இளம் நபர்கள் (ஏன் அனைவரும் கூட!) ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் செலவழித்த நேரத்திற்கு இடையே சரியான சமநிலையைக் கண்டறிவது முக்கியம். நம் வாழ்வில் அதிக இடங்களில் தொழில்நுட்பங்கள் பெருவாரியாகத் தோன்றுவதால், ஆன்லைன் இடங்களில் நாம் செலவிடும் நேரத்தின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
எப்போதும் போல்: உரையாடல் என்பது முதல் படி மட்டுமே. தங்கள் பதின்மவயதினர் ஆன்லைனில் தங்கள் நேரத்தை எங்கு செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பெற்றோர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும், மேலும் அந்த நேரம் நல்ல முறையில் செலவிடப்பட்டதா என்பதைப் பற்றி அவர்களுடன் உரையாட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக: அவர்கள் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும் விதம் அவர்களை எப்படி உணரவைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். உங்கள் பதின்வயது பிள்ளை ஆன்லைனில் எப்படி நேரத்தைச் செலவிட விரும்புகிறார் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலமும், அவருக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு இடையே சமநிலையைக் கண்டறிய உதவுவதன் மூலமும் அவர்களின் நலமுடன் வாழ்தலுக்கு நீங்கள் ஆதரவாக இருக்கலாம்.
உங்கள் பதின்மவயதினருக்கு இணையப் பயன்பாட்டைப் பற்றிப் பேசுவதற்கு ஒரே சிறந்த வழி என்று எதுவும் இல்லை என்றாலும், உரையாடலைத் தொடங்க வழிகள் உள்ளன. உங்கள் பதின்வயது பிள்ளை திரை நேரத்தால் எதிர்மறையான பாதிப்புக்கு உள்ளாவதை நீங்கள் கவனித்தால், சரியான நேரத்தில் அந்த விஷயம் குறித்து பேசத் தொடங்குங்கள்.
அவர்கள் ஏற்கெனவே ஆன்லைனில் செலவழித்த நேரத்தைப் பற்றியும் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றியும் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்வது ஒரு நல்ல சிறந்த நடைமுறையாக இருக்கும். இந்த எண்ணத்தை அவர்கள் பெறுவதற்கு, நீங்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்:
முதல் இரண்டு கேள்விகளுக்கு "ஆம்" என்ற பதில் வந்தால், உங்கள் பதின்வயது பிள்ளை ஆன்லைனில் செலவழிக்கும் நேரத்தைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றிய குறிப்பை அது தரும். அங்கிருந்து, அந்த நேரத்தை நிர்வகிப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து, அதனை அர்த்தமுள்ள ஆஃப்லைன் செயல்பாடுகள் மூலம் சமநிலைப்படுத்த அவர்களுக்கு உதவலாம்.
அதனைத் தொடர்ந்து பின்வரும் கேள்விகளை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்:
திரை நேரத்தைக் குறைப்பதற்கான மற்றொரு சிறந்த வழி, ஃபோனைத் தள்ளி வைப்பது மட்டுமல்லாமல், அந்த நேரத்தை ஆஃப்லைனில் அர்த்தமுள்ள மற்றும் வேடிக்கையான செயல்பாடுகள் மூலம் நிரப்பும் செயலில் ஈடுபடுவது ஆகும்.
உங்கள் பதின்வயது பிள்ளை கலைப்படைப்பை உருவாக்குவது, இசைக் கருவிகளை வாசிப்பது, புத்தகங்களைப் படிப்பது, பொருட்களைக் கட்டமைப்பது, விளையாடுவது - அல்லது திரை நேரம் சம்பந்தப்படாத வேறு ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் - அவர்களுக்கு உதவுங்கள்! அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் ஆர்வமாக இருப்பதன் மூலம் அவர்கள் அந்த ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள உதவுங்கள். இளம் நபர்கள் ஆறுதலுக்காக அல்லது சில சமயங்களில் சலிப்பை போக்குவதற்காக தங்கள் ஃபோன்களை நாடலாம். அந்த உணர்வுகளை அவர்கள் எப்போதும் தவிர்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். சிறிய அசௌகரியம் அல்லது சலிப்பு போன்ற உணர்வை ஓர் இளம் நபர் அனுபவிக்கும்போது அது அவர்களை மற்ற வழிகளில் செயல்படுத்த வழிவகுக்கும்.
பெரும்பாலும், இளம் நபர்கள் ஆன்லைனில் பின்தொடரும் விஷயங்கள், தலைப்புகள் மற்றும் படைப்பாளர்கள்தான் அவர்கள் ஆஃப்லைனில் ஆர்வமுள்ள விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஒரு நல்ல குறிகாட்டியாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ”நீங்களாகவே செய்யக்கூடிய விஷயங்களான” சமையல், நடனம் அல்லது வேறு ஏதேனும் திறமையைக் கற்றுக்கொடுக்கும் படைப்பாளர்களைப் பின்தொடர்ந்தால், அந்தப் பயிற்சிகளில் சிலவற்றை வீட்டிலோ அவர்களது நண்பர்களுடனோ பயிற்சி செய்ய அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களுக்கு சமநிலையைக் கண்டறிய உதவுங்கள் மேலும் ஆன்லைன் உலகில் இருந்து கிடைக்கும் உத்வேகத்துடன் வேடிக்கையான, ஆஃப்லைன் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் சுயமாக கருத்தை வெளிப்படுத்துவதை ஆதரியுங்கள்.
தங்கள் வாழ்க்கையில் ஆர்வம் காட்டுவதன் மூலம், ஆஃப்லைன் ஆர்வங்களை அவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு நீங்கள் அவர்களுக்கு உதவலாம், இதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த திரை நேரத்தைக் குறைக்கலாம்.
யோசனைகள் வேண்டுமா? உங்கள் பதின்வயது பிள்ளைக்கு சமநிலையைக் கண்டறிய உதவும் சில செயல்பாடுகள் இதோ இங்கே:
Meta டிஜிட்டலுக்கு மாறுவோம்: இளம் நபர்களுக்கான ஆரோக்கிய செயல்பாடுகள்
செயலியில் நேர்மறையான அனுபவங்களை உருவாக்க பெற்றோர்கள் மற்றும் பதின்மவயதினரை அனுமதிக்கும் பயனுள்ள கருவிகளை Instagram கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, Instagram இல் நேரத்தைச் சிறப்பாகச் செலவிடுவது எப்படி என்று நீங்களும் உங்கள் பதின்வயது பிள்ளையிடம் பேசும்போது, செயலியில் தினசரி நேர வரம்புகளை அமைப்பது அல்லது உறக்க நிலையைச் செயல்படுத்துவது போன்ற சமநிலையைக் கண்டறிய உதவும் கருவிகளைப் பற்றியும் பேசுங்கள்.
இந்தக் கருவிகளை நீங்கள் இங்கே காணலாம்:
Instagram - தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram - உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
பதின்மவயதினருக்கு, சமூக ஊடகங்களில் அவர்களின் தொடக்க நிலை அனுபவங்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் உதவ விரும்பலாம். Instagram இல் நேர்மறையான மற்றும் நேரத்தைச் செலவிடுவதற்கான சமநிலையான அனுபவங்களை வளர்க்க, அவற்றில் கிடைக்கக்கூடிய பல மேற்பார்வைக் கருவிகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பதின்வயது பிள்ளையுடனான உரையாடல்களில், Instagram இல் செலவழித்த நேரத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைக் கண்டறிவது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசுங்கள். ஆரோக்கியமான சமநிலையை ஏற்றுக்கொண்டு மேற்பார்வைக் கருவிகளை ஒன்றாக அமைத்திடுங்கள்.
Instagram இன் மேற்பார்வைக் கருவிகள், உங்கள் பதின்வயது பிள்ளையைப் பின்தொடர்பவர்கள் மற்றும் உங்கள் பிள்ளை பின்தொடரும் பட்டியலைப் பார்க்கவும், செயலிக்கான தினசரி நேர வரம்புகளை அமைக்கவும், அவர்களின் செயலி பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்களைப் பார்க்கவும் உதவும்.
Instagram - மேற்பார்வைக் கருவிகள்
நீங்களும் உங்கள் பதின்வயது பிள்ளையும் சமநிலையைக் கண்டறிய உதவும் Metaவின் தயாரிப்புகள் மற்றும் உதவி விவரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிக: