ஆன்லைன் சமூக ஒப்பீடு மற்றும் நேர்மறை சுய பிம்பம்

JED Foundation

அக்டோபர் 25, 2022

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்பது மனித இயல்பு ஆகும். ஆனால் இளம் நபர்களுக்கு, தாங்கள் யார், தாங்கள் இந்த உலகில் எங்கு பொருந்துகிறோம் என்பதைக் கண்டறிவதில் மும்முரமாக இருக்கும் அவர்களுக்கு, இந்த ஒப்பீடுகள் குறிப்பாக குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அவர்கள் வகுப்பறையில் இருந்தாலும், ஒரு விளையாட்டுக் குழுவில் இருந்தாலும் அல்லது சமூக ஊடகத்தைப் பயன்படுத்தினாலும், பதின்மவயதினர் — தங்கள் தோற்றம், உறவுநிலைகள், உணர்ச்சிகள், வாழ்க்கை முறை மற்றும் திறன்கள் அல்லது திறமைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுட்டு — உணர்வுபூர்வமாக அல்லது தங்களை அறியாமலேயே அவற்றில் தங்களைக் கண்டறியக்கூடும். தாங்கள் அந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தால், அது அவர்களின் உணர்வு சார்ந்த நலவாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். The Jed Foundation இன் வல்லுநர்கள், சரிபார்க்கப்படாத, தொடர்ச்சியான எதிர்மறையான சமூக ஒப்பீடுகளானவை, சுயமரியாதை குறைவாக இருத்தல், தனிமை உணர்வு, மிகக் குறைவான சுய பிம்பம் மற்றும் வாழ்க்கையில் அதிருப்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

The Jed Foundation சமூக ஒப்பீட்டை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. உங்கள் பதின்மவயது பிள்ளை சமூக ஊடகங்களில் காணப்படும் உணர்ச்சிகளைக் கண்டறிய உதவுவதற்கும், நேர்மறையான சுய-பிம்பத்தை மேம்படுத்தும் பழக்கங்களை — ஒன்றிணைந்து — வளர்த்துக் கொள்வதற்கும் உதவ, பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பகிருமாறும் விவாதிக்குமாறும் உங்களை ஊக்குவிக்கிறோம்.

சமூக ஊடகங்களில் உள்ள சமூக ஒப்பீட்டை நிர்வகித்தல்


  1. சரியான கண்ணோட்டத்தைப் பராமரியுங்கள். எந்த ஒரே ஒரு பதிவும் ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய எல்லா விஷயங்களையும் உங்களுக்குச் சொல்லிவிட முடியாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட படத்தைக் காண்பிப்பதற்காக, மக்கள் தங்கள் பதிவுகளை ஃபில்டர் செய்யலாம் அல்லது திருத்தலாம், மேலும் நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதை மட்டுமே உங்களுக்குக் காண்பிக்கும் வகையில் கணக்குகள் சில நேரங்களில் கவனமாகக் கையாளப்படும். படங்கள் மற்றும் மெசேஜ்களைப் பார்க்கும்போது விமர்சன ரீதியாக சிந்தியுங்கள், பிறர் பதிவிட்ட ஒரு விஷயத்தை நீங்கள் பார்ப்பது அவர்களின் கதையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  2. உங்கள் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திடுங்கள். வெவ்வேறு பகிர்வுகள் உங்களை எவ்வாறு உணரவைக்கின்றன என்பதைக் கவனியுங்கள். எந்தப் பகிர்வு உங்களை ஊக்குவிக்கிறது மற்றும் உங்களை நன்றாக உணர வைக்கிறது, மேலும் எந்தப் பகிர்வு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது? பகிர்வு உங்களை எவ்வாறு உணரவைக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்களுக்கு மகிழ்ச்சியையும் மதிப்பையும் தரும் வகையில் உங்கள் சமூக ஊடக அனுபவத்தை வடிவமைக்க முடியும்.
  3. வழக்கமான கணக்குப் பராமரிப்பை மேற்கொள்ளுங்கள். நீங்கள் பின்தொடரும் கணக்குகளின் பட்டியலைப் பார்த்து, உங்களை மோசமாக உணரவைக்கும் எந்தக் கணக்குகளையும் பின்தொடர்வதை நிறுத்துவது பற்றி சிந்தியுங்கள். அவ்வப்போது இதனைச் செய்வது, உங்களை மேம்படுத்தும் புதிய கணக்குகளுக்கான இடத்தை உருவாக்க உதவும். ஒரு கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்தும் விஷயத்தில் நீங்கள் செளகரியமாக உணரவில்லை என்றால், அதற்குப் பதிலாக நீங்கள் அவர்களைத் தடுக்கலாம், இது அவர்களின் பகிர்வை நீங்கள் பார்ப்பதிலிருந்துத் தடுக்கும்.
  4. சமூக ஊடகங்களில் கருத்தை வெளிப்படுத்துபவராக இருங்கள். சமூக ஊடகங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது — பகிர்வு மற்றும் நபர்களுடன் செயலை மேற்கொள்வது — இணைப்பை உருவாக்கும் மற்றும் தனக்கு சொந்தமானதாகக் கருதும் உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது அத்துடன் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஒப்பிடுவதன் மூலம், சமூக ஊடகங்களின் செயலற்ற பயன்பாடு — முடிவில்லாத ஸ்க்ரோலிங் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாதவராக இருப்பது — உங்களைத் தனிமையாக அல்லது துண்டிக்கப்பட்ட ஒரு நபராக உணர வைக்கும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சமூக இணைப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களை அணுகுங்கள், மகிழ்ச்சியைப் பரப்பும் பகிர்வுடன் ஈடுபடுங்கள், அத்துடன் நீங்கள் அக்கறை கொள்ளும் நபர்களுடன் இணைப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  5. தேவைப்படும்போது இடைவேளைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில், ஃபோனைக் கீழே வைத்துவிடுதல் அல்லது திரையில் இருந்து விலகிச் செல்லுதல் என்பதுதான் சிறந்த ஆலோசனை ஆகும். ஒவ்வொருவரும் வித்தியாசமான நபராக உள்ளனர், எனவே சமூக ஊடகங்களில் சரியான அளவிலான நேரத்தைச் செலவிடுவது என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, எனினும் நீங்கள் சமநிலையைக் கண்டறிய உதவ நீங்கள் பயன்படுத்தும் வகையிலான கருவிகள் உள்ளன. உங்களால் உங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்க முடியாத நிலையில், சமூக ஊடகங்களில் இருப்பதைப் பற்றி நீங்கள் எதிர்மறையாக உணர்கிறீர்கள் என்பதைக் கவனித்தால், அதிலிருந்து விலகிச் செல்வது என்பது நல்ல முடிவே ஆகும்.

சமூக ஊடகங்களில் ஒரு நேர்மறையான சுய-பிம்பத்தை ஆதரித்தல்


  1. கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஃபீடு பல்வேறு கலாச்சாரங்கள், பின்புலங்கள் மற்றும் தோற்றங்களைச் சார்ந்த நபர்களின் பன்முகத்தன்மை கொண்ட பிரதிநிதித்துவத்தைக் காட்டும்போது சமூக ஊடகங்கள் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உத்வேகம் கொண்டவராக, ஆதரவு பெற்றவராக மற்றும் ஆர்வம் கொண்டவராக உங்களை உணர வைக்க உதவும் கணக்குகள் மற்றும் நபர்களைத் தேடி, பின்தொடருங்கள்.
  2. உங்களின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துங்கள். நீங்கள் எந்த விஷயத்தைப் பகிர விரும்புகிறீர்களோ அது உங்களுக்கும் உங்கள் பதிவுகளைப் பார்க்கும் நபர்களுக்கும் விளைவை ஏற்படுத்தும். பதிவிடுவதற்கு முன்பு, பின்வருவனவற்றை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் பகிர்வதற்கான காரணங்கள் யாவை? நான் எனக்கு உண்மையாக இருக்கிறேனா? உங்கள் பேரார்வங்கள், ஆர்வங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் குணாதிசயங்களை—நீங்கள் யார் என்பதை முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலான பகிர்வை உருவாக்கி பதிவிடுவது—உங்களுக்கும் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கும் மிகவும் நேர்மறையான சமூக ஊடக அனுபவத்தை ஏற்படுத்தும்.
  3. நேர்மறையான மற்றும் கனிவான சுய உரையாடலில் ஈடுபடுங்கள். சமூக ஊடகங்களில் வேறொருவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நேர்த்தியான படத்துடன் உங்களை ஒப்பிடுவது உங்களுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. நீங்கள் அவ்வாறு ஒப்பிடும்போது உங்களை நீங்களே கவனியுங்கள் அத்துடன் உங்களைப் பற்றிய கனிவான எண்ணங்களைக் கொண்டு அவ்வாறான எண்ணங்களைத் தடுக்கப் பழகுங்கள். எடுத்துக்காட்டாக, சமூக ஊடக ஒப்பீடுகள் உங்களைப் பற்றிய எண்ணம் குறித்து உங்களை மனம் தளரச் செய்வதாக இருந்தால், உங்களைப் பற்றி நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்களை அல்லது மற்றவர்கள் உங்களுக்கு வழங்கிய பாராட்டுகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள்.
  4. மனநிறைவு கொள்வதைப் பழகுங்கள். உங்களிடம் இல்லை என்று நீங்கள் கருதும் விஷயங்கள் மீது கவனம் கொள்வதற்குப் பதிலாக உங்கள் வாழ்க்கையில் உங்களிடம் இருக்கும் விஷயங்கள் மீது இருக்குமாறு உங்கள் கவனத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இந்த வகையான மன நிறைவு அனைவருக்கும் இயல்பாக வருவதில்லை. இதற்கு சிந்தனையுடன் கூடிய ஒரு முயற்சி தேவைப்படலாம், எனினும் அது வெகுமதி அளிக்கும் செயல் ஆகும். எதிர்மறையான சமூக ஒப்பீட்டின் தாக்கங்களைக் குறைக்க இது உதவும், மேலும் நீங்கள் யார் – எந்த நிலையில் இருக்கிறீர்கள் – என்பது பற்றி நன்றாக உணரவும் உதவும்.

உங்கள் பதின்மவயது பிள்ளை தங்களைப் பற்றி நேர்மறையான விஷயத்தைச் சொல்ல சிரமப்பட்டால், நீங்கள் குறுக்கிட்டு அவர்களிடம் நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர்களிடம் சொல்லுங்கள்! ஒரு நண்பரிடம் நேர்மறையான கருத்தைக் கேட்பதற்கு அவர்களை ஊக்குவிக்கவும் அல்லது அதை வேறு விதமாகக் கூறுவதென்றால், அவரிடம் இவ்வாறு கேளுங்கள்: தன்னைப் பற்றி மோசமாக உணரும் ஒருவருக்கு அவர் எவ்வாறான விஷயங்களை அல்லது நேர்மறையான விஷயங்களைச் சொல்வார்?

பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளர்களுக்கான இறுதிச் சிந்தனைகள்

சமூக ஒப்பீட்டைத் தூண்டக்கூடிய விஷயம் என்பது தனிப்பட்டது மற்றும் நுட்பமானதாகும். நாம் எங்கு இருந்து ஆன்லைனில் செல்கிறோம் மற்றும் நாம் ஒவ்வொருவரும் தளத்திற்கு எவ்வாறான விஷயத்தைக் கொண்டு வருகிறோம் என்பது (அங்கு இருப்பதற்கான உந்துதல்கள், தன்னம்பிக்கையின் நிலை மற்றும் அந்த நாளில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்) பகிர்வுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பாதிக்கிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஒரே பகிர்வும் கூட நமது மனநிலை, சமீபத்திய அனுபவங்கள் மற்றும் குறிப்பிட்ட தளங்களைப் பார்வையிடுவதற்கான காரணங்களைப் பொறுத்து வித்தியாசமாக உணர வைக்கலாம். இந்த உதவிக்குறிப்புகள் பொதுவானவை அல்ல என்பதுடன் உங்கள் பதின்மவயதினருடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கான வழிகாட்டியாக இருக்கும் என்பது இதன் அர்த்தமாகும்.

ஒரு பதின்மவயது பிள்ளையின் பெற்றோர் அல்லது பாதுகாவலராக, நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உரையாடலைத் தொடங்கி ஆர்வத்துடனும் கனிவுடனும் கேட்பதாகும். சமூக ஊடகங்களில் இருப்பது தங்களை எவ்வாறு உணரவைக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். மிகவும் மேலோட்டமாக இருந்தாலும் மனக்கலக்கம் அடைவது என்பது, சமூக ஊடகங்களில் இருந்து விலகி வேறு ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதையும், அவர்கள் சமூக ஊடகங்களில் (நல்லது, கெட்டது மற்றும் இடைப்பட்ட அனைத்தும்!) எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றிய உரையாடல்களுக்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் உங்கள் பதின்மவயது பிள்ளைக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு, சமூக ஊடகங்களில் பார்க்க முடியாத இன்னும் எவ்வளவோ விஷயங்கள் அவர்களுக்காகவே இருக்கின்றன என்பதை நினைவூட்டுங்கள். நீங்கள் அவர்களைப் பற்றி விரும்பும் விஷயம் என்ன, அவர்கள் யார் என்பதில் நீங்கள் எவ்வளவு ஈர்க்கப்படுகிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளையிடம், தானே மீண்டு எழும் தன்னம்பிக்கையை வளர்க்க முடிந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மிகவும் உதவும்.

இறுதியாக, உங்கள் பதின்வயது பிள்ளையைப் பற்றி நீங்கள் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தால், இந்தச் செயல் தொடரில் உங்களுக்கு உதவ இன்னும் அதிகமான உதவி விவரங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்பகமான மனநல உதவி விவரங்களையும் மருத்துவர்களையும் இங்கே கண்டறியுங்கள்.

கூடுதல் உதவி விவரங்கள்


உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக