புதிய ஆர்வங்களையும் தொடர்புகளையும் பயனர்கள் கண்டறிவதற்கும், தனது தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உதவும் வகையில் Meta நீண்ட காலமாக AIஐப் பயன்படுத்தி வருகிறது, ஆயினும் தற்போது அனைவரின் அனுபவங்களையும் மேம்படுத்த தனது தயாரிப்புகளில் உருவாக்கும் AI அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டமைத்து வருகிறது. வாருங்கள், உருவாக்கும் AI பற்றிய பொதுவான கண்ணோட்டத்துடன் தொடங்கலாம்.உருவாக்கும் AI ஆனது மெசேஜ், படங்கள், அனிமேஷன்கள், இசை மற்றும் கணினி குறியீடு உள்ளிட்ட உட்பொருட்களை உருவாக்க அல்லது மறு சீர்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. சில AI மாதிரிகளுடன் பயனர்கள் கேள்விகளைத் தட்டச்சு செய்யலாம், இன்னும் பிற கேட்டல்களைப் பேசவும் பதிலளிக்கவும் ஆடியோ திறன்களைப் பயன்படுத்துகின்றன. திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வழித்தட விவரங்கள் அல்லது ஷேக்ஸ்பியரின் பாணியிலான ஒரு கவிதை போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அல்லது புதிய ஆவணங்களை உருவாக்க AI பயன்படுத்தப்படலாம். இது கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை எழுத உதவுவதற்கான ஓர் ஆராய்ச்சி உதவிக்கருவியாகவும் செயல்பட முடியும். இல்லையெனில், இது ஒரு படத்தைத் திருத்துதல், ஒரு நீண்ட கட்டுரையை முக்கிய அம்சங்கள் வரிசையிடப்பட்ட வடிவத்திற்குச் சுருக்குதல், மின்னஞ்சலின் தொனியைச் சரிசெய்தல் ஷாப்பிங் செய்யும்போது தயாரிப்புகளை ஒப்பிடுதல் மற்றும் பலவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம்.ஒரு பெற்றோரின் கண்ணோட்டம்
ஒரு புதிய தொழில்நுட்பமானது தங்களது குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவது பெற்றோர்களுக்கு இயல்பான விஷயமாகும். மேலும், உருவாக்கும் AI ஆனது, கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் கையாள வேண்டிய அவசியம் இல்லாத சில பிரச்சினைகளை எழுப்பிவரும் அதே வேளையில், உங்கள் பதின்மவயது பிள்ளை அதனைப் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த உதவுவதற்கான அடிப்படை அணுகுமுறையானது, நீங்கள் ஏற்கெனவே மற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட அதே விதத்தைப் போன்றதாகும். இது, அது என்ன என்பது பற்றியும் உங்கள் பதின்மவயது பிள்ளை அதனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வதிலிருந்தும் தொடங்குகிறது. தகவல்கள் கிடைக்கும் சிறந்த இடங்களில் உங்கள் பதின்மயவது பிள்ளையும் ஒன்றாக இருக்கலாம். அவர்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்துகிறார்களா என்பதையும், அவ்வாறு பயன்படுத்தினால், அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள், அதில் அவர்கள் விரும்புவது என்ன என்பதுடன் அவர்களைக் கவலை கொள்ள வைப்பது எது என்பதையும் கேளுங்கள். இது சாதக பாதகங்கள், உருவாக்கும் AI இன் சாத்தியமான ஆபத்துக்களையும், மேலும் அதனை எவ்வாறு பொறுப்புணர்வுடன் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அவர்களிடம் விவாதிப்பதற்கான ஒரு சரியான நேரமாகவும் இருக்கலாம்.
அத்துடன், தொழில்நுட்பம் மாறக்கூடியது என்றாலும் அதன் மதிப்புகள் மாறாமலேயே இருக்கின்றன. உங்கள் பதின்மவயது பிள்ளைகள் துல்லியமான தகவல்களுக்கான அணுகலை வைத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் உருவாக்கும் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் குறித்து சிந்தனையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்றும் தன்னையும் பிறரையும் நன்கு கவனித்துக்கொள்பவராகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறீர்கள், இது சில சமயங்களில் தொழில்நுட்பத்திலிருந்து இடைவேளை எடுப்பதையும் குறிக்கிறது.அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களையும் போலவே, உருவாக்கும் AI தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது, எனவே காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து அறிந்து கொள்வது முக்கியம். இதில் வலைப்பூ பதிவுகள் மற்றும் நீங்களும் உங்கள் பதின்மவயது பிள்ளைகளும் பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிற அறிவிப்புகளுடன் உதவிப் பிரிவுகள் உட்பட செய்திகளைப் படிப்பதும் அடங்கும்.