ஆன்லைன் உறவுநிலைகளை நிர்வகித்தல்

ParentZone

ஒரு கட்டத்தில் உங்கள் பதின்மவயதினர் நட்பில் சிக்கலை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாகிறது, அது முற்றிலும் ஆன்லைனில் உள்ள ஒன்றாக இருந்தாலும் சரி அல்லது ஆன்லைன்-ஆஃப்லைன் உறவுநிலை கலந்ததாக இருந்தாலும் சரி.

இது ஓர் எளிய பிரிவாக அல்லது சிக்கலானதாக இருந்தாலும் சரி, குழப்பமான மற்றும் உணர்ச்சிரீதியான முறிவாக இருந்தாலும் சரி, இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது: உங்கள் ஆரம்பநிலை பதிலளிப்பு முதல் அவர்கள் நேர்மறையாக முன்னேற உதவுவது வரை.

ஆன்லைன் உறவுநிலைகளை மதித்திடுங்கள்

எல்லா நட்புகளும் உறவுநிலைகளும் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்கின்றன. ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் உறவுநிலையாகவே இருந்தாலும், இவையும் உண்மையான உறவுகளே.

உங்கள் பதின்மவயதினர் பள்ளியில் அல்லது வார இறுதி நாட்களில் பார்க்கும் நபர்களைப் போலவே ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் உறவுநிலைகளும் முக்கியமானதாகவே இருக்கும். இந்த நண்பர்களுக்கும் அவ்வாறே மதிப்பளிக்க முயற்சி செய்யுங்கள்.

நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

உங்கள் பதின்மவயதினர் Instagram இல் ஒருவரை தடுத்துள்ளார் அல்லது புகாரளித்துள்ளார் என்பதைக் கண்டறிதல், எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு விஷயம் தவறாக நிகழ்ந்துள்ளது என்பதற்கு உங்களுக்கு காட்டப்படும் முதல் அறிகுறியாக இருக்கலாம். எனினும் ஏதோ ஒரு விஷயம் சரியாக நிகழ்ந்ததற்கான அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

நல்ல செய்தி என்னவென்றால்: அவர்கள் ஒருவரை புகாரளித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால், இது ஒரு நேர்மறையான செயலாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதில் அவர்களின் சுய-அறிதல் மற்றும் நம்பிக்கையை இது காட்டுகிறது.

நிகழ்ந்தது என்ன, ஏன் என்று கண்டுபிடிக்க விரும்புவதில் அவசரப்படுவது இயல்பானது தான். உங்கள் பதின்மவயதினர் நேர்மறையான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை அடையாளம் கண்டதில், நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுவது, கூடுதல் விவரங்களைக் கோருவதை விட உரையாடலைத் தொடங்குவதற்கான சிறந்த விஷயமாகும்.

எதிரெதிரான தருணங்கள்

உங்கள் பதின்மவயதினருடன் உரையாடலை அணுக சரியான தருணத்தைக் கண்டறிவதற்கு உங்களின் பிள்ளை வளர்ப்பின் அனைத்துத் திறனும் தேவைப்படுகிறது.

இணையான தருணங்கள் என்பன அவர்களின் வாழ்வில் என்ன விஷயங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொன்னான, நிதானமான நேரங்கள் ஆகும். அது சமையல் செய்யும்போது அல்லது கார் பயணத்தின்போதும் இருக்கலாம். விஷயத்தை மெதுவாக ஆரம்பிப்பதற்கான சரியான நேரம் எப்போது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தத் தருணம் இயல்பாகவே நிகழ நீங்கள் காத்திருக்க வேண்டும். அதை கட்டாயப்படுத்த முயற்சி செய்யாதீர்கள் - இல்லையென்றால் உரையாடல் என்பது விசாரணை செய்வது போல் உணர வைக்கலாம்.

ஆஃப்லைன் பின்விளைவுகள்

அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் தடுக்க விரும்பும் நபரைப் பார்த்தாலோ Instagram இல் புகாரளித்தாலோ விஷயங்கள் மிகவும் சிக்கலானதாகிவிடும் – அத்துடன் அதன் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்பட நேரலாம்.

உங்கள் பதின்மவயதினர் Instagram இல் அவர்களைப் பின்தொடர்வதில்லை என்பதை அந்த நபர் அறிந்தால், என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்காது.

நீங்கள் உங்கள் பதின்மவயதினருக்கு, ஒரு நபர் தன்னை எதிர்த்தால் அதை அவர்கள் எவ்வாறு கையாண்டிருக்கக்கூடும் என்ற யோசனை குறித்து சிந்திக்க உதவலாம். நீங்கள் சில பதில்களை ஒன்றிணைந்து பயிற்சி செய்யலாம்.

