LGBT Tech
மார்ச் 13, 2024
உலக அளவில் பரவும் தொற்றுநோய் வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள LGBTQ+ இளைஞர்கள் தங்கள் வயதை ஒத்த எதிர்பாலின ஈர்ப்புடைய சகாக்களை விட ஆன்லைனில் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? LGBTQ+ இளைஞர்கள் தங்கள் சுய அறிதல் மற்றும் பாலியல் அடையாளத்தை ஆராய்வதற்கு நீண்ட காலமாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர், அது ஆன்லைனில் அவர்களை அடையாளம் காண முடியாத நபராகவும், பாதுகாப்பாகவும் உணரச்செய்தது. உலக அளவில் பரவும் தொற்றுநோய்க் காலத்தில், LGBTQ+ இளைஞர்களுக்கான தனிமைப்படுத்திக்கொள்ளுதல்கள் மற்றும் தனித்திருத்தலின் விளைவாக ஏற்பட்ட சமூக வெற்றிடத்தை நிரப்ப தொழில்நுட்பம் உதவியது, LGBTQ+ இளைஞர்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் மேலும் அதிகரித்தது. LGBTQ+ இளைஞர்கள் சமூகத்துடன் இணைவதற்கு இணையத்தை நாடுவார்கள் என்பதை அறிந்திருப்பதால், LGBTQ+ இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள பெரியவர்கள் அவர்களின் ஆன்லைன் அனுபவங்களுக்கு உதவக்கூடிய விஷயங்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
உட்பொருள் நெறிப்படுத்தப்படாத இடங்களான செயலிகள் மற்றும் உரையாடல் ரூம்கள் LGBTQ+ இளையோரைத் தனியுரிமை ஆக்கிரமிக்கப்படும் அபாயத்துக்கு உள்ளாக்குகின்றன, சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதுடன் சாதனப் பாதுகாப்பு விதிமீறலும் நிகழ்கிறது. LGBTQ+ இளைஞர்கள் மற்ற LGBTQ+ இளைஞர்களுடன் இணைவதற்கும் பயிற்சி பெற்ற உதவியளிக்கும் நிபுணர்களைக் கண்டறிவதற்கும் கிடைக்கும் சில ஆன்லைன் விருப்பத்தேர்வுகள்:
LGBTQ+ பதின்மவயதினரின் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலை அவர்களை இணைய வழி கொடுமைப்படுத்துதல், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதக் கடத்தல் என அனைத்திற்கும் ஆன்லைனில் குறிவைக்கப்படுபவராக மாற்றும். பின்வருவன போன்ற ஆன்லைன் உதவி வளங்கள் மூலம் சுயமரியாதையைக் கட்டமைக்க உதவுங்கள்:
LGBTQ+ இளைஞர்கள் பிறருக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டு, அவர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய சூழ்நிலைகளில் ஈடுபடுத்தப்படலாம். அவர்களின் வாழ்க்கையில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், காதல் உறவுகள் மற்றும் வேலை வழங்குனர் ஆகியோரால் வழங்கப்படும் அதிக அக்கறையில் கவனம் செலுத்துங்கள், மேலும் புதிய அல்லது இயல்புக்கு மீறிய குணமாகத் தோன்றும் எந்தவொரு உறவுகளையும் பற்றி அவர்களிடம் பேசுவதற்குப் பயப்பட வேண்டாம்.
சமூக ஊடகச் செயலிகள், எழுத்து மெசேஜ் அனுப்புதல், உடனடி மெசேஜிங் அம்சம், ஆன்லைன் உரையாடல் (மன்றங்கள், உரையாடல் ரூம்கள், மெசேஜ் பலகைகள்) மற்றும் மின்னஞ்சல் மூலம் இணைய வழி கொடுமைப்படுத்துதல் நடைபெறக்கூடும்.