சமூக ஊடகம் மற்றும் தவறான தகவல்
இணையத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன, அவற்றுள் எது உண்மை, எது நம்பகமானது, எது உண்மையில்லை, எது நம்பகமற்றது என்பதை அறிந்துகொள்ள நேரமும் முயற்சியும் தேவை. எல்லோரையும் போலவே, ஆன்லைனில் இருக்கும் தவறான தகவலைக் கண்டறியும் திறன்கள் இளம் நபர்களுக்கும் தேவை.
தவறான தகவலை அடையாளம் காணுதல் என்றால் என்ன?
'தவறான தகவல்' என்ற சொல்லுக்கு எந்தவொரு குறிப்பிட்ட வரையறையும் இல்லை. ஆனால் இது “தவறான தகவல்” என பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது 'ஏமாற்றுத் தகவல்' என்பதிலிருந்து வித்தியாசப்படுகிறது, அதாவது இவ்வகையான தகவல் ஒருவரை ஏமாற்றும் நோக்கத்துடன் பரப்பப்படவில்லை.
சமூக ஊடகத்தில், இது தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் ஒரு பரபரப்பான தலைப்பாகவோ, சூழலுக்கு வெளியே விஷயங்களை எடுத்துச் செல்லும் மிகைப்படுத்தப்பட்ட பதிவாகவோ தோன்றும். ஸ்பேமர்கள் அதிகளவிலான கிளிக்குகளைப் பெற்று, லாபம் ஈட்ட இதைப் பயன்படுத்துகின்றனர், மேலும் எதிர் தரப்புகள் தேர்தல் மற்றும் இன மோதல்களில் இதைப் பயன்படுத்தலாம்.
தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுதல்
தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரியதாக இருக்கலாம், ஆனால் அதன் பரவலை எதிர்த்துப் போராட நாம் செய்யக்கூடிய விஷயங்களும் நிறைய உள்ளன.
Metaவில், தவறான தகவலை நிறுத்துவதற்கான எங்கள் உத்தி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
- நீக்குதல் எங்கள் சமூகத் தரநிலைகள் அல்லது விளம்பரக் கொள்கைகளை மீறும் கணக்குகள் மற்றும் பகிர்வை அகற்றுதல்
- குறைத்தல் தவறான தகவல் மற்றும் கிளிக்பெயிட் போன்ற நம்பத்தகாத பகிர்வு பரவுவதைக் குறைத்தல்
- தெரிவித்தல் மக்களுக்கு அவர்கள் பார்க்கும் பதிவுகளில் கூடுதல் தகவலை அல்லது சூழலைக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குத் தகவல் தெரிவித்தல்
இந்த அணுகுமுறையானது தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது பொது உரையாடலைத் தடுக்காமல் மக்களுக்குத் தகவலைத் தெரியப்படுத்த உதவுகிறது.
பெற்றோர்கள் மற்றும் இளம் நபர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பிரிட்ஜ்வாட்டர் ஸ்டேட் யுனிவெர்சிட்டியில் உள்ள மேக்ஸ்வெல் லைப்ரரியில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்களின் துல்லியத்தைத் தீர்மானிக்க உங்களுக்கும் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கும் உதவும் மேலும் சில குறிப்புகள் இங்கே உள்ளன:
உதவிக்குறிப்பு #1: தீவிரமாக ஆராய்ந்து பார்த்தல்
தலைப்புகள் மற்றும் ஸ்டோரியின் மேற்கோள் பகுதிகள் மட்டுமே நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும். நாம் பார்ப்பது அல்லது படிப்பது பற்றியதன் முழு விவரங்களைப் பெறுவதற்குப் பதிவு அல்லது இணைப்பைத் தாண்டி அசல் தகவல்களை வழங்கும் தளத்தின் விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பது உதவியாக இருக்கும்.
உதவிக்குறிப்பு #2: இணையத்தைப் பயன்படுத்துதல்
உண்மை நிலை சரிபார்ப்பாளர்களால் ஒரு ஸ்டோரி ஏற்கெனவே கொடியிடப்படவில்லை எனில், அது துல்லியமானதா என்பதை ஒரு விரைவான தேடுதலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். செய்திகள் தரும் தரமான தளங்களில் மற்ற நம்பகமான செய்தித் தளங்களின் இணைப்பும் இடம்பெற்றிருக்கும்.
உதவிக்குறிப்பு #3: உங்கள் முடிவைப் பயன்படுத்துதல்
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் படிப்பது எவ்வளவு நம்பத்தகுந்ததாக இருக்கிறது? உருவாக்கியவரின் நோக்கம் என்ன? இது ஒரு செய்தி ஸ்டோரியா அல்லது கருத்துத் தொகுப்பா? உண்மை எதுவென்று கண்டறிய ஒற்றைச் சூத்திரம் ஏதுமில்லை, ஆனால் சில சமயங்களில் அதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சி மட்டுமே தேவை.
உதவிக்குறிப்பு #4: ஆராய்ச்சி மேற்கோள்கள்
சொல்லாத நபர்கள் சொன்னதாக இணையத்தில் நிறைய மேற்கோள்கள் உலவுகின்றன, அவற்றை ஒருபோதும் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் செய்வதைப் போலவே, பகிர்வதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்வது மிகவும் பலனளிக்கும்.
உதவிக்குறிப்பு #5: மோசடி ஸ்கேம் விளம்பரங்கள் அல்லது பிற "கிளிக்பெயிட்"களைத் தேடுதல்
தவறான தகவலை வழங்கும் சிலர், தங்கள் வலைதளத்திற்கு உங்களின் கிளிக்குகளைப் பெற இவ்வாறு செய்கிறார்கள், அங்கு அதிலுள்ளவற்றை உங்களுக்கு விளம்பரம் செய்ததற்காக அவர்களுக்குக் கிரெடிட் கிடைக்கும். குறைந்த தரம் மற்றும் மோசடியான விளம்பரங்கள் உங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவை அல்ல என்பதற்கான அறிகுறியாகும்.
உதவிக்குறிப்பு #6: உணர்ச்சிவசப்பட வைக்கும் பரபரப்பான பகிர்வைக் கவனித்தல்
மோசமான இலக்கணம், ஆச்சரியக்குறிகளின் அதிகப்படியான பயன்பாடு, அனைத்தும் பெரிய எழுத்துக்களில் இருக்கும் சொற்றொடர்கள் மற்றும் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் இருத்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள். தவறான தகவல்கள் பெரும்பாலும் உணர்ச்சியை வெளிப்படுத்துமாறு தூண்டுவதற்காக வடிவமைக்கப்படுகின்றனவே தவிர, தகவல் தெரிவிப்பதற்காக அல்ல.
உதவிக்குறிப்பு #7: எல்லாவற்றிற்கும் மேலாக, பகுத்தாராய்ந்து வாசியுங்கள்
எதையும் பகிர்வதற்கு முன், உணர்ச்சிவசப்பட வைக்கும் பரபரப்பான தலைப்பை மட்டும் அல்லாமல், முழு ஸ்டோரியையும் நிறுத்தி நிதானமாக பகுத்தாராய்ந்து வாசிக்க வேண்டியது அவசியம்.
தகவல்களை வழங்கும் தளத்தை நம்பகமானதாக்குவது எது
ஆன்லைன் பகிர்வின் சிறந்த வாசகர்களாகத் திகழ இளம் நபர்களுக்கு உதவுதல் என்ற தலைப்பில் நாம் விவாதித்தவாறு, நம்பகமான தகவல்களை வழங்கும் தளங்களை அடையாளம் காண்பதற்கான ஒரு வழி, பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்துவது ஆகும்: யார்? என்ன? எங்கே? ஏன்? எப்போது?இந்தப் பகிர்வை உருவாக்கியவர் யார்?பகிர்வு எங்கே அழைத்துச் செல்கிறது?அது எங்கே உருவாக்கப்பட்டது?அது ஏன் உருவாக்கப்பட்டது?அது எப்போது உருவாக்கப்பட்டது?
நம்பகமான தளங்களை அடையாளம் காண்பது பற்றி மேலும் அறிய, பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்:
தகவல்களைச் சரிபார்த்தல்
தவறான தகவலைப் பார்த்தால் என்ன செய்வது
தவறான தகவலைப் பதிவிடும் ஒருவருடன் உரையாடலை மேற்கொள்வது கடினமான காரியமாக இருக்கலாம், குறிப்பாக அது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினராக இருந்தால் கடினமாக இருக்கலாம். இந்தத் தருணங்கள் உரையாடலைத் தொடங்குவதற்கும் நம்பகமான தளங்களில் இருந்து துல்லியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகளாக அமையும்.
தவறான தகவல் குறித்து செயலை மேற்கொள்ளும்போது உங்கள் பதின்மவயது பிள்ளை தங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- சமூக ஊடகத்தில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைத் திருத்தும்போது நயமாக நடந்துக் கொள்ளுங்கள்
தவறான தகவல் பொதுவாக மற்றவர்களை வற்புறுத்தும் வகையில் உணர்ச்சிவசப்பட வைப்பதைச் சார்ந்து இருப்பதால், இதுபோன்ற பகிர்வைப் பகிரும் ஒருவருடன் பேசுவது கடினமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். அத்தகைய உணர்ச்சிகளைக் கவனத்தில் கொள்வதும், மற்றவர்கள் எவ்வாறு உணரக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வதும் எந்தவொரு மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டுக்கும் அர்த்தத்தைக் கொடுக்க உதவும்.
- தவறான தகவல்களைப் பகிர்வதற்காக மற்றவர்களை அவமானப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ செய்யாதீர்
தனிப்பட்ட உரையாடல்கள் பொதுவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். நம்பகமான தளங்களில் இருந்து சமீபத்திய செய்திகளைச் சுட்டிக்காட்டும் போது தொனியை நாகரீகமாகவும் ஆக்கபூர்வமாகவும் வைத்திருங்கள்.
எங்கள் தொழில்நுட்பங்கள் அனைத்திலும் தவறான தகவல் பரவுவதை Meta எவ்வாறு குறைக்கிறது என்பது பற்றி மேலும் அறிக.
அம்சங்கள் மற்றும் கருவிகள்
தொடர்புடைய உதவி விவரங்கள்
உருவாக்கும் AI குறித்த பெற்றோருக்கான வழிகாட்டி
மேலும் படித்திடுக