உண்மைத்தன்மையுடன் இருத்தல்
அவதார்களைப் பற்றிய அருமையான விஷயங்களில் ஒன்று, எந்த இடத்திலும் மற்றவர்கள் நம்மை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவுகின்றன. ஒவ்வொருவரும் முக அம்சங்கள் மற்றும் முடி, மேக்-அப் மற்றும் ஆடைகளைக் கொண்டு பரிசோதனை செய்து பார்க்கலாம். நிஜ உலகில் இருப்பதை விட, அவதாரின் மூலம் உங்களின் சில பகுதிகள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்க இவை உதவும்.
அவதார்கள் என்பன வித்தியாசமான தோற்றங்களை முயற்சி செய்வதற்கும் அவற்றைப் பற்றி நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதைப் பார்ப்பதற்குமான வேடிக்கையான மற்றும் எளிதான வழியாக உள்ளன. சில நேரங்களில் நமது உடல் தோற்றம் நமது "உண்மையான சுயத்தை" நன்கு வெளிப்படுத்துவது போன்ற உணர்வைத் தரும். ஆனால், நம்மைப் பற்றிய அம்சங்கள் நிஜ உலகில் பிரகாசிக்காத சில சமயங்களும் உள்ளன. உங்கள் அவதார் உங்கள் உள்ளுணர்வைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கலாம்!
நீங்கள் உங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதையும், மற்றவர்கள் உங்களை எவ்வாறு பார்க்க விரும்புகிறீர்கள் என்பதையும் உண்மையாக்கும் வகையில் உங்கள் அவதாரை வடிவமைக்கலாம். இது இடங்கள் அனைத்திலும் இடத்திற்கு ஏற்ப வேறுபட்டதாக இருக்கலாம்! இது காலப்போக்கில் மாறுபடவும் செய்யலாம். சில நாட்களில் நாம் வித்தியாசமாக உணர்கிறோம், நாம் அனைவரும் மாறுகிறோம், வளர்கிறோம். உங்களுக்கு எது உண்மைத்தன்மை உடையதாகத் தோன்றுகிறதோ அதைக் கண்டறிய வெவ்வேறு விருப்பத்தேர்வுகளை முயற்சி செய்யுங்கள் - இது நீங்கள் நிஜ வாழ்க்கையில் செய்வது போல் இருக்கலாம் அல்லது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்! இங்கு விதிகள் என்று எதுவும் இல்லை.
நீங்கள் நிஜம் போல் தோன்றுதல் அல்லது விளையாட்டுத்தனம் மூலம் பரிசோதனை செய்து பார்க்க விரும்பலாம். எடுத்துக்காட்டாக, கேசத்தின் நிறங்கள் சில, மற்ற நிறங்களை விடவும் குறைந்தளவு நிஜம் போல் தோன்றுவதாக இருக்கும். இவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நிஜம் போல் தோன்றுவதை விட விளையாட்டுத்தனமான படத்தை வரையலாம். இல்லையெனில், ரோபோ அல்லது உங்களுக்குப் பிடித்த திரைப்படக் கதாபாத்திரம் போன்ற அற்புதமான அவதாராக நீங்கள் மாறலாம்! மீண்டும் கூறுகையில், உங்கள் அவதாரைப் பயன்படுத்தும் இடங்களின் சூழலை எப்போதும் கவனியுங்கள்.