உருவாக்கும் AI குறித்த பெற்றோருக்கான வழிகாட்டி

Metaவுக்காக ConnectSafely ஆல் உருவாக்கப்பட்டது

Meta, புதிய ஆர்வங்கள் மற்றும் நண்பர்களைக் கண்டறிய பயனர்களுக்கு உதவுவதற்கும், அதன் தளங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கும் நீண்ட காலமாக AIஐப் பயன்படுத்தி வருகிறது, ஆனால் தற்போது பயனர்கள் தங்கள் அனுபவங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு AIஐப் பயன்படுத்த அனுமதிக்கிறது. வாருங்கள், உருவாக்கும் AI பற்றிய பொதுவான கண்ணோட்டத்துடன் தொடங்கலாம்.

உருவாக்கும் AI ஆனது உரை, படங்கள், அனிமேஷன்கள் மற்றும் கணினி குறியீடு உள்ளிட்ட உள்ளடக்கங்களை உருவாக்க அல்லது மறு சீர்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. இது திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வழித்தட விவரங்கள் அல்லது ஷேக்ஸ்பியரின் பாணியிலான ஒரு கவிதை போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அல்லது புதிய ஆவணங்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம். இது கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை எழுத உதவுவதற்கான ஓர் ஆராய்ச்சி உதவிக்கருவியாக உதவலாம். இது ஒரு படத்தைத் திருத்துதல், ஒரு நீண்ட கட்டுரையை புல்லட் புள்ளிகளாகச் சுருக்குதல், மின்னஞ்சலின் தொனியை சரிசெய்தல் ஷாப்பிங் செய்யும்போது தயாரிப்புகளை ஒப்பிடுதல் மற்றும் பலவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம்.

உருவாக்கும் AI குறித்த பெற்றோரின் கண்ணோட்டம்

ஒரு புதிய தொழில்நுட்பமானது தங்களது குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி கவலைப்படுவது பெற்றோர்களுக்கு இயல்பான விஷயமாகும். மேலும், உருவாக்கும் AI ஆனது, கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் கையாள வேண்டிய அவசியம் இல்லாத சில பிரச்சினைகளை எழுப்பிவரும் அதே வேளையில், உங்கள் பதின்மவயதினர் அதனைப் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த உதவுவதற்கான அடிப்படை அணுகுமுறையானது, நீங்கள் ஏற்கெனவே மற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட அதே விதத்தைப் போன்றதாகும். இது, அது என்ன என்பது பற்றியும் உங்கள் பதின்மவயதினர் அதனை எவ்வாறு பயன்படுத்தியிருக்கக்கூடும் என்பதையும் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. தகவல்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று உங்கள் பதின்மவயதினராக கூட இருக்கலாம். அவர்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்துகிறார்களா என்பதையும், அவ்வாறு பயன்படுதினால், அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள், அதில் அவர்கள் விரும்புவது என்ன என்பதுடன் அவர்களைக் கவலை கொள்ள வைப்பது எது என்பதையும் கேளுங்கள். இது சாதக பாதகங்கள், உருவாக்கும் AI இன் சாத்தியமான ஆபத்துக்களையும், மேலும் அதனை எவ்வாறு பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்தும் அவர்களிடம் கேட்பதற்கும் விவாதிப்பதற்குமான ஒரு சரியான நேரமாகவும் இருக்கலாம்.

அத்துடன், தொழில்நுட்பம் மாறக்கூடியது என்றாலும் அதன் மதிப்புகள் மாறாமலேயே இருக்கின்றன. உங்கள் பதின்மவயதினர் துல்லியமான தகவல்களுக்கான அணுகலை வைத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் உருவாக்கும் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் குறித்து சிந்தனையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்றும் தன்னையும் பிறரையும் நன்கு கவனித்துக்கொள்பவராகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறீர்கள், இது சில சமயங்களில் தொழில்நுட்பத்திலிருந்து இடைவேளை எடுப்பதையும் குறிக்கிறது.

அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களையும்ப் போலவே, உருவாக்கும் AI தொழில்நுட்பமும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, எனவே நீங்களும் உங்கள் பதின்மவயதினரும் பயன்படுத்தும் சேவைகள் வழங்கும் உதவிப் பகுதிகள், வலைப்பதிவுகள், பிற ஆண்மைத் தகவல்களுடன் சேர்த்து, செய்தி ஸ்டோரிகளைப் படிப்பது உட்பட படிப்படியான மாற்றங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

Metaவின் AI தொழில்நுட்பப் பயன்பாடு

Meta நீண்ட காலமாக பரிந்துரைகளை வழங்க உதவுதல் மற்றும் பயனர்கள் ஆர்வம் காட்டக்கூடிய நிகழ்வுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக AIஐப் பயன்படுத்தி வருகிறது. அது, தனது பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கும் AIஐப் பயன்படுத்துகிறது.

Meta இப்போது தனது சேவைகள் அனைத்திலும் உள்ள பயனர்களுக்கு உருவாக்கும் AIஐக் கிடைக்கச் செய்கிறது. கேள்விகளுக்குப் பதிலளித்தல், பல்வேறு தலைப்புகளில் உரையாடல்களில் ஈடுபடுதல் மற்றும் உரையாடும் தொனியில் எழுதுதல் ஆகியவை Metaவின் புதிய AIகள் மேற்கொள்ளக்கூடிய விஷயங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். ஒவ்வொரு AIக்கும் விளையாட்டுகள், உணவு, பயணம், நகைச்சுவை மற்றும் படைப்பாற்றல் போன்ற தனித்துவமான ஆளுமை மற்றும் சிறப்புத்தன்மை உள்ளது, எனினும் அதற்கான பதில்கள் AI ஆல் உருவாக்கப்படுகின்றன, நிஜ மனிதர்களால் அல்ல.

நீங்கள் ஓர் AI உடன் ஒருவருக்கொருவர் உரையாடலை மேற்கொள்ளலாம் அல்லது @Meta AI என தட்டச்சு செய்து ஒரு கேள்வி அல்லது கோரிக்கையை உள்ளிடுவதன் மூலம் குழு கலந்துரையாடல்களுக்கு வருமாறு Meta AIஐக் கேட்கலாம். Meta AI உடன் செயலை மேற்கொள்ளும்போதோ, நேரடியாக இணைய அனுபவத்தின் மூலமாகவோ மெசேஜில் "/imagine" என தட்டச்சு செய்வதன் மூலமும் பயனர்கள் படங்களை உருவாக்க முடியும்.

Metaவின் தளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்டிக்கர்கள் என்பது, உருவாக்கும் AI இன் மற்றொரு எடுத்துக்காட்டாகும். பயனர்கள் தொடர்புகொள்வதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும் உதவும் வகையில் உரை மூலம் படத்தை விவரிப்பதன் மூலம் AI உருவாக்கிய ஸ்டிக்கர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் படங்களை மனிதரால்-உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் சேர்த்து பயனர்கள் குழப்பமடைவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும் வகையில், Meta AI ஆல் உருவாக்கப்பட்ட அச்சு அசலான துல்லியமான படங்களில் நன்கு புலப்படும் வகையிலான குறிகாட்டிகளை Meta சேர்க்கிறது. இந்தக் குறிகாட்டிகளுக்கான எடுத்துக்காட்டுகளில் Meta AI உதவிக் கருவியில் கட்டமைக்கப்பட்ட பட உருவாக்கி வழங்கும் உள்ளடக்கத்தில் புலப்படும் வகையிலான சோதனை-முயற்சி வாட்டர்மார்க் மற்றும் பிற உருவாக்கும் AI அம்சங்களுக்கான பொருத்தமான தயாரிப்பு சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

Meta AI அனுபவங்கள் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் அதன் தளங்களில் கிடைக்கின்றன, மேலும் உருவாக்கும் AI மாதிரியானது என்னென்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதைச் சொல்லும் வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான அனுபவங்களை வழங்க Meta செயல்படும் விதம் பற்றி இங்கு மேலும் அறிக.

உருவாக்கும் AI பற்றி உங்கள் பதின்மவயதினருடன் பேசுதல்

உருவாக்கும் AI உள்ளடக்கத்தை அடையாளம் காணுதல்

உருவாக்கும் AIஐப் பயன்படுத்தி ஒரு விஷயம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்போதும் எளிதானது அல்ல. சமூக ஊடகங்களில் உள்ள பிற பதிவுகளைப் போலவே, பயனர்களால் உள்ளடக்கம் உருவாக்கப்படலாம், உள்ளிடப்படலாம் அல்லது பதிவேற்றப்படலாம் என்பதுடன் அவை உருவாக்கும் AI என லேபிளிடப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. Metaவின் உருவாக்கும் AI உட்பட சில சேவைகள், புலப்படும் வகையிலான அடையாளங்களைச் சேர்க்கும், எனவே இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் AI படத்தை அடையாளம் காண முடியும் - ஆனால் இது எப்போதுமே சாத்தியமான விஷயம் அல்ல.

Meta பயனர்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்ற அனுமதிக்கிறது என்பதுடன் உருவாக்கும் AI ஆல் உருவாக்கப்பட்ட லேபிளிடப்படாத உள்ளடக்கத்தை ஒரு பயனர் பதிவேற்றுவதற்கு சாத்தியம் உள்ளது.

தகவல்களைச் சரிபார்த்தல்

உருவாக்கும் AI ஆனது தவறான தகவல்களை உருவாக்கும் சாத்தியதைக் கொண்டுள்ளது, சில சமயங்களில் "தவறாக வழிநடத்தும் பதிலளிப்புகள்" என்று குறிப்பிடப்படுகிறது. உருவாக்கும் AI இல் உள்ள தகவல்களை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னதாக, அது குறித்த விஷயங்களை நம்பகமான ஆதாரங்கள் மூலமாகச் சரிபார்ப்பதும், உங்கள் பதின்மவயதினரை ஏமாற்றவோ துன்புறுத்தவோ ஸ்கேமர்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்தக்கூடும் என்பது பற்றிய விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம்.

பொறுப்பான பயன்பாடு

AIஐப் பயன்படுத்துவதில் நேர்மையாகவும் கரிசனத்துடனும் இருத்தல், தனது ஆதாரங்களைக் குறிப்பிடுதல், பள்ளி சார்ந்த எந்தவொரு விதிகளுக்குகம் கட்டுப்படுவதுடன் தனது வேலையின் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அவர்களே பொறுப்பு என்பதை அறிதல் போன்றவற்றின் மூலம் உங்கள் பதின்மவயதினருக்கு தங்களின் பொறுப்பை நினைவூட்டுங்கள். பெற்றோர்கள் AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை நேர்மறையான, தீங்கு விளைவிக்காத நோக்கங்களுக்காக பயன்படுத்துவது பற்றியும் பேச வேண்டும்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு

உருவாக்கும் AIஐப் பயன்படுத்தும் போது உங்கள் பதின்மவயதினரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்குமாறு நினைவூட்டுங்கள். ஓர் உருவாக்கும் AI தயாரிப்பு அதன் உருவாக்கும் AIஐ மேம்படுத்த நீங்கள் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். சமூகப் பாதுகாப்பு எண்கள், கிரெடிட் கார்டு எண்கள் அல்லது நீங்கள் மற்றவர்களுடன் பகிர விரும்பாத விஷயம் போன்ற முக்கியத் தகவல்களை உள்ளிடாமல் இருப்பது முக்கியம். உங்கள் பதின்மவயதினருடன் AI உருவாக்கிய ஸ்கேம்களின் ஆபத்தைப் பற்றி விவாதிக்கவும்.

உருவாக்கும் AI குறித்து உங்களுக்கும் உங்கள் பதின்மவயதினருக்குமான கூடுதல் தகவல்கள்:

பதின்மவயதினரை ஆதரிப்பதற்கான Meta உதவி விவரங்கள்

பதின்மவயதினர் AI வழிகாட்டி

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்