ஒரு பெற்றோராக, உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு பகிர்வு பொருத்தமானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கலாம். உண்மையில், சில சமயங்களில் வல்லுநர்கள் கூட இந்த எல்லையை வரையறுப்பதைக் கடினமாகக் கருதுகின்றனர், மேலும் பதின்மவயதினர் பார்க்கும் பகிர்வு சார்ந்த Metaவின் கொள்கைகள் தற்போதைய புரிதல்கள் மற்றும் பதின்மவயதினருக்கான வயதுக்குத் தகுந்த அனுபவங்கள் தொடர்பான நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பிரதிபலிக்கின்றன.
புதிதாக என்ன உள்ளது?
வரவிருக்கும் வாரங்களில், Facebook மற்றும் Instagram பதின்மவயதினர் பார்க்கக்கூடிய பகிர்வுகளில் பல வகைகளிலான பகிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு பணிபுரியும். இந்த மாற்றங்கள், உணவுப்பழக்கம் சார்ந்த குறைபாடுகள், தற்கொலை மற்றும் சுயகாயம், காணத்தகாத வன்முறைக்காட்சி மற்றும் இன்னும் பல வகைகள் உட்பட, பல பெற்றோர்களின் மனதில் முதன்மையாக இருக்கக்கூடிய பகிர்வின் வகைகளுக்குப் பொருந்தும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பதின்மவயதினர் ஒரு நண்பரால் அல்லது அவர்கள் பின்தொடரும் ஒருவரால் பகிரப்பட்டிருந்தாலும் கூட, சில குறிப்பிட்ட வகைகளிலான பகிர்வைக் கண்டறியவோ பார்க்கவோ முடியாது. ஒரு பதின்மவயது பிள்ளைக்கு இந்த பகிர்வை எடுத்துக்காட்டாக, தங்களின் சகாக்களில் ஒருவரால் உருவாக்கப்பட்ட பகிர்வானது இந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தால் அதனைத் தன்னால் பார்க்க முடியாது என்பது தெரியாமல் இருக்கக்கூடும்.
இந்த முடிவுகளை வழிநடத்துவன யாவை?
இந்தப் புதிய கொள்கைகள் மூன்று முக்கிய வழிகாட்டும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
விடலைப் பருவம் என்பது சமூகம், உணர்வுரீதியான மற்றும் அறிவாற்றல் திறன்களை உள்ளடக்கிய வளர்ச்சி என்பதோடு மட்டுமல்லாமல் உடல் சார்ந்த வளர்ச்சியையும் உள்ளடக்கிய மாற்றத்திற்கான ஒரு காலமாகும். பகிர்வை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதற்கும் படைப்பின் படைப்பாளர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கும் விடலைப் பருவம் முழுவதிலும் தங்கள் திறனை இளையோர், அதிகரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் உணர்வு சார்ந்த ஒழுங்குமுறை மற்றும் சிக்கலான உறவுநிலை சார்ந்த சூழ்நிலைகளைக் கையாளுதல் மற்றும் பருவமடையும் நிலையைக் கையாளும் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இந்த வளர்ச்சிகள் விடலைப் பருவக் காலகட்டம் முழுவதும் படிப்படியான முன்னேற்றத்தைக் கொண்டவை ஆகும் அதாவது இளம் மற்றும் முதிர் விடலைப் பருவத்தினர் வெவ்வேறு விருப்பத்தேர்வுகள், திறன்கள் மற்றும் ஆர்வங்களைக் கொண்டிருக்கலாம்.
பதின்மவயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய பகிர்வைக் குறைப்பது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். சில பகிர்வுகள் இளம் வயதினரின் வயதின் அடிப்படையில் அவர்களுக்குப் பொருத்தமற்ற கருக்களைக் கொண்டுள்ளன. மேலும் படங்கள் என்பன பகுதியளவு அதுவாகவே செயல்படும் முறையிலும், உணர்வுரீதியாகவும் செயலாக்கப்படுகின்றன என்பதுடன் பதின்மவயதினருக்கான உரையை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவை ஆகும். இது நம்பகமான பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் சில தலைப்புகளை அணுகுவதை குறிப்பாக பதின்மவயதினருக்கு முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது.
இதைப் பற்றி எனது பதின்மவயது பிள்ளையிடம் எவ்வாறு பேசுவது?
பகிர்வு ஏன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்:
பகிர்வு ஏன் அவர்களுக்குத் தெரியும் விதமாக இல்லை என்பதைப் புரிந்துகொள்வது பதின்மவயதினருக்கு முக்கியமானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சில படங்களைப் பார்ப்பது வருத்தமடையச் செய்வதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கலாம் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். பொதுவாகவே சில தலைப்புகளைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்வது என்பது பரவாயில்லை என்றாலும், நம்பகத்தன்மையுள்ள நபர்கள் மற்றும்/அல்லது ஆதரவை வழங்க உதவக்கூடிய நம்பகமான பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து கற்றுக்கொள்வதே சிறந்தது.
தங்களின் சொந்த அல்லது தங்களது சகாக்களின் பகிர்வு கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது?
இந்தக் கொள்கைகள் மூலம், பதின்மவயதினர் தங்கள் நண்பரின் சுயவிவரங்களில் வழக்கமாகப் பார்க்கும் பகிர்வின் வகையையோ அல்லது ஒரு நண்பர் அவர் பதிவிட்டதாகக் கூறுவதையோ பார்க்க முடியாமல் போகலாம் – மேலும் அதுவே தங்கள் பதின்மவயதினருடன் பேசுவதற்கு பெற்றோர்களுக்கான ஒரு முக்கியமான தருணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நண்பரின் உணவுக்கட்டுப்பாடு பற்றிய பகிர்வு காண்பிக்கப்படாவிட்டால், பிரச்சினைக்குரியதாக மாறக்கூடிய உணவு உண்ணும் முறைகளைப் பற்றி பேசுவதற்கு இது ஒரு பயனுள்ள நேரமாக இருக்கும். தங்கள் பதின்மவயது பிள்ளை உணவு உண்ணுதல் அல்லது உடல் உருவம் சார்ந்த விஷயத்தை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை அடையாளம் காண உதவதில் பெற்றோர்கள் பெரும்பாலும் சிறந்து விளங்குகிறார்கள்.
அவர்களுக்குக் கிடைக்கும் பகிர்வைப் பற்றி அறிய தொடர்ந்து ஆர்வலராக இருக்குமாறு அவர்களை ஊக்குவியுங்கள்:
Meta வழங்கும் கொள்கைகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய பகிர்வை பதின்மவயதினர் பார்ப்பதிலிருந்து கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பதின்மவயதினர் டிஜிட்டல் கல்வியறிவுத் திறன்களைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் பதின்மவயது பிள்ளை தனக்கு சந்தேகங்கள் இருக்கக்கூடிய உணவுப்பழக்கம் சார்ந்த குறைபாட்டிலிருந்து மீண்டெழுந்து வரும் ஒருவரைப் பற்றிய பகிர்வை இன்னும் பார்க்கக்கூடும். உரையாடலை மேற்கொள்வதன் மூலம் இதனைத் தெரிந்துகொள்ளும் வகையில் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு உதவுங்கள்.
Meta, பதின்மவயதினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய பகிர்வு சார்ந்த தனது கொள்கைகளை மேம்படுத்தி வருகிறது, இது சமூக ஊடகத் தளங்களில் பதின்மவயதினர் தொடர்புகொள்ளக்கூடிய மற்றும் வயதுக்குத் தகுந்த வழிகளில் படைப்புத்திறனுடன் இருக்கக்கூடிய இடங்களை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். இந்த மாற்றங்கள் வெளிவரும்போது, உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் கடினமான தலைப்புகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஆராய்ந்து பேசுவதற்கு அவை நல்ல வாய்ப்பை வழங்கும்.