நாம் அனைவரும் தவிர்க்க முடியாமல் இது போன்று மன உளைச்சலை ஏற்படுத்தும், குழப்பமடைய வைக்கும் அல்லது பயமுறுத்தும் விஷயங்களை ஆன்லைனில் பார்க்க வேண்டியது வரலாம், அதில் நமது பதின்மவயதினரும் அடங்குவர்.
இவ்வாறு நிகழாமல் தடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இவ்வாறு கட்டாயம் ஒரு நாள் நிகழும்போது அதற்கு ஆயத்தமாகி அதனை எவ்வாறு சமாளிப்பது, என்பதைப் பற்றிச் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். அரசியலில் இருந்து ஆபாசப் படங்கள் வரை – முன்கூட்டியே இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்திப்பது மூலம் உங்கள் பதின்மவயது பிள்ளை இவற்றை எதிர்கொள்ளும் சூழலில் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள முடியும்.
பகிர்வைப் பார்த்தவுடன் எப்படி நடந்துகொள்கிறீர்கள், நடத்தையில் மாற்றம் இருந்தால் அதைக் கண்டறிவது, பகிர்வால் பாதிப்பு இருந்தால் அதைச் சமாளிப்பது என்று இந்தச் சூழலை நீங்கள் பல படிநிலைகளில் கையாளலாம்.
இவ்வாறு நிகழாமல் தடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இவ்வாறு கட்டாயம் ஒரு நாள் நிகழும்போது அதற்கு ஆயத்தமாகி அதனை எவ்வாறு சமாளிப்பது, என்பதைப் பற்றிச் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். அரசியலில் இருந்து ஆபாசப் படங்கள் வரை – முன்கூட்டியே இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்திப்பது மூலம் உங்கள் பதின்மவயது பிள்ளை இவற்றை எதிர்கொள்ளும் சூழலில் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள முடியும்.
பகிர்வைப் பார்த்தவுடன் எப்படி நடந்துகொள்கிறீர்கள், நடத்தையில் மாற்றம் இருந்தால் அதைக் கண்டறிவது, பகிர்வால் பாதிப்பு இருந்தால் அதைச் சமாளிப்பது என்று இந்தச் சூழலை நீங்கள் பல படிநிலைகளில் கையாளலாம்.
உங்கள் பதின்மவயது பிள்ளை எதைப் பார்த்துள்ளார்?
விவரத்தை நன்கு தெரிந்துகொள்வது அவசியம். பல காரணங்களுக்காக படைப்பு உங்களுக்கு மன உளைச்சலை வழங்கலாம். அது மனதிற்கு நெருடலான படங்களாகவோ வீடியோ காட்சிகளாகவோ இருக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அவமரியாதை செய்யும் நடத்தையாகவும் இருக்கலாம்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையேயான உறவுமுறை, அது பார்க்கப்பட்ட விதம் அல்லது அதற்குப் பின்னால் உள்ள நோக்கம் ஆகிய அனைத்தையும் பொறுத்தே ஒரு விஷயம் ஏற்கக்கூடியதா அல்லது தவறானதா என்று நிர்ணயிக்க முடியும். உங்கள் பதின்மவயது பிள்ளை அதைத் தேடியதால் அவருக்குக் காட்டப்பட்டதா அல்லது அவர் தற்செயலாக அதைக் காண நேரிட்டதா? யாரேனும் அதை அவர்களுடன் பகிர்ந்திருந்தால், அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு அவமரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதைச் செய்தார்களா?
ஒருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு படைப்பு மற்றொருவருக்கு மன உளைச்சலாக இல்லாமல் இருக்கலாம் – எனவே உங்கள் பதின்மவயது பிள்ளையின் உணர்வுகளை நிராகரிக்காமல் கவனமாக இருங்கள். நீங்கள் அதைப் பற்றி உரையாடுவதைத் தவிர்த்தால், நம்பகமில்லாத வளங்களில் இருந்து பதில்களைத் தேடுவதற்கு உங்கள் பிள்ளைகள் முனைவார்கள், எனவே அவர்களது மனநிலை எப்படி உள்ளது என்பதைக் கேட்டுச் செயல்படுங்கள். அது உங்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும்: அது அவருக்கு மன உளைச்சலை அளித்திருக்கிறது என்றால் அது மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயம்தான்.
