மெட்டா
மேற்பார்வ
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள

சூழலை அமைத்தல்: 13+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளை முன்மாதிரியாகக் கொண்டுள்ள Instagram இன் மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்க அமைப்புகள் பற்றி உங்கள் பதின்மவயதினரிடம் பேசுதல்

எழுதியவர்: ரேச்சல் எஃப் ரோட்ஜர்ஸ், பிஎச்டி

புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 12, 2026

அக்டோபர் 14, 2025

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
உள்ளடக்க அமைப்புகளின் ui திரை 13+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளைக் காட்டுகிறது.
ஒரு உளவியலாளராகவும் கல்வியாளராகவும், பதின்மவயதினர் சமூக ஊடகங்களை நேர்மறையான வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் வழிகாட்டும் விதத்தைப் பற்றி ஆய்வு செய்கிறேன், உங்களில் பலர் எதிர்கொள்ளும் சவால்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதின்மவயது பிள்ளையை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், செயலிகள் மற்றும் தளங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முயற்சிப்பதற்கும் இடையே, இது சமாளிக்க முடியாததாகத் தோன்றலாம். அதனால்தான் Instagram பதின்மவயதினர் கணக்குகளுக்குப் புதிய அமைப்புகளை வெளியிட்டுள்ளது, இவை பயன்படுத்த எளிதானவை, வெவ்வேறு குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் இலகுவானவை மற்றும் வலுவான பாதுகாப்பை வழங்குபவை.

சமூக ஊடகங்களில் தங்கள் பதின்மவயதினர் பார்க்கும் பகிர்வு உண்மையில் அவர்களின் வயதுக்குத் தகுந்ததா? என்று பெற்றோர்கள் கவலைப்படலாம், மேலும் சில சமயங்களில் ஏற்கெனவே இருக்கும் பெற்றோர் கட்டுப்பாடுகள் குழப்பமானவையாகவோ போதாதவையாகவோ இருக்கலாம். Instagram இன் இந்த மாற்றங்கள், 13+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளை முன்மாதிரியாகக் கொண்டுள்ள அனுபவத்தைப் பதின்மவயதினர் இயல்புநிலையாகவே பெறச்செய்வதன் மூலமும், பெற்றோருக்குப் பயன்படுத்த எளிதான கூடுதல் கட்டுப்பாடுகளை வழங்குவதன் மூலமும் இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. கீழே, உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் இவற்றைக் கையாளும் விதத்திற்கான உதவிக்குறிப்புகளுடன் முக்கிய அண்மைத் தகவல்களைக் காணலாம்.

ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பதின்மவயதினர் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதை விரும்புகின்றன, எனினும் எது "பொருத்தமானது" என்பது ஒவ்வொரு பதின்மவயது பிள்ளைக்கும்—அல்லது ஒவ்வொரு உடன்பிறந்தவருக்கும் இடையேயும் கூட ஒரே மாதிரியாக இருக்காது என்பதும் பெற்றோருக்குத் தெரியும். குடும்பங்களுக்கென்று அவர்களின் தனிப்பட்ட மதிப்புகள் உள்ளன, மேலும் பதின்மவயதினர் அனைவரும் அவரவருக்கான இயல்புக்கேற்ப பக்குவமடைகின்றனர். அதனால்தான் பல பெற்றோர்கள், தங்கள் பதின்மவயதினர் பார்க்கக்கூடியவற்றில் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நபருக்கேற்றபடி அமைப்பதற்கான கூடுதல் விருப்பத்தேர்வுகளைக் கேட்டுள்ளனர். Instagram இன் புதிய அமைப்புகள் இதனைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தங்கள் பதின்மவயது பிள்ளையுடன் இவற்றைக் கையாளும்போது அவர்களுக்குக் கூடுதல் விருப்பத்தேர்வையும், அதிக நம்பிக்கையையும், மன அமைதியையும் வழங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன

புதிய அமைப்புகள் எப்படி இருக்கும், அவை குடும்பங்களுக்கு எவ்விதம் உதவும்?



பதின்மவயதினர் கணக்குகள் அதுவாகவே மாற்றியமைக்கப்பட்ட இயல்புநிலையான "13+" அமைப்பில் வைக்கப்படும், இவை 13+ வயதினருக்கான உள்ளடக்க மதிப்பீடுகளை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன. பெற்றோரின் அனுமதியின்றி பதின்மவயதினர் இந்த இயல்புநிலை அமைப்பைக் குறைவான கட்டுப்பாடு கொண்டதாக மாற்ற முடியாது, மேற்பார்வை இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே பெற்றோர்களால் அனுமதி வழங்க முடியும்.

13+ வயதினருக்கான உள்ளடக்கத் தரநிலைகள் தங்கள் பதின்மவயதினருக்கு வயதுக்கு மீறிய உள்ளடக்கத்தை வழங்குகின்றன என்று கருதும் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, Instagram ஒரு புதிய, கடுமையான "கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்க" அமைப்பையும் வழங்குகிறது, இது Instagram முழுவதும் உள்ள பதின்மவயதினர் கணக்கு அனுபவத்திலிருந்து வயதுவந்தோருக்கான உள்ளடக்கத்தை இன்னும் கூடுதலாக வடிகட்டும் . கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்க அமைப்பு தேடல் முடிவுகளை மேலும் கட்டுப்படுத்தும், அத்துடன் பதின்வயதினரை அவர்களின் பதிவுகளின் கீழ் கருத்துகளைப் பார்ப்பதை, கருத்துகள் தெரிவிப்பதை அல்லது பெறுவதைத் தடுக்கும்.

புதிய 'பதின்மவயதினர் கணக்கு' அமைப்புகள், பெற்றோர்களும் பதின்மவயதினரும் பாதுகாப்பானதாகவும் வயதுக்குத் தகுந்ததாகவும் உணரக்கூடிய ஆன்லைன் அனுபவத்தை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பதின்மவயதினருடன் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தைப் பேணுவது எப்போதும் முக்கியம், இதனால் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் உலகம் என எதிலும் அவர்களைத் தொந்தரவு செய்யும் அல்லது அவர்களைச் சங்கடமாக உணர வைக்கும் எதைப் பற்றியும் தெரிவிக்க அவர்கள் எப்போதும் உங்களை அணுகுவார்கள். ஒரு பெற்றோராக, அந்த உரையாடல்களை எவ்விதம் தொடங்குவது என்பதை அறிவது எப்போதும் எளிதல்ல, எனினும் அதை எளிதாக்கும் சில உதவிக்குறிப்புகள் இதோ இங்கே உள்ளன:

  • அவர்கள் பார்ப்பவற்றில் ஆர்வம் காட்டுங்கள். ஆன்லைன் பாதுகாப்பு என்பது உள்ளடக்கத்தைத் தடுப்பது மட்டுமாகாது—பதின்மவயதினர் பார்ப்பவற்றில் ஆர்வம் காட்டுவதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும் ஆன்லைன் பாதுகாப்பே. உங்கள் பதின்மவயதினரை அவர்களின் ஃபீடில் ஏதாவது ஒன்றை அல்லது பேசுபொருளாக இருக்கும் ஏதாவது ஒன்றைப் பகிரச் சொல்லுங்கள்.
  • நீங்களே உரையாடலைத் தொடங்குபவராக இருங்கள். உங்கள் பதின்மவயதினர் விஷயங்களை உங்களிடம் கொண்டு வரும் வரை காத்திருக்காதீர்கள். இனிமையான பதிவுகள் கூட நல்ல உரையாடலைத் தொடங்க உதவும்—“மக்கள் இதை ஏன் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?” அல்லது “இதில் உங்களுக்கு என்ன வேடிக்கையாக இருக்கிறது?” என்று கேட்க முயற்சியுங்கள். ஏதாவது அசௌகரியமாகத் தோன்றினால், "அது உங்களைத் தொந்தரவு செய்ததா?" என்று கேட்பதும் சரியே
  • உரையாடலை நிறுத்த வேண்டாம். சில தலைப்புகள், குறிப்பாக பதின்மவயதினருக்குச் சங்கடமாக இருக்கும், எனினும் அவற்றைப் பற்றிப் பேசுவதை நிறுத்துவது, அவர்களை மெளனமாக்குவதுடன் நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டத் தயாராக இல்லை என்றும் நினைக்க வைக்கும். சில தலைப்புகளைப் பற்றிப் பேசுவது கடினமாக இருக்கும்போது, நீங்கள் பின்வருமாறு தெரிவிக்கலாம்: "இதைப் பற்றிப் பேசுவது கடினம், எனினும் நான் முயற்சிக்க விரும்புகிறேன்." சில விஷயங்களைப் பற்றி இப்போது பேசுவது கடினமாகத் தோன்றினால், இதைப் பற்றிப் பின்னர் பேசலாம் என்று பின்வருமாறு பரிந்துரைக்கலாம்: "இங்கே நிறுத்திக்கொள்ளலாம், எனினும் விரைவில் இதைப் பற்றி மீண்டும் பேசலாம்."
  • அவ்வப்போது அவர்களிடம் நலம் விசாரியுங்கள். தொடர்ச்சியான முறையில் உரையாடுவதுதான் பாதுகாப்பான அணுகுமுறை. Metaவின் புதிய கருவிகள் உங்கள் பதின்மவயதினரின் அனுபவத்தை நபருக்கேற்றபடி அமைப்பதை எளிதாக்குகின்றன, எனினும் உங்கள் பதின்மவயதினர் பார்க்கும் விஷயத்தைப் பற்றிய, அதைப் பற்றி அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றிய வழக்கமான அரட்டைகளுடன் இணைந்திருக்கும்போது அவை சிறப்பாகச் செயல்படுகின்றன.


சமூக ஊடகங்களில் வரம்புகளை அமைப்பது முக்கியம், எனினும் நம்பிக்கையை வளர்ப்பதும், தகவல் பரிமாற்றத்தை வெளிப்படையாகப் பேணுவதும் மிகவும் முக்கியம்.

Instagram இன் புதிய உள்ளடக்க அமைப்புகளான—இயல்புநிலை 13+ அமைப்பு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்க அமைப்பு போன்றவை—சில விஷயங்கள் ஏன் தடுக்கப்பட்டுள்ளன, இந்த அமைப்புகள் இப்போது ஏன் மிகவும் பொருத்தமானவையாக இருக்கலாம் என்பது குறித்து உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் உரையாடல்களைத் தொடங்க ஒரு சிறந்த வழியாகும். இந்தக் கருவிகள் பதின்மவயதினரை, சில வகையான உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகளிலிருந்து மட்டுமல்லாமல், அவர்களால் சமாளிக்க முடியாத அல்லது வயதுக்குத் தகுந்ததாக இல்லாத அனுபவங்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்துப் பதின்மவயதினர் கணக்குகளுக்கும் வெளியிடப்படும், எனவே இது ஏன் முக்கியமானது என்பது குறித்து உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் பின்வருமாறு பேச முயற்சி செய்யுங்கள்:

“இந்த அமைப்பு உங்கள் வயதிற்குத் தகுந்த உள்ளடக்கத்தை நீங்கள் பார்ப்பதை உறுதிசெய்கிறது, மேலும் தற்போது உங்களுக்குச் சற்று அதிக வயதுக்குரியது போல் தோன்றக்கூடிய கணக்குகள் அல்லது உள்ளடக்கங்களைத் தவிர்க்க உதவுகிறது.”

இந்தப் புதிய பாதுகாப்புகளுக்குக் கூடுதலாக, Metaவின் செயலிகள் கூடுதல் இயல்புநிலை பாதுகாப்புகளையும் விருப்பத்தேர்வு மேற்பார்வையையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகள் அனைத்தையும் பற்றி நீங்கள் குடும்ப மையம் மேலும் அறிந்து கொள்ளலாம்.

புதிய பதின்மவயதினர் கணக்கு அம்சங்கள் பெற்றோருக்கு அதிகக் கட்டுப்பாட்டையும் இணக்கமான தன்மையையும் அளிக்கின்றன, எனினும் உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் பார்ப்பவற்றைப் பற்றி அவர்களுடன் உரையாடுவது இன்னமும் முக்கியம். மொத்தத்தில், பின்வரும் உண்மையான நோக்கங்களுக்கு உதவவே இந்த அமைப்புகள் உள்ளன: வெளிப்படையாக உரையாடுதல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் பாதுகாப்பான மற்றும் நேர்மறையான வழிகளைக் கற்றுக்கொள்ளவும் உங்கள் பதின்மவயதினருக்கு உதவுதல்.


டாக்டர். ரேச்சல் ரோட்ஜர்ஸ் Metaவின் இளையோர் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார், மேலும் Metaவின் இளையோர் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து நிபுணர் கருத்தை வழங்குகிறார். சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் Instagram பாதுகாப்பு குறித்து டாக்டர். ரோட்ஜர்ஸ், பதின்மவயதினர் கணக்குகளுக்கான அண்மைத் தகவல்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத அழைக்கப்பட்டார், மேலும் அவர் செலவிட்ட நேரத்திற்குத் தகுந்த சன்மானமும் வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. எங்கள் பகிர்வு அமைப்புகளை மாற்றியமைக்கும்போது நாங்கள் MPA உடன் இணைந்து செயல்படவில்லை, மேலும் அவர்கள் Instagram இல் எந்தப் பகிர்வுக்கும் மதிப்பீடு வழங்குவதில்லை, அத்துடன் அவர்கள் எங்கள் பகிர்வு அமைப்புகளை எந்த வகையிலும் ஆதரிக்கவோ அனுமதிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக, பெற்றோர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான MPA இன் பொது வழிகாட்டுதல்களிலிருந்தும், பெற்றோர்களின் அனுபவத்திலிருந்தும் நாங்கள் உத்வேகத்தைப் பெற்றோம். எங்களின் பகிர்வு மதிப்பீடு அமைப்புகள் திரைப்பட மதிப்பீடுகள் மன்றத்தைப் போன்றவை அல்ல, எனவே அனுபவம் முற்றிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் இருக்கலாம்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்

தொடர்புடைய உதவி விவரங்கள்

A bearded man in a light-blue button-down with his arm around a boy in a rust/orange polo, sitting on a grey sofa in a living room.
Meta Age Assurance: What Parents Need to Know
மேலும் படித்திடுக
Meta Quest ஹெட்செட்டைப் பிடித்திருக்கும் வயதுவந்த நபருடன், ஒன்றாக நின்று புன்னகைக்கும் நால்வர் கொண்ட குடும்பத்தின் விளக்கச் சித்திரம்.
Meta Questக்கான குடும்ப வழிகாட்டி
மேலும் படித்திடுக
ஒரு சோஃபாவில் ஒன்றாக அமர்ந்து, ஃபோனைப் பார்த்து புன்னகைக்கும் ஒரு பதின்மவயது பிள்ளை மற்றும் வயதுவந்த நபர்.
பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கான Instagram வழிகாட்டி
மேலும் படித்திடுக

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்

Instagram
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

உதவி வளங்கள்
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

Facebook மற்றும் Messenger
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
உருவாக்கும் AI

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2026 Meta
இந்தியா