சமூக ஊடகம் குறித்து குழந்தை வளர்ப்புக்கான உதவிக்குறிப்புகள்

இன்றைய பதின்மவயதினர், அவர்களுக்கு எப்போதுமே இணையம் கிடைக்கும் வகையில் உள்ள உலகில் வளர்ந்து வருகின்றனர். இளம் வயதினர் தங்கள் அடையாளத்தையும் ஆர்வங்களையும் ஆய்ந்தறிவதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும், உலகம் முழுவதும் நடப்பவைகளைக் கண்டறிவதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய அற்புதமான வழிகள் அனைத்தும் இருந்தபோதிலும், அவர்கள் கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் போன்ற எதிர்மறையான அனுபவங்களையும் எதிர்கொள்ளக்கூடும்.

அதனால் தான் உங்கள் பதின்மவயதினருடன் மனம் திறந்த வகையிலான தகவல் தொடர்புகளை மேற்கொள்வது முக்கியம் ஆகும். அவர்கள் சமூக ஊடகங்களுக்குப் புதியவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்சினைகளைப் பற்றி அவர்களிடம் முன்கூட்டியே பேசுவதும், அடிக்கடி பேசுவதும் முக்கியம்.

நீங்கள் முதல் முறையாக உரையாடலைத் தொடங்குவதாக இருந்தாலும் முக்கிய தலைப்புகளில் உரையாடல்களைத் தொடர்வதாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் பாதுகாப்பு, நலமுடன் வாழ்தல் மற்றும் மனநலம் குறித்து உங்கள் பதின்மவயதினருடன் பேச உதவும் சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன:

உதவிக்குறிப்பு #1: உங்கள் பதின்மவயதினர் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நேரம் ஒதுக்குதல்

உங்கள் பதின்மவயதினரின் ஆன்லைன் உலகிற்கான முதல் படிநிலைக்கு நீங்கள் தயாராகிக்கொண்டிருக்கலாம் அல்லது உங்கள் பதின்மவயதினர் சில நேரம் ஆன்லைனில் இருந்திருக்கலாம், மேலும் அவர்களுக்குப் பிடித்தமான செயலி, தளங்கள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். உங்கள் பதின்மவயதினருடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கி, சமூக ஊடகங்களில் அவர்கள் எதைப் பார்த்து மகிழ்கிறார்கள் என்பதையும், மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தூண்டக்கூடியவை குறித்தும் அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஆன்லைன் உலகில் செயல்படும்போது அவர்களை வழிநடத்துவதில் நீங்கள் முக்கியப் பங்கை வகிக்க முடியும்.

உதவிக்குறிப்பு #2: உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறப்பாகச் செயல்படும் சமூக ஊடகம் குறித்த குழந்தை வளர்ப்புக்குரிய பாணியைக் கண்டறிதல்

உங்கள் குடும்பத்திற்கு சிறப்பாகச் செயல்படுபவை குறித்து எவரையும் விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதாவது, சாதனங்கள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவதற்கான விதிகளை அமைப்பதற்கும், புதிய ஆர்வங்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவதற்கும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகளுக்கு இடையே சமநிலையைக் கண்டறிவதற்கும் நீங்களே சிறந்த நபர்.

ஒவ்வொரு குடும்பமும் தனித்துவமானது. உங்களது குழந்தை வளர்ப்புக்குரிய பாணி என்பது உங்களுக்கும் உங்கள் பதின்மவயதினருக்கும் வாய்மொழி ஒப்பந்தம், பெற்றோர் மற்றும் பதின்மவயதினர் இருவரும் கையெழுத்திட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் அல்லது மேற்பார்வைக் கருவிகளைப் பயன்படுத்துதலை உள்ளடக்கியதாக கூட இருக்கலாம். உங்கள் பதின்மவயதினருடன் ஒன்றிணைந்து உரையாடி, அவர்கள் ஆன்லைன் உலகத்துடன் நேர்மறையான வழியில் ஈடுபட உதவுவதற்கான சிறந்த வழியைக் கண்டறியவும்.

உதவிக்குறிப்பு #3: தனியுரிமை அமைப்புகளை ஒன்றிணைந்து ஆய்ந்தறிதல்

பலவிதமான தனியுரிமைக் கருவிகள் மற்றும் அமைப்புகளை சாதனங்கள் மற்றும் செயலிகள் வழங்குகின்றன. இந்த அமைப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதும் அவை குறித்து உங்கள் பதின்மவயதினருடன் கலந்தாலோசிப்பதும் எப்போதும் நல்ல நடைமுறையாகும். அவர்களின் அமைப்புகளில் உங்களுக்கும் அவர்களுக்கும் அதிகக் கட்டுப்பாடும் புரிதலும் இருந்தால், ஒட்டுமொத்தமாக, அனுபவம் சிறப்பாக இருக்கும்.

வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்க உங்கள் பதின்மவயதினருக்கு உதவவும். பொது vs தனிப்பட்ட சுயவிவரத்தின் நன்மை மற்றும் தீமைகளை அவர்களுடன் விவாதிக்கவும். ஒட்டுமொத்தமாக, நேர வரம்புகளை அமைப்பது மற்றும் அவர்கள் செலவிடும் நேரத்தில் சமநிலையைக் கண்டறிவது பற்றி அறிந்துகொள்ளவும்.

உதவிக்குறிப்பு #4: உள்ளடக்கத்தை எப்போது புகாரளிக்கலாம் மற்றும் பயனர்களைப் பின்தொடர்வதை நிறுத்துதலாம் அல்லது தடுக்கலாம் என்பது குறித்து விவாதித்தல்

உங்கள் பதின்மவயதினர் ஆன்லைனில் அவர்களுக்குப் பொருந்தாத உள்ளடக்கம் அல்லது மோசமான நடத்தையை எப்பொழுதாவது எதிர்கொண்டால், அவர்கள் தங்கள் வசமுள்ள கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது அவர்களின் ஆன்லைன் அனுபவங்களை பாதுகாப்பாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவும்.

Instagram இல், பதின்மவயதினர் கணக்குகளைத் தடுப்பதன் மூலம் அல்லது பின்தொடர்வதை நிறுத்துவதன் மூலம் தங்கள் அனுபவத்தைக் கட்டுப்படுத்தலாம். Instagram இல் உள்ளமைக்கப்பட்ட புகாரளிரளித்தல் அம்சங்களும் உள்ளன, அவை செயலியின் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறுகிற உள்ளடக்கத்தை விரைவாக அகற்றுவதற்கு புகார்களை மதிப்பாய்வு செய்ய உலகளாவிய குழுக்களுக்கு அனுப்பும்.

பதின்மவயதினர் Instagram இன் வரம்பிடுதல் அம்சத்தையும் பயன்படுத்தலாம், இது கொடுமைப்படுத்துபவரைக் கண்காணித்துக்கொண்டே தங்கள் கணக்கை அமைதியாகப் பாதுகாப்பாக வைத்திருக்க பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரம்பிடுதல் செயல்படுத்தப்பட்டதும், அவர் கட்டுப்படுத்திய நபரின் பதிவுகளில் உள்ள கருத்துகள் அந்த நபருக்கு மட்டுமே தெரியும். உங்கள் பதின்மவயதினர், தாங்கள் வரம்பிட்ட நபர் கருத்து தெரிவித்த அறிவிப்புகளைப் பார்க்க மாட்டார்கள்.

Instagram இல் உள்ளடக்கத்தை எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றி இங்கு மேலும் அறிக.

உதவிக்குறிப்பு #5: Instagram இல் மேற்பார்வையை அமைத்தல்

உங்கள் பதின்மவயதினருடன் அவர்களின் ஆன்லைன் பழக்கவழக்கங்கள் குறித்து நீங்கள் பேசிய பிறகு, Instagram இல் உலாவ அவர்களுக்கு உதவ ஒன்றாக இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கவும்.

நீங்கள் இருவரும் ஒப்புக்கொள்வதைப் பொறுத்து, Instagram இல் பெற்றோர் மேற்பார்வைக் கருவிகளை அமைக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். இவை அவர்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் பின்தொடர்தல் பட்டியல்களைப் பார்க்கவும், தினசரி நேர வரம்புகளை அமைத்து, அவர்கள் செயலியில் செலவிடும் நேரத்தைப் பார்க்கவும் உங்களை அனுமதிக்கும். Instagram இல் பதிவு அல்லது மற்றொரு கணக்கு போன்ற உள்ளடக்கத்தைப் புகாரளித்ததை உங்கள் பதின்மவயதினர் பகிரும்போது நீங்கள் பார்க்கவும் செய்யலாம்.

உதவிக்குறிப்பு #6: தனியுரிமைச் சரிபார்ப்புகள் என்பது தனியுரிமைச் சரிபார்ப்புகள்

தனியுரிமைச் சரிபார்ப்புகள் என்பது Facebook இல் உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தின் தனியுரிமை விருப்பத்தேர்வுகளை மதிப்பாய்வு செய்வதற்கான Metaவின் மையம் ஆகும். நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்கலாம், எந்தெந்த செயலிகளுக்கு தகவல்களுக்கான அணுகல் உள்ளது, யார் நட்புக்கான அழைப்புகளை அனுப்பலாம் மற்றும் பலவற்றை வரம்பிட்டு, உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் கருவியை நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். தனியுரிமை அமைப்புகளில் பிரிவுகளை வைத்திருப்பது எப்போதும் நல்லது, அதே போல் வலுவான கடவுச்சொல் மற்றும் இரு-நிலை அனுமதியைப் பயன்படுத்துவது முக்கியம்.

Facebook இன் பாதுகாப்புச் சோதனை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, உங்கள் பதின்மவயதினரின் சமூகக் கணக்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியம் ஆகும். இது கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது மற்றும் இரு-நிலை அனுமதியைப் பயன்படுத்துவது போன்ற நல்ல பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஈடுகொடுப்பதற்கான ஒரு கூடுதல் இணைப்பு ஆகும்.

உதவிக்குறிப்பு #7: சாதனங்கள் மற்றும் செயலிகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துதல்

உங்கள் பதின்மவயதினரின் சாதனத்தை நிர்வகிப்பதற்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பார்க்கவும். செயலி பதிவிறக்கங்களைத் தடுத்தல், உள்ளடக்கத்தை வரம்பிடுதல் அல்லது சாதனத்தை பயன்படுத்தும் நேர வரம்புகளை அமைத்தல் போன்ற விருப்பங்களைக் கண்டறியலாம். உங்கள் குழந்தையின் சாதன அமைப்புகளைச் சரிபார்த்து, அவை உங்களுக்கும் உங்கள் பதின்மவயதினருக்கும் புரிதல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் பெற்றோர் கட்டுப்பாட்டு விருப்பங்களை நன்கு புரிந்துகொள்ள, உங்கள் பதின்மவயதினரின் செயலியின் அமைப்புகளையும் நீங்கள் ஆய்ந்தறியலாம். எடுத்துக்காட்டாக, Instagram இல் மேற்பார்வைக் கருவிகள் உள்ளன, அவை பெற்றோர்கள் தங்கள் பதின்மவயதினரைப் பின்தொடர்பவரையும், அவர் யாரைப் பின்தொடர்கிறார் என்ற பட்டியல்களையும் பார்க்க அனுமதிக்கின்றன, அத்துடன் நேர வரம்புகளையும் அமைக்கின்றன.

Instagram இன் மேற்பார்வைக் கருவிகள் குறித்து இங்கு மேலும் அறிக.

உதவிக்குறிப்பு #8: வெளிப்படைத்தன்மையுடன் நம்பிக்கையைக் கட்டமைத்தல்

உங்கள் பதின்மவயதினரின் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான சிறந்த வழி, அதனை மரியாதையுடனும் தெளிவுடனும் செய்வதாகும். சில இளம் வயதினர் மற்றவர்களை விட தாங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உணரலாம் மற்றும் அதிக கவனத்துடன் கூடிய குழந்தை வளர்ப்பு தேவைப்படலாம்.

உங்கள் பதின்மவயதினரை நீங்கள் கண்காணிப்பதாக இருந்தால், அதைப் பற்றி அவர்களிடம் முன்னரே விளக்குவது உதவியாக இருக்கும். அந்த வகையில், அனைவரும் புரிதலுடன் இருப்பார்கள், தங்கள் நம்பிக்கை மீறப்பட்டதாக யாரும் நினைக்க மாட்டார்கள்.


உதவிக்குறிப்பு #9: வரம்புகளை அமைத்து செயல்படுத்துதல்

உங்கள் பதின்மவயதினரின் திரையில் செலவிடும் நேரம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்புகளை நீங்கள் அமைத்தால், கண்காணித்து அந்த வரம்புகளைச் செயல்படுத்துவதை அவர்களுடன் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வரம்புகளை அமைத்தல் என்பது பதின்மவயதினரை எது சரி, எது சரியில்லை என்பதைப் பற்றி சிந்திக்க அனுமதிக்கிறது.

இது தங்கள் நண்பர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் ஆன்லைனில் தங்கள் உறவுநிலைகளை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்கலாம் என்பதைப் பற்றிய சிந்தனையை வளர்க்க அவர்களுக்கு உதவும் ஒரு பயனுள்ள பயிற்சியாகும்.

உதவிக்குறிப்பு #10: ஒரு நல்ல எடுத்துக்காட்டை அமைத்தல்

பதின்மவயதினர் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உறவுநிலைகளை வழிநடத்துவதற்கான மாதிரிகளாக பெற்றோரையே பார்க்கிறார்கள். அது, தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும் விதத்திற்கும் பொருந்தும்.

சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலும், அவர்களுக்காக நீங்கள் வைத்திருக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதிலும் சிறந்த முன்மாதிரியாக உங்கள் பதின்மவயதினர் உங்களையே பார்ப்பார்கள். உங்கள் பதின்மவயதினர் சமூக ஊடகத்தை எப்போது பயன்படுத்தலாம் அல்லது ஆன்லைனில் எப்போது இருக்க வேண்டும் என்பதற்கான நேர வரம்புகளை நீங்கள் அமைத்தால், அதே விதிகளை நீங்களும் பின்பற்றவும். இரவு 10 மணிக்குப் பிறகு அவர்களால் மெசேஜ் செய்யக் கூடாது என்றால், அந்த நடத்தைக்கு நீங்கள் முன்மாதிரியாக இருந்து அவ்வாறே செய்ய வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்