மீடியா கல்வியறிவு கொண்ட படைப்பாளராக இருப்பதற்கான ஐந்து உதவிக்குறிப்புகள்

NAMLE

நமது படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கும் அதனை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கும் தொழில்நுட்பம் நமக்கு அளிக்கும் ஆற்றல் உண்மையிலேயே நம்பமுடியாததாகும். ஆனால், அனைவருக்கும் தெரிந்த விஷயமாக, அதிகாரமானது பொறுப்புணர்வுடன் வருகிறது. மீடியாவை நெறிமுறையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்க நாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். மீடியாவை உருவாக்குவது மிகவும் எளிதானது, நாம் உருவாக்கி உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் மீடியாவின் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க நாம் மறந்து விடுகிறோம்.

மீடியா கல்வியறிவு கொண்ட படைப்பாளராக இருப்பதற்கான 5 உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன:

  1. நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் மற்றும் உங்கள் சிறந்த நண்பரின் படத்தைப் பகிர்ந்தாலும், சற்று முன்பு நீங்கள் வரைந்து முடித்த ஓவியம் அல்லது நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்ட சமூகப் பிரச்சினை பற்றிய கட்டுரையைப் பகிர்வதாக இருந்தாலும், நீங்கள் பகிரும் விஷயங்கள் நீங்கள் யார், நீங்கள் எதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்பதைப் பற்றி பயனர்களுக்குச் சொல்லும். நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்க விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கம் உங்களைப் பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  2. உங்கள் உள்ளடக்கம் மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் உருவாக்கும் மற்றும் பகிரும் அனைத்து விஷயங்களும் தகவல்களின் பரந்த வெளியையும் அதனைப் பயன்படுத்தும் பயனர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் உள்ளடக்கம் மற்றவர்களை ஊக்குவிக்கலாம் அல்லது மகிழ்விக்கலாம். உங்கள் உள்ளடக்கம் பயனர்களைப் புண்படுத்தவோ வருத்தப்படுத்தவோ கூடச் செய்யலாம். பகிர்வதற்கு முன்பாக நீங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது—மற்றும் எதிர்மறையான விளைவுகளை நீங்கள் எவ்வாறு கையாளலாம் என்பதை மதிப்பிடுவது—முக்கியமானது.
  3. வெளிப்படைத் தன்மையுடன் இருங்கள். உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்வதற்கான உங்கள் திட்டமிடல் என்ன? அதற்கு நீங்கள் பணம் பெறுகிறீர்களா? ஒரு நண்பர் உங்களிடம் பகிரச் சொன்னாரா? நீங்கள் ஏன் உள்ளடக்கத்தைப் பகிர்கிறீர்கள் என்பதைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு முக்கியமானது, குறிப்பாக உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான உள்ளடக்கம் இருந்தால் மற்றும் அவை பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது முக்கியமாகும்.
  4. விருப்பங்களின் எண்ணிக்கை உங்களை அதிகம் பாதிக்க விடாதீர்கள். நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நீங்கள் ஒரு படம் நேர்த்தியாக வருவதற்கு உழைக்கிறீர்கள், அதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் நேர்மறையான பதிலைப் பெற காத்திருக்கிறீர்கள், அது மிகவும் ஏமாற்றம் தரும் விதமாக இருக்கும். ஒரு முக்கிய விஷயத்தை உருவாக்கி பகிரும் செயல்முறையை மேற்கொள்ள முயற்சி செய்யவும், பதிலளிப்பை அல்ல! உங்கள் உள்ளடக்கத்தை எத்தனைப் பயனர்கள் பார்ப்பார்கள் மற்றும் விருப்பம் தெரிவிப்பார்கள் என்பதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், ஆனால் அதனைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்!
  5. நியாயமான பயன்பாடு மற்றும் பதிப்புரிமையைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதனைப் பகிரலாம் மற்றும் பிற பயனரின் உள்ளடக்கத்தை எவ்வாறு மீண்டும் பயன்படுத்தலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. பதிப்புரிமை வைத்திருப்பவரின் அனுமதியின்றி நீங்கள் சில பதிப்புரிமை பெற்ற பொருள்வகைகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் செயலில் உள்ள உள்ளடக்கப் படைப்பாளராக இருந்தால், நியாயமான பயன்பாடு மற்றும் பதிப்புரிமை தொடர்பான விதிகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக