திரை நேரத்தை நிர்வகிக்க பதின்மவயதினருக்கு உதவுவதற்கான உதவிக்குறிப்புகள்
உங்கள் பதின்மவயதினருக்கு இணையப் பயன்பாட்டைப் பற்றிப் பேசுவதற்கு ஒரே சிறந்த வழி என்று எதுவும் இல்லை என்றாலும், உரையாடலைத் தொடங்குவதற்கான வழிகள் உள்ளன. உங்கள் பதின்மவயதினரைத் திரை நேரம் எதிர்மறையாகப் பாதிப்பதை நீங்கள் கவனித்தால், சரியான நேரத்தில் அது பற்றிப் பேசத் தொடங்குங்கள்.
அவர்கள் ஏற்கெனவே ஆன்லைனில் செலவழித்த நேரத்தைப் பற்றியும் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றியும் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்வது ஒரு நல்ல சிறந்த நடைமுறையாக இருக்கும். இந்த எண்ணத்தை அவர்கள் பெறுவதற்கு, நீங்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்:- ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா?
- நீங்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் உங்கள் மற்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தடுக்கிறதா?
- நீங்கள் செலவிடும் திரை நேரம் உங்களுக்கு (உடல் ரீதியாகவோ உணர்ச்சி ரீதியாகவோ) எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?
முதல் இரண்டு கேள்விகளுக்கு "ஆம்" என்ற பதில் வந்தால், உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் செலவழிக்கும் நேரத்தைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றிய குறிப்பை அது தரும். அங்கிருந்து, அந்த நேரத்தை நிர்வகிப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து, அதனை அர்த்தமுள்ள ஆஃப்லைன் செயல்பாடுகள் மூலம் சமநிலைப்படுத்த அவர்களுக்கு உதவலாம்.அதனைத் தொடர்ந்து பின்வரும் கேள்விகளை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்:- காலையில் உங்கள் ஃபோனைப் பார்க்காமல் உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடிகிறது?
- அது இல்லாமல் உங்களுக்குக் கவனச்சிதறல் அல்லது கவலை ஏற்படுவதாக உணர்கிறீர்களா?
- உங்கள் நண்பர்களுடன் ஹேங் அவுட் செய்யும்போது, உங்கள் ஃபோனை அதிகம் பயன்படுத்துகிறீர்களா?
- எந்த வகையான ஆஃப்லைன் செயல்பாடுகளை நீங்கள் செய்யத் தவறுகிறீர்கள்?
- உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்திற்கு அதிக நேரம் இருந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா?