NAMLE
பெற்றோர்கள் தங்கள் பதின்மவயதினரை பேணிக்காத்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறார்கள். பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வீட்டில் ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடனான ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள உறவுநிலையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இன்னும் பரந்த அளவில் விரிவாக சிந்திக்க முயற்சித்தால் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த பத்தாண்டு காலத்தில் நமது தொழில்நுட்பம் மற்றும் தகவல்கள் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இளம் வயதினர் மீது மட்டுமல்லாமல், நம் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் அனைவரும் இந்தச் சிக்கல் நிறைந்த உலகில் வழிசெலுத்தக் கற்றுக்கொள்கிறோம், அதை ஒன்றிணைந்து செய்வதற்கான வழிகளைக் கண்டறிந்தால் அது எளிதாக இருக்கப் போகிறது.
நமது வீட்டில் ஆரோக்கியமான ஊடகச் சூழலை உருவாக்கும் விதத்தில் கவனம் செலுத்தினால், நமது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், இந்த அற்புதமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.