சமூக ஊடகம் & தற்கொலைத் தடுப்பு: எவ்வாறு உதவியைக் கண்டறிவது மற்றும் உதவி செய்வது

தற்கொலை என்பது ஒரு கடினமான தலைப்பு, ஆயினும் நாம் அதைப் பற்றி நாம் பேசியாக வேண்டும். பெரியவர்களைப் போலவே, பதின்மவயதினரும் இந்த மோசமான நிகழ்வுக்கு பாதிக்கப்பட நேரிடும். பெற்றோர், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நம்பகமான நபர்கள் என அனைவரும் ஒரு பதின்மவயதினரின் வாழ்க்கையில் தற்கொலை தொடர்பான எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நடத்தைகளின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

பதின்மவயதினரிடம் தற்கொலை பற்றி பேசும்போது உதவிகரமாக இருக்கும் மொழி

இந்தப் பிரச்சினையை பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் பேசுவது எளிதல்ல, ஆனால் நீங்கள் அந்த உரையாடலை நடத்தும்போது (அல்லது அவர்கள் அதைப் பற்றி பேச வேண்டும் என்று வந்தால்), அதிலிருந்து பின்வாங்க வேண்டாம்.

பயனுள்ளதாக இருக்கும் வகையில் பிரச்சினைகள் ஃபிரேம் செய்யப்பட வேண்டும். நீங்கள் மொழியையும் சூழலையும் பயன்படுத்தும் விதத்தில் மிகவும் கவனம் செலுத்தவும். நீங்கள் தேர்வுசெய்யும் வார்த்தைகள் உரையாடலை ஆழமான வழிகளில் பாதிக்கலாம். நம்பிக்கை, மீண்டெழுதல் மற்றும் உதவி-தேடுதல் பற்றிய கதைகளை உங்கள் உரையாடலின் முற்பகுதியில் வைத்திருங்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள சௌகரியமாக உணரக்கூடிய இடத்தை உருவாக்குங்கள். நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள் என்பதையும் அவர்களுக்கான உதவி எப்போதும் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பின்வரும் சில எடுத்துக்காட்டுகள் எங்களது கூட்டாளரான, இளம் வயதினருக்கான மனநலம் சார்ந்த சேவைகளில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பான Orygen - தொகுத்து ஒன்றாக வழங்கியிருக்கும் வழிகாட்டியில் உள்ள உதவிகரமாக இருக்கும் விஷயங்களாகும். தற்கொலை பற்றி பேசும்போது இந்த விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:

உதவிகரமாக இருக்கும் மொழி

  • ஒரு நபர் "தற்கொலையால் இறந்தார்" என்று சொல்ல முயற்சிக்கவும் ("தற்கொலை செய்துகொண்டார்" என்பதற்குப் பதிலாக இவ்வாறு சொல்லலாம்- கீழே உள்ள உதவிகரமாக இல்லாத மொழிக்கான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும்).
  • தற்கொலை என்பது சிக்கலானது மற்றும் ஒரு நபர் தனது வாழ்க்கையை முடிக்க பல காரணிகள் பங்களிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டவும்.
  • நம்பிக்கை மற்றும் மீண்டெழுதல் பற்றிய மெசேஜ்களைச் சேர்க்கவும்.
  • தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் மற்றவர்களுக்கு எங்கே, எப்படி உதவி பெறலாம் என்று சொல்லுங்கள்.
  • அவர்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது, நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை போக்குவது போன்ற தற்கொலையிலிருந்து பாதுகாக்க உதவும் காரணிகள் பற்றிய தகவல்களைச் சேர்க்கவும்.
  • தற்கொலை தடுக்கக்கூடியது என்றும், உதவி கிடைக்கக்கூடியது, மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் வெற்றிகரமாக உள்ளன என்றும், மீண்டெழுதல் சாத்தியம் என்றும் குறிப்பிடவும்.
  • இளம் வயதினர் என்ன உணர்கிறார்கள் என்பதைப் பற்றி பேச அவர்களை ஊக்குவிக்கவும் — அவ்வாறானவர் ஒரு நண்பராகவோ, நம்பகமான பெரியவராகவோ, ஒரு தொழில்முறை நிபுணராகவோ கூட இருக்கலாம்.

மாறாக, தற்கொலை பற்றிய உரையாடலை சரியான திசையில் நகர்த்தாத வழிகள் உள்ளன.

உதவிகரமாக இல்லாத மொழி

  • தற்கொலையை குற்றச்செயல் அல்லது பாவச்செயல் என்று விவரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் ("தற்கொலை செய்து கொண்டார்" என்பதை விட "தற்கொலை மூலம் இறந்தார்" என்று சொல்லுங்கள்). இது ஒருவருக்கு அவர்கள் நினைப்பது தவறானது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பரிந்துரைக்கலாம் அல்லது அவர்கள் உதவி கேட்டால் அவர்கள் நியாயம் கற்பிக்கப்படுவார்கள் என்று ஒருவர் கவலைப்படலாம்.
  • பிரச்சினைகள், வாழ்க்கைமுறை மனஅழுத்தங்கள் அல்லது மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தற்கொலையை ஒரு 'தீர்வாக' சொல்லாதீர்கள்.
  • கவர்ச்சிகரமான, நேசிக்கக்கூடிய அல்லது தற்கொலையை கவர்ந்திழுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • சிறுமைப்படுத்தும் அல்லது தற்கொலையை அதைவிட சிக்கலானதாகத் தோன்றக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
  • ஒரு நிகழ்வு குறித்து குறை கூறியோ, கொடுமைப்படுத்துதல் அல்லது சமூக ஊடகப் பயன்பாடு போன்ற ஒற்றை காரணத்திற்காக தற்கொலை நிகழ்ந்ததாகவோ கூறாதீர்கள்.
  • கட்டுக்கதைகள், அவமதித்தல், ஒரே மாதிரியான கருத்துகளை வலுப்படுத்துகிற வார்தைகள் அல்லது தற்கொலை பற்றி மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று பரிந்துரைத்தல் போன்ற தீர்மானிக்கும் விதமான சொற்றொடர்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  • உண்மையான தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி பற்றிய விரிவான தகவல்களை வழங்க வேண்டாம்.
  • தற்கொலை முறைகள் அல்லது தற்கொலை நடந்த இடம் பற்றிய தகவல்களை வழங்க வேண்டாம்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ‘ஹாட் ஸ்பாட்’ இடத்தில் பல தற்கொலைச் செயல்கள் நடந்திருந்தால் அதனை அங்கீகரிக்க வேண்டாம்.

சமூக ஊடகங்களில் பதின்மவயதினரின் தற்கொலை எண்ணம் தொடர்பான நடத்தைகளைக் கவனியுங்கள்

தற்கொலை எண்ணம் தொடர்பான நடத்தைக்கான ஒரு எச்சரிக்கை அறிகுறி என்பது உங்கள் பதின்மவயதினர் "நான் வாழ விரும்பவில்லை" அல்லது "இதை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன்" போன்ற விஷயங்களைச் சொல்வது. அவர்கள் நம்பிக்கையற்றதாகவும், உதவியில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கலாம் அல்லது மற்றவர்களுக்குச் சுமையாக இருப்பதாகக் குறிப்பிடலாம். அவர்கள் வழக்கமாகச் செய்யும் செயலில் ஆர்வத்தை இழக்கலாம் அல்லது திடீரென உணர்ச்சிவசப்படும் வகையில் செயல்படலாம்.

Orygen ஆல் ஹைலைட் செய்யப்பட்டதன்படி, ஓர் இளம் வயதினர் தற்கொலை எண்ணம் தொடர்பான பிற அறிகுறிகள் பின்வருமாறு:

  • தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுதல்
  • தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகளைத் தேடுவது (எ.கா. மாத்திரைகள், ஆயுதங்கள் அல்லது பிற வழிகளை அணுகுவது)
  • வேண்டுமென்றே தன்னைதானே காயப்படுத்திக் கொள்ளுதல் (அதாவது கிழித்துக்கொள்ளுதல், வெட்டிக்கொள்ளுதல் அல்லது எரித்துக்கொள்ளுதல்)
  • மரணம், இறந்து போதல் அல்லது தற்கொலை ஆகியவை குறித்து பேசுவது அல்லது எழுதுவது
  • நம்பிக்கையின்மை
  • ஆத்திரப்படுதல், கோபமடைதல், பழிவாங்க முயற்சித்தல்
  • கவனக்குறைவாக செயல்படுதல் அல்லது ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல், சிந்திக்காமல் இருப்பது போல் தோன்றுதல்
  • சிக்கலில் இருந்து வெளியேற வழியே இல்லாததுபோல் சிக்கிக்கொண்ட உணர்வுடன் இருத்தல்
  • மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தல்
  • நண்பர்கள், குடும்பம் அல்லது சமூகத்திலிருந்து விலகுதல்
  • பதற்றம், கலக்கம், உறக்கநிலை அல்லது பசியார்வத்தில் ஏற்படும் மாற்றங்கள்
  • மனநிலையில் வியத்தகு மாற்றங்கள்
  • வாழ்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் இருத்தல், வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல் இருத்தல்

இவ்வாறான நடத்தை இருப்பதைக் கவனித்தால், இவை தற்கொலை எண்ணத்தின் நடத்தைக்கான அறிகுறிகளைக் காட்டும் பதின்மவயதினரை ஆதரிக்க பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகளாகும்.

பதின்மவயதினருக்கு ஆதரவாக இருக்க பெற்றோர்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகள்:

உங்கள் பதின்மவயதினர் எச்சரிக்கை காட்டக்கூடிய அறிகுறிகளைக் காட்டிய பிறகு அல்லது உங்களுடன் பேச விரும்புவதாகச் சொன்ன பிறகு எப்படித் தொடங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய சில வழிகள் உள்ளன. Forefront செய்த பணியின் மூலம் தெரிவிக்கப்பட்ட பட்டியல் இவை: தற்கொலைத் தடுப்புக்கான கண்டுபிடிப்பு.

  • புரிந்துகொண்டு, செவிமடுக்கவும். உங்களின் முழு கவனத்துடன் அவர்களைப் பார்த்துக்கொள்ளவும். தீர்வுகளை வழங்க வேண்டாம் அல்லது எல்லாம் சரியாகிவிடும் என அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டாம்; அவர்களின் கருத்தைக் கேட்பதே தற்போது முக்கியமாகும். அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும், அவர்களை மதிப்பிட வேண்டாம். "இப்போது பல்வேறு பிரச்சனைகளுடன் போராடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், நாம் பேசலாமா? நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்பது போன்று அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய கேள்விகளைக் கேட்கவும்.
  • தற்கொலையைப் பற்றி கேட்கவும்: "தற்கொலையைப் பற்றி நினைக்கிறீர்களா?" எனத் தெளிவாக, நேரடியாகக் கேட்பதன் மூலம், நீங்கள் அவர்கள்மேல் அக்கறையாக இருப்பதையும், அவர்கள் எந்த அளவிற்கு மனச்சோர்வாக உள்ளனர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பதையும் தெரியப்படுத்தலாம். நேரடியாகக் கேட்பதன் மூலம், தன்னையே ஒருவர் கொலைசெய்து கொள்வதற்கான அபாயம் அதிகரிக்காது. அவர்கள் "ஆமாம், நான் தற்கொலையைப் பற்றிதான் நினைக்கிறேன்" எனக் கூறினால், பதட்டமடைய வேண்டாம். இதை அவர்கள் கூற அவர்களுக்கு எவ்வளவு தைரியம் வந்தது என்பதை அவர்களிடமே கூறி, தொடர்ந்து உரையாடவும். அவர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பதைக் கூற ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் தனிமை உணர்வை குறைக்கலாம்.
  • அபாயத்தை அகற்றவும். தற்கொலையைப் பற்றி நினைப்பதாக அவர்கள் கூறினால், அவர்களிடம் அது பற்றிய திட்டம் உள்ளதா எனக் கேட்கவும். ஆம் எனக் கூறினால், மருந்து, ஆயுதம் அல்லது கயிறு போன்றவை அவர்களிடம் உள்ளதா எனக் கேட்கவும். இந்தப் பொருட்களை அவர்களிடம் இருந்து தூரமாக வைப்பது முக்கியமாகும் அல்லது பிற நண்பர்கள் அல்லது காவல் துறையை உதவிக்கு அழைக்கவும்.
  • இன்னும் கூடுதலான பாதுகாப்பை அவர்கள் பெறுவதற்கு உதவவும். உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசுவது முக்கியமானதாகும், மேலும் அவர்களை ஆலோசகர், உடல்நல நிபுணர் அல்லது ஹெல்ப்லைனைத் தொடர்புகொள்ள செய்வதும் சிறந்ததாகும்.

    தற்கொலைத் தடுப்பு
    தேசிய தற்கொலைத் தடுப்பு உதவி எண்1-800-273-8255
    பேரிடர் கால குறுஞ்செய்திக்கான எண் 741-741

ஆபத்தான ஆன்லைன் "சவால்களுக்கு" பதிலளித்தல்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல், மக்களுக்கு கொடுக்கப்படும், பெரும்பாலும் தீவிரத்தன்மை அதிகரிக்கக்கூடிய ஆன்லைன் "தற்கொலை சவால்கள்" அல்லது "விளையாட்டுகள்" பொதுவாக தீங்கிழைக்கும் பணிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தச் சவால்களைப் பற்றி விவாதிக்கும் உள்ளடக்கம் Metaவின் கொள்கைகளுக்கு எதிரானது. Meta இந்த உள்ளடக்கத்தை நீக்குகிறது மற்றும் சில சூழ்நிலைகளில், அதைப் பதிவிட்ட கணக்குகளையும் நாங்கள் அகற்றலாம்.

உங்கள் பதின்மவயதினர் இந்த வகையான உள்ளடக்கத்தைப் பகிர்வதை நீங்கள் கண்டால் (அல்லது அவர்கள் அதைப் பகிர்வதை வகுப்புத் தோழர்கள் பார்த்ததாகச் சொன்னால்), அடுத்து என்ன செய்வது என்பது குறித்த சில பரிந்துரைகள் இங்கே உள்ளன:

  • ஆபத்தை புரிந்து கொள்ளுதல். ஆபத்தை நிராகரிக்க வேண்டாம். இந்த உள்ளடக்கம் பரவுவதைத் தடுப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.
  • செவிமடுப்பதில் தீவிரமாக இருங்கள். இளம் வயதினர் தாங்கள் ஆன்லைனில் பார்த்த விஷயங்கள் அல்லது நண்பர்கள் அல்லது மற்றவர்கள் செய்த பதிவுகள் அல்லது கருத்துகளைப் பற்றி ஏதேனும் கவலைகள் அல்லது கவலைகளை வெளிப்படுத்தினால், அதைச் செவிமடுத்துக் கேட்டு ஆதரவளிப்பது முக்கியம்.
  • தாக்கத்தை கருத்தில் கொள்ளுதல். ஆன்லைன் சுய-தீங்கு மற்றும் தற்கொலை சவால்கள் பற்றிய எச்சரிக்கைகளை முன்னனுப்புவது கூட சிலருக்கு தூண்டுதலாக இருக்கலாம். மக்கள் தொடர்ந்து தகவலறிந்து இருப்பது முக்கியம், ஆனால் தற்கொலை தொடர்பான தலைப்புடன் நீங்கள் எதைப் பகிர்கிறீர்கள் என்பதையும் அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
  • அது குறித்து புகாரளித்திடவும். சமூக ஊடக சேனல்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது துன்பம் தரக்கூடிய பொருத்தமற்ற ஆன்லைன் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். தளங்கள் தங்கள் கொள்கைகளுக்கு எதிரான உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து அகற்றும்.
  • அதைத் பற்றி பேசுங்கள். உங்களுக்கு பதின்மவயதினர் இருந்தால் (அல்லது இளம் வயதினருடன் பணிபுரிபவராக இருந்தால்), அவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் ஆன்லைன் செயல்பாட்டைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்கான வழிகளைக் கண்டறியவும். சவாலைப் பற்றி நேரடியாகக் கேட்பது பலனளிக்கவில்லை என்றால், அதைக் கண்டறிய மறைமுகமான வழிகளை முயற்சிக்கவும். இளம் வயதினர் தங்கள் பெற்றோரிடம் நம்பிக்கை வைக்கலாம் என்பதியும், நேர்மையாக இருப்பதற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

உதவி விவரங்கள்

Meta தொழில்நுட்பங்களில் நலமுடன் வாழ்தல் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு பற்றிய கூடுதல் ஆன்லைன் ஆதாரங்களுக்கு, எங்கள் தற்கொலைத் தடுப்பு மையம் அல்லது எங்களது பாதுகாப்பு மையம்.

எங்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நபர்களை சிறப்பாக ஆதரிக்க, இந்த நிபுணர் நிறுவனங்களுடன் Meta கூட்டாளர்கள்:

அமெரிக்கா

தேசிய தற்கொலைத் தடுப்பு உதவி எண்1-800-273-8255
பேரிடர் கால குறுஞ்செய்திக்கான எண் 741-741

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக