Miracle Pool செயலியில் காணப்படும் MR அனுபவத்தின் ஒரு எடுத்துக்காட்டுஅப்படியானால் இம்மர்ஸிவ் தொழில்நுட்பத்தை மிகவும் சிறப்பானதாக்குவது எது?
இதன் சிறப்பு, ஒரு விதத்தில் இது உடலையும் மனதையும் முழுமையாக ஈடுபடுத்துகிறது, இது ஒரு பயனரை வெறும் பார்வையாளர் என்பதிலிருந்து தீவிரமான பங்கேற்பாளராக உருமாற்றுகிறது.தீவிரமாக விளையாடுதல்
எங்கள் Quest ‘சூப்பர் பயனர்களிடம்’ பேசியபோது, VR என்பது ஒரு வேறுபட்ட வகையிலான ‘திரை நேரம்’ என்பதாக அவர்கள் உணர்ந்தனர் என்ற சுவாரஸ்யமான விஷயத்தைக் கண்டறிந்தோம். VR நேரம் பொதுவாக சாதாரண திரை நேரத்தைவிட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிகமான செயல்பாட்டுடன் இருக்கிறது. VR நிச்சயமாக இன்னும் ஒரு திரையைப் பயன்படுத்தினாலும், இதில் உங்கள் உடல் முழுவதையும் நீங்கள் அனுபவத்திற்குள் உட்படுத்துவதால், இது ஒரு மாறுபட்ட அனுபவமாக உணரப்படுகிறது. மேலும் சுறுசுறுப்பான மைதானப் பயிற்சியுடன் ஒத்ததாக இருக்கிறது. நாங்கள் கலந்துரையாடிய பல பெற்றோர்கள், குளிர்காலத்தில் வானிலை எப்படி இருந்தாலும், Quest சாதனம் குடும்பத்தினரை இயங்க வைத்துக்கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
பெற்றோர்கள் தெரிவித்த இந்தக் கருத்து, VR என்பது மற்ற திரை மீடியா வடிவங்களிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது என்பதைக் குறிக்கிறது — இது நீங்கள் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமானதல்ல, நீங்கள் ஈடுபட்டுச் செய்யும் ஒரு விஷயமாகும். ஒரு தட்டையான செவ்வகத் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக, விர்ச்சுவல் ரியாலிட்டி அந்த அனுபவத்திற்குள்ளேயே உங்களை வைக்கிறது. வலைதளங்கள் நீங்கள் வருகை தருவதற்கானவை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நீங்கள் பார்ப்பதற்கானவை, மற்றும் பாட்காஸ்ட்கள் நீங்கள் கேட்பதற்கானவை ஆனால் Quest இல் ஒரு அனுபவம் என்பது நீங்கள் நேரடியாகப் பங்குபெறும் ஒன்றாகும்.
VR உணர்வுகளைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதால், அது உடனடி அனுபவமாக உணரப்படுகிறது. ஒரு இடத்தின் குறியீட்டுப் பிரதிநிதித்துவம் அங்கே இல்லை, அதற்குப் பதிலாக நேரடியாக அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. இந்த உடனடியான உணர்வு, ஒரு அதிரடி விளையாட்டில் இதயத்துடிப்பு அதிகரிப்பது முதல் விடியற்காலையில் அமைதியான வனப்பகுதி போல் உருவாக்கப்பட்ட நிம்மதியான சூழலில் இரத்த அழுத்தம் குறைவது வரை, அனைத்து விதமான உண்மையான உடல் ரீதியான வெளிப்பாடுகளையும் தூண்டலாம்.மனதை மட்டுமல்ல, உடலையும் ஈடுபடுத்துதல்
VR உங்கள் முழு உடலையும் ஈடுபடுத்துகிறது. நீங்கள் அசைவற்று அமர்ந்திருந்தாலும், உங்கள் மூளை அந்தச் சூழலிலேயே நீங்கள் இருப்பதாக உணர்கிறது. எங்கள் ‘சூப்பர் பயனர்’ ஆராய்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் ஒருவர் கூறியது போல, "என் மகள் ஒரு 3D பியானோ செயலியைப் பயன்படுத்தும்போது, அவள் உண்மையாகவே காற்றில் மிதக்கும் பியானோ விசைகளைப் பார்க்கிறாள். அவளது மனமும் கைகளும் அந்த விசைகளின் வரிசையை நினைவில் வைத்துக்கொள்கிற முறைகளை ஒரு புத்தகம் படித்தால் கூட அந்த அளவுகுப் பெற முடியாது” மற்றொரு பங்கேற்பாளர், தனது மகனுக்குப் பிடித்த Quest செயலியைப் பற்றிப் பேசும்போது, "இது வெறும் பட்டன்களை அழுத்துவது மட்டுமல்ல, அனுபவத்தை உணர நீங்கள் உண்மையில் குனிந்து நிமிர்ந்து உங்கள் உடலை அசைக்கிறீர்கள் அல்லது முன்னே நடந்து செல்கிறீர்கள்."
இந்த உடலோடு இணைந்து உணர்தல் என்பது இம்மர்ஸிவ் அனுபவங்களைப் பல நேரங்களில் மறக்கமுடியாத நினைவாக்குகிறது. நம்மில் பலர் சொந்தமாக அனுபவம் பெற்றிருப்பதால், நாம் செயலில் ஈடுபடுவதன் மூலம் கற்றுக்கொள்கிறோம், எனவே, கல்வி சார்ந்த உட்பொருட்களுக்கு VR மிகவும் சிறந்தது.
மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த அதிசய சக்திகள், வழக்கமான குடும்ப வாழ்வின் அங்கமாக இருக்கும் இந்த Meta Quest ஹெட்செட்டிற்கு எத்தகைய அர்த்தத்தை வழங்குகின்றன? அடிப்படையில், ஒரு VR ஹெட்செட் என்பது பல்வேறு அனுபவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய மிகுந்த திறன் வாய்ந்த பன்முகக் கருவி ஆகும். உங்கள் சாதனம், உங்களைக் களப் பயணத்துக்கு அழைத்துச் செல்வது முதல், மெய்நிகர் நாடக நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வது, காலை உடற்பயிற்சி செய்யுமாறு ஊக்கப்படுத்துவது வரை பலவிதமான செயல்களைச் செய்ய முடியும்..
நிகரில்லாத விஷயமாக, VR இன் சக்தியானது, உடலையும் மனதையும் முழுமையாக ஈடுபடுத்தும் விதத்தில் உள்ளது. செயல் எதுவும் தேவைப்படாத பார்வையாளர் என்பதிலிருந்து தீவிரமாகச் செயல்படும் பங்கேற்பாளராக மாற்றத்தை ஏற்படுவதுதான் இதனை அசாதாரணமானதாக ஆக்குகிறது.