தற்கொலை என்பது பேசுவதற்குக் ஒரு கடினமான தலைப்பு, ஆயினும் அதனைப் பற்றி நாம் பேசியாக வேண்டும். பெரியவர்களைப் போலவே, பதின்மவயதினரும் இந்த மோசமான முறையால் பாதிக்கப்பட நேரிடும். பெற்றோர், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நம்பகமான நபர்கள் என அனைவரும் ஒரு பதின்மவயது பிள்ளையின் வாழ்க்கையில் தற்கொலை தொடர்பான எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நடத்தைகளின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
பதின்மவயதினரிடம் தற்கொலை பற்றிப் பேசும்போது உதவிகரமாக இருக்கும் மொழி
இந்தப் பிரச்சினையைப் பற்றி உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் பேசுவது எளிதல்ல, ஆனால் நீங்கள் அந்த உரையாடலை நடத்தும்போது (அல்லது அவர்கள் அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று வந்தால்), அதிலிருந்து பின்வாங்க வேண்டாம்.
பயனுள்ளதாக இருக்கும் வகையில் பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கி முன்வைக்க வேண்டும். நீங்கள் மொழியையும் சூழலையும் பயன்படுத்தும் விதத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வுசெய்யும் வார்த்தைகள் உரையாடலை ஆழமான வழிகளில் பாதிக்கலாம். நம்பிக்கை, மீண்டெழுதல் மற்றும் உதவி-தேடுதல் பற்றிய கதைகளை உங்கள் உரையாடலின் முற்பகுதியில் வைத்திருங்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள சௌகரியமாக உணரக்கூடிய இடத்தை உருவாக்குங்கள். நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள் என்பதையும் அவர்களுக்கான உதவி எப்போதும் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இளம் வயதினருக்கான மனநலம் சார்ந்த சேவைகளில் கவனம் செலுத்தும் நமது கூட்டாளர் அமைப்பான Orygen - தொகுத்து ஒன்றாக வழங்கியிருக்கும் வழிகாட்டியில் உள்ள உதவிகரமாக இருக்கும் விஷயங்களின் எடுத்துக்காட்டுகள் சில கீழே உள்ளன. தற்கொலை பற்றிப் பேசும்போது இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
உதவிகரமான மொழி
மாறாக, தற்கொலை பற்றிய உரையாடலைச் சரியான திசையில் நகர்த்திச் செல்லாத சில வழிகள் உள்ளன.
உதவிகரமில்லா மொழி
பதின்மவயதினரிடம் தற்கொலை பற்றிப் பேசும்போது உதவிகரமாக இருக்கும் மொழி
இந்தப் பிரச்சினையைப் பற்றி உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் பேசுவது எளிதல்ல, ஆனால் நீங்கள் அந்த உரையாடலை நடத்தும்போது (அல்லது அவர்கள் அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று வந்தால்), அதிலிருந்து பின்வாங்க வேண்டாம்.
பயனுள்ளதாக இருக்கும் வகையில் பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கி முன்வைக்க வேண்டும். நீங்கள் மொழியையும் சூழலையும் பயன்படுத்தும் விதத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வுசெய்யும் வார்த்தைகள் உரையாடலை ஆழமான வழிகளில் பாதிக்கலாம். நம்பிக்கை, மீண்டெழுதல் மற்றும் உதவி-தேடுதல் பற்றிய கதைகளை உங்கள் உரையாடலின் முற்பகுதியில் வைத்திருங்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள சௌகரியமாக உணரக்கூடிய இடத்தை உருவாக்குங்கள். நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள் என்பதையும் அவர்களுக்கான உதவி எப்போதும் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இளம் வயதினருக்கான மனநலம் சார்ந்த சேவைகளில் கவனம் செலுத்தும் நமது கூட்டாளர் அமைப்பான Orygen - தொகுத்து ஒன்றாக வழங்கியிருக்கும் வழிகாட்டியில் உள்ள உதவிகரமாக இருக்கும் விஷயங்களின் எடுத்துக்காட்டுகள் சில கீழே உள்ளன. தற்கொலை பற்றிப் பேசும்போது இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
உதவிகரமான மொழி
- ஒரு நபர் "தற்கொலையால் இறந்தார்" என்று சொல்ல முயற்சி செய்யுங்கள் ("தற்கொலை செய்துகொண்டார்" என்பதற்குப் பதிலாக இவ்வாறு சொல்லலாம் – கீழே உள்ள உதவிகரமாக இல்லாத மொழிக்கான எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்).
- தற்கொலை என்பது சிக்கலானது மற்றும் ஒரு நபர் தனது வாழ்க்கையை முடிக்க பல காரணிகள் பங்களிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள்.
- நம்பிக்கை மற்றும் மீண்டெழுதல் பற்றிய மெசேஜ்களைச் சேர்த்திடுங்கள்.
- தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் மற்றவர்களுக்கு எங்கே, எப்படி உதவி பெறலாம் என்று சொல்லுங்கள்.
- அவர்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது, நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை போக்குவது போன்ற தற்கொலையிலிருந்து பாதுகாக்க உதவும் காரணிகள் பற்றிய தகவல்களைச் சேர்த்திடுங்கள்.
- தற்கொலை தடுக்கக்கூடியது என்றும், உதவி கிடைக்கக்கூடியது, மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் வெற்றிகரமாக உள்ளன என்றும், மீண்டெழுதல் சாத்தியம் என்றும் குறிப்பிடுங்கள்.
- இளம் வயதினர் என்ன உணர்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேச அவர்களை ஊக்குவித்திடுங்கள் — அவ்வாறானவர் ஒரு நண்பராகவோ, நம்பகமான பெரியவராகவோ, ஒரு தொழில்முறை நிபுணராகவோ கூட இருக்கலாம்.
மாறாக, தற்கொலை பற்றிய உரையாடலைச் சரியான திசையில் நகர்த்திச் செல்லாத சில வழிகள் உள்ளன.
உதவிகரமில்லா மொழி
- தற்கொலையைக் குற்றச்செயல் அல்லது பாவச்செயல் என்று விவரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் ("தற்கொலை செய்துகொண்டார்" என்பதை விட "தற்கொலையால் இறந்தார்" என்று சொல்லுங்கள்). இது ஒருவருக்கு அவர்கள் நினைப்பது தவறானது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பரிந்துரைக்கலாம் அல்லது அவர்கள் உதவி கேட்டால் அவர்கள் நியாயம் கற்பிக்கப்படுவார்கள் என்று ஒருவர் கவலைப்படலாம்.
- பிரச்சினைகள், வாழ்க்கைமுறை மனஅழுத்தங்கள் அல்லது மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தற்கொலையை ஒரு 'தீர்வாக' சொல்லாதீர்கள்.
- கவர்ச்சிகரமான, நேசிக்கக்கூடிய அல்லது தற்கொலையைக் கவர்ந்திழுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
- சிறுமைப்படுத்தும் அல்லது தற்கொலையை அதைவிட சிக்கலானதாகத் தோன்றக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
- ஒரு நிகழ்வு குறித்து குறை கூறியோ, கொடுமைப்படுத்துதல் அல்லது சமூக ஊடகப் பயன்பாடு போன்ற ஒற்றை காரணத்திற்காகத் தற்கொலை நிகழ்ந்ததாகவோ கூறாதீர்கள்.
- கட்டுக்கதைகள், அவமதித்தல