விஷயங்கள் தீவிரமாவதைத் தடுக்க, குற்றம் சாட்டுவது போன்ற மொழியைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக, அவர்கள் வாக்கியங்களை "நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள்..." என்பதை விட "நான் இவ்வாறு உணர்கிறேன்..." என்று தொடங்கலாம்.

உங்கள் பதின்மவயதினர் Instagram இல் ஒரு நபரைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களை வரம்பிடுவதை தேர்வு செய்யலாம். அவர்கள் பார்க்கும் விஷயத்தைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் கருத்துகளை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் – ஒரு நபர் அவர்களுடன் எவ்வாறு செயலை மேற்கொள்ளலாம் என்பதை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு இது அவர்களுக்கு உதவும். இங்கு மேலும் படிக்கலாம்.

உங்கள் பதின்மவயதினருக்கு இதனை நினைவுபடுத்துங்கள்: மின்னுவதெல்லாம் பொன்னல்ல, எனினும் சமூக ஊடகங்களில் ஒருவரைப் பின்தொடர்வது என்பது தனிப்பட்ட தேர்வாகும். யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பது அவர்களை பொறுத்த விஷயம்.

வெறுமனே செவிமடுத்திடுங்கள்

பெரும்பாலும், ஒரு பெற்றோர் செய்யக்கூடிய சிறந்த விஷயம் செவிமடுத்து கேட்பதுதான். அவர்களாகவே விஷயத்தில் இருந்து மீண்டு வர அனுமதியுங்கள் அவர்களுக்கு துணையாக இருப்பது நீங்கலாக- உங்களிடமிருந்து அதிக கருத்து திணிப்பு இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் யோசித்து கண்டறியக்கூடும்.

நினைவில் கொள்ளுங்கள்: அவர்கள் தங்கள் சொந்த தவறுகளையும், அவர்களின் சொந்த சவால்களையும் சமாளிக்க அனுமதிப்பது அவர்களின் மீண்டு எழும் தன்மையை வளர்க்கிறது. இவை அனைத்தும், அவர்கள் சிறு வயது முதற்கொண்டே நீங்கள் அவர்களுக்குக் கற்பித்து வரும் சமூகத் திறன்களைச் சோதித்துப் பார்ப்பதன் ஒரு பகுதியாகும்.

அவர்கள் கடந்து சென்று, எல்லாவற்றையும் மறந்துவிட்ட நீண்ட காலத்திற்குப் பிறகும் அவர்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றி நீங்கள் இன்னும் விரக்தியாகவோ வருத்தமாகவோ இருப்பதை நீங்கள் காணக்கூடும். முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்களே பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை விட, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது தான்.

முன்னோக்கிச் செல்லுதல்

உங்கள் பதின்மவயதினரிடம் அவர்கள் அடுத்து என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். ஒரு பயனுள்ள கேள்வியாக இருக்கக்கூடியது: அவர்கள் சரிசெய்ய விரும்பும் உறவுமுறை இதுவா?

இல்லையெனில், அவர்கள் உறவுநிலை நிகழ்ந்த ஆன்லைன் தளம் அல்லது தளங்களின் இடத்திலிருந்து சிறிது நேரம் பதிலளிக்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் அல்லது எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் ஒரு முக்கியமான சமூக அல்லது ஆதரவு நெட்வொர்க்கை இழப்பது போல் இது உணர்த்தலாம்.

இருப்பினும், மேற்கொண்டு தொடர்புகொள்வதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கலாம் – எடுத்துக்காட்டாக, அவர்கள் எங்கு சந்திக்கலாம் அல்லது குழுக்களை விட்டு வெளியேறுவது என்றால் தங்களின் பொதுவான நண்பர்களுடனான தொடர்பை இழக்க நேரிடுமோ என யோசனை செய்யலாம்.

ஒருவரை முழுவதுமாக தவிர்க்க முடியாது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு கடினமான சூழ்நிலை, குறிப்பாக உணர்வுரீதியிலான சங்கடங்கள் இன்னும் அதிகமாக இருந்தால்.

ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே இன்னும் இருக்க முடியும். அவர்கள் செய்ய விரும்புவதற்கான திட்டத்தை உருவாக்க – அத்துடன் சில நண்பர்களையோ சமூகக் குழுக்களையோ துண்டிப்பதாக இருந்தாலும் அதனை மேற்பார்வையிட நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இது பிற நபருடன் ஆன்லைன் தளங்களைப் பகிர்வதை ஏற்றுக்கொள்வதாக இருக்கலாம் – மேலும் அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதற்கு தாங்களே பொறுப்பாக உணர உதவுவதற்காக அவர்களின் விருப்பங்களை ஆதரிக்கவும் – அத்துடன் எதிர்காலத்திற்காக எதிர்மறையை நேர்மறையான அனுபவமாக மாற்ற உதவவும்.

மேலும் அறிவுரை தேவையா? கூடுதல் Family Center கட்டுரைகளை இங்கு படிக்கவும்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்