சமூக ஊடகம் மற்றும் தவறான தகவல்
இணையத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன, அவற்றுள் எது உண்மை, எது நம்பகமானது, எது உண்மையில்லை, எது நம்பகமற்றது என்பதை அறிந்து கொள்ள நேரமும் முயற்சியும் தேவை. எல்லோரையும் போலவே, இளம் நபர்களுக்கும் ஆன்லைனில் இருக்கும் தவறான தகவலைக் கண்டறியும் திறமை தேவை.
'தவறான தகவல்' என்ற சொல்லுக்கு எந்தவொரு குறிப்பிட்ட வரையறையும் இல்லை. ஆனால் இது "தவறான தகவல்" என பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது 'ஏமாற்றுத் தகவல்' என்பதிலிருந்து வித்தியாசப்படுகிறது, அதாவது இவ்வகையான தகவல் ஒருவரை ஏமாற்றும் நோக்கத்துடன் பரப்பப்படவில்லை.
சமூக ஊடகத்தில், இது தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் ஒரு பரபரப்பான தலைப்பாகவோ, சூழலுக்கு வெளியே விஷயங்களை எடுத்துச் செல்லும் மிகைப்படுத்தப்பட்ட பதிவாகவோ தோன்றும். ஸ்பேமர்கள் அதிக கிளிக்குகளைப் பெற்று, லாபம் ஈட்ட இதைப் பயன்படுத்துகின்றனர், மேலும் எதிர் தரப்புகள் தேர்தல் மற்றும் இன மோதல்களில் இதைப் பயன்படுத்தலாம்.
தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரியதாக இருக்கலாம், ஆனால் அதன் பரவலை எதிர்த்துப் போராட நாம் செய்யக்கூடிய விஷயங்களும் நிறைய உள்ளன.
Metaவில், தவறான தகவலை நிறுத்துவதற்கான எங்கள் உத்தி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
இந்த அணுகுமுறையானது தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது பொது உரையாடலைத் தடுக்காமல் மக்களுக்குத் தகவலைத் தெரியப்படுத்த உதவுகிறது.
பெற்றோர்கள் மற்றும் இளம் நபர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பிரிட்ஜ்வாட்டர் ஸ்டேட் யுனிவெர்சிட்டியில் உள்ள மேக்ஸ்வெல் லைப்ரரியில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்களின் துல்லியத்தை தீர்மானிக்க உங்களுக்கும் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கும் உதவும் மேலும் சில குறிப்புகள் இங்கே உள்ளன:
உதவிக்குறிப்பு #1: தீவிரமாக ஆராய்ந்து பார்த்தல்
தலைப்புகள் மற்றும் கதை மேற்கோள்கள் மட்டுமே நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும். நாம் பார்ப்பது அல்லது படிப்பது பற்றியதன் முழு விவரங்களைப் பெறுவதற்கு பதிவு அல்லது இணைப்பைத் தாண்டி அசல் ஆதார விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பது உதவியாக இருக்கும்.
உதவிக்குறிப்பு #2: இணையத்தைப் பயன்படுத்துதல்
உண்மை சரிபார்ப்பாளர்களால் ஒரு கதை ஏற்கெனவே கொடியிடப்படவில்லை எனில், அது துல்லியமானதா என்பதை ஒரு விரைவான தேடுதலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். செய்திகளின் நம்பத்தகுந்த ஆதாரங்களில் மற்ற நம்பகமான செய்தித் தளங்களின் இணைப்பும் இடம்பெற்றிருக்கும்.
உதவிக்குறிப்பு #3: உங்கள் முடிவைப் பயன்படுத்துதல்
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் படிப்பது எவ்வளவு நம்பத்தகுந்ததாக இருக்கிறது? ஆசிரியரின் நோக்கம் என்ன? இது ஒரு செய்தியா அல்லது கருத்துத் தொகுப்பா? உண்மை எதுவென்று கண்டறிய ஒற்றைச் சூத்திரம் ஏதுமில்லை, ஆனால் சில சமயங்களில் அதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சி மட்டுமே தேவை.
உதவிக்குறிப்பு #4: ஆராய்ச்சி மேற்கோள்கள்
சொல்லாத நபர்கள் சொன்னதாக இணையத்தில் நிறைய மேற்கோள்கள் உலவுகின்றன, அவற்றை ஒருபோதும் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் செய்வதைப் போலவே, பகிர்வதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்வது மிகவும் பலனளிக்கும்.
உதவிக்குறிப்பு #5: மோசடி ஸ்கேம் விளம்பரங்கள் அல்லது பிற "கிளிக்பெயிட்"களைத் தேடுதல்
தவறான தகவலை வழங்கும் சிலர், தங்கள் வலைதளத்திற்கு உங்களின் கிளிக்குகளைப் பெற இவ்வாறு செய்கிறார்கள், அங்கு அதிலுள்ளவற்றை உங்களுக்கு விளம்பரம் செய்ததற்காக அவர்களுக்கு கிரெடிட் கிடைக்கும். குறைந்த தரம் மற்றும் மோசடியான விளம்பரங்கள் உங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவை அல்ல என்பதற்கான அறிகுறியாகும்.
உதவிக்குறிப்பு #6: உணர்ச்சிவசப்பட வைக்கும் பரபரப்பான பகிர்வைக் கவனித்தல்
மோசமான இலக்கணம், ஆச்சரியக்குறிகளின் அதிகப்படியான பயன்பாடு, அனைத்தும் பெரிய எழுத்துக்களில் இருக்கும் சொற்றொடர்கள் மற்றும் உங்கள் உணர்ச்சிகளைத் தொடும் உணர்வுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள். உணர்ச்சியை வெளிப்படுத்துமாறு தூண்டுவதற்காக பல தவறான தகவலை வடிவமைக்கப்பட்டுள்ளதைத் தவிர, தகவல் தெரிவிப்பதற்காக அவை வடிவமைக்கப்பட்டவில்லை.
உதவிக்குறிப்பு #7: எல்லாவற்றிற்கும் மேலாக, விமர்சன ரீதியாக வாசியுங்கள்
எதையும் பகிர்வதற்கு முன், உணர்ச்சிவசப்பட வைக்கும் பரபரப்பான தலைப்பை மட்டும் அல்லாமல், முழுக் கதையையும் நிறுத்தி நிதானமாக விமர்சன ரீதியாக வாசிக்க வேண்டியது அவசியம்.
ஆன்லைன் பகிர்வின் சிறந்த வாசகர்களாகத் திகழ இளம் நபர்களுக்கு உதவுதல் என்ற தலைப்பில் நாம் விவாதித்தவாறு, நம்பகமான ஆதாரங்களை அடையாளம் காண்பதற்கான ஒரு வழி, பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்துவது ஆகும்: யார்? என்ன? எங்கே? ஏன்? எப்போது?
நம்பகமான ஆதாரங்களை அடையாளம் காண்பது பற்றி மேலும் அறிய, பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்:
தவறான தகவலைப் பதிவிடும் ஒருவருடன் உரையாடலை மேற்கொள்வது கடினமான காரியமாக இருக்கலாம், குறிப்பாக அது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினராக இருந்தால் கடினமாக இருக்கலாம். இந்தத் தருணங்கள் உரையாடலை ஆரம்பிப்பதற்கும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து துல்லியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகளாக அமையும்.
தவறான தகவலைப் பற்றி ஊடாடும்போது உங்கள் பதின்மவயது பிள்ளை தங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
தவறான தகவல் பொதுவாக மற்றவர்களை வற்புறுத்தும் வகையில் உணர்ச்சிவசப்பட வைப்பதைச் சார்ந்து இருப்பதால், இதுபோன்ற பகிர்வைப் பகிரும் ஒருவருடன் பேசுவது கடினமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். அத்தகைய உணர்ச்சிகளைக் கவனத்தில் கொள்வதும், மற்றவர்கள் எவ்வாறு உணரக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வதும் எந்தவொரு ஊடாடலுக்கும் அர்த்தத்தைக் கொடுக்க உதவும்.
தனிப்பட்ட உரையாடல்கள் பொதுவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். நம்பகமான ஆதாரங்களில் இருந்து சமீபத்திய செய்திகளைச் சுட்டிக்காட்டும் போது தொனியை நாகரீகமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் வைத்திருங்கள்.
எங்கள் தொழில்நுட்பங்கள் அனைத்திலும் தவறான தகவல் பரவுவதை Meta எவ்வாறு குறைக்கிறது என்பது பற்றி மேலும் அறிக.