அறிகுறிகளைக் கண்டறிதல்
அவர் ஒரு படைப்பைப் புகாரளித்ததாகவோ ஒருவரைத் தடுத்ததாகவோ நீங்கள் அறிவிப்பைப் பெற்றிருக்கலாம் – அப்படிப் பெற்றிருந்தால் அவர்கள் உங்களிடமும் புகாரளிக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம். ஆனால் உங்கள் பதின்மவயது பிள்ளை, ஒரு விஷயத்தால் மன உளைச்சல் அடைந்திருக்கும்போது அது குறித்து உங்களிடம் வருவார் என்று நீங்கள் அனுமானிக்கக்கூடாது.
அவர் முதலில் உங்களுடன் கலந்தாலோசிக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவர் பார்த்ததைக் கண்டு அவர் குழப்பமடைந்திருக்கலாம் அல்லது அதைப் பார்த்ததால் அவர் (அல்லது வேறு யாரையாவது) பிரச்சனையில் மாட்டிக்கொள்வார் என்று அவர் கவலைப்படலாம். தான் ஓர் எல்லையைத் தாண்டிவிட்டதை அவர் உணர்ந்திருக்கலாம், மேலும் ஆன்லைனில் பல தளங்களுக்குச் செல்வதற்கு அல்லது ஒரு நபருடன் அல்லது குழுவில் இணைவதற்கு அவர் தடை செய்யப்படக்கூடும் என்று அவர் கவலைப்படலாம்.
முதல் முறை நிகழும்போது அது குறித்து பேச அவர் தனது நண்பரை நாடலாம் – அந்த நபரிடம் அது குறித்து சரியான பதில்கள் இல்லாமல் போகலாம்.
கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இதோ:
- உங்கள் பதின்மவயது பிள்ளை எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பதைப்போல காணப்படுதல்,
- பிறருடன் சகஜமாக இல்லாமல் இருத்தல்,
- அல்லது அவர் யாருடன் பேசுகிறார், ஆன்லைனில் என்ன செய்கிறார் போன்றவை பற்றி அவர் மிகவும் இரகசியமாக இருத்தல்.
அவர் பிரச்சனையைப் பற்றி உங்களிடம் பேச வசதியான ஒரு நேரத்தையும் இடத்தையும் உருவாக்குங்கள். அவர் உங்களிடம் மனம் திறந்து பேச இலகுவான, அழுத்தம் இல்லாத தருணங்களைத் தேர்வு செய்யுங்கள். எ.கா., கார் சவாரி அல்லது காலாற நடந்துசெல்லுதல்.
கையாளும் விதம்
அவர் எதைப் பார்த்திருந்தாலும் எப்படிப் பார்த்திருந்தாலும் பொறுமையாகக் கையாளுங்கள். என்ன நிகழ்ந்தது என்று உங்களிடம் வந்து விளக்க அவருக்கு நேரமும் இடமும் வழங்குங்கள். இந்தச் சூழலைக் கையாளுவது கடினம் என்றாலும் அவர் மீது பழி சுமத்தாமல் எதுவாக இருந்தாலும் நாம் பார்த்துக்கொள்ளலாம் என்று அவருக்கு தைரியம் கூறுங்கள், இந்தச் சூழ்நிலையை ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என்று அவரிடம் உறுதி அளித்திடுங்கள்.
