ஆன்லைனில் வருத்தமடையச் செய்யும் வகையிலான உள்ளடக்கத்தைக் கையாளுதல்

ParentZone

நாம் அனைவரும் தவிர்க்க முடியாமல் ஆன்லைனில் நம்மை வருத்தமடையச் செய்யும், குழப்பமடையச் செய்யும் அல்லது பயமுறுத்தும் விஷயங்களைக் காண்கிறோம், அதில் நமது பதின்மவயதினரும் அடங்குவர்.

இவ்வாறு நிகழாமல் தடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இவ்வாறு நிச்சயம் நிகழும்போது அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கவும். அரசியலில் இருந்து ஆபாசப் படங்கள் வரை – முன்கூட்டியே இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது – உங்கள் பதின்மவயதினர் இவற்றை எதிர்கொள்ளும் சூழலில் அவர்களை ஆதரிப்பதற்கு உங்களைத் தயார்படுத்த உதவுகிறது.

இதை அணுகுவதற்கான வழிகள் உள்ளன: ஆரம்பத்தில் பதிலளிப்பதிலிருந்து, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிவது அல்லது வீழ்ச்சியைக் கையாள்வது வரை என நிறைய வழிகள் உள்ளன.

உங்கள் பதின்மவயதினர் எதைப் பார்த்தனர்?

சூழல் என்பது முக்கிய விஷயம். பல காரணங்களுக்காக உள்ளடக்கம் உங்களை வருத்தமடையச் செய்யலாம். அது மிகவும் தீவிரமான படங்களாகவோ, காணொளிக் காட்சிகளாகவோ, தனிப்பட்ட முறையில் தீங்கு விளைவிக்கக்கூடிய நடத்தையாகவோ இருக்கலாம்.

இது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையேயான உறவுமுறை, அது பார்க்கப்பட்ட விதம் அல்லது அதற்குப் பின்னால் உள்ள உந்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது. உங்கள் பதின்மவயதினர் அதைத் தேடினாரா அல்லது தற்செயலாகக் கண்டுபிடித்தாரா? யாராவது அதை அவர்களுடன் பகிர்ந்திருந்தால், அவர்கள் வருத்தப்பட வைக்க வேண்டும் அல்லது புண்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களா?

ஒருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஓர் உள்ளடக்கம் மற்றொருவருக்கு மன உளைச்சலாக இல்லாமல் இருக்கலாம் – எனவே உங்கள் பதின்மவயதினரின் உணர்வுகளை நிராகரிக்காமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உரையாடலை நிறுத்துவது, நம்பிக்கை இல்லாத மூலங்களில் இருந்து பதில்களைத் தேடுவதற்கு அவர்களை வழிநடத்தும், எனவே அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கேட்டு செயல்படுங்கள். அது உங்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும் பரவாயில்லை: அது அவர்களை வருத்தப்படுத்தியிருந்தால், அது வருத்தமளிக்கும் விஷயம்தான்.

அறிகுறிகளைக் கண்டறிதல்

அவர்கள் உள்ளடக்கத்தைப் புகாரளித்ததாகவோ யாரையாவது தடுத்ததாகவோ நீங்கள் அறிவிப்பைப் பெற்றிருக்கலாம் – அப்படி பெற்றிருந்தால் அவர்கள் உங்களிடமும் புகாரளிக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம். ஆனால் உங்கள் பதின்மவயதினர், ஏதேனும் ஒரு விஷயத்தால் வருத்தப்படும்போது உங்களிடம்தான் வருவார்கள் என்று நீங்கள் அனுமானித்துக் கொள்ளக்கூடாது.

அவர்கள் முதலில் உங்களுடன் விவாதிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் பார்த்ததைக் கண்டு அவர்கள் குழப்பமடைந்திருக்கலாம் அல்லது அது அவர்களை (அல்லது வேறு யாரையாவது) சிக்கலில் தள்ளும் என்று அவர்கள் கவலைப்படலாம். தாங்கள் ஓர் எல்லையைத் தாண்டிவிட்டதை அவர்கள் உணர்ந்திருக்கலாம், மேலும் ஆன்லைனில் பல தளத்திற்கு செல்வதற்கு அல்லது ஒரு நபருடன் அல்லது குழுவில் இணைவதற்கு தடை செய்யப்படக்கூடும் என்று அவர்கள் கவலைப்படலாம்.

முதல் முறை நிகழும்பொது அதை அவர்கள் ஒரு நண்பரிடம் கூறலாம் – அந்த நபரிடமும் அதற்கான சரியான பதில்கள் இல்லாமல் இருக்கலாம்.

கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இதோ இங்கே:

  • உங்கள் பதின்மவயதினர் எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பதைப்போல காணப்படுதல்,
  • பிறருடன் சகஜமாக இல்லாமல் இருத்தல்,
  • அல்லது அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் மற்றும் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி மிகவும் இரகசியத்தைக் கடைபிடித்தல்.

அவர்கள் பிரச்சினையைப் பற்றி புகார் செய்ய நேரத்தையும் இடத்தையும் உருவாக்குங்கள். பேசுவதற்கு கார் பயணம் அல்லது நடைப்பயிற்சி போன்ற எளிய, ஆசுவாசப்படுத்தும் தருணங்களைத் தேர்வு செய்து, அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கு ஊக்குவியுங்கள்.

எப்படி எதிர்வினையாற்றுவது

அவர்கள் எதைப் பார்த்திருந்தாலும் – எந்தக் காரணத்தால் அதனைப் பார்க்க நேர்ந்திருந்தாலும் – அமைதியாக இருங்கள். என்ன நிகழ்ந்தது என்பதை விளக்க அவர்களுக்கு நேரத்தையும் இடத்தையும் கொடுங்கள். அது ஒருபோதும் எளிதான காரியம் அல்ல, ஆனால் இதுதான் சரி, இதுதான் தவறு என்று கூறாமல் பதிலளிக்க முயற்சி செய்யுங்கள், சூழ்நிலையை ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்திடுங்கள்.

உள்ளடக்கத்தை நீங்கள் பார்ப்பதற்கு முன் – உங்கள் சொந்த நலனுக்காகவும், உங்கள் பதின்மவயதினரின் நலனுக்காகவும் நான் அதனைப் பார்க்க வேண்டுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

அதே அனுபவத்தை திரும்பப் பெறுவது அவர்களுக்கு வருத்தமாக இருக்கலாம், மேலும் அது உங்கள் சொந்த நலனில் ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடலாம்.

நேர்மறையாக முன்னோக்கிச் செல்லுதல்

அடுத்தக் கட்டத்திற்கு எப்படி முன்னேறலாம் என்பதை ஒன்றாக சேர்ந்து முடிவு செய்யுங்கள். அவர்கள் விரும்பத்தகாத ஒன்றைப் பார்த்திருந்தால், அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு நேரம் தேவைப்படும்.

குறிப்பிட்ட கணக்கு அல்லது தொடர்பிலிருந்து அவர்களுக்கு சிறிது இடம் அல்லது பாதுகாப்பு தேவைப்படலாம்.

பிற கணக்குகளைப் பின்தொடர, தடுக்க அல்லது புகாரளிக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள், மேலும் அவ்வாறு செய்ய அவர்களை ஊக்குவித்திடுங்கள். கேள்விக்குரிய கணக்குக்கு தெரிவிக்கப்படாது. கணக்கை பாதிக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் உள்ளடக்கத்தைப் புகாரளிக்கலாம். ஆன்லைன் உறவுநிலைகள் முறியும்போது உங்கள் பதின்மவயதினரை ஆதரிப்பது குறித்த கூடுதல் ஆலோசனைகளைப் படித்திடுங்கள் – மேலும் Instagram இன் பெற்றோர் மேற்பார்வைக் கருவிகள் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

பிள்ளைகள் அவர்கள் தாண்டி விட்ட வரம்புகளை மீட்டமைக்கும் அதே வேளையில் அவர்களின் தேவைகளுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உதவி மற்றும் ஆதரவு

உள்ளடக்கம் தீவிரமானதாக இருந்தாலோ ஏதாவது குற்றச் செயல் நடந்திருந்தாலோ இன்னும் முறையான நடவடிக்கை தேவைப்படலாம்.

இது அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் – ஆனால் இவற்றை நேர்மறையான செயலாகப் பார்க்க வேண்டும். உங்கள் பதின்மவயதினரிடம், எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்களை தாங்கள் பாதுகாக்கலாம் என்று சொல்லி அவர்களை ஊக்குவித்திட வேண்டும்.

உள்ளடக்கம் அல்லது சூழலைப் பொறுத்து, உங்களுக்கும் ஆதரவு தேவைப்படலாம் – இதற்கு உதவக்கூடிய தளங்களும் நிறுவனங்களும் உள்ளன.

  • NAMI பதின்மவயதினருக்குத் தேவையான மனநல ஆதரவைப் பெற அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் தகவலைக் கொண்டுள்ளது.
  • காணாமல் போன மற்றும் துன்புறுத்தப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம் ஆன்லைனில் ஒரு பிள்ளை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானதாக நீங்கள் சந்தேகித்தால் அல்லது அவர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால் அது குறித்து புகாரளிக்கும் படிவத்தைக் கொண்டுள்ளது.
  • பெற்றோர் ஆதரவு நெட்வொர்க் தங்கள் பிள்ளையின் மன ஆரோக்கியம் மற்றும் நலமுடன் வாழ்தலில் அக்கறை கொண்ட பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குகிறது.

மேலும் ஆதரவு சேவைகளை Parent Zone வலைதளத்தில் கண்டறியவும்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்