் செய்யக்கூடும்?
  5. குடும்ப நினைவுகள் மற்றும் கதைகளைப் படமெடுக்க தொழில்நுட்பத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

எச்சரிக்கையுடன் இருத்தல்

  1. ஆன்லைனில் ஒருவர் வேறு ஒருவரை அவமானப்படுத்துவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
  2. வலைதளம் அல்லது செயலி பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்பதற்கான சில எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?
  3. ஆன்லைனில் ஒருவர் உங்களிடம் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்யச் சொல்லும்போது நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் என்ன செய்வீர்கள்?
  4. ஆன்லைனில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால் யாருடன் பேசுவதை நீங்கள் வசதியாக உணர்வீர்கள்?
  5. ஒரு குடும்பமாக ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் யாவை?
உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்