ஒரு உளவியலாளராகவும் கல்வியாளராகவும், பதின்மவயதினர் சமூக ஊடகங்களை நேர்மறையான வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் வழிகாட்டும் விதத்தைப் பற்றி ஆய்வு செய்கிறேன், உங்களில் பலர் எதிர்கொள்ளும் சவால்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதின்மவயது பிள்ளையை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், செயலிகள் மற்றும் தளங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முயற்சிப்பதற்கும் இடையில், இது சமாளிக்க முடியாததாகத் தோன்றலாம். அதனால்தான் Instagram பதின்மவயதினர் கணக்குகளுக்கு புதிய அமைப்புகளை வெளியிட்டுள்ளது, இவை பயன்படுத்த எளிதானவை, வெவ்வேறு குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் இலகுவானவை மற்றும் வலுவான பாதுகாப்பை வழங்குபவை.
சமூக ஊடகங்களில் தங்கள் பதின்மவயதினர் பார்க்கும் பகிர்வு உண்மையில் அவர்களின் வயதுக்குத் தகுந்ததா? என்று பெற்றோர்கள் கவலைப்படலாம், மேலும் சில சமயங்களில் ஏற்கனவே இருக்கும் பெற்றோர் கட்டுப்பாடுகள் குழப்பமானவையாகவோ போதாதவையாகவோ இருக்கலாம். Instagram இன் இந்த மாற்றங்கள், PG-13 திரைப்பட மதிப்பீடுகளால் வழிநடத்தப்படும் அனுபவத்தைப் பதின்மவயதினர் இயல்புநிலையாகவே பெறச்செய்வதன் மூலமும், பெற்றோருக்குப் பயன்படுத்த எளிதான கூடுதல் கட்டுப்பாடுகளை வழங்குவதன் மூலமும் இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. கீழே, உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் இவற்றைக் கையாளும் விதத்திற்கான உதவிக்குறிப்புகளுடன் முக்கிய அண்மைத் தகவல்களைக் காணலாம்.
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பதின்மவயதினர் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதை விரும்புகின்றன, எனினும் எது "பொருத்தமானது" என்பது ஒவ்வொரு பதின்மவயது பிள்ளைக்கும் - அல்லது ஒவ்வொரு உடன்பிறந்தவருக்கும் இடையேயும் கூட ஒரே மாதிரியாக இருக்காது என்பதும் பெற்றோருக்குத் தெரியும். குடும்பங்களுக்கென்று அவர்களின் தனிப்பட்ட மதிப்புகள் உள்ளன, மேலும் பதின்மவயதினர் அனைவரும் அவரவருக்கான முறையில் பக்குவமடைகின்றனர். அதனால்தான் பல பெற்றோர்கள், தங்கள் பதின்மவயதினர் பார்க்கக்கூடியவற்றில் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நபருக்கேற்றபடி அமைப்பதற்கான கூடுதல் விருப்பத்தேர்வுகளைக் கேட்டுள்ளனர். Instagram இன் புதிய அமைப்புகள் இதனைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தங்கள் பதின்மவயது பிள்ளையுடன் இவற்றைக் கையாளும்போது அவர்களுக்குக் கூடுதல் விருப்பத்தேர்வையும், அதிக நம்பிக்கையும், மன அமைதியையும் வழங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன