LGBTQ+ பதின்மவயதினரின் பாதுகாப்பு மற்றும் ஆன்லைனில் தனியுரிமை பற்றிக் குடும்பங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

LGBT Tech

மார்ச் 13, 2024

உலக அளவில் பரவும் தொற்றுநோய் வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள LGBTQ+ இளைஞர்கள் தங்கள் வயதை ஒத்த எதிர்பாலின ஈர்ப்புடைய சகாக்களை விட ஆன்லைனில் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? LGBTQ+ இளைஞர்கள் தங்கள் சுய அறிதல் மற்றும் பாலியல் அடையாளத்தை ஆராய்வதற்கு நீண்ட காலமாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர், அது ஆன்லைனில் அவர்களை அடையாளம் காண முடியாத நபராகவும், பாதுகாப்பாகவும் உணரச்செய்தது. உலக அளவில் பரவும் தொற்றுநோய்க் காலத்தில், LGBTQ+ இளைஞர்களுக்கான தனிமைப்படுத்திக்கொள்ளுதல்கள் மற்றும் தனித்திருத்தலின் விளைவாக ஏற்பட்ட சமூக வெற்றிடத்தை நிரப்ப தொழில்நுட்பம் உதவியது, LGBTQ+ இளைஞர்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் மேலும் அதிகரித்தது. LGBTQ+ இளைஞர்கள் சமூகத்துடன் இணைவதற்கு இணையத்தை நாடுவார்கள் என்பதை அறிந்திருப்பதால், LGBTQ+ இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள பெரியவர்கள் அவர்களின் ஆன்லைன் அனுபவங்களுக்கு உதவக்கூடிய விஷயங்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1. அனைத்து இளைஞர்கள்/பயனர்களுக்கும் பொருந்தும் என்றாலும் குறிப்பாக LGBTQ+ பதின்மவயதினருக்கு முக்கியமான பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பாதுகாவல் உதவிக்குறிப்புகளுடன் தொடங்குவோம்:

  • இணையப் பாதுகாப்பு மற்றும் வைரஸ் பாதுகாப்பிற்கான அதுவாகவே மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகளுக்கான சாதனங்களை அமைத்தல்.
  • குறைந்தபட்சம் 12 எழுத்துகளாக இருக்கக்கூடிய வலுவான கடவுச்சொற்களை, அதாவது நீண்ட வாக்கியங்கள் அல்லது எண்கள் அல்லது குறியீடுகளால் பிரிக்கப்பட்ட சொற்களின் வரிசையாக உருவாக்குதல் எ.கா. I love eating sundaes on Sundays அல்லது Chocolate#Sundaes#Sundays. கூடுதலாக, அதே கடவுச்சொற்களைப் பல வலைதளங்களில் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
  • முடிந்தவரை பல நிலை அங்கீகரித்தலை (பயோமெட்ரிக்ஸ், பாதுகாப்புக் குறியீடுகள் போன்றவை) செயல்படுத்துதல்.
  • ட்வீட்கள், மெசேஜ்கள், சமூக ஊடக மெசேஜ்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஃபிஷிங் மோசடிகளைத் தவிர்க்க, அதற்குப் பதிலாக நேரடியாக URLலை உள்ளிடுங்கள்.
  • பொது WI-FIஐப் பயன்படுத்தும்போது, மிகவும் பாதுகாப்பான இணைப்பிற்கு VPN அல்லது தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.
  • சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும்போது, கிடைக்கும் தனியுரிமை விருப்பத்தேர்வுகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செயலிகள் வழங்கக்கூடிய கருவிகளைச் சரிபார்த்திடுங்கள். Metaவில், Metaவின் குடும்ப மையம், Metaவின் தனியுரிமை மையம் அல்லது Instagram இன் பாதுகாப்புப் பக்கத்துக்கு செல்லுங்கள்.

2. LGBTQ+ இளைஞர்கள் உரையாடல் மூலம் மற்ற பதின்மவயதினர் மற்றும் பயிற்சி பெற்ற உதவியளிக்கும் நிபுணர்களுடனும் அவர்களைப் போன்ற பிற இளைஞர்களுடனும் நெறிப்படுத்தப்பட்ட உரையாடலை மேற்கொள்ள பாதுகாப்பான வழியை வழங்குங்கள்.

உட்பொருளை நிர்வகிக்காத இடங்களான செயலிகள் மற்றும் உரையாடல் அறைகள் LGBTQ+ இளையோரின் தனியுரிமை ஆக்கிரமிக்கப்படும் அபாயத்துக்கு உள்ளாக்குகின்றன, சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதுடன் சாதனப் பாதுகாப்பு விதிமீறலும் நிகழ்கிறது. LGBTQ+ இளைஞர்கள் மற்ற LGBTQ+ இளைஞர்களுடன் இணைவதற்கும் பயிற்சி பெற்ற உதவியளிக்கும் நிபுணர்களைக் கண்டறிவதற்கும் கிடைக்கும் சில ஆன்லைன் விருப்பத்தேர்வுகள்:


3. அவர்களின் சுயமரியாதையை வளர்ப்பதன் மூலம் அவர்களின் தகுதிபெறும் தன்மையைக் கட்டமைத்திடுங்கள்.

LGBTQ+ பதின்மவயதினரின் பாதிக்கப்படக்கூடிய நிலை அவர்களை இணைய வழி கொடுமைப்படுத்துதல், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதக் கடத்தல் என அனைத்திற்கும் ஆன்லைனில் குறிவைக்கப்படுபவராக மாற்றும். பின்வருவன போன்ற ஆன்லைன் உதவி வளங்கள் மூலம் சுயமரியாதையைக் கட்டமைக்க உதவுங்கள்:

  • சரிபார்ப்பு நிலையம் (டிரான்ஸ் மற்றும் பைனரி அல்லாத இளைஞர்களுக்குப் பாலினத்தை உறுதிப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் எழுத்து மெசேஜ்களை அனுப்பும் இலவச எழுத்து மெசேஜ் அனுப்புதல் சேவை).
  • PFLAG சேப்ட்டர்ஸ் மூலம் உள்ளூர்ப் பகுதிகளில் உள்ள பெற்றோர்/பாதுகாவலர்கள் அல்லது LGBTQ+ இளைஞர்களுக்கு மெய்நிகர் உதவி வழங்க முடியும்.
  • GLSEN மூலம் LGBTQ+ இளைஞர்களுக்கான ஏற்புறுதிகள்

4. நீங்கள் நம்பகமானவையாகக் கருதக்கூடிய ஆதாரங்களிலிருந்து சாத்தியமான ஆபத்துகளை அடையாளம் காணுங்கள்.

LGBTQ+ இளைஞர்கள் பிறருக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டு, அவர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய சூழ்நிலைகளில் ஈடுபடுத்தப்படலாம். அவர்களின் வாழ்க்கையில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், காதல் உறவுகள் மற்றும் வேலை வழங்குனர் ஆகியோரால் வழங்கப்படும் அதிக அக்கறையில் கவனம் செலுத்துங்கள், மேலும் புதிய அல்லது இயல்புக்கு மீறிய குணமாகத் தோன்றும் எந்தவொரு உறவுகளையும் பற்றி அவர்களிடம் பேசுவதற்குப் பயப்பட வேண்டாம்.

  • ஆன்லைன் கொடுமைப்படுத்துதலிலிருந்து பாதுகாக்கப்பட மற்றும்/அல்லது ஆதாரம் வழங்கும் LGBTQ+ இளைஞர்களின் கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் தடுப்புச் சட்டங்கள் தொடர்பான உரிமைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

5. சமூக ஊடகச் செயலிகள், எழுத்து மெசேஜ் அனுப்புதல், உடனடி மெசேஜிங் அம்சம், ஆன்லைன் உரையாடல் (மன்றங்கள், உரையாடல் அறைகள், மெசேஜ் பலகைகள்) மற்றும் மின்னஞ்சல் மூலம் இணைய வழி கொடுமைப்படுத்துதல் நடைபெறக்கூடும்.

  • உங்கள் மாகாணத்தில் உள்ள கொடுமைப்படுத்துதல்/துன்புறுத்தல் தடுப்புச் சட்டங்களை இங்கே பாருங்கள்: https://maps.glsen.org/
  • கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் தொடர்பான பள்ளி வாரியக் கொள்கை நிபந்தனைகளை உங்களுக்கு வழங்குமாறு பள்ளி மாவட்டங்களைக் கேளுங்கள். ஆன்லைனில் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் (சைபர்) கொடுமைப்படுத்துதல் பற்றிய குறிப்புகளைத் தேடுங்கள்.
  • LGBTQ+ இளைஞர்களுக்குச் சமூக ஊடக அமைப்புகளின் மூலம் தவறான, தீங்கு விளைவிக்கும் அல்லது எதிர்மறையான பகிர்வைப் பற்றியும், தனிநபர்களைப் பற்றியும் எவ்வாறு புகாரளிப்பது/தடுப்பது என்பதை விளக்குங்கள்.
  • LGBTQ+ உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்கள் வழியான மறைமுகமான துன்புறுத்தல்கள் மூலம் குறிவைக்கப்பட்டால், அவர்களின் உடன்பிறந்தவர்களுடன் இதைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருங்கள் மற்றும்/அல்லது LGBTQ+ இளைஞரின் நண்பர்களின் பெற்றோருக்குத் தெரிவியுங்கள்.
  • இணைய வழி கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு புகாரளிப்பது என்பதைக் கண்டறிய www.stopbullying.gov தளத்திற்குச் செல்க

உதவி வளங்கள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக