நல்ல டிஜிட்டல் நடத்தைகளை மாதிரியமைத்தல்

இளம் வயதினர் கற்றுக் கொள்ளும் மிக முக்கியமான வழிகளில் ஒன்று மாதிரியமைத்தல் ஆகும். பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளும் நடத்தைகளும் பதின்மவயதினர் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு முக்கியமான விஷயங்களாக அமைகின்றன. நிஜ உலகில், பல்வேறு வழிகளில் பயனுள்ள நடத்தையை நாம் மாதிரியாகக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, பூங்காவிற்குச் செல்லும் போது, தரையில் கிடக்கும் ஒரு குப்பையை எடுத்து அதனை அப்புறப்படுத்தி எறியும் வாய்ப்பைக் காணலாம். நாம் எதுவும் சொல்லாவிட்டாலும் கூட, அது நமது குப்பையாக இல்லாவிட்டாலும், பகிர்ந்துகொள்ளப்பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதன் மூலம் அதனை சிறப்பாக வைத்திருப்பதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற முக்கியமான பாடத்தை நமது மாதிரியமைத்தல் கற்றுக் கொடுத்துள்ளது.

டிஜிட்டல் உலகில் பயனுள்ள நடத்தையை மாதிரியமைத்தல் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். ஒரு பெற்றோராக, உங்கள் பதின்மவயதினருக்கு ஒரு மாதிரி நடத்தையாக அமையும் வகையில் மதிப்புமிக்க வழிகளில் நீங்கள் ஏற்கெனவே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதற்கான சாத்தியம் இருக்கலாம். Facebook இல் நீங்கள் பின்தொடரும் உள்ளூர் உணவு வங்கிக்கு நன்கொடைகள் தேவை என்பதை நீங்கள் கவனிப்பதும் உங்களைப் பின்தொடர்பவர்களும் உங்களுடன் சேர்ந்து பங்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மெசேஜை ஆன்லைனில் பதிவிடுவதும் இதில் அடங்கும். அல்லது ஒருவர் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதற்காக நீங்கள் அவருக்காக குரல் கொடுத்து, மற்றவர்களையும் அவ்வாறே செய்யுமாறு ஊக்குவித்த அனுபவத்தைப் பற்றி பதிவிடுவதாக இருக்கலாம்.

ஆனால் பயனுள்ள டிஜிட்டல் நடத்தைகளை மாதிரியமைத்தலுக்கு ஒரு கூடுதல் சவால் உள்ளது. குப்பையை எடுத்து அப்புறப்படுத்துவது, மளிகைப் பொருட்களை தூக்கிச்செல்லும் ஒருவருக்கு கதவைத் திறந்து வைத்திருப்பது என்பது போலல்லாமல், கணினியைப் பயன்படுத்தும் பெற்றோரைப் பார்க்கும் குழந்தைக்கு, அனைத்துச் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றும். நாம் மின்னஞ்சலைச் சரிபார்த்தாலும், கேம் விளையாடினாலும் அல்லது ஆன்லைனில் சேவைகளைப் புரிந்தாலும், கவனிப்பவரைப் பொறுத்தவரை நாம் கணினியின் முன்பு அமர்ந்திருப்பதாக மட்டுமே தோன்றும். நல்ல டிஜிட்டல் நடத்தையை மாதிரியமைத்தலுக்கு இது உதவியாக இருக்காது.

ஓர் எளிய தீர்வு என்பது நல்ல டிஜிட்டல் நடத்தை மாதிரியமைத்தல் குறித்து வெளிப்படையாக இருக்க கற்றுக்கொள்வதாகும். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் ஒருவருக்கு உதவும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்ல நாம் சிறிது நேரத்தை ஒதுக்கலாம்; "சரியான நேரத்திற்கு நான் அங்கு இருப்பேன், பக்கத்து வீட்டுக்காரருக்கு டாக்டரை சந்திப்பதற்கு உதவ ஒரு பயணத்தை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்". வாய்ப்பிருக்கும்போது, அவர்களை நமது கருணை அடிப்படையிலான டிஜிட்டல் செயல்கள் மற்றும் சேவையிலும் கூட ஈடுபடுத்தலாம்; "அடுத்த வாரம் நிகழவிருக்கும் இரத்தத்தான முகாம் ஒன்றை விளம்பரப்படுத்த Facebook இல் ஓர் அழைப்பைப் பதிவிடுகிறேன் - இது எப்படி இருக்கிறது?" கருணை அடிப்படையிலான டிஜிட்டல் செயல்களை வெளிப்படையாக மேற்கொள்வது, இந்த நடத்தைகளை ஒரு வழியில் மாதிரிகளாக மாற்றுகிறது, இது நமது பதின்மவயதினர் இப்போதும் எதிர்காலத்திலும் டிஜிட்டல் தளத்தில் இருக்கும் பயனர்களின் வகையை வடிவமைக்கவும் வரையறுக்கவும் உதவுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்