இணையமும் சமூக ஊடகங்களும் தகவல்களின் சிறந்த மூலங்களாக இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் துல்லியமானவை அல்லது நம்பகமானவை என்று அர்த்தமல்ல. நல்லதில் இருந்து கெட்டதை பிரித்தறிய, தங்கள் பதின்மவயதினர் ஆன்லைன் மீடியா பற்றிய கல்வியறிவைக் கட்டமைத்திட பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.
பெரியவர்களைப் போலவே, எந்தத் தகவல்கள் நம்பகமானவை, எது தவறானது, மீடியா அல்லது படங்கள் மாற்றப்பட்டுள்ளபோது அல்லது திருத்தப்பட்டுள்ளபோது உண்மை இல்லாத அல்லது உறுதிப்படுத்தப்படாத விஷயங்களை ஆன்லைனில் பகிராமல் இருப்பது போன்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்கவும் பதின்மவயதினருக்கு திறன்கள் தேவை.
மீடியா கல்வியறிவைக் கட்டமைப்பதற்கான உதவிக்குறிப்புகள்
நீங்கள் பார்க்கும் தகவல்கள் நம்பகமானவையா என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஆஃப்லைன் உலகத்தைப் போலவே, எது துல்லியமான, நம்பகமான தகவல், எது துல்லியமான, நம்பகமான தகவல் அல்ல என்ற உணர்வை இளம் நபர்கள் வளர்த்துக் கொள்ள நீங்கள் சில அடிப்படைப் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.
அடிப்படை விஷயங்களுடன் ஆரம்பிக்கலாம்: பகிர்வில் ஈடுபடுவதற்கு முன் அல்லது பகிர்வைப் பகிர்வதற்கு முன், பதின்மவயதினர் சில கேள்விகளைத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள உதவுங்கள், இது அந்தப் பகிர்வைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தக்கூடும்: பிரபலமான ஐந்து பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்: யார்? என்ன? எங்கே? எப்போது? மற்றும் ஏன்?
இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஓர் ஆரம்பம் மட்டுமே. இணையத்தில் எந்தத் தகவல்களை நம்பலாம், எந்தத் தகவல்களை நம்பக்கூடாது என்கிற நல்ல உணர்வை பதின்மவயதினர் வளர்த்துக் கொள்வதற்கு நேரம் பிடிக்கும். அவர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் நேரத்தைச் செலவிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவர்கள் ஆன்லைனில் என்ன படிக்கலாம், எதனை உருவாக்கலாம், எதில் ஈடுபடலாம் அல்லது எதைப் பகிரலாம் என்பது குறித்து நல்ல தேர்வுகளைச் செய்ய, சுயமாக முடிவெடுக்க உதவும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
உதவி செய்வதற்கான கூடுதல் வழிகள்
ஐந்து பிரபலக் கேள்விகளைக் கேட்டு, அந்தச் சூழலைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதுடன், ஆன்லைனில் நல்ல மீடியா நுகர்வோராக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கான சுயாதீனத் திறமையை வளர்த்துக்கொள்ள பதின்மவயதினருக்கு மற்றும் இளம் நபர்களுக்கு உதவ இன்னும் சில படிநிலைகள் உள்ளன.
உரையாடலைத் தொடர்தல்
மீடியா கல்வியறிவு வீட்டிலிருந்தே தொடங்குகிறது. இது ஒரு முறை செய்தால் அத்துடன் முடிந்து விடும் விசயம் அல்ல. பதின்மவயதினர் மற்றும் இளம் நபர்கள் ஆன்லைன் தகவல்கள் உலகை கையாளுவதற்கு பெற்றோர் தரப்பில் இருந்தும் நேரமும் முயற்சியும் பங்களிக்கப்பட வேண்டும். இதில் அவர்களையும் சேர்த்துக்கொண்டு, உரையாடல் போல் நிகழ்த்தினால் அது அவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். பின்வருவன போன்ற விஷயங்களை அவர்களுடன் பேசுங்கள்:
மீடியா கல்வியறிவுக்கான பயிற்சிகள்
நம்பகமான ஆதாரங்களைக் கண்டறிவதற்கு உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி இதோ இங்கே. ஆன்லைனில் நீங்கள் காணும் ஆதாரங்கள் மற்றும் தகவல்களைச் சரிபார்ப்பதைப் பயிற்சி செய்ய இந்தச் செயல்பாடு உதவும்.
இது நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய விஷயம் ஆகும்.
இதற்கு அதிகக் கால அவகாசம் தேவைப்படும், ஆனால் சிறிய பயிற்சி மற்றும் உங்கள் உதவியுடன், உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் தான் பார்க்கும் தகவல்களைப் பற்றி விமர்சிக்கத் தேவையான திறன்களைக் கற்றுக் கொள்ளலாம், மேலும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க உதவலாம்.