Instagram இல் பாதுகாப்பான, வயதுக்குத் தகுந்த அனுபவங்களை உருவாக்குதல்
பெற்றோர்களும் பதின்மவயது பிள்ளைகளும் பாதுகாப்பாகவும் தகவலறிந்தவர்களாகவும் உணர உதவும் எங்களது கருவிகளும் உதவி வளங்களும் இங்கே உள்ளன. நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் Instagramஐ அனுபவிப்பதற்கான எங்கள் வழிகாட்டிகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறியுங்கள்.
பெற்றோரின் வழிகாட்டுதலின்படி பதின்மவயதினருக்கான புதிய பாதுகாக்கப்பட்ட அனுபவம்
விரைவில், Instagram இல் உள்ள பதின்மவயது பிள்ளைகள் தானாகவே பதின்மவயது கணக்குகளில் சேர்க்கப்படுவார்கள், அந்தக் கணக்குகள் அவர்களை யார் தொடர்பு கொள்ளலாம், அவர்கள் பார்க்கும் பகிர்வுக்கான உள்ளமைந்த வரம்புகளையும், அவர்களின் ஆர்வங்களை இணைத்து அவற்றை ஆராய்வதற்கான கூடுதல் வழிகளையும் கொண்டிருக்கும். 16 வயதுக்குட்பட்ட பதின்மவயதினர் இந்த அமைப்புகளை மாற்ற பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.
அம்சங்கள் மற்றும் கருவிகள்
Instagram அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளுதல்
பதின்மவயது பிள்ளைகள் Instagram இல் பாதுகாப்பாகவும், வயதுக்குத் தகுந்த வழிகளிலும் உருவாக்க, ஆராய மற்றும் தொடர்புகொள்ள உதவும் அம்சங்கள் மற்றும் கருவிகளைப் பற்றி மேலும் அறிக.
தகுந்த பகிர்வு
அனைவரின் பாதுகாப்பையும் மேம்படுத்த நாங்கள் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் பகிர்வைச் சரிபார்த்து அகற்றும் பணியில் எங்கள் குழு ஈடுபட்டுள்ளது. நாங்கள் பின்வருவன போன்ற கருவிகளையும் உருவாக்கியுள்ளோம்:
தகாததாகவோ மனதைத் தாக்கக்கூடியதாகவோ கருதப்படும் கருத்துகள் மற்றும் மெசேஜ் கோரிக்கைகளைக் கொடியிடும் மறைக்கப்பட்ட சொற்களை அமைக்கும் திறன்.
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையைப் பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
அவர்களின் பதின்மவயது பிள்ளை குறிப்பிட்ட பகிர்வைப் புகாரளித்து, அந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தேர்வுசெய்தால், அது குறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்
நாங்கள் கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதலைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். கருத்து எச்சரிக்கைகள் என்பன எதிர்மறையான அல்லது மனதைத் தாக்கக்கூடிய கருத்துகளைப் பதிவிட முயற்சிக்கும்போது, எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மக்களுக்கு நினைவூட்டுவதற்காகக் காட்டப்படும், மேலும் அவர்கள் இத்தகைய கருத்துகளைப் பதிவிடுவதைத் தொடர்ந்தால் அவர்களின் கருத்து அகற்றப்படலாம் அல்லது மறைக்கப்படலாம் என்பதும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
எங்கள் கட்டுப்படுத்தும் கருவியானது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நபரைத் தவிர வேறு யாரும் கருத்துகளைப் பார்ப்பதைத் தடுக்கிறது
தடுக்கும் கருவி மூலம், பதின்மவயதினர் ஒரு கணக்கைத் தடுக்கலாம், மேலும் தடுக்கப்பட்ட நபர் எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய எந்தக் கணக்குகளையும் தடுக்கலாம்.
கட்டுப்படுத்தல் கருவியானது புதிய பின்தொடர்பவர்களிடமிருந்தோ அவர்களைப் பின்தொடராதவர்களிடமிருந்தோ வரும் கருத்துகளையும் மெசேஜ் கோரிக்கைகளையும் அதுவாகவே மறைக்க உங்கள் பதின்மவயது பிள்ளையை அனுமதிக்கும்.
Instagram இல் எவ்வளவு நேரம் செலவிடலாம் என்பதற்கு வரம்புகளை அமைத்துக்கொள்ளுமாறு பதின்மவயது பிள்ளைகளை ஊக்குவிக்கிறோம். உங்களுக்கும் உங்கள் பதின்மவயது பிள்ளைகளுக்கும் பின்வரும் அம்சங்களுக்கான அணுகல் இருக்கும்:
உறக்க நிலை பயன்முறை , இதன் மூலம் இரவு நேரங்களில் அறிவிப்புகள் அனைத்தையும் அமைதியாக்கலாம், மேலும் தங்களின் செயல்பாட்டு ஸ்டேட்டஸை மாற்றலாம்
தினசரி வரம்புகள் மற்றும் நினைவூட்டல்கள், இதன் மூலம் பதின்மவயது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்களுக்குப் பிறகு செயலியை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு செய்யப்படும், மேலும் 16 வயதுக்குட்பட்ட பதின்மவயது பிள்ளைகள் இந்த அறிவிப்பை மாற்றுவதற்கு அவர்களின் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையைப் பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
தங்கள் பதின்மவயது பிள்ளையின் பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்களைக் காணலாம்
தினசரி பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைக்கலாம்
Instagram இல் அதிக நேரம் செலவிட நீட்டிப்புக் கோரிக்கைகளை விடுக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்
Instagramஐப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை என்பது நாங்கள் சிறப்பான முன்னுரிமை தரும் விஷயமாகும்.. பதின்மவயது பிள்ளைகள் Instagram இல் சேரும்போது, அவர்களின் கணக்கு பாதுகாக்கப்பட்டதாகவும் வயதுக்கு தகுந்த அமைப்புகளாகவும் அமைக்கப்படும். எங்கள் பதின்மவயது பிள்ளைகளுக்கான அதுவாகவே இயங்கும் இயல்புநிலை அம்சங்கள்:
18 வயதுக்குட்பட்ட பதின்மவயது பிள்ளைகளுக்கான தனிப்பட்ட கணக்கு. 16 வயதுக்குட்பட்ட பதின்மவயது பிள்ளைகள் இந்த அமைப்புகளை மாற்ற அவர்களின் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.
மெசேஜ் கட்டுப்பாடுகள் , இது தங்களுக்கு யார் நேரடி மெசேஜ்களை அனுப்பலாம் என்பதையும், யாரைக் குழு உரையாடல்களில் சேர்க்கலாம் என்பதையும் பதின்மவயது பிள்ளைகள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது, இது அவர்கள் பின்தொடர்பவர்களிடமிருந்து மட்டுமே மெசேஜ்களைப் பெறும் விருப்பத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
நேரடி மெசேஜ் கட்டுப்பாடுகள் என்றால் அவர்கள் பின்தொடரும் நபர்கள் அல்லது அவர்கள் இணைப்பில் ஏற்கெனவே உள்ள நபர்கள் மட்டுமே அவர்களுக்கு மெசேஜ் அனுப்பவோ அவர்களின் குழு உரையாடல்களில் சேரவோ முடியும்.
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையைப் பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
பதின்மவயது பிள்ளையின் கணக்குத் தனியுரிமை, உங்கள் பதின்மவயது பிள்ளை யாருக்கு மெசேஜ் அனுப்ப முடியும், அவர்கள் யாரைக் குழு உரையாடல்களில் சேர்க்க முடியும் என்பன போன்ற கணக்குத் தனியுரிமை அமைப்புகளைப் பாருங்கள்.
Instagram இல் செலவிடும் நேரத்தைப் பற்றி பதின்மவயது பிள்ளைகள் நேர்மறையாக உணர அவர்களுக்கு நாங்கள் உதவுவது முக்கியம். பின்வருவன போன்ற கருவிகள் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்:
மாற்றுத் தலைப்பு நட்ஜ் , இதில் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் தங்கள் கவனத்தை மற்ற தலைப்புகளுக்கு மாற்றும்படி தூண்டும் வகையில், நாங்கள் அறிவிப்புகளை அனுப்புகிறோம்.
முடக்குதல் , இதன் மூலம் பதிவுகள் மற்றும் ஸ்டோரிகளைப் பெற விரும்பாத கணக்குகளை அமைதியாக்க அவர்களை அனுமதிக்கிறோம்
மறைத்தல் இதன் மூலம் அவர்களின் பதிவுகளுக்குத் தெரிவிக்கப்படும் விருப்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் நகரும்போது அவர்கள் பார்க்கும் பதிவுகளை மறைக்க அனுமதிக்கிறோம்
உணவுப் பழக்கச் சீர்குலைவுகள் அல்லது சுய காயத்துடன் தொடர்புடைய பகிர்வை யாராவது தேடினால், நாங்கள் உதவிகரமாக இருக்கக்கூடிய நிபுணர் ஆதரவுடன் கூடிய உதவி விவரங்களைப் பகிர்வோம்.
இளையோர் நலன் நிபுணரான டாக்டர். ஹினா தாலிப் மற்றும் Metaவைச் சேர்ந்த நிக்கோல் லோபஸ் இடையிலான ஓர் அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்
Metaவின் இளையோர் பாதுகாப்புக் கொள்கையின் இயக்குநரான நிக்கோல் லோபஸ், பதின்பருவத்தினருக்கான மருத்துவ நிபுணர் மற்றும் குழந்தை நல மருத்துவரான டாக்டர் ஹினா தாலிப் உடன் பேசுகிறார்
பாலியல் ரீதியான மிரட்டல் மற்றும் அந்தரங்கப் படத்தைத் தவறாகப் பயன்படுத்துதலிருந்து பாதுகாக்க உதவும் புதிய கருவிகள்
பாலியல் ரீதியான மிரட்டல் மற்றும் அந்தரங்கப் படத்தைத் தவறாகப் பயன்படுத்துதலிருந்து இளம் நபர்களைப் பாதுகாக்க உதவ புதிய அம்சங்களை நாங்கள் சோதனை செய்து வருகிறோம்