ஆன்லைன் தனியுரிமையின் முக்கியத்துவம்

சமூக ஊடகத்தில், நீங்கள் எதைப் பதிவிடுகிறீர்கள் என்பதை போலவே உங்கள் பதிவுகளை யாரெல்லாம் பார்ப்பார்கள் என்பதும் முக்கியம். பெற்றோர்களும் பாதுகாப்பாளர்களும் தங்கள் பதின்மவயதினருக்கு அவர்களின் தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்வது பற்றியும், அவர்களின் ஆன்லைன் அனுபவங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவுவது முக்கியம்.

காலப்போக்கில், பதின்மவயதினரின் தனியுரிமைத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மாறலாம், எனவே அவர்களின் தேவையைக் கேட்டறிந்து உதவுவது உதவிகரமாக இருக்கும், மேலும் அவர்களின் தனியுரிமை அமைப்புகள் தங்களின் சொந்த தரநிலைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்பதையும் அவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் அமைப்புகளைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதை உறுதி செய்யுங்கள்.

ஆன்லைன் தனியுரிமையைப் பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் பேசுவதற்கான 5 உதவிக்குறிப்புகள்

ஆன்லைன் தனியுரிமை பற்றிய உரையாடலைத் தொடங்குவது எளிதான காரியம் அல்ல, ஆனால் அதைச் செய்ய வேண்டியது முக்கியம். உங்கள்பதின்மவயதினருடனான உங்கள் உரையாடலை வழிநடத்த சில குறிப்புகள் இங்கே உள்ளன.

  1. உங்கள் பதின்மவயதினர் அவர்கள் கட்டுப்படுத்த விரும்பும் தகவல்கள் தொடர்பான தனியுரிமை அமைப்புகளைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். உங்கள் பதின்மவயதினர் (அல்லது யாரேனும்!) சமூக ஊடகத்தைப் பயன்படுத்தப் போகிறார்களேயானால், அவர்களின் தனியுரிமை அமைப்புகள் என்ன என்பதையும், அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அவற்றை மாற்றுவது எப்படி என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் பதின்மவயதினருடன் நீங்கள் பேசும்போது, தனியுரிமை அமைப்புகளைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் சில அடிப்படைக் கேள்விகளின் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட உதவுங்கள், அத்தகைய கேள்விகளாவன:

  • இந்தத் தனியுரிமை அமைப்புகள் நான் பகிர்வதை எந்தப் பார்வையாளர்கள் பார்க்க முடியும் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்குமா?
  • இந்தத் தனியுரிமை அமைப்புகள் என்னென்ன தனிப்பட்ட தகவல்களை (பெயர், இருப்பிடம், அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்றவை) எனக்குத் தனிப்பட்டதாக வைத்திருக்க உதவும்?
  • எனக்குத் தெரியாதவர்கள் உட்பட — என்னைத் தொடர்புகொள்பவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியுமா?
  • எனது இருப்பிடத்தைக் கண்காணிப்பதில் இருந்து செயலியைத் தடுப்பதற்கான அமைப்புகள் உள்ளனவா?

    Metaவின் தொழில்நுட்பங்கள் முழுவதிலும் தனியுரிமை அமைப்புகளைப் பற்றி மேலும் அறிக:

    Instagram
    Facebook
    Messenger
    WhatsApp
    Oculus

2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும் ஆன்லைன் தனியுரிமை குறித்த எதிர்பார்ப்புகளைப் பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் கேளுங்கள். Meta தொழில்நுட்பத்தில் கணக்கு வைத்திருக்கும் எவரும் பின்வரும் அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்: யாரெல்லாம் அவர்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கலாம், யாரெல்லாம் அவர்களது நண்பர்கள் அல்லது பின்தொடர்பவர்களின் பட்டியலில் இருக்கலாம். ஒவ்வொரு குடும்பமும் வெவ்வேறு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னோக்குகளைக் கொண்டிருக்கும், அவர்களின் பதின்மவயதினர் தங்கள் பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளர்களிடமிருந்து என்னென்ன தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கலாம் — மேலும் ஒவ்வொரு பதின்மவயதினரின் தனியுரிமை எதிர்பார்ப்புகளும் காலப்போக்கில் மாறும். உங்கள் பதின்மவயதினர் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கும் இடையே சரியான சமநிலையைப் பெறுவது சவாலான காரியமாக இருக்கலாம். நம்பிக்கையின் அடிப்படையில் உறவை ஏற்படுத்துவதற்கான திறவுகோல், அவர்களைப் பொறுத்தவரையில் தனியுரிமை என்றால் என்ன மற்றும் அவர்கள் மதிக்கும் வரம்புகள் (ஆன்லைனில் பகிர்வதற்கு அவர்கள் சௌகரியமாக உணரும் விஷயங்கள் மற்றும் அவர்களுக்கு நீங்கள் அமைத்துள்ள விதிகள் போன்றவை) என்ன என்பதைப் பற்றி தொடர்ந்து உரையாடல்களை மேற்கொள்வதாகும்.

