உருவாக்கும் AI குறித்த பெற்றோருக்கான வழிகாட்டி

Metaவுக்காக ConnectSafely ஆல் உருவாக்கப்பட்டது

சமீபத்திய Meta AI அறிவிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 29, 2025 அன்று திருத்தப்பட்டது

Adult and teen sitting on the couch, with the adult's arm around the teen. Both are laughing and enjoying something on a smartphone.

புதிய ஆர்வங்களையும் தொடர்புகளையும் பயனர்கள் கண்டறிவதற்கும், தனது தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உதவும் வகையில் Meta நீண்ட காலமாக AIஐப் பயன்படுத்தி வருகிறது, ஆயினும் தற்போது அனைவரின் அனுபவங்களையும் மேம்படுத்த தனது தயாரிப்புகளில் உருவாக்கும் AI அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டமைத்து வருகிறது. வாருங்கள், உருவாக்கும் AI பற்றிய பொதுவான கண்ணோட்டத்துடன் தொடங்கலாம்.

உருவாக்கும் AI ஆனது மெசேஜ், படங்கள், அனிமேஷன்கள், இசை மற்றும் கணினி குறியீடு உள்ளிட்ட உட்பொருட்களை உருவாக்க அல்லது மறு சீர்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. பயனர்கள் ஒரு கேட்டலைத் தட்டச்சு செய்வதன் மூலம் சில AI மாதிரிகளுடன் செயலை மேற்கொள்ளலாம், மேலும் கேட்டல்களைப் பேசியும் ஆடியோ மூலம் பதிலைப் பெறக்கூடிய வகையில் பிற குரல் திறன்களைக் கொண்டுள்ளன. திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வழித்தட விவரங்கள் அல்லது ஷேக்ஸ்பியரின் பாணியிலான ஒரு கவிதை போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அல்லது புதிய ஆவணங்களை உருவாக்க AI பயன்படுத்தப்படலாம். இது கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை எழுத உதவுவதற்கான ஓர் ஆராய்ச்சி உதவிக்கருவியாகவும் செயல்பட முடியும். இல்லையெனில், இது ஒரு படத்தைத் திருத்துதல், ஒரு நீண்ட கட்டுரையை புல்லட் புள்ளிகளுடன் கூடிய வடிவத்திற்குச் சுருக்குதல், மின்னஞ்சலின் தொனியைச் சரிசெய்தல் ஷாப்பிங் செய்யும்போது தயாரிப்புகளை ஒப்பிடுதல் மற்றும் பலவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம்.

ஒரு பெற்றோரின் கண்ணோட்டம்

ஒரு புதிய தொழில்நுட்பமானது தங்களது குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவது பெற்றோர்களுக்கு இயல்பான விஷயமாகும். மேலும், உருவாக்கும் AI ஆனது, கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் கையாள வேண்டிய அவசியம் இல்லாத சில பிரச்சினைகளை எழுப்பிவரும் அதே வேளையில், உங்கள் பதின்மவயது பிள்ளை அதனைப் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த உதவுவதற்கான அடிப்படை அணுகுமுறையானது, நீங்கள் ஏற்கெனவே மற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட அதே விதத்தைப் போன்றதாகும். இது, அது என்ன என்பது பற்றியும் உங்கள் பதின்மவயதினர் அதனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வதிலிருந்தும் தொடங்குகிறது. தகவல்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று உங்கள் பதின்மவயது பிள்ளையாகக் கூட இருக்கலாம். அவர்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்துகிறார்களா என்பதையும், அவ்வாறு பயன்படுத்தினால், அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள், அதில் அவர்கள் விரும்புவது என்ன என்பதுடன் அவர்களைக் கவலை கொள்ள வைப்பது எது என்பதையும் கேளுங்கள். இது சாதக பாதகங்கள், உருவாக்கும் AI இன் சாத்தியமான ஆபத்துக்களையும், மேலும் அதனை எவ்வாறு பொறுப்புணர்வுடன் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அவர்களிடம் விவாதிப்பதற்கான ஒரு சரியான நேரமாகவும் இருக்கலாம்.

அத்துடன், தொழில்நுட்பம் மாறக்கூடியது என்றாலும் அதன் மதிப்புகள் மாறாமலேயே இருக்கின்றன. உங்கள் பதின்மவயதினர் துல்லியமான தகவல்களுக்கான அணுகலை வைத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் உருவாக்கும் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் குறித்து சிந்தனையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்றும் தன்னையும் பிறரையும் நன்கு கவனித்துக்கொள்பவராகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறீர்கள், இது சில சமயங்களில் தொழில்நுட்பத்திலிருந்து இடைவேளை எடுப்பதையும் குறிக்கிறது.

அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களையும் போலவே, உருவாக்கும் AI தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது, எனவே காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து அறிந்து கொள்வது முக்கியம். இதில் வலைப்பூ பதிவுகள் மற்றும் நீங்களும் உங்கள் பதின்வயதினர்களும் பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிற அறிவிப்புகளுடன் உதவிப் பிரிவுகள் உட்பட செய்திக் கதைகளைப் படிப்பதும் அடங்கும்.

Teen focused on a phone while standing outdoors, wearing a denim jacket and backpack.

Metaவின் AI தொழில்நுட்பப் பயன்பாடு

பகிர்வுப் பரிந்துரைகளை வழங்குதல், பயனர்களுக்கு ஆர்வம் காட்டும் நிகழ்வுகளைப் பற்றித் தெரிவித்தல் மற்றும் அதன் செயலிகளில் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக Meta தொழில்நுட்பங்கள் AIஐப் பயன்படுத்துகின்றன.

இப்போது, ​​Meta தொழில்நுட்பங்கள் அனைத்திலும் உள்ள எவருக்கும் உருவாக்கும் AI கிடைக்கிறது. Meta AI செயலியானது பயனர்களை AI அணியக்கூடிய சாதனங்களை நிர்வகிக்கவும், அவர்களின் ஆர்வங்களின் அடிப்படையில் கேட்டல்களைக் கண்டறியவும், பயணத் திட்டமிடல் முதல் பயிற்சி வரை மற்றும் பலவற்றில் AI அசிஸ்டெண்டின் உதவியைப் பெறவும் அனுமதிக்கிறது. AIக்கான சமீபத்திய புதுப்பிப்புகள், ஒவ்வொரு பயனருக்கும் நபருக்கேற்றபடியாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் மேம்பட்ட குரல் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளன, மேலும் ஒருங்கிணைந்த தனிப்பட்ட உதவியாளருடன் பேசுவதன் மூலம் பணிகளை நிறைவுசெய்ய அனுமதிக்கின்றன. Meta Llama 4 உடன் கட்டமைக்கப்பட்ட இந்த AI அசிஸ்டெண்ட் ஆனது, ஃபோன், டேப்லெட் அல்லது Meta Ray-Banகளில் பயனர்களுடன் பேச முடியும்.

நீங்கள் AI உடன் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட உரையாடலை மேற்கொள்ளலாம் அல்லது @Meta AI என தட்டச்சு செய்து ஒரு கேள்வி அல்லது கோரிக்கையை உள்ளிடுவதன் மூலம் குழு உரையாடல்களுக்கு வருமாறு அதனைக் கேட்கலாம். Meta AI உடன் செயலை மேற்கொள்ளும்போது மெசேஜில் "/imagine" எனத் தட்டச்சு செய்வதன் மூலமும் பயனர்கள் படங்களை உருவாக்க முடியும்.

Metaவின் தொழில்நுட்பங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்டிக்கர்கள் என்பது, புதிய உருவாக்கும் AI இன் மற்றொரு எடுத்துக்காட்டாகும். இப்போது, ​​எவரும் தொடர்புகொள்வதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும் உதவும் வகையில் மெசேஜ் மூலம் படத்தை விவரிப்பதன் மூலம் AI உருவாக்கிய ஸ்டிக்கர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் படங்களை மனிதரால்-உருவாக்கப்பட்ட படைப்புடன் சேர்த்து பயனர்கள் குழப்பமடைவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும் வகையில், AI ஆல் உருவாக்கப்பட்ட அச்சு அசலான துல்லியமான படங்களில் நன்கு புலப்படும் வகையிலான குறிகாட்டிகளை Meta சேர்க்கிறது. இந்தக் குறிகாட்டிகளுக்கான எடுத்துக்காட்டுகளில் Meta AI அசிஸ்டெண்ட் கருவியில் கட்டமைக்கப்பட்ட பட உருவாக்கி வழங்கும் படைப்பில் புலப்படும் வகையிலான சோதனை-முயற்சி வாட்டர்மார்க் மற்றும் பிற உருவாக்கும் AI அம்சங்களுக்கான பொருத்தமான தயாரிப்பு சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

Meta AI அனைவருக்கும் கிடைக்கிறது மற்றும் உருவாக்கும் AI மாதிரியால் எதனை உருவாக்க முடியும் மற்றும் எதனை உருவாக்க முடியாது என்பதைச் சொல்லும் உட்பொருள் தரநிலைகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான அனுபவங்களை வழங்க Meta செயல்படும் விதம் பற்றி இங்கு மேலும் அறிக.

உருவாக்கும் AI பற்றி உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் பேசுதல்

உருவாக்கும் AI படைப்பை அடையாளம் காணுதல்: உருவாக்கும் AIஐப் பயன்படுத்தி ஒரு விஷயம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்போதும் எளிதானது அல்ல. அனைத்துச் சமூக ஊடகங்களையும் போலவே, எவர் ஒருவராலும் படைப்பு உருவாக்கப்படலாம், சேர்க்கப்படலாம் அல்லது பதிவேற்றப்படலாம் என்பதுடன் அவை உருவாக்கும் AI என லேபிளிடப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. Meta தொழில்நுட்பங்களைப் போலவே சில உருவாக்கும் AI, நீங்கள் உருவாக்கும் AI படத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் சில புலப்படும் வகையிலான அடையாளங்களைச் சேர்க்கும் - ஆயினும் இது எப்போதுமே சாத்தியமாகும் விஷயம் அல்ல.

Meta பயனர்கள் படைப்பைப் பதிவேற்ற அனுமதிக்கிறது என்பதுடன் உருவாக்கும் AI ஆல் உருவாக்கப்பட்ட முறையாக லேபிளிடப்படாத படைப்பை ஒருவர் பதிவேற்றுவதற்கும் சாத்தியம் உள்ளது. Meta அல்லாத ஒரு கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI படத்தைப் பதிவேற்றவும் சாத்தியம் உள்ளது.

தகவல்களைச் சரிபார்த்தல்: உருவாக்கும் AI தவறான தகவல்களை உருவாக்கும் சாத்தியதைக் கொண்டுள்ளது, சில சமயங்களில் “தவறாக வழிநடத்தும் பதிலளிப்புகள்” என்று குறிப்பிடப்படுகிறது. உருவாக்கும் AI இல் உள்ள தகவல்களை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னதாக, அது குறித்த விஷயங்களை நம்பகமான ஆதாரங்கள் மூலமாகச் சரிபார்ப்பதும், உங்கள் பதின்மவயது பிள்ளையை ஏமாற்றவோ துன்புறுத்தவோ ஸ்கேமர்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்தக்கூடும் என்பது பற்றிய விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம்.

பொறுப்பான பயன்பாடு: AIஐப் பயன்படுத்துவதில் நேர்மையாகவும் கரிசனத்துடனும் இருத்தல், தனது ஆதாரங்களைக் குறிப்பிடுதல், பள்ளி சார்ந்த எந்தவொரு விதிகளுக்கும் கட்டுப்படுவதுடன் தனது வேலையின் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அவர்களே பொறுப்பு என்பதை அறிதல் போன்றவற்றின் மூலம் உங்கள் பதின்மவயது பிள்ளைக்குத் தனது பொறுப்பை நினைவூட்டுங்கள். பெற்றோர்கள் AI-உருவாக்கிய படைப்பை நேர்மறையான, தீங்கு விளைவிக்காத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது பற்றியும் பேச வேண்டும்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: உருவாக்கும் AIஐப் பயன்படுத்தும் போது உங்கள் பதின்மவயது பிள்ளையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்குமாறு நினைவூட்டுங்கள். ஓர் உருவாக்கும் AI தயாரிப்பு அதன் உருவாக்கும் AIஐ மேம்படுத்த நீங்கள் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். சமூகப் பாதுகாப்பு எண்கள், கிரெடிட் கார்டு எண்கள் அல்லது நீங்கள் மற்றவர்களுடன் பகிர விரும்பாத விஷயம் போன்ற முக்கியத் தகவல்களை நிரப்பாமல் இருப்பது முக்கியம். உங்கள் பதின்மவயதினருடன் AI உருவாக்கிய ஸ்கேம்களின் ஆபத்தைப் பற்றி விவாதியுங்கள்.

உருவாக்கும் AI குறித்து உங்களுக்கும் உங்கள் பதின்மவயது பிள்ளைக்குமான கூடுதல் தகவல்கள்

பதின்மவயதினர் AI வழிகாட்டி பதின்மவயதினருக்கு உதவிகரமாக இருப்பதற்கான Meta உதவி வளங்கள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக