அந்தரங்கப் படங்களைப் பகிர்வது (பகிராமல் இருப்பது) பற்றி உங்கள் பதின்மவயதினருடன் பேசுங்கள்

பெற்றோர்களாகிய நாம் பதின்மவயதினரிடம் அந்தரங்கப் படங்களைப் பற்றி பேசும்போது, நாம் வழக்கமாக இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம்: ஒன்று, அவற்றை அனுப்ப வேண்டாம் என்று அவர்களிடம் சொல்கிறோம்; இன்னொன்று, அவர்கள் அனுப்பினால் நடக்கக்கூடிய மோசமான சூழ்நிலைகளைப் பற்றி சுட்டிக்காட்டுகிறோம். சில நாடுகளில் அந்தரங்கப் படங்களை அனுப்புவது சட்டவிரோதமானது என்பது உண்மைதான். ஆனால் இந்த அணுகுமுறை அவற்றை அனுப்புவது தொடர்பான மிகப்பெரிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாது – மேலும் அது எதிர்மறையாகக் கூட மாறலாம். அந்தரங்கப் படங்களை அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி நாம் பேசினால், அனுப்புநரின் அனுமதியின்றி அவற்றைப் பகிரும் பதின்மவயதினரிடம் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறோம். நடந்ததைக் கேட்கும் மற்ற பதின்மவயதினர், அதைப் பகிர்ந்த நபருக்குப் பதிலாக பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நல்ல செய்தி என்னவெனில், பதின்மவயதினர் நீங்கள் நினைப்பதை விட குறைவான படங்களை அனுப்புகிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது – அதாவது பத்தில் ஒருவர் மட்டுமே இவற்றை அனுப்புகிறார்கள்.

உதவிக்குறிப்பு: பதின்மவயதினர் அவற்றை "அந்தரங்கப் படங்கள்" என்று அழைப்பதில்லை. "நிர்வாணப் படங்கள்" என்பது மிகவும் பொதுவான சொல்லாகும் அல்லது "படங்கள்" என்று மட்டும் சொல்வது மற்றும் பிற சொற்கள்.

கனடாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பதின்மவயதினர் அந்தரங்கப் படங்களை அனுப்புவதை விட பெறுவது அதிகம் என்று கண்டறிந்துள்ளனர், எனவே இது உண்மையில் இருப்பதை விட மிகவும் பொதுவான செயலாகத் தோன்றலாம். பதின்மவயதினர் தங்கள் நண்பர்கள் மற்றும் சகாக்கள் செய்கின்ற விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அவற்றுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்: அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பொதுவானது என்று நம்பினால், அதை தாங்களும் செய்வது சரி என்று அவர்கள் நினைக்கும் வாய்ப்பு அதிகம். நமது பதின்மவயதினரிடம் நாம் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், "எல்லோரும் அதைச் செய்கிறார்கள்" என்பது உண்மையல்ல என்பதாகும். அந்தரங்கப் படத்தை அனுப்பும்படி யாரும் தங்களுக்கு நெருக்கடி அளிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும்.

உங்கள் பதின்மவயதினரிடம் பேச வேண்டிய அடுத்த விஷயம், யாராவது அவர்களுக்கு அந்தரங்கப் படத்தை அனுப்பினால் என்ன செய்வது என்பதுதான். மரியாதை மற்றும் ஒப்புதல் அடங்கிய கேள்வியாக அதனை வடிவமைக்கவும்: யாராவது உங்களுக்கு அந்தரங்கப் படத்தை அனுப்பினால், அதனை நீங்கள் பார்க்க அவர்கள் சம்மதிக்கிறார்கள், ஆனால் நீங்கள் அதனை வேறு யாருக்கும் காட்ட சம்மதிக்கவில்லை.

எனவே, நமது பதின்மவயதினருக்கு அந்தரங்கப் படங்கள் அனுப்பப்படும்போது அவர்கள் சிறந்த தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு எப்படி உதவுவது?

முதலில், உங்கள் பதின்மவயதினருக்கு அந்தரங்கப் படத்தை அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு யாரேனும் அனுப்பினால், அதனை அவர்கள் உடனே நீக்கிவிட வேண்டும், அல்லது அந்த நபரிடம் இனி அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் (ஆஃப்லைனில் அவர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால்) அல்லது அந்த நபர் உங்களைத் தொடர்புகொள்வதைத் தடுத்து விட வேண்டும் (அவர் உங்களுக்குத் தெரியாதவராகவோ ஆன்லைனில் மட்டுமே தெரிந்தவராகவோ இருந்தால்) என்று உங்கள் பதின்மவயதினரிடம் சொல்லுங்கள். அந்த நபர் தொடர்ந்து அந்தரங்கப் படங்களை அனுப்பினால், அவர்கள் தாங்கள் நம்பும் அதிகாரி அல்லது பெரியவர்களிடம் செல்வது பற்றி உங்களுடன் பேச வேண்டும்.

அடுத்து, அவர்கள் அனுப்புமாறு கேட்டுக்கொண்ட அல்லது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த, அந்தரங்கப் படங்களை என்ன செய்வது என்று அவர்களிடம் பேசுங்கள்.

இந்தக் கேள்விகளை அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள ஊக்குவிக்கவும்:

  • இந்தப் படத்தில் இருப்பவர் இது பகிரப்பட வேண்டும் என்று நினைத்தாரா?
  • அந்தப் படத்தின் அசல் அனுப்புநரைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து அது வந்திருந்தால், அதிலுள்ள நபரிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்கிறார்களா?
  • நான் இருக்கும் படத்தை எவரேனும் பகிர்ந்தால், நான் எவ்வாறு உணர்வேன்?

இவை அனைத்தும் ஓர் எளிய விதிக்குள்தான் வரும்: படத்தில் உள்ள நபர் (அல்லது நபர்கள்) அதைப் பகிர வேண்டும் என்று விரும்புவது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால்,அதைப் பகிர வேண்டாம்.

இதில் பிரச்சினை என்னவென்றால், ஒரு விதி தெளிவாக இருந்தாலும், அதைப் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில்தான் மனிதர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இது தார்மீக விலகல் என்று அழைக்கப்படுகிறது, இத்தகைய எண்ணம்தான் பதின்மவயதினரை அந்தரங்கப் படங்களைப் பகிரச் செய்வதற்கான அதிக வாய்ப்பை உண்டாக்குகிறது.

அதனால்தான் அந்த விதியைப் போலவே, பின்வரும் நான்கு முக்கிய தார்மீக விலகல் பொறிமுறைகளை நாம் நேரடியாக களைந்தெறிய வேண்டும்:

ஒருவரின் அந்தரங்கப் படத்தைப் பகிர்வது தீங்கு விளைவிக்கும் என்பதை மறுத்தல்.

அவர்கள் சொல்வார்கள்: "மற்றவர்கள் ஏற்கெனவே அந்த நிர்வாணப் படத்தைப் பார்த்திருந்தால் அதைப் பகிர்வது ஒரு பெரிய விஷயமல்ல."

நீங்கள் சொல்லுங்கள்: ஒவ்வொரு முறையும் நீங்கள் ஓர் அந்தரங்கப் படத்தைப் பகிரும்போது, அதிலுள்ள நபரை காயப்படுத்துகிறீர்கள். அதைப் பகிர்ந்த நீங்கள் முதல் நபரா அல்லது நூறாவது நபரா என்பது முக்கியமில்லை.

அந்தரங்கப் படத்தைப் பகிர்வது சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நியாயப்படுத்துதல்.

அவர்கள் சொல்வார்கள்: "ஒரு பெண்ணின் படம் பகிரப்படும்போது, ​​அவற்றை அனுப்புவதால் ஏற்படும் அபாயங்களை மற்ற பெண்களுக்கு சுட்டிக்காட்டும்."

நீங்கள் சொல்லுங்கள்: இரண்டு தவறான விஷயங்கள் சரியான விஷயத்தை உருவாக்காது! அந்தரங்கப் படத்தை அனுப்புவது மோசமான யோசனை என்று யாரையும் காயப்படுத்தாத வகையில் மக்களுக்குக் காட்ட வழிகள் இருக்கின்றன. (இதற்கு மாறாக, அந்தரங்கப் படங்களை அனுப்ப வேண்டாம் என்று ஒருவரிடம் சொல்வது எப்படி உங்கள் வேலையாகும்?)

பொறுப்பைத் தனது பக்கத்திலிருந்து திசை மாற்றுதல்.

அவர்கள் சொல்வார்கள்: "நான் அந்தரங்கப் படத்தை ஒருவருடன் பகிர்ந்தால், அவர் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அது உண்மையில் எனது தவறு அல்ல."

நீங்கள் சொல்லுங்கள்: யாராவது உங்களுக்கு அந்தரங்கப் படத்தை அனுப்பினால், அதை நீங்கள் தனிப்பட்டதாக வைத்திருப்பீர்கள் என்று அவர்கள் உங்களை நம்புகிறார்கள். அதை ஒரே ஒருவருடன் பகிர்வதும் அந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் ஆகும்.

பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டுதல்.

அவர்கள் சொல்வார்கள்: "உறவிலிருந்து ஒரு பெண் பிரிந்த பிறகு அவரது படங்கள் பகிரப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை."

நீங்கள் சொல்லுங்கள்: "ஆண்மகன்கள் எப்போது ஆண்மகன்களாகவே இருப்பார்கள்” என்பதை ஒரு சாக்காகப் பயன்படுத்தாதீர்கள் அல்லது பெண்தான் "ஆபத்தை உணர்ந்து ஒழுங்காக நடக்க வேண்டும்" என்று கூறாதீர்கள். நீங்கள் ஓர் அந்தரங்கப் படத்தைப் பெறும்போது அதைப் பகிருமாறு நண்பர்கள் மற்றும் சகாக்களிடமிருந்து நிறைய நெருக்கடி தரலாம், ஆனால் யாராவது உங்களுக்கு ஒன்றை அனுப்பினால், அவர்களின் அனுமதியின்றி நீங்கள் அதைப் பகிர்ந்தால், உங்கள் மீதுதான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவது என்பது அந்தரங்கப் படங்களைப் பகிர வேண்டாம் என்று பதின்மவயதினரிடம் கூறுவதில் ஏன் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் பதின்மவயதினரிடம் அவர்கள் இத்தகைய படங்களை அனுப்பினால் என்ன தவறு நேரிடும் என்று சொல்லி அவர்களை ஏன் பயமுறுத்தக் கூடாது என்பதற்கான மற்றொரு காரணமாகும். இந்த இரண்டுமே பகிர்பவருக்குப்பதிலாக அனுப்பியவர் மீது குற்றம்சாட்டுமாறு பதின்மவயதினரை ஊக்குவிக்கிறது. அதற்குப் பதிலாக, உங்கள் பதின்மவயதினருக்கு ஒருவர் அந்தரங்கப் படத்தை அனுப்பும்போது, அவர்கள் எப்போதும் சரியான தேர்வுகளைச் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்