Thornஎன்பவரால் உருவாக்கப்பட்டு, Facebook ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பாலியல் ரீதியான மிரட்டலை நிறுத்துவதற்கான பராமரிப்பாளர் வளங்கள் என்பன பாலியல் ரீதியான மிரட்டல் தொடர்பான உதவி மற்றும் தகவல்களைத் தேடும் எவருக்குமானவை ஆகும்.
உங்களது பதின்மவயதினர் ஆன்லைனில் இருப்பது உள்ளிட்ட, வாழ்க்கையின் அனைத்துச் சவால்களிலும் உங்கள் உதவி மற்றும் வழிகாட்டுதலின் மூலம், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். உங்கள் பதின்மவயது பிள்ளை, பாலியல் ரீதியான மிரட்டல் போன்ற சிக்கலான, (சில நேரங்களில் ஆபத்தான) சூழல்களில் மாட்டிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு உதவ, நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.
இது கடினமானதுதான் என்றாலும், இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம் நீங்கள் ஏற்கெனவே சரியான விஷயத்தைச் செய்கிறீர்கள் என்பதை அறிக. நீங்கள் அடுத்து செய்ய வேண்டியவை: இது குறித்து உங்களின் பதின்மவயதினரிடம் பேசுங்கள், பின்பு உங்களின் நண்பர்களிடம் பேசுங்கள்.
பாலியல் ரீதியான மேசேஜ்களை அனுப்புதல் குறித்துப் பேசுவது இதைப் பேசத் தொடங்குவதற்கான தொடக்க விஷயமாகும். மேலும் இது இளைஞர்களால் எளிதாகப் புரிந்துகொள்ளும் மொழியாகும். பாலியல் ரீதியான மேசேஜ்களை அனுப்புதல் என்பது வழக்கமாக ஆன்லைனில், பாலியல் ரீதியான மெசேஜ்களையோ நிர்வாணமான அல்லது பகுதியளவு நிர்வாணமான படங்களையோ பெறுவது அல்லது அனுப்புவது ஆகும். நீங்கள் பேசத் தொடங்குவதற்கு உதவ, சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
பாலியல் ரீதியான மிரட்டலை எதிர்கொள்ளும் இளைஞர்கள், சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பயத்தில் இருக்கலாம். தங்கள் பெற்றோரைச் சங்கடப்படுத்துவது அல்லது பள்ளியில் இருந்து நீக்கப்படுவது, நண்பர்கள் தவறாக நினைப்பது, காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்வது குறித்து அவர்கள் கவலை கொள்ளலாம். வன்கொடுமை செய்பவரே இதுபோன்ற பயங்களைக் கூறி அவர்களைக் கட்டுப்படுத்தலாம், கவலையளிக்கும் விதமாக, இது நிகழ்கிறது. இந்தப் பயங்களால் இளைஞர்கள் வாயடைத்துப் போகிறார்கள், அது விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
உங்கள் பயமும் கவலையும் சாதாரணமானதுதான், ஆனால் கடினமான சூழல்களில் நீங்கள் அவர்களுடன் எப்போதும் உடனிருப்பீர்கள் என்பதை உங்கள் பதின்மவயதினருக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள் என நீங்கள் நினைத்தாலும், இதுபோன்ற உரையாடல்களை மேற்கொள்வது அவர்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், இதனால் ஏதேனும் தவறாக நிகழும்போது தங்கள் அனுபவத்தை உங்களுடன் பகிர்வார்கள்.
பெற்றோராக இருப்பது கடினமான பணியாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுப்பது கடினமான விஷயம். புதிய செயலிகளைப் பதிவிறக்கி, பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளைக்குப் பிடித்த செயலிகள் என்னென்ன எனக் கேளுங்கள். இது குறித்து உங்கள் பதின்மவயதினரிடம் எந்த அளவுக்கு அதிகமாகப் பேசுகிறீர்களோ அந்த அளவுக்கு, ஏதேனும் தவறாக நிகழ்கிறதா என்பதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும், மேலும் அதே போல் கடினமான சூழல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது அவர்களுக்கும் எளிதாக இருக்கும்.
பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான எங்கள் உதவி வளங்களை ஆய்ந்தறியுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களிடம் ஒரு Facebook அல்லது Instagram கணக்கு இருந்தால் — அல்லது உங்களின் பதின்மவயது பிள்ளையிடம் இருந்தாலும் — உங்கள் அனுபவத்திலிருந்து சிறந்த விஷயங்களைப் பெற உதவுவதற்கும் உங்கள் பதின்மவயது பிள்ளை தனது அனுபவத்தைப் பெற அவர்களுக்கு உதவுவதற்குமான கையடக்க இணைப்புகள், உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகளை உருவாக்கியுள்ளோம்.
ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுப்பதன் மூலம், நம் இளைஞர்களை நாம் சிறப்பாகப் பாதுகாக்க முடியும். Thorn இன் "Stop Sextortion" வீடியோவை உங்கள் பதின்மவயதினருடனும் நண்பர்களுடனும் பகிருங்கள். பாலியல் ரீதியான மிரட்டல் நிகழக்கூடிய சில வழிகள் குறித்து எந்த அளவுக்கு மக்கள் அதிகமாகத் தெரிந்துகொள்கிறார்களோ அந்த அளவுக்கு அதுபோன்ற சூழல்களைச் சிறப்பாகக் கையாளுவதற்கு அவர்கள் தயாராக இருக்க முடியும்.
\