டிஜிட்டல் நல்வாழ்வு

நிஜ மற்றும் டிஜிட்டல் உலகங்களில் சமநிலையை நாடுதல்

டிஜிட்டல் உலகில் பிள்ளைகளை வளர்க்கும்போது, பெற்றோர்கள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று "___ வயது பிள்ளைக்கு எவ்வளவு திரை நேரம் பொருத்தமானதாக இருக்கும்?" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வரம்புகள் இருக்க வேண்டும் என்ற புரிதலில் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. வாழ்க்கையின் பிற முக்கியமான நடவடிக்கைகளில் குறுக்கிடக்கூடிய எந்தவொரு செயல்பாட்டிற்கும் இது பொருந்தும். இருப்பினும், வரம்புகளை அமைப்பதற்கு முதன்மையான வழியாக கடிகாரத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான முறையில் டிஜிட்டல் உலகத்தில் பிள்ளைகளை வளர்ப்பதற்கான சிறந்த அணுகுமுறையாக இருக்காது.


ஒரு பிள்ளை ஒவ்வொரு நாளும் திரையில் செலவழிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வதில் பல சவால்கள் உள்ளன. ஆரம்பத்தில், திரை நேரப் பரிந்துரைகளுக்கு வழிவகுத்த ஆராய்ச்சியானது செயல்பாடு ஏதுமின்றி தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது (இணையம் புழக்கத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு). இன்று பிள்ளைகள் அணுகும் பல வகையான டிஜிட்டல் செயல்பாடுகளில் இருந்து தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் வித்தியாசமான செயலாக இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கான நேர வரம்புகளை அமைப்பதில் உள்ள மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால், அனைத்து டிஜிட்டல் செயல்பாடுகளும் சமமான மதிப்புடையவை என்ற பார்வையை ஏற்படுத்துவதுதான். உண்மைக்கு அப்பாற்பட்டு எதுவுமே இருக்க முடியாது! இப்போது இரண்டு விதமான டிஜிட்டல் செயல்பாடுகளைப் பார்ப்போம்; ஒன்று தாத்தா பாட்டியுடன் காணொளி வாயிலாக உரையாடுவது, இன்னொன்று மீண்டும் மீண்டும், அதிர்ஷ்டம் சார்ந்த கேம் விளையாடுவது. இரண்டு செயல்பாடுகளும் சாதனம் ஒன்றில்தான் (திரை மூலம்) நடைபெறுகின்றன ஆனால் ஒவ்வொரு செயல்பாட்டின் மதிப்பும் முற்றிலும் வித்தியாசமானது. திரை நேரத்தின்படி சாதனப் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்தும் போது, தொழில்நுட்பப் பயன்பாடு என்பது பைனரி (அனுமதிக்கப்படுகிறதா இல்லையா) என இளம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறோம், இது அனைத்து டிஜிட்டல் செயல்பாடுகளும் சம மதிப்புடையவை என்பதைக் கற்பிக்கிறது. எந்தெந்த டிஜிட்டல் செயல்பாடுகள் பிறவற்றை விட மிகவும் மதிப்புமிக்கவை என்பதை பிரித்தறிவதற்கான முக்கியமான திறனை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை இது நீக்கி விடுகிறது, எனவே இது குறித்து அறிய நாம் நேரம் செலவிட வேண்டும்.


நமது குடும்பங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கான கருவியாக நாம் திரை நேரத்தைப் பயன்படுத்துவது சரியான அணுகுமுறை இல்லை என்றால், தொழில்நுட்ப பயன்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த அணுகுமுறை எது? கடுமையான திரை நேர வரம்புகளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, நாம் கற்பிக்க வேண்டிய கருத்து சமநிலை பற்றியதாகும். நிஜ உலகில் நாம் தொடர்ந்து கற்பிக்கும் ஒரு கருத்து இது. ஆரோக்கியமான மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் செலவழிக்கும் நேரத்தையும் தங்களுக்கென்று பயன்படுத்தும் நேரத்தையும் சமமாக கையாளுவதை நாம் சுட்டிக்காட்டுகிறோம். உடற்பயிற்சி மற்றும் ஓய்வு நேரத்தை எப்படி சமநிலைப்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும், தீவிரமாக இருப்பதற்கும் வேடிக்கையாக நேரத்தை கழிப்பதற்கும் நேரத்தை சமநிலையோடு கையாளுகிறார்கள்.


பெருவாரியான செயல்பாடுகளின் மதிப்பு மற்ற செயல்பாடுகளுடன் அவற்றுக்கு இருக்கும் விகிதாச்சாரத் தொடர்பு மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வது நல்ல விஷயம்தான், ஆனால் நாம் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், நம்மால் வீட்டுப்பாடத்தை முடிக்கவோ குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடவோ முடியாது. அதே போல ஓய்வு எடுப்பதும் நல்லதுதான், ஆனால் அதிகப்படியாக தூங்கினால், குறிப்பாக வழக்கமாக அதிகப்படியாக தூங்கினால், அது நமது வேலை செய்யும் திறனையும் மன ஆரோக்கியத்தையும் குறைக்கிறது. கற்பனை செய்வதும் நல்லதுதான், ஆனால் தவறான சூழலில் செய்தால், அது பொய்யாகக் கருதப்படும்.

சமநிலை என்பது எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு பெரிய அறிவியல் செயல்திட்டத்தை அடுத்த நாள் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்போது, அன்றைய தினம் பைக் ஓட்டிப் பார்ப்பதிலேயே முழு நாளையும் செலவிடுவது சமநிலையை மீறும். அடுத்த நாள் வயலின் வாசிக்க வேண்டி இருக்கும்போது, பயிற்சி செய்வதற்குப் பதிலாக நாள் முழுவதையும் புத்தகம் வாசிப்பதில் கழிப்பது பொருத்தமற்றதாக இருக்கலாம், அதே சமயம் வேறு நாளில் புத்தகம் வாசிப்பது சிறந்த தேர்வாக இருக்கலாம். பெற்றோர்களாக, நிஜ உலகில் செயல்பாடுகள் சமநிலையற்றதாக உணரப்படும்போது குறிகாட்டிகளை நாம் கண்காணிக்கிறோம். அதே மாதிரி நமது மெய்நிகர் உலகிலும் சமநிலையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. பிள்ளைகள் வாழ்க்கையின் பிற பகுதிகளில் சமநிலையைக் கண்டறிய உதவுவது போல, டிஜிட்டல் சமநிலையைக் கண்டறிய நமது பிள்ளைகளுக்கு உதவுவதில் நாங்கள் அதே அளவுக்குப் பிடிவாதமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்வரும் மூன்று கொள்கைகள் இதற்கு உதவியாக இருக்கும்.


சமநிலையைக் கற்பிப்பது நம் பிள்ளைகளின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். வேறொரு செயல்பாட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் எப்போது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகிறோம், அதற்கு டைமர் வைத்து பழக்காமல், சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அவர்கள் மனதில் ஊன்ற வேண்டும்.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்