3. உங்கள் பதின்மவயதினரிடம் அவர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் வைத்திருக்கும் அல்லது வைப்பதற்கு திட்டமிட்டிருக்கும் தனியுரிமை அமைப்புகளைப் பற்றி கேளுங்கள். நீங்கள் கேட்க விரும்பும் முதல் விஷயங்களில் ஒன்று, அவர்களின் கணக்கை அனைவரும் பார்க்க முடியுமா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மட்டுமே பார்க்க முடியுமா என்பதுதான். எடுத்துக்காட்டாக, Instagram இல் உள்ள கணக்குகள் பொதுவானதாகவோ தனிப்பட்டதாகவோ இருக்கலாம். அவர்கள் ஆன்லைனில் பதிவிடும் விஷயங்களை யார் பார்க்கிறார்கள் மற்றும் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் அவர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது, சமூக ஊடகங்களில் அவர்கள் தாங்களாக — பாதுகாப்பாக இருப்பதற்கு அவர்களுக்கு அதிகாரமளிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் பதின்மவயதினரின் தனியுரிமை மற்றும் டிஜிட்டல் தடம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த Instagram பல கருவிகளை வழங்குகிறது. 16 வயதுக்குட்பட்ட (அல்லது குறிப்பிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட) பதின்மவயதினர் Instagram இல் பதிவிடும்போது, அவர்களின் கணக்குகள் தானாகவே தனிப்பட்டதாக மாற்றப்படும். அவர்கள் தங்கள் கணக்கை பொதுவானதாக மாற்றுவதை தேர்வுசெய்தால், அவர்கள் பின்தொடர்பவர்களை அகற்றலாம், அவர்களின் பதிவுகளில் யார் கருத்துதெரிவிக்கலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம் மற்றும் அவர்களின் செயலி அமைப்புகளுக்குச் சென்று அவர்களின் செயல்பாட்டு நிலையை (அதனால், அவர்கள் செயலியில் செயலில் இருக்கும்போது மக்களால் அவர்களைப் பார்க்க முடியாது) முடக்கலாம்.

4. உங்கள் பதின்மவயதினரிடம் அவர்கள் என்னென்ன தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புகிறார்கள் என்றும் ஆன்லைனில் மற்றவர்களுடன் எதைப் பகிர்வதற்கு சௌகரியமாக உணர்கிறார்கள் என்றும் கேளுங்கள். இணையத்தில் விஷயங்களைப் பகிர்வதற்கு வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு சௌகரிய நிலைகள் உள்ளன. பதின்மவயதினர் வளர்ந்து, தங்களைப் பற்றியும் அவர்கள் எதை மதிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ளும்போது, அவர்கள் ஆன்லைன் தனியுரிமையை விவரிக்கும் முறை நிறைய மாறலாம்! அவர்கள் எந்த வகையான தகவல்களைப் பொதுவில் பகிர வேண்டும் மற்றும் பகிரக்கூடாது (அவர்களின் அலைபேசி எண், முகவரி, அட்டவணை, இருப்பிடம் மற்றும் பிற முக்கியத் தகவல்கள் போன்றவை), மேலும் தனிப்பட்ட அனுபவங்களை எப்படி இயக்குவது என்பது பற்றிய அடிப்படை விதிகளை அமைப்பது முக்கியம். Instagram இல், பதின்மவயதினர் நெருங்கிய நண்பர்கள் பட்டியலை உருவாக்கி, அந்தப் பட்டியலில் உள்ளவர்களுடன் மட்டுமே அவர்களின் ஸ்டோரிகளைப் பகிரலாம் — அவர்கள் எந்த நேரத்திலும் அந்தப் பட்டியலை திருத்தலாம். இது பதின்மவயதினருக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சிறிய குழுவுடன் மட்டுமே தனிப்பட்ட தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இலகுவான சூழலை வழங்குகிறது.

5. உங்கள் பதின்மவயதினர் வழக்கமான முறையில் தனியுரிமைச் சரிபார்ப்புகளை மேற்கொள்ள ஊக்குவித்திடுங்கள். ஆன்லைன் தனியுரிமைத் தேர்வுகள் பதிவு செய்வதோடு நின்றுவிடாது. நமது விருப்பங்களைப் போலவே, கிடைக்கக்கூடிய தனியுரிமை அமைப்புகளும் காலப்போக்கில் மாறக்கூடும் என்பதால், தேவைக்கேற்ப அவர்களின் தனியுரிமை அமைப்புகளை மதிப்பாய்வு செய்து வழக்கமான மாற்றங்களைச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் பேசுங்கள்.

பதின்மவயதினருக்கான கூடுதல் தனியுரிமை உதவிக்குறிப்புகள்

Instagram இல், 16 வயதுக்குட்பட்ட (அல்லது குறிப்பிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட) ஒவ்வொருவரும் கணக்கிற்குப் பதிவு செய்யும்போது அவர்களுக்கு இயல்பாகவே தனிப்பட்ட கணக்கு அமைக்கப்படும். இளம் நபர்கள் எளிதாக புதிய நண்பர்களை உருவாக்கி தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் தேவையற்ற DMகள் அல்லது அந்நியர்களின் கருத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். எனவே, தனிப்பட்ட கணக்குகள் சரியான தேர்வு என்று நாங்கள் நினைக்கிறோம்.

இருப்பினும், சில இளம் படைப்பாளிகள் தங்களைப் பின்தொடர்பவர்களை உருவாக்க, ஒரு சமூகத்தை உருவாக்க அல்லது தாங்கள் அக்கறை கொண்ட பிரச்சினைகளுக்கு வாதிட பொதுக் கணக்குகளை வைத்திருக்க விரும்புவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எனவே, அந்த விருப்பத்தை அவர்கள் எதற்காக தேர்வு செய்துள்ளார்கள் என்பதைப் பற்றிய தகவல்களை வழங்கிய பின்னர் வழங்குகிறோம்.

நீங்களும் உங்கள் பதின்மவயதினரும் இணையத்தில் அதிகமாகப் பகிரும்போது, உங்களுக்குத் தனியுரிமை என்றால் என்ன, பதிவிடுவதற்கு முன் எப்படி விமர்சன ரீதியாகச் சிந்திப்பது என்பதைப் பற்றி தொடர்ந்து உரையாடுங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக