அனைவருமே செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி பேசுகிறார்கள்—நீங்கள் கவனித்திருக்கக்கூடும். அறிவியல் புனைகதை திரைப்படங்களுக்கான ஒரு கருத்தாக இருந்த AI, எங்கெங்கும் பரவி வருவதால் அது இப்போது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியாக உள்ளது. ஒரு பெற்றோராக, உங்கள் பதின்மவயதினர் உள்நுழைந்திருக்கும் சமூக ஊடகத் தளங்கள் குறித்து நீங்கள் தற்போது ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொண்டிருக்கக்கூடும், மேலும் இப்போது இந்தப் புதிய தொழில்நுட்பத்தை நீங்கள் நேருக்கு நேர் எதிர்கொள்ளக்கூடும். தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் மேம்பட்டு வருவதாகத் தெரிகிறது, மேலும் குறிப்பாக, ஒரே நேரத்தில் தானும் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டிய சூழலில் உள்ள பெற்றோருக்கு இந்த மேம்பாடுகள் அதிகப்படியானதாக இருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு என்பது புதியது அல்ல. முதல் AI நிரலானது 1956 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது! ஆமாம், சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு! இன்றைய நமது உலகத்தில், AI தொழில்நுட்பம் என்பது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணைய தேடல்கள். எழுத்துப்பிழை சரிபார்ப்புகள். சாட்பாட்கள். குரல் உதவிக் கருவிகள். சமூக ஊடக அல்காரிதம்கள். பரிந்துரைக்கப்படும் வீடியோ பட்டியல்கள். மனித நுண்ணறிவு தேவைப்படும் இடங்களில் பணிகளைச் செய்ய கணினிகளைப் பயன்படுத்துவது என்பது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறாக இருக்கும்போது, இந்த நாட்களில் AI நமது கலாச்சார உரையாடலின் ஒரு பெரும் பகுதியாக உள்ளது ஏன்?
முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக கவனத்தைப் பெறக்கூடிய உருவாக்கும் AI எனப்படும் ஒரு வகை AI அகும். உருவாக்கும் AI என்பது உரை, படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ உள்ளிட்ட - படைப்பை உருவாக்கும் ஒரு வகை AI ஆகும். நீங்கள் எழுத்துப்பிழை சரிபார்ப்பு அல்லது உங்கள் இலக்கணத்தை இருமுறை சரிபார்த்தலைப் பயன்படுத்தியிருந்தால், அநேகமாக நீங்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்தியிருக்கக்கூடும். AIஐப் பயன்படுத்தி, ஒரு நபரின் முகத்தை வேறொரு நபரின் உடலில் பதிப்பது போன்ற காட்சி உட்பொருளை மாற்றியமைக்கக்கூடிய "deepfakes" பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் பள்ளியானது, இளம் வயதினர் தங்களது வீட்டுப்பாடத்தைச் செய்யும்போது அவர்களுக்கு உரை உட்பொருளை உருவாக்கக்கூடிய மாணவர் உபயோகத்துக்கான புதிய சாட்பாட் செயலிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கண்டறிய முயற்சிக்கலாம். உருவாக்கும் AI என்பது இப்போது தொழில்நுட்பம் சார்ந்த சூழலின் ஒரு முக்கியப் பகுதியாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சமயத்தில் அது செயல்படும் விதத்தைப் பெற்றோர்கள் அறிந்திருத்தல் நன்மைகள் மற்றும் சவால்களைப் புரிந்திருத்தல் மற்றும் மீடியா கல்வியறிவுத் திறன்கள் குறித்து பதின்மவயதினருக்கு உதவுதல் அவசியமானதாகும்.
உருவாக்கும் AI எவ்வாறு செயல்புரிகிறது (எளிமையான சொற்களில்)?
உருவாக்கும் AI ஆனது இவ்வுலகில் ஏற்கெனவே இருக்கக்கூடிய பெரியளவிலான தரவுகளை உள்வாங்கிக்கொண்டு வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஸ்கேன் செய்கிறது. இது, அமைப்பானது அங்கீகரிக்கக் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் புதிய உட்பொருள் மற்றும் தரவை உருவாக்குவதற்கான விதிகளைப் பின்னர் உருவாக்குகிறது. அமைப்பானது இந்த வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் கற்றுக்கொள்வதால் மனிதர்கள் அதனைப் பயிற்றுவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, AIக்கு நீங்கள் ஒரு சுற்றுலாத் தலத்தைப் பற்றிய தகவல்களின் தரவுத்தொகுப்பு குறித்து பயிற்சி அளிக்கலாம் என்பதுடன் நீங்கள் அந்த இடத்திற்குச் சென்றால் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கான பதில்களை உருவாக்கலாம். பதில்கள் துல்லியமாக இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் அவை அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. உருவாக்கும் AI இல் இருந்து வரும் வெளியீடுகள், அதனைப் பயிற்றுவிப்பதற்கு என்னென்ன தகவல்கள் மற்றும் தரவுகள் கிடைக்கச் செய்யப்பட்டன என்பதைப் பொறுத்ததாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உருவாக்கும் AI இன் நன்மைகள் யாவை?
புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்கும். அவை நம்மை மிகவும் திறன் மிக்கவர்களாகவும் ஆக்கப்பூர்மானவர்களாகவும் மாற்றும். இங்கே கருத்தில் கொள்வதற்கான மூன்று நன்மைகள் உள்ளன:
உருவாக்கும் AI இன் சவால்கள் யாவை?
இது உருவாக்கும் AIஐப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக்கட்ட நாட்களாகும் என்பதுடன் கல்வி, சுகாதாரம், வணிகம், தகவல்தொடர்பு அல்லது சமூக வாழ்க்கை போன்ற பல்வேறு அம்சங்களில் உருவாக்கும் AI ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். உருவாக்கும் AIஐப் பயன்படுத்துவதன் மூலம் எழக்கூடிய சவால்கள் சில இருப்பதை நாங்கள் அறிவோம். இங்கே கருத்தில் கொள்வதற்கான மூன்று விஷயங்கள் உள்ளன:
அனைத்து அடிப்படைத் தொழில்நுட்பங்களையும் போலவே – ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் முதல் இணைய இயங்குதளங்கள் வரை – AI மாதிரிகளுக்குப் பல பயன்பாடுகள் இருக்கும், அவற்றுள் சில யூகிக்கக்கூடியவை மற்றும் சில யூகிக்கமுடியாதவை. மேலும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் போலவே, உருவாக்கும் AI உடன் இது தொடர்புடையது என்பதால் பாதுகாப்பு, தனியுரிமை, நம்பகத்தன்மை, பதிப்புரிமை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றின் பிரச்சினைகளை நாம் தொடர்ந்து கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
AIஐப் பயன்படுத்துவதில் உங்களுக்கு உதவ மீடியா கல்வியறிவுத் திறன்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்
செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கு மீடியா கல்வியறிவுத் திறன் தேவைப்படும். மீடியா கல்வியறிவு என்பது அனைத்து வகையான தகவல்தொடர்புகளையும் பயன்படுத்தி அணுகுதல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பிடுதல், உருவாக்குதல் மற்றும் செயல்படுவதற்கான திறன் ஆகும். மீடியா கல்வியறிவானது பயனர்களை விமர்சன ரீதியான சிந்தனையாளர்களாகவும் உருவாக்குபவர்களாகவும், பயனுள்ள தகவல்தொடர்பாளர்களாகவும், மேலும் சுறுசுறுப்பான குடிமக்களாகவும் இருக்க உதவுகிறது. மீடியா கல்வியறிவின் முக்கிய அம்சம் என்பது கேள்விகளைக் கேட்கக் கற்றுக்கொள்வது மற்றும் நீங்கள் உள்வாங்கும் மற்றும் உருவாக்கும் தகவல்களைப் பற்றி ஆழமாக சிந்திப்பதாகும். இது உருவாக்கும் AI உருவாக்கும் தகவல்கள் உட்பட அனைத்துத் தகவல்களுக்கும் முக்கியமானதாகும்.
“படங்கள், வீடியோ மற்றும் ஆடியோவை A.I மூலமாக மாற்றியமைக்க முடியும் என்றால், ஒரு விஷயமானது உண்மையானதாக உள்ளதா என்பதை நான் எவ்வாறு அறிவேன்?” என்ற கேள்வியைப் பல பயனர்கள் கேட்கிறார்கள். மீடியா கல்வியறிவானது "நிஜம் அல்லது போலி," "நிஜம் அல்லது புனைகதை" அல்லது "உண்மை மற்றும் பொய்" என்பதற்கு அப்பால், நாம் பார்ப்பதையும் கேட்பதையும் இன்னும் நுணுக்கமான புரிதலுக்காக முயற்சி செய்வதற்கு நம்மைத் தூண்டுகிறது.
உங்கள் சமூக ஊடக ஃபீடு மூலம் நீங்கள் ஸ்க்ரோல் செய்தாலும் அல்லது இணையத்தில் வீடியோக்களைப் பார்த்தாலும், ஆழமான பகுப்பாய்விற்கு வழிவகுக்கக்கூடிய நீங்கள் கேட்பதற்கான கேள்விகள் உள்ளன. எடுத்துக்காட்டாக:
நினைவில் கொள்ளுங்கள்: படைப்பு AI மூலம் உருவாக்கப்பட்டதோ இல்லையோ, நாம் உள்வாங்கும் மற்றும் உருவாக்கும் படைப்பைப் பற்றிய கேள்விகளைக் கேட்பது வழக்கமான நடைமுறையாக இருக்க வேண்டும். அனைத்துத் தகவல்களும் பகுப்பாய்வு மற்றும் மதிப்பிடுதலுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
உருவாக்கும் AI பற்றி எனது பதின்மவயதுப் பிள்ளையிடம் நான் எவ்வாறு பேசுவது?
உங்கள் பதின்மவயதுப் பிள்ளை AI பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும், ஆனால் படைப்பு எங்கிருந்து வருகிறது, யார் உருவாக்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் பதின்மவயதுப் பிள்ளையிடம் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதும், அவர்களின் அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதும் ஆகும். எடுத்துக்காட்டாக:
நான் உருவாக்கும் AI பற்றி படித்து வருகிறேன். இது பற்றி என்னை விட உனக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். நான் அதைப் பற்றி உனது கருத்துகளைக் கேட்க விரும்புகிறேன், ஏனென்றால் அது என்ன என்பதை நான் இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். இது எவ்வாறு செயல்புரிகிறது என்பதை எனக்குக் காண்பிக்க முடியுமா?
குறிப்பாக, AI அவர்களின் கல்வியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிவது முக்கியமாகும். நீங்கள் கேட்கக்கூடிய சில கேள்விகள்:
உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு தங்களின் பள்ளியில் உருவாக்கும் AI பற்றிய விதிகள் தெரியாவிட்டால், அவர்களின் ஆசிரியர்களையோ தலைமை பொறுப்பாளரையோ நீங்கள் அணுக முடியுமா என்று அவர்களிடம் கேளுங்கள். சில பள்ளிகள் ஆக்கப்பூர்வமான வழிகளில் AIஐப் பயன்படுத்துகின்றன. கல்விசார் ஒருங்கிணைப்புக் கவலைகள் காரணமாக மற்றவர்கள் அதைப் பற்றி கடுமையான விதிகளைக் கொண்டுள்ளனர்.
அதனுடன் கூடவே புதிய தொழில்நுட்பம் வரும்போது, அதன் பயன்பாடு மற்றும் தாக்கம் குறித்து உங்கள் பதின்மவயதுப் பிள்ளையுடன் ஈடுபாடு கொள்ளுங்கள். கேள்விகளைக் கேளுங்கள். செவிமடுங்கள். அவர்களிடம் இருந்தும், அவர்களுடன் சேர்ந்தும் கற்றுக்கொள்ளுங்கள். இந்த உதவி விவரத்தை ஒன்றாக மதிப்பாய்வு செய்யுங்கள்! புதிய தொழில்நுட்பங்களுடன் ஒத்துப்போகும்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் நேரத்தைச் செலவிடுவது, பொறுமையாக இருப்பது மற்றும் ஆர்வத்துடன் இருப்பது.