உங்கள் பதின்மவயதுப் பிள்ளை இணைய வழி கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகியிருந்தால் என்ன செய்வது

ஜஸ்டின் டபிள்யூ. பட்சின் மற்றும் சமீர் ஹிந்துஜா

மார்ச் 21, 2024

தொழில்நுட்பமானது தொடர்புகொள்வதற்கும் கலகலப்பாக இருப்பதற்கும் பிள்ளைகளுக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, எனினும் பலவிதமான வழிகளில் ஒருவரையொருவர் புண்படுத்தவும் செய்கிறது, மேலும் சகாக்களுக்கு இடையிலான முரண்பாட்டைச் சமாளிக்கும் விஷயத்தை குடும்பங்களுக்கு இன்னும் கூடுதல் சவாலாக மாற்றியுள்ளது. இளையோர், சகாக்களுடனான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது பெரும்பாலும் பெரியவர்களிடம் நம்பிக்கை வைக்கத் தயங்குகிறார்கள் என்ற யதார்த்தம் காரணமாக இது சிக்கலாகிறது. கூடுதலாக, எப்போதும்-மாறிக்கொண்டிருக்கும் செயலிகள், தளங்கள் அல்லது தொழில்நுட்பம் அக்கறை செலுத்துபவர்களை திணறடிக்கும் விதமாக இருக்கக்கூடும். ஆனால் இணைய வழி கொடுமைப்படுத்துதல் என்பது தொழில்நுட்பப் பிரச்சினை என்பதை விட ஓர் உறவுநிலை சார்ந்த பிரச்சினையாகும் மேலும் சமீபத்திய செயலியைப் பற்றிய புரிதல் அதிகமில்லாவிட்டாலும் கூட, உதவி செய்வதற்கான விஷயங்கள் பெற்றோருக்கு நிறைய உள்ளன. கீழே, உங்கள் பதின்மவயதுப் பிள்ளை ஆன்லைன் கொடுமைப்படுத்தலுக்கு இலக்காக இருக்கும்போது பயன்படுத்துவதற்கான சில உத்திகளைப் பற்றி விவாதிக்க உள்ளோம்.

உங்கள் பதின்மவயதுப் பிள்ளை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளை பாதுகாப்பு மற்றும் நலமுடன் வாழ்தல் எப்போதும் முதன்மையான முன்னுரிமையாகும். அவர்கள் தங்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும், கூறுவது கேட்கப்படுவதாகவும், ஊக்குவிக்கப்படுவதாகவும் உணர நீங்கள் எவ்வாறு உதவலாம்? அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதால், நிபந்தனையற்ற ஆதரவை அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். நீங்கள் இருவரும் விரும்புவது ஒரே இறுதி முடிவு என்பதை வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் விவரிவிக்கவும்: இணைய வழி கொடுமைப்படுத்துதலை நிறுத்தி, அது மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துக்கொண்ட தொடர் செயல்பாட்டை மேற்கொள்வதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியும். அவர்களின் கண்ணோட்டத்தை நிராகரிக்காமல், ஆனால் அவர்களின் குரலையும் கண்ணோட்டத்தையும் அங்கீகரிக்க இது மிகவும் முக்கியமானதாகும்; இது உண்மையில் குணப்படுத்துதல் மற்றும் மீட்டெடுப்புச்‌ செயல்முறைக்கு உதவலாம். இணைய வழி கொடுமைப்படுத்துதலில் இலக்கிடப்பட்டவர்கள் தாங்கள் பெரியவர்களிடம் கூறும்போது அவர்கள் அறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் தலையிடுவார்கள் என்றும் அத்துடன் நிலைமையை மோசமாக்க மாட்டார்கள் என்பதையும் உறுதியாக அறிந்திருக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்குத் துணையாக உள்ளீர்கள் என்பதையும், விஷயங்களைச் சீர்படுத்துவதற்கு அவர்களுடன் கூட்டாளியாக இருப்பீர்கள் என்பதையும் அவர்களுக்கு மீண்டும் உறுதியளியுங்கள்.

ஆதாரங்களைச் சேகரித்தல்

நிகழ்ந்தது என்ன, யார் ஈடுபட்டார்கள் போன்ற தகவல்களை உங்களால் முடிந்த அளவு சேகரித்திடுங்கள். பெரும்பாலான சூழல்களில் உங்கள் பதின்மவயதுப் பிள்ளை தன்னை யார் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை, அடையாளம் காண முடியாத ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அல்லது அறிமுகமில்லாத திரைப்பெயர் சம்பந்தப்பட்டியிருந்தாலும் கூட அவர்கள் அறிவார்கள் (அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்குத் தெரியும் என்று கருதுங்கள்). பெரும்பாலும் தவறான நடத்தையானது பள்ளியில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்கும். அவ்வாறாக இருந்தால், உங்கள் கவலைகள் குறித்து அங்குள்ள நிர்வாகியைத் தொடர்புகொண்டு, பள்ளிக் கொள்கையின் தேவைகளுக்கு இணங்க ஒரு சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டிருப்பதையும் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்துங்கள். உங்கள் பதின்மவயதுப் பிள்ளை இணைய வழி கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதற்கான சான்றாக செயல்படக்கூடிய உரையாடல்கள், மெசேஜ்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற விஷயங்களை ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது திரைப் பதிவுகள் செய்து அவற்றை ஆதாரமாகச் சமர்ப்பித்திடுங்கள். விசாரணைச் செயல்முறையில் உதவுவதற்கு அனைத்துச் சம்பவங்களின் பதிவுகளையும் வைத்திருங்கள். அத்துடன், சம்பவம் எப்போது, ​​எங்கே நிகழ்ந்தது (பள்ளியில், குறிப்பிட்ட செயலிகளில்), யார் ஈடுபட்டார்கள் (துன்புறுத்துபவர்களாக அல்லது சாட்சிகளாக) போன்ற தொடர்புடைய விவரங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தளம் அல்லது செயலிக்கு புகாரளித்தல்

இணைய வழி கொடுமைப்படுத்துதல் பல சட்டப்பூர்வமான சேவை வழங்குநர்களின் (எ.கா. வலைதளங்கள், செயலிகள், கேமிங் நெட்வொர்க்குகள்) சேவை விதிமுறைகள் மற்றும்/அல்லது சமூக வழிகாட்டுதல்களை விதிமீறுகிறது. உங்கள் பதின்மவயதுப் பிள்ளை தங்களை யார் துன்புறுத்துகிறார்கள் என்பதை அடையாளங்காண முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட தளத்தைத் தொடர்புகொள்ளுங்கள். புகாரளித்தவுடன், தவறான பகிர்வு மிக விரைவாக அகற்றப்பட வேண்டும். பெரும்பாலான தளங்களும் செயலியும் அடையாளம் காண முடியாத புகாரளித்தலை அனுமதிக்கின்றன அத்துடன் யார் புகார் செய்தார்கள் என்கிற அடையாளத்தை வெளியிட மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய சேவை விதிமுறைகள் மற்றும்/அல்லது சமூக வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள், இதன் மூலம் பகிர்வைப் புகாரளிக்க வேண்டிய வகையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். சட்ட அமலாக்க ஈடுபாடு இல்லாமல் தளம் அல்லது செயலி கணக்குத் தகவல்களை உங்களுக்கு வெளியிடுவது சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே ஒருவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமானால், காவல்துறையை ஈடுபடுத்துவது அவசியமாக இருக்கலாம். உங்களின் உள்ளூர் துறை உதவிகரமாக இல்லையென்றால், மாவட்ட அல்லது மாகாண சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள், ஏனென்றால் அவர்களிடம் தொழில்நுட்பம் தொடர்பான குற்றங்களில் அதிக உதவி விவரங்களும் நிபுணத்துவமும் இருக்கும்.

உங்கள் பதின்மவயதுப் பிள்ளை இணைய வழி கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகியிருந்தால் பதிலளிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  • சரியாக என்ன நிகழ்ந்தது என்பதைக் கண்டறிந்து, சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் பதின்மவயதுப் பிள்ளை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • ஆதாரங்களைச் சேகரித்து, தேவைப்பட்டால் பள்ளி அல்லது காவல்துறையை அணுகுங்கள்
  • தவறான பகிர்வைப் புகாரளித்து, தளத்திலேயே துன்புறுத்துபவரைத் தடுத்திடுங்கள்

இணைய வழி கொடுமைப்படுத்துதலைச் செய்யும் பதின்மவயதுப் பிள்ளையின் பெற்றோரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டுமா?

இது மிகவும் தந்திரமான கணக்கீடாக இருக்கலாம். சித்தாந்தத்தில், இது ஒரு நல்ல அணுகுமுறை போல் தெரிகிறது மேலும் பல பெற்றோருக்கு ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கலாம். இருப்பினும், உங்கள் பதின்மவயதுப் பிள்ளை இந்த யோசனையின் சாத்தியங்கள் அடிப்படையில் பயப்படக்கூடும். கொடுமைப்படுத்துதலைச் செய்யும் பெற்றோரை எதிர்கொள்வது விஷயங்களை இன்னும் மோசமாக்க மட்டுமே செய்யும் என்று அவர்கள் பெரும்பாலும் நம்புகிறார்கள். உரையாடலை நுட்பமாக அணுகவில்லை என்றால் அது நிச்சயமாக அவ்வாறே முடியும். பிரச்சினை என்னவென்றால், தங்கள் பதின்மவயதுப் பிள்ளை இணைய வழி கொடுமைப்படுத்துதலைச் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சில பெற்றோர்கள் தற்காப்பாளராக மாறலாம் அல்லது நிராகரிக்கலாம், மேலும் அதற்கேற்ப நிகழ்வுகள் பற்றிய உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் ஒத்துக்கொள்ளாதவர்களாகவும் சண்டையிடக்கூடியவர்களாகவும் இருக்கலாம். ஒரு பெற்றோராக இந்த உரையாடலை மேற்கொள்ளலாமா என்பதைக் கருத்தில் கொண்டு, முதலில் துன்புறுத்துபவரின் பெற்றோரை நீங்கள் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறீர்கள் என்பதைக் கவனமாக ஆய்ந்தறிந்து, அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பது குறித்த உங்கள் நம்பிக்கைகளை மதிப்பீடு செய்யுங்கள்.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக