இந்தக் கலந்துரையாடல் நீளம் மற்றும் தெளிவுக்காக திருத்தப்பட்டுள்ளது.
நிக்கோல்:
குழந்தை மருத்துவம் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ நிபுணர், எழுத்தாளர், தாய் மற்றும் எங்களின் ஸ்கிரீன் ஸ்மார்ட் தொடரின் படைப்பாளரான டாக்டர். ஹினா தாலிப் அவர்களுடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் கூறவேண்டுமானால், ஒரு பதின்மவயதினருக்கு தாயான நானும், என் குழந்தையுடனான கடினமான உரையாடல்களை எப்படி, எப்போது மேற்கொள்ளலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு டாக்டர். தாலிப் அவர்களையே பெரிதும் சார்ந்திருக்கிறேன். அவர் குழந்தை வளர்ப்புக்குரிய நடைமுறை சார்ந்த மற்றும் சிந்தனைமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறார். Instagram இல் @teenhealthdoc என்ற கணக்கிலும் மேலும் அவரது வலைதளத்திலும் அவரை காணலாம், இப்போது அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
டாக்டர். தாலிப்:
இளையோர் மற்றும் சமூக ஊடகங்கள் பற்றி உங்களுடன் பேசுவதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன், ஏனென்றால் Metaவில் இளையோர் பாதுகாப்பில் செல்வாக்கு மிக்க பதவி வகிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்! ஆம், நான் நியூயார்க் நகரில் உள்ள முதல்நிலை மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ நிறுவனமான ஏட்ரியா எனும் நிறுவனத்தில், பயிற்சி செய்துவரும் வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ நிபுணர். நான் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அமைப்பில் செய்தித் தொடர்பாளராக உள்ளேன் மேலும் அவர்களின் தகவல்தொடர்பு மற்றும் மீடியா கவுன்சிலில் சேவையாற்றி வருகிறேன். பலரும் எனது குழந்தை மருத்துவத்தின் துணை சிறப்புத்துறை மருத்துவமான, வளர் இளம் பருவதினருக்கான மருத்துவம் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டே இருப்பதில்லை. பதின்மவயதினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக அக்கறை காட்டுவது எனது வாழ்வின் பேரார்வமாகும், அத்துடன் இன்றைய பதின்மவயதினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவி செய்வதற்குத் தேவையான கூடுதல் பயிற்சியை எனது சிறப்பு மருத்துவப் பிரிவானது மனநலம், மகளிர் மருத்துவம், தோல் மருத்துவம், விளையாட்டு சார்ந்த மருத்துவம் மற்றும் டிஜிட்டல் ஆரோக்கியம் போன்ற துறைகளில் எனக்கு வழங்கி உதவியுள்ளது.
நிக்கோல்:
சமூக ஊடகம் அல்லது திரை நேரம் குறித்த உரையாடலை தங்களது பதின்மவயது பிள்ளையுடன் எவ்வாறு தொடங்குவது என உறுதியாகத் தெரியாத பெற்றோருக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்? தங்களது குடும்பத்தினரிடையே வெளிப்படையான, ஆதரவான உரையாடலை அவர்கள் எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
டாக்டர். தாலிப்:
இந்த உரையாடலை உண்மையான ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் அணுகுதல் என்பதே மிகவும் வெற்றிகரமானதாக இருப்பதை நான் கண்டறிந்துள்ளேன். இந்த முக்கியமான உரையாடல்களை மேற்கொள்வதற்கான மூன்று குறிப்புகள் என்னவென்றால். முதலாவதாக, ஆர்வம் காட்டுபவராக இருங்கள், ஒரு நாள் முழுவதும் அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், எந்தெந்த செயலி அல்லது தளங்களைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்குப் பிடித்த பின்தொடர்பவர்கள் யார் மற்றும் ஏன், அத்துடன் என்னென்ன கேம்களை அவர்கள் அதிகம் ரசிக்கிறார்கள் என்பதைப் பற்றி உங்களிடம் எடுத்துக் கூறுமாறு சொல்லுங்கள். அத்துடன் கூடுதலாக, உங்களால் முடிந்தால் நீங்கள் அவர்களின் கணக்குகளை ஒன்றாகச் சேர்ந்து பார்த்தும், அவர்களுக்குப் பிடித்தமான கேம்களை அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் சிறிது நேரத்தை ஒன்றாகச் செலவிடலாம். இரண்டாவதாக, ஆராய்ந்து தனக்கான முடிவெடுப்பவராக இருப்பதற்கு அவர்களை அனுமதியுங்கள். அவர்களிடம், “உங்களது சமூக ஊடகம் அல்லது அலைபேசி உபயோகத்தில் நீங்கள் எவ்வளவு திருப்திகரமாக உள்ளீர்கள்?” என்று கேளுங்கள். உண்மையாகவே என் பயிற்சிமுறையில் பதின்மவயதினரைப் பார்க்கும்போது இதைத்தான் நான் செய்கிறேன். மீடியாவைப் பயன்படுத்துவதில் எந்தப் பகுதிகள் அவர்களைச் சிறப்பாக, தொடர்புடையாதாக, பயனுள்ளதாக உணரவைக்கின்றன என்பதையும், எந்தப் பகுதிகள் அதற்கு மாறாக உணரவைக்கக்கூடியவை என்பதையும் நான் அவர்களிடம் கேட்பேன்.
மூன்றாவதாக, அவர்களின் நண்பர்களைப் பற்றியும், அவர்களது நண்பர்கள் சமூக ஊடகத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் கேட்க முயற்சி செய்யுங்கள். வெறுமனே பேசி விவரங்களைக் கேட்டுப் பெறுங்கள்! தன்னைப் பற்றி பேசுவதை விட நண்பர்களைப் பற்றிப் பேசுவது பெரும்பாலும் எளிதாக இருக்கும், அதே போக்கில், பதில் சொல்பவராக இருந்து, உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் சமூக ஊடகங்களின் ஏற்றத் தாழ்வுகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சமூக ஊடகங்களைப் பற்றி பிற ஒளிவுமறைவான வழிகளில் பேசுவது என்பது, சமூக ஊடகங்களைப் பற்றி பேசுவதன் மூலம் தொடங்குவதாக இருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களின் மனநலம், பள்ளி, விளையாட்டு, தூக்கம், தொந்தரவு தரும் விஷயங்கள் அல்லது அவர்களின் வாழ்க்கையின் பிற அம்சங்களைப் பற்றிக் கேட்டு, சமூக ஊடகங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவக்கூடியவையாக இருக்கலாம் அல்லது சவாலாக அமையலாம் என்பதை அடுத்தடுத்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வகையான உரையாடல்களைத் தொடங்குவதற்கு Meta தனது குடும்ப மையத்தில் உதவி விவரங்களைக் கொண்டுள்ளது.
நிக்கோல்:
உங்கள் அனுபவத்தில் பதின்மவயதினர் மீது Instagram எவ்வாறான நேர்மறையான தாக்கங்களைக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்? தங்கள் பதின்மவயதினரை நன்றாக உணர வைக்கக்கூடிய கூடுதல் பகிர்வைக் கண்டறிய உதவுவதற்கு பெற்றோர்களுக்கான வழிகள் ஏதேனும் உள்ளனவா?
டாக்டர். தாலிப்:
Instagram மற்றும் பிற சமூக ஊடகத் தளங்கள் சமூகத்தைக் கண்டறிய, நண்பர்களுடன் தொடர்புகொள்ள, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள மற்றும் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்குமான சிறந்த தளங்களாக இருக்கும். பதின்மவயதினர் பலர், ஆன்லைனில் "எனது மக்களைக் கண்டறிகிறோம்" என்று, குறிப்பாக வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பதின்மவயதினர் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். LGBTQIA+ என்பதாக அடையாளம் காணும் பதின்மவயதினர் சமூக ஊடகங்கள் மூலம் ஆதரவு, கல்வி மற்றும் உதவி விவரங்களை எவ்வாறு கண்டறிந்தார்கள் என்பதைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், பதின்மவயதினர், ஆன்லைனில் தளங்கள் மற்றும் அவர்கள் பின்தொடரும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட மனநலனுக்கான கருவிகள் அல்லது சமாளிக்கும் திறன்களைப் பற்றியும் மற்றும் சில சுகாதாரக் குறிப்புகள் பற்றியும் கூட பேசுகிறார்கள்! இறுதியாக, ஆதரித்துப் பேசுதல் என்பது கருத்துகளைப் பகிர்வதற்கான ஓர் இடமாக சமூக ஊடகங்களையும் பதின்மவயதினர் சுட்டிக்காட்டும் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அத்துடன் தங்களுக்குப் பொருத்தமான இடமாகக் கருதும் உலகில் மாற்றங்களைச் செய்வோம் என்ற அவர்களின் நம்பிக்கையை நான் மிகவும் விரும்புகிறேன்.
தங்கள் பதின்மவயது பிள்ளைக்கு நேர்மறையான அனுபவத்தைப் பெற உதவ, பெற்றோர்களுக்கு, தளங்கள் வழங்கும் கருவிகளை பற்றி அறிந்து கொள்வது முக்கியம் ஆகும், ஏனெனில் இவை அனைத்தும் முற்றிலும் நேர்மறையான அனுபவங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, பெற்றோர்கள் பதின்மவயதினருக்கு அவர்களின் பகிர்வு பரிந்துரை அமைப்புகள், நேர மேலாண்மை அமைப்புகள் மற்றும் பெற்றோர் மேற்பார்வை அம்சத்தை அமைப்பதில் உதவலாம்.
நிக்கோல்:
பெரும்பாலான பெற்றோர்கள் நேர்மறையான ஆன்லைன் பழக்கங்களைப் பற்றிய உரையாடலைத் தொடங்க தங்கள் பதின்மவயது பிள்ளையின் 13வது பிறந்தநாள் வரை காத்திருக்கப் போவதில்லை. தங்கள் குழந்தைகள் சமூக ஊடகங்களில் சேருவதற்குத் தயார் படுத்தும் பெற்றோருக்கு அவர்கள் அங்கு செல்வதற்கு முன் என்ன அறிவுரை வழங்குவீர்கள்?
டாக்டர். தாலிப்:
எனது அனுபவத்தின்படி, பதின்மவயது பிள்ளை சமூக ஊடகத்தில் சேர நான் இயல்பாகப் பரிந்துரைக்கக்கூடிய நிர்ணயிக்கப்பட்ட வயது எதுவும் இல்லை ஆனால், எப்படி இருந்தாலும் எல்லாத் தளங்களிலும் குறைந்தபட்ச வயதுக்கான கட்டுப்பாடு உள்ள சேவை விதிமுறைகள் உள்ளன, அவை முக்கியமான பாதுகாப்பு வேலியாகும். இதேபோல், சமூக ஊடகம் என்பது ஒற்றைக் காரணி அல்ல, அது ஒரு விஷயம் மட்டும் அல்ல, அது Instagram, Facebook மற்றும் TikTok மட்டுமே அல்ல. ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல காரணிகள் உள்ளன என்பதால், எனக்கு முன்னால் இருக்கும் தனிப்பட்ட பதின்மவயது பிள்ளையை நான் பார்க்கிறேன். மிகவும் முக்கியமானதாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப வயது குறித்து ஒரு குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குமாறு என்னிடம் கேட்கப்படும்போது, பெற்றோர்கள் தங்களின் பதின்மவயதினரை வழிநடத்த உதவுவதற்கு நேரத்தை ஒதுக்குவதையும் உதவும் நபராக களத்தில் இருக்க வேண்டியதையும் நானும் கருத்தில் கொள்கிறேன் அல்லது பெற்றோர்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்கிறேன்.
நேரடி மெசேஜிங் அம்சம் அல்லது iMessage ஆனது, சமூக ஊடகங்களைப் போலவே கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்களைக் கொண்டிருக்கும் என்பதை நான் பகிரும்போது இளம் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் ஆச்சரியப்படுகிறார்கள். Youtube Kids மற்றும் iPad அல்லது Minecraft மற்றும் Roblox போன்ற டேப்லெட் கேம்களும் சமூக ஊடகங்களே. எனவே, இந்த உரையாடல்கள் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் தொடங்கபட வேண்டியது அவசியமாகும், மேலும் எனக்கும் கீழ்நிலைப் பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதால் நானும் தற்போது அதே சூழலில் இருக்கிறேன். இந்த உரையாடல்களை ஆரம்பக் கட்டத்திலேயே தொடங்குவதும் முக்கியம், இதனால் நம் குழந்தைகள் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது நம்மிடம் வருவதற்கு சௌகரியமாக உணருவார்கள். இறுதியாக, இந்த உரையாடல்கள் நம் குடும்பங்களில் மட்டுமல்லாமல் உங்கள் வகுப்பறையில் அல்லது வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோர்களுடனும் அத்துடன் ஆசிரியர்களுடனும் கூட மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைகள் வாழும் அனைத்துச் சமூகங்களிலும் இந்த உரையாடல்களை நாம் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இது சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் என்று வரும்போது குடும்பங்கள் வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டிருப்பதால் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் விஷயங்களில் மிகவும் கடினமான ஒரு பகுதியாகும்.
நிக்கோல்:
நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன், மேலும் இதுபோன்ற தலைப்புகளைப் பற்றி தங்கள் பதின்மவயதினரிடம் எவ்வாறு பேசுவது என்பதற்கான கல்வி உதவி விவரங்களும் எங்களின் குடும்ப மையத்தில் உள்ளன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்-எடுத்துக்காட்டாக, ParentZone இல் சுய அறிதல் மற்றும் உணர்வு சார்ந்த கட்டுப்பாடு பற்றிய சிறந்த கட்டுரை ஒன்று அங்கு உள்ளது. சமூக ஊடகங்களில் எவ்வாறு நேர்மறையான முறையில் ஈடுபடுவது என்பதைப் பற்றி பதின்மவயதினரிடம் கூறும்போது எந்தக் குறிப்பிட்ட கொள்கைகளை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள்? மற்றும்/அல்லது, பெற்றோரிடம் அதைப் பற்றி தாங்கள் பேசுவது குறித்து அவர்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?
டாக்டர். தாலிப்:
நான் பின்பற்றக்கூடிய கோட்பாடுகள் இவை. முதலில், உங்கள் அலைபேசியை ஏன் அணுகுகிறீர்கள் என்பதற்கான ஒரு நோக்கத்தை அமைப்பதை அல்லது சத்தமாக கத்திச் சொல்வதை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு 10 நிமிட கவன மாறுதல் தேவைப்படுவதாக இருக்கலாம், 3 நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்புவதாக இருக்கலாம், மேலும் சமையல் குறிப்பு பற்றி மேலும் அறிய விரும்புவதாக இருக்கலாம். சத்தமாக கத்திச் சொன்னால் மட்டுமே அதற்கான வீரியம் இருக்கும், உங்கள் அலைபேசியை கீழே வைத்த பிறகும் அதைப் பற்றி நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
இரண்டாவதாக, உங்கள் உணர்வுகள் சொல்வதைக் கேளுங்கள். சமூக ஊடகங்களில் நீங்கள் செலவளிக்கும் உங்கள் நேரம் உங்களை எவ்வாறு உணர வைக்கிறது அல்லது நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்கள் உங்களை எவ்வாறு உணர வைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் உற்சாகமாக, உத்வேகமாக அல்லது ஊக்குவிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா அல்லது சோர்வாக, தனிமையாக அல்லது மனதளவில் காயப்பட்டவராக இருக்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்.
மூன்றாவதாக, நிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்வதைப் போலவே ஆன்லைனில் செயல்படுங்கள், பேசுங்கள், பகிருங்கள். ஒரு விஷயத்தை நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியிடம் சொல்ல மாட்டீர்கள் என்றால் அல்லது அது உங்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் எனில், அந்த விஷயத்தை ஆன்லைனில் சொல்லாதீர்கள். இது ஏனென்றால், இந்த விஷயம் எங்கு செல்கிறது, யார் அதைப் பார்க்கிறார்கள், எந்தச் சூழலில் அது கருத்தில் கொள்ளப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. நிஜ வாழ்க்கையிலும் ஆன்லைனிலும் உங்களிடமும் மற்றவர்களிடமும் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்.
நிக்கோல்:
ஆன்லைனில் நிகழ்ந்த ஒன்றைப் பற்றி எப்போதாவது உங்கள் நோயாளிகளுடன் கடினமான உரையாடல்களை நீங்கள் மேற்கொண்டதுண்டா? அது எப்படி இருந்தது?
டாக்டர். தாலிப்:
ஆன்லைனில் நிகழ்ந்திருக்கக்கூடிய விஷயங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றிய உரையாடல்கள், உணர்ச்சிகரமானவையாக அல்லது கடந்து செல்வதற்கு சவாலாக இருக்கும் என்றால் அவை உண்மையில் பழக்கத்தில் மாற்றத்தைத் தூண்டுவதற்கான அல்லது ஆன்லைனில் தங்கள் பயன்பாட்டுக்கான வரம்புகளை அமைக்க அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான சிறந்த கருவிகளாகும். இளைய நபர்களுடனான எனது உரையாடல்களில் இதனை எவ்வாறு செய்வது என்பது பற்றிய சிறந்த யோசனைகள் அவர்களிடமிருந்தே வந்துள்ளன. அவர்கள் தங்களைப் பற்றி மிகச் சிறப்பாக அறிந்திருப்பார்கள் மற்றும் சில தவறுகளைச் சரிசெய்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கொண்டு வருகிறார்கள் அல்லது வாழ்க்கை அல்லது ஆரோக்கியம் சார்ந்த இலக்குடன் அதிகளவு சீரமைக்க தங்கள் பயன்பாட்டின் முறையை மாற்றுகிறார்கள்.
பதின்மவயதினருக்கு தங்களை விட தங்கள் சகாக்கள் இணையத்தில் எந்த மாதிரியான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுவது மிகவும் எளிதானது. அங்கே தொடங்கி, விவரங்களைப் பேசி தெரிந்துக் கொள்ளுங்கள். இது கவரும்படியாகவும், சில சமயங்களில் மனதை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும் அத்துடன் அதைப் பற்றிப் பேச அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது.
நிக்கோல்:
எங்களின் பார்வையாளர்களில் ஒருவரின் கடைசிக் கேள்வியாக, "சமூக ஊடகங்கள் ஒரு பெரியவராக எனக்கு ஒப்பீட்டை ஏற்படுத்தலாம், சமூக ஊடகங்களில் உள்ள ஒப்பிட்டுப் பார்த்தல் குறித்து எனது குழந்தைகளுக்கு நான் எப்படி உதவுவது?" டாக்டர். தாலிப், இதைப் பற்றிய உங்களது கருத்துகள் என்ன?
டாக்டர். தாலிப்:
ஒப்பீடு என்பது மகிழ்ச்சியின் திருடன் என்று தியோடர் ரூஸ்வெல்ட் கூறியதை நான் நம்புகிறேன். சமூக ஒப்பீடு என்பது சுயமரியாதையைப் பாதிக்கலாம் என்பதுடன் பதின்மவயதினர் வளர்ச்சி அடிப்படையில் தொட்டால் சிணுங்கி பருவக் கட்டத்தில் இருக்கிறார்கள், அங்கு அவர்கள் விமர்சனக் கருத்துகளை இதயத்திற்கு எடுத்துக்கொள்வார்கள் மற்றும் மற்ற கட்டங்களை விட இந்தக் கட்டத்தில் தங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பார்கள். எனவே நாம் அவர்களுக்கு எப்படி உதவலாம், நிஜ வாழ்விலும் ஆன்லைனிலும் அவர்களின் சுயமரியாதையைக் கட்டமைக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும், மேலும் அவர்களுக்கு மகிழ்ச்சி தராதவர்களிடமிருந்து பாதுகாக்க கற்றுக்கொடுக்க வேண்டும், அவர்களை மரியாதையாகவும் மதிப்புடனும் உணரச் செய்ய வேண்டும். உண்மையாகவே, இது உங்களுக்கு முக்கியமான விஷயமாக இருக்கும். முக்கியமாக கருதப்படும் விஷயங்களில் உணர்வை வளர்ப்பது சமூக ஒப்பீட்டிற்கு ஒரு சக்திவாய்ந்த மாற்று மருந்தாக இருக்கும். நெவர் இனஃப் என்ற நூலின் ஆசிரியரான ஜெனிபர் வாலஸ் இதைப் பற்றி கூறியுள்ளதை நான் சமீபத்தில் கேட்டேன், அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. சிறிய அல்லது பெரிய வழிகளில், நாம் அனைவரும் நம் பதின்மவயதினருக்கும், நாம் தொடர்புகொள்ளும் அனைத்துப் பதின்மவயதினருக்கும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்குத் திறமைகள் உள்ளன, அவர்களுக்கு மதிப்பு உண்டு மற்றும் அவர்கள் இந்த உலகத்திற்கு ஏதாவது சாதிப்பார்கள் என்பதைக் காட்ட வேண்டும்.
உங்களை நேர்மறையாக உணர வைக்கும் பகிர்வுடன் செயலை மேற்கொள்ளுமாறு பதின்மவயதினரை நான் கேட்டுக்கொள்கிறேன். டி-ஃப்ரெண்ட் டிசம்பர் என்பது ஒரு உண்மையான விஷயம், உங்கள் நலம் விரும்பாத நபர்களைப் பின்தொடர்வதை நிறுத்துதல் நல்லது. அதேபோல், விருப்பம் தெரிவிப்பதை முடக்குமாறும், நீங்கள் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால், இனி அவர்கள் மீது கவனம் செலுத்த விரும்பவில்லை என்றால் அந்த நபர்களை வரம்பிடுமாறும் பதின்மவயதினருக்கு நான் அடிக்கடி பரிந்துரைக்கிறேன். மிக முக்கியமாக, இதைப் பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் தொடர்ந்து கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
நிக்கோல்:
ஆகவே நாம் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம், ஆனால் இன்றைய உரையாடலில் இருந்து பெற்றோர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?
டாக்டர். தாலிப்:
சமூக ஊடகங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகத் தெரிகின்றன, பதின்மவயதினருக்கு வெவ்வேறு வயது மற்றும் முதிர்ச்சியடையும் நிலைகளைப் பொருத்து வெவ்வேறு தேவைகள் உள்ளன. நமது பதின்மவயதினரை அவர்களின் ஆன்லைன் வாழ்வில் சிறந்த முறையில் வழிநடத்த நாம் அவர்களை உண்மையில் பார்க்கவும் கவனிக்கவும் வேண்டும். உங்கள் பதின்மவயதினர் சமூக ஊடகங்களில் சரியான அனுபவத்தை எவ்வாறு பெறலாம் மற்றும் அவர்கள் எப்படி தடுமாறக்கூடும் என்பதைப் பற்றி உரையாடுங்கள். பாதிக்கப்படுவராக இருந்து மற்றும் சமூக ஊடகங்களுடனான உங்கள் உறவுநிலை என்பது உங்கள் பதின்மவயதினருக்கும் ஒரு முன்மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்… இந்தத் தலைப்பில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் என்பது நீண்ட தூரம் தொடரக்கூடும். Instagram போன்ற பல செயலிகளில் பெற்றோர் கருவிகள் மற்றும் இயல்புநிலை அமைப்புகள் உள்ளன, ஆனால் உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் உரையாடுவது சமூக ஊடகங்களில் நேர்மறையான அனுபவங்களைப் பெற அவர்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழியாகும்.
நிக்கோல்:
மிக்க நன்றி, டாக்டர். தாலிப் அவர்களே. தொழில்நுட்பப் பரப்பானது தொடர்ந்து விரிந்து மாறிக்கொண்டே இருப்பதால், தெரிந்துகொள்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம், மேலும் குடும்பங்கள் ஒருவரையொருவர் மாற்றியமைக்கவும் ஆதரவளிக்கவும் சிறந்த வழிகளைக் கண்டறியும் போது பெற்றோருக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க விரும்புகிறோம்.
டாக்டர். தாலிப்:
பதின்மவயதினருக்கு நாங்கள் உதவ, தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்வதற்கும் உதவி விவரங்களைப் பகிர்வதற்கும் உதவும் உங்கள் பணிக்காக நிக்கோல் மற்றும் உங்கள் குழுவினருக்கு நன்றி.
இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ள Meta மற்றும் Instagram இன் கருவிகள் மற்றும் உதவி விவரங்களைப் பற்றி மேலும் அறிய, மேலும் பலவற்றிற்கு, கீழே உள்ள உதவி விவரங்களைப் பாருங்கள்.