படைப்பை உங்களிடம் காட்டும்படி கூறுவதற்கு முன், உங்கள் மனநலனையும், உங்கள் பதின்மவயது பிள்ளையின் மனநலனையும் மனதில் வைத்துக்கொண்டு படைப்பைப் பார்ப்பது அவசியம்தானா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
படைப்பை மீண்டும் பார்ப்பது உங்கள் பிள்ளையின் மனநலனை மேலும் பாதிக்கலாம். அல்லது அதைப் பார்ப்பதால் உங்கள் மனநலன் பாதிப்படைவது குறித்து நீங்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்.
நேர்மறையான எண்ணத்துடன் கடந்து செல்லுதல்
எப்படிக் கடந்து செல்வது என்பது குறித்து ஒன்றாகச் சேர்ந்து முடிவெடுங்கள். அவர் விரும்பத்தகாத ஒன்றைப் பார்த்திருந்தால், அதிலிருந்து வெளிவர அவருக்கு கால அவகாசம் தேவைப்படும்.
குறிப்பிட்ட கணக்கு அல்லது தொடர்பிடம் இருந்து அவருக்குச் சிறிது இடைவெளி அல்லது பாதுகாப்பு தேவைப்படலாம்.
பிற கணக்குகளைப் பின்தொடர்வதை நீக்க, அவற்றைத் தடுக்க அல்லது புகாரளிக்க அவருக்கு அதிகாரம் உள்ளது என்பதை அவருக்கு நினைவூட்டுங்கள். மேலும் அவ்வாறு செய்ய அவரை ஊக்கப்படுத்துங்கள். சம்பந்தப்பட்ட கணக்கிற்குத் தெரிவிக்கப்படாது. கணக்கிற்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அவர் விரும்பினால் அவர் படைப்பை மட்டுமே புகாரளிக்கலாம். ஆன்லைனில் ஏற்படும் உறவுகள் முறியும்போது உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு ஆதரவாக இருப்பது குறித்துக் கூடுதல் ஆலோசனைகளைப் படித்திடுங்கள் – மேலும் Instagram இன் பெற்றோர் மேற்பார்வைக் கருவிகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
பிள்ளையின் தேவைகளுக்குச் செவிசாய்த்து, அவருக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஏதேனும் வரம்பை அவர் மீறியிருந்தால் வரம்பு குறித்து மீண்டும் அவருக்கு ஞாபகப்படுத்துங்கள்.
உதவி மற்றும் ஆதரவு
படைப்பு, அதிதீவிரமாக மனதை நெருடியிருந்தாலோ குற்றம் பெரிதாக இருந்தாலோ மட்டுமே அதிகாரப்பூர்வமான நடவடிக்கை தேவைப்படலாம்.
இது மலைப்பாக இருந்தாலும் இந்தச் செயலை நேர்மறையான நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளையிடம், எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களுக்குப் பிறர் பலியாகாமல் தடுக்கலாம் என்று சொல்லி அவரை ஊக்குவித்திடுங்கள்.
பகிர்வு அல்லது சூழலைப் பொறுத்து, உங்களுக்கும் உதவி தேவைப்படலாம் – இதற்கு உதவக்கூடிய வகையில் தளங்களும் நிறுவனங்களும் உள்ளன.
- NAMI பதின்மவயதினருக்குத் தேவையான மனநல ஆதரவைப் பெற அவர்களுக்குத் தேவையான ஆலோசனை மற்றும் தகவல்களைக் கொண்டுள்ளது.
- காணாமல் போன மற்றும் துன்புறுத்தலுக்கான ஆளான குழந்தைகளுக்கான தேசிய மையமானது ஆன்லைனில் ஒரு பிள்ளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக நீங்கள் சந்தேகித்தால் அல்லது அவர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால் அது குறித்து புகாரளிக்கும் படிவத்தைக் கொண்டுள்ளது.
கூடுதல் ஆதரவுக்கான சேவைகளை Parent Zone கண்டறியுங்கள்.
தொடர்புடைய உதவி விவரங்கள்
மேற்பார்வை போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது மூலம் டிஜிட்டல் யுகத்தில் குழந்தை வளர்ப்புப் பணியை எளிதாக்கும் விதம்
மேலும் படித்திடுக