உதவிக்குறிப்பு #4: படைப்பை எப்போது புகாரளிக்கலாம் மற்றும் பயனர்களைப் பின்தொடர்வதை நிறுத்துதலாம் அல்லது தடுக்கலாம் என்பது குறித்து விவாதித்தல்
உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் அவர்களுக்குப் பொருந்தாத பகிர்வு அல்லது மோசமான நடத்தையை எப்பொழுதாவது எதிர்கொண்டால், அவர்கள் தங்கள் வசமுள்ள கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது அவர்களின் ஆன்லைன் அனுபவங்களைப் பாதுகாப்பாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவும்.
Instagram இல், பதின்மவயது பிள்ளைகள் கணக்குகளைத் தடுப்பதன் மூலம் அல்லது பின்தொடர்வதை நிறுத்துவதன் மூலம் தங்கள் அனுபவத்தைக் கட்டுப்படுத்தலாம். Instagram இல் உள்ளமைந்த புகாரளித்தல் அம்சங்களும் உள்ளன, அவை செயலியின் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறுகிற பகிர்வை விரைவாக அகற்றுவதற்குப் புகார்களை மறுபரிசீலனை செய்ய உலகளாவிய குழுக்களுக்கு அனுப்பும்.பதின்மவயது பிள்ளைகள் Instagram இன் வரம்பிடுதல் அம்சத்தையும் பயன்படுத்தலாம், இது கொடுமைப்படுத்துபவரைக் கண்காணித்துக்கொண்டே தங்கள் கணக்கை அமைதியாகப் பாதுகாப்பாக வைத்திருக்க பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரம்பிடுதல் செயல்படுத்தப்பட்டதும், அவர் கட்டுப்படுத்திய நபரின் பதிவுகளில் உள்ள கருத்துகள் அந்த நபருக்கு மட்டுமே தெரியும். உங்கள் பதின்மவயது பிள்ளை, தாங்கள் வரம்பிட்ட நபர் கருத்து தெரிவித்த அறிவிப்புகளைப் பார்க்க மாட்டார்கள்.Instagram இல் பகிர்வை எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றி இங்கு.உதவிக்குறிப்பு #5: Instagram இல் மேற்பார்வை இணைப்பை அமைத்தல்
உங்கள் பதின்மவயதினருடன் அவர்களின் ஆன்லைன் பழக்கவழக்கங்கள் குறித்து நீங்கள் பேசிய பிறகு, Instagram இல் உலாவ அவர்களுக்கு உதவ ஒன்றாக இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
நீங்கள் இருவரும் ஒப்புக்கொள்வதைப் பொறுத்து, Instagram இல் பெற்றோர் மேற்பார்வைக் கருவிகளை அமைக்க அவர்களுடன் இணைந்துப் பணியாற்றுங்கள். இவை அவர்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் பின்தொடர்தல் பட்டியல்களைப் பார்க்கவும், தினசரி நேர வரம்புகளை அமைத்து, அவர்கள் செயலியில் செலவிடும் நேரத்தைப் பார்க்கவும் உங்களை அனுமதிக்கும். Instagram இல் பதிவு அல்லது மற்றொரு கணக்கு போன்ற பகிர்வைப் புகாரளித்ததை உங்கள் பதின்மவயது பிள்ளை பகிரும்போது நீங்கள் பார்க்கவும் செய்யலாம்.தனியுரிமைச் சரிபார்ப்புகள் என்பது Facebook இல் உங்களுடைய மற்றும் உங்களது குடும்பத்தின் தனியுரிமை விருப்பங்களை மதிப்பாய்வு செய்வதற்கான Metaவின் கேந்திரம் ஆகும். நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்கலாம், எந்தெந்தச் செயலிகளுக்குத் தகவல்களுக்கான அணுகல் உள்ளது, யார் நட்புக்கான அழைப்புகளை அனுப்பலாம் மற்றும் பலவற்றை வரம்பிட்டு, உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் கருவியை நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். தனியுரிமை அமைப்புகளில் பிரிவுகளை வைத்திருப்பது எப்போதும் நல்லது, அதே போல் வலுவான கடவுச்சொல் மற்றும் இரு-நிலை அனுமதியைப் பயன்படுத்துவது முக்கியம். Facebook இன் பாதுகாப்புச் சரிபார்ப்பு போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, உங்கள் பதின்மவயது பிள்ளையின் சமூகக் கணக்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியம். இது கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது மற்றும் இரு-நிலை அனுமதியைப் பயன்படுத்துவது போன்ற நல்ல பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஈடுகொடுப்பதற்கான ஒரு கூடுதல் இணைப்பு ஆகும்.உதவிக்குறிப்பு #7: சாதனங்கள் மற்றும் செயலிகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துதல்
உங்கள் பதின்மவயது பிள்ளையின் சாதனத்தை நிர்வகிப்பதற்குக் கூடுதல் உதவி தேவைப்பட்டால், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பாருங்கள். செயலி பதிவிறக்கங்களைத் தடுத்தல், பகிர்வை வரம்பிடுதல் அல்லது சாதனத்தைப் பயன்படுத்தும் நேர வரம்புகளை அமைத்தல் போன்ற விருப்பத்தேர்வுகளைக் கண்டறியலாம். உங்கள் பிள்ளையின் சாதன அமைப்புகளைச் சரிபார்த்து, அவை உங்களுக்கும் உங்கள் பபதின்மவயது பிள்ளைக்கும் புரிதல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் பெற்றோர் கட்டுப்பாட்டு விருப்பத்தேர்வுகளை நன்கு புரிந்துகொள்ள, உங்கள் பதின்மவயது பிள்ளையின் செயலியின் அமைப்புகளையும் நீங்கள் ஆய்ந்தறியலாம். எடுத்துக்காட்டாக, Instagram இல் மேற்பார்வைக் கருவிகள் உள்ளன, அவை பெற்றோர்கள் தங்கள் பதின்மவயது பிள்ளையைப் பின்தொடர்பவரையும், அவர் யாரைப் பின்தொடர்கிறார் என்ற பட்டியல்களையும் பார்க்க அனுமதிக்கின்றன, அத்துடன் நேர வரம்புகளையும் அமைக்கின்றன.Instagram இன் மேற்பார்வைக் கருவி குறித்து இங்கு மேலும் அறிக.உதவிக்குறிப்பு #8: வெளிப்படைத்தன்மையுடன் நம்பிக்கையைக் கட்டமைத்தல்
உங்கள் பதின்மவயது பிள்ளையின் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான சிறந்த வழி, அதனை மரியாதையுடனும் தெளிவுடனும் செய்வதாகும். சில இளம் வயதினர் மற்றவர்களை விட தாங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உணரலாம் மற்றும் அதிக கவனத்துடன் கூடிய பிள்ளை வளர்ப்பு தேவைப்படலாம்.
உங்கள் பதின்மவயது பிள்ளையை நீங்கள் கண்காணிப்பதாக இருந்தால், அதைப் பற்றி அவர்களிடம் முன்னரே விளக்குவது உதவியாக இருக்கும். அந்த வகையில், அனைவரும் புரிதலுடன் இருப்பார்கள், தங்கள் நம்பிக்கை மீறப்பட்டதாக யாரும் நினைக்க மாட்டார்கள்.