Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்

உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் கூட்டாண்மை: வயது பிரதிநிதித்துவம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு பற்றிப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

டாக்டர் ஆன்-லூயிஸ் லாக்ஹார்ட்

ஏப்ரல் 21, 2025

  • Facebook ஐகான்
  • Social media platform X icon
  • கிளிப்போர்டு ஐகான்
புன்னகைத்தவாறு ஒன்றாக ஃபோனைப் பார்க்கையில், மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் காணப்படும் இரண்டு பேர்.
ஒரு குழந்தை நல உளவியலாளராக, பெற்றோர் பயிற்சியாளராக, அத்துடன் இரண்டு குழந்தைகளின் தாய் என்ற முறையில், நமது பதின்மவயதினர் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது எவ்வளவு சிக்கலானதாக இருக்கும் என்பதை நான் எனது அனுபவத்திலிருந்து அறிவேன். அவர்கள் வயதுக்குத் தகுந்த அனுபவங்கள், ஆய்ந்தறிவதற்கான சுதந்திரம் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு — அனைத்தையும் ஒரே நேரத்தில் அவர்கள் பெறவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இது ஒரு நுட்பமான சமநிலையாகும், அதிலும் நல்ல விஷயம் என்னவெனில், நாம் இதைச் சுயமாகச் செய்ய வேண்டியதில்லை. பதின்மவயதினருக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களை உருவாக்க Meta தொடர்ந்து அதன் கருவிகளை மாற்றியமைத்து வருகிறது, மேலும் அந்தச் செயல்முறையில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த அண்மைத் தகவல்கள் பற்றியும், வயது சரிபார்ப்பு ஏன் முக்கியமானது என்பது பற்றியும் உங்கள் பதின்மதினரிடம் எவ்வாறு பேசலாம் என்பது பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ இங்கே — இது ஒரு சொற்பொழிவைக் கேட்பது போன்ற உணர்வைத் தராது.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் vs. ரகசியம் காத்தல்

நான் புரிந்துகொண்டேன். நான் பதின்மவயது பிள்ளையாக இருந்தபோது, ​​நான் தவறான புரிதல் அல்லது தண்டனைக்குப் பயந்து என் அம்மாவிடம் இருந்து விஷயங்களை மறைத்து வைத்தேன். அதே உறவுநிலையை என்னுடைய பதின்மவயதினரிடம் நான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகையால்தான், சமூக ஊடகங்கள், தனியுரிமை மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு போன்ற சிக்கலான தலைப்புகளில் கூட — அவர்கள் என்னிடம் பேச வருவதற்கு வசதியாக இருக்கும் சூழலை உருவாக்க நான் தீவிரமாகப் பிரயத்தனம் செய்கிறேன்.
எடுத்துக்காட்டாக, எனது பதின்மவயது பிள்ளை ஒரு புதிய செயலியில் பதிவுசெய்ய விரும்பியபோது, ​​நாங்கள் ஒன்றாக அமர்ந்து அமைப்புகளில் உள்ளவற்றை ஆராய்ந்தோம். தனியுரிமைக் கட்டுப்பாடுகளைச் சரிசெய்வதிலும், செயலியை எவ்வாறு பயன்படுத்தலாம் என அவர் திட்டமிட்டுள்ளார் என்பதை விளக்குவதிலும் முன்னிலை வகிக்க நான் அவரை அனுமதித்தேன். அவரது எண்ணங்களை அறியாமல் விதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, “மிகப்பெரிய ஆபத்துகளாக நீ நினைக்கும் விஷயங்கள் எவை?” என்று நான் கேட்டேன் நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்பதை நாங்கள் எப்படி உறுதிசெய்வது?” இத்தகைய உரையாடல்கள் “என் வாழ்க்கையை அம்மா கட்டுப்படுத்துகிறார்” என்ற நிலையில் இருந்து “இதில் நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்” என்ற நிலைக்கு மாற்றியது.

ஏன் வயது முக்கியம்

பதின்மவயது பிள்ளைப் பருவம் என்பது வளர்ச்சியும் மாற்றமும் நிறைந்த ஒரு பருவமாகும். முதல் நாள், அவர்கள் அனிமேஷன் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களே மறுநாள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆன்லைனில் விவாதிக்கிறார்கள். டிஜிட்டல் தளங்கள் அந்த வளர்ந்து வரும் பக்குவமடைதலைப் பிரதிபலிக்க வேண்டும் — அவர்களின் வயது மற்றும் வளர்ச்சியின் நிலைக்குப் பொருந்தக்கூடிய பகிர்வு, அம்சங்கள் மற்றும் செயலை மேற்கொள்வதற்கான அணுகலை வழங்க வேண்டும்.
Metaவில் வயது குறித்த உண்மைத்தன்மைக்கான நடவடிக்கைகள் இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன:
  • இளையோர்களாக இருக்கும் பயனர்களை அவர்களின் வயதினருக்காக அல்லாத பகிர்விலிருந்து பாதுகாத்தல்.
  • சரியான தனியுரிமை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மூலம் பதின்மவயதினர், தங்கள் வயதுக்கேற்றபடியாக்கப்பட்ட அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்தல்.
  • தங்கள் பதின்மவயது பிள்ளையின் டிஜிட்டல் தொடர்புகள் குறித்து அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் தொடர்ந்து அறிந்திருக்க பெற்றோர்களுக்கு உதவுதல்.
எனினும் இதிலுள்ள சவாலான விஷயம் என்னவென்றால்: பதின்மவயதினர் தங்கள் வயதைக் கேட்பதில் உள்ள பெரிய விஷயத்தை உணராமல் இருக்கலாம். தங்கள் பெற்றோர் தங்களை நம்பவில்லை எனக் கருதி, இதை இன்னொரு தடைக்கல்லாகவோ, இல்லையெனில் அதைவிட ஒரு மோசமான விஷயமாகவோ அவர்கள் உணரலாம். அதனால்தான் நாம் உரையாடலை எவ்வாறு அமைக்கிறோம் என்பது முக்கியமானது.

உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் அவர்களின் உண்மையான வயதைத் தெரிவிப்பது பற்றிப் பேசும் விதம்

நாம் எல்லோரும் இதனைக் கடந்து வந்திருப்போம் — நமது பதின்மவயது பிள்ளையிடம் முக்கியமான விஷயம் ஒன்றைப் பற்றிப் பேச முயற்சிக்கும்போது, ​​கண்களைச் சுழற்றுவது, பெருமூச்சு விடுவது அல்லது “எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும், அம்மா/அப்பா” என்று சிணுங்குவது போன்றவற்றை மட்டுமே நாம் பெற்றிருப்போம். இந்த உரையாடல்களைச் சுமூகமானவையாக மாற்ற, பெற்றோருக்கான பயனளிக்கும் சில உத்திகள் இதோ:

1. கனிவுடன் வழிநடத்துங்கள், அதிகாரத் தோரணையில் அல்ல

"இது பாதுகாப்பானது என்பதால் இதைத் தான் நீ செய்தாக வேண்டும்" என்று தொடங்குவதற்குப் பதிலாக, இவ்வாறு முயற்சி செய்யுங்கள்:
"நீ எவ்வாறு தொடர்ந்து இணைந்திருக்கிறாய் என்பதில் சமூக ஊடகங்கள் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன என்பது எனக்குத் தெரியும். உனக்குக் கிடைக்க வேண்டிய சிறந்த அனுபவம் கிடைப்பதை நான் உறுதிசெய்ய விரும்புகிறேன், அவ்வளவுதான் — அது உண்மையில் உன் வயதில் உள்ளவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று."
இது விதிகள் மற்றும் கட்டுப்பாட்டிலிருந்து உதவி மற்றும் கூட்டாண்மைக்குக் கவனத்தை மாற்றுகிறது.

2. இதை அவர்களின் அனுபவமாக இருக்கும் வகையில் செய்யுங்கள்

பதின்மவயதினர் நேர்மை மற்றும் சுய அதிகாரத்தைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள். நீங்கள் இவ்வாறு விளக்கலாம்:
"உனது உண்மையான வயதை தளங்கள் அறியும்போது, உனக்கான பகிர்வைத் தான் நீ பார்க்கிறாய் என்பதை அவர்களால் உறுதிசெய்ய முடியும். அதாவது விசித்திரமான விளம்பரங்கள் குறைப்பு, உன்னைப் பின்தொடர முயற்சிக்கும் யாரோ சில அந்நியர்கள் குறைப்பு மற்றும் யார் உனக்கு மெசேஜ் அனுப்ப முடியும் என்பதில் அதிகக் கட்டுப்பாடு."
இது அவர்களைப் பாதுகாப்பதற்கானது என்பது மட்டுமல்லாமல், வயது சரிபார்ப்பு அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

3. அவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள்

பதின்மவயதினர் புத்திசாலிகள். "எப்படியிருந்தாலும் மக்கள் தங்கள் வயதைப் பற்றிப் பொய் சொல்லத்தான் செய்வார்கள்" என்று காரணம் சொல்லி அவர்கள் மறுத்தால், பெரிய கருத்தை வலியுறுத்துவதற்கு முன்பு அவர்களின் கருத்தை ஒப்புக் கொள்ளுங்கள்:
"நீங்கள் சொல்வது சரிதான் — சிலர் அவ்வாறு செய்யக்கூடும். ஆனால் Meta போன்ற நிறுவனங்கள், தளங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தங்கள் வயதைத் தவறாகக் குறிப்பிடுபவர்களைக் கண்டறிய தங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன. இது ஒரு நபருக்காக மட்டுமல்ல, சமூக ஊடகங்களை அனைவருக்கும் சிறந்ததாக ஆக்குவது பற்றியதாகும்."
செவிமடுக்கப்படுவதாகப் பதின்மவயதினர் உணரும்போது, ​​அவர்கள் அமைதியாக இருப்பதற்குப் பதிலாக ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.

ஒரு பெற்றோராக உங்கள் பதவிநிலையை — அழுத்தம் ஏதுமின்றி மேற்கொள்ளுங்கள்

உங்கள் பதின்மவயது பிள்ளை செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் நீங்கள் கண்காணிக்க வேண்டியதில்லை. ஆனால், ஹோவர் செய்யாமல் — தங்கள் டிஜிட்டல் உலகில் தொடர்ந்து ஈடுபடுவது — நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும். ஈடுபாட்டுடன் இருக்க குறைந்தளவு முயற்சி தேவைப்படும் சில வழிகள் இதோ:
  • உங்கள் பதின்மவயது பிள்ளையின் ஆன்லைன் செயல்பாட்டை வழிநடத்தவும் ஆதரிக்கவும் உதவக்கூடிய கருவிகளை ஆய்ந்தறிய குடும்ப மையத்தைப் பயன்படுத்துங்கள்.
  • ஒரு பெரிய "தொழில்நுட்பப் பேச்சு" மட்டுமல்ல, வழக்கமான செக்-இன்களுடன் — உரையாடல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
  • சமூக ஊடகங்களை நீங்கள் எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் காண்பிப்பதன் மூலம் நேர்மறையான டிஜிட்டல் பழக்கங்களை முன்மாதிரியாக்குங்கள்.
  • அவர்களின் உண்மையான வயதைப் பிரதிபலிக்கும் வகையில் கணக்குகளில் பதிவுசெய்யுமாறு அல்லது தங்களது கணக்குகளை மாற்றியமைக்குமாறு உங்கள் பதின்மவயது பிள்ளையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
Meta பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது, அதாவது பெற்றோர்களாகிய நாம் இதைத் தனியாகக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. வெளிப்படையான உரையாடல்களை மேற்கொள்வதன் மூலமும், நமக்குக் கிடைக்கும் கருவிகளைத் தழுவுவதன் மூலமும், நமது பதின்மவயதினர் பாதுகாப்பான, வயதுக்குத் தகுந்த ஆன்லைன் அனுபவத்தைப் பெற்று மகிழ்வதை உறுதிசெய்யலாம் — அதனை ஒரு சுமையாக இருப்பது போன்ற உணர்வு இல்லாமல்.
சுயகுறிப்பு: டாக்டர். ஆன்-லூயிஸ் லாக்ஹார்ட் அவர்கள் வாரியம்-சான்றளித்த 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள குழந்தை நல உளவியலாளர், பெற்றோர்களுக்கான பயிற்சியாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார். டாக்டர். லாக்ஹார்ட் அவர்கள் வளர் இளம் பருவத்தினர் மற்றும் பதின்மவயதினரைச் சமாளிக்க முடியாத பெற்றோருக்கு மோதல் போக்கிலிருந்து புரிதலுடன் இணைந்திருப்பதற்குப் பொறுப்பேற்றுள்ளார். நடைமுறை உத்திகள், கனிவுடன் வழிகாட்டுதல் மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம், தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் — பதின்மவயதினருடன் வலுவான உறவுகளை உருவாக்க பெற்றோருக்கு உதவுகிறார். டாக்டர். லாக்ஹார்ட்டைப் பற்றி www.anewdaysa.com தளத்தில் மேலும் அறியுங்கள்.
உங்கள் பதின்மவயது பிள்ளை Meta செயலிகளில் ஒரு சில படிநிலைகளிலேயே தங்களது பிறந்த தேதியைச் சரிபார்க்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம். அவர்களின் வயது துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய கீழே உள்ள வழிகாட்டிகளைப் பின்பற்றுங்கள்.

Instagram

  1. தட்டுங்கள் சுயவிவரத்தை அல்லது உங்களது சுயவிவரத்திற்குச் செல்ல கீழ் வலதுபுறம் உள்ள உங்கள் சுயவிவரப்படத்தைத் தட்டுங்கள்.
  2. தட்டுங்கள் மெனு என்பதை மேல் வலதுபுறத்தில் தட்டுங்கள்.
  3. கணக்குகள் மையம் என்பதைத் தட்டி, பின்னர் தனிப்பட்ட விவரங்கள் என்பதைத் தட்டுங்கள்.
  4. உங்கள் பிறந்தநாள் குறித்த தகவல்களை மாற்ற, பிறந்தநாள் அல்லது பிறந்த தேதி என்பதைத் தட்டி, பின்னர் திருத்துக என்பதைத் தட்டுங்கள்.

Facebook மற்றும் Messenger

  1. Facebook இன் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்களின் சுயவிவரப் படத்தைத் தட்டுங்கள்.
  2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் என்பதைத் தட்டுங்கள்
  3. கணக்குகள் மையம் என்பதைத் தட்டி, பின்னர் தனிப்பட்ட விவரங்கள் என்பதைத் தட்டுங்கள்.
  4. பிறந்தநாள் என்பதைத் தட்டுங்கள்.
  5. திருத்துக என்பதைக் தட்டி, பின்னர் உங்கள் பிறந்தநாளை மாற்றுங்கள்.
  6. மாற்றத்தை உறுதிப்படுத்த சேமித்திடுக என்பதைத் தட்டுங்கள்.

Meta Horizon செயலி

  1. உங்கள் மொபைலில், Meta Horizon செயலியைத் திறந்திடுங்கள்.
  2. தட்டுங்கள் மெனு என்பதைத் தட்டுங்கள்.
  3. கணக்குகள் மையம் என்பதைத் தட்டி, பின்னர் தனிப்பட்ட விவரங்கள் என்பதைத் தட்டுங்கள்.
  4. பிறந்தநாள் என்பதைத் தட்டி, பின்னர் உங்கள் பிறந்தநாளுக்கு அடுத்துள்ள திருத்துக என்பதைத் தட்டுங்கள்.
  5. உங்கள் பிறந்தநாளைத் திருத்தி, பின்னர் சேமித்திடுக என்பதைத் தட்டுங்கள்.
  6. உறுதிப்படுத்துக என்பதைத் தட்டுங்கள்

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Facebook லோகோ
Facebook இல் உங்கள் வயதை உறுதிசெய்தல்
Instagram லோகோ
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பகிர்வைக் கட்டுப்படுத்துதல்
Meta லோகோ
பாதுகாப்புக் கருவிகள் மற்றும் கொள்கைகள்
Meta லோகோ
பதின்மவயதினருக்கான பெற்றோர் மேற்பார்வை

தொடர்புடைய உதவி வளங்கள்

ஆரோக்கியமான ஆன்லைன் கலந்துரையாடல்கள் பற்றிப் பதின்மவயதினரருடன் பேசுதல்
மேலும் படித்திடுக
உங்கள் பிள்ளைகளுடன் அவர்களின் டிஜிட்டல் ஆளுமையைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்குதல்
மேலும் படித்திடுக
ஆன்லைனில் வயதுக்குத் தகுந்த பகிர்வு: பெற்றோருக்கு இது தெரிவிப்பது என்ன
மேலும் படித்திடுக

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2025 Meta
இந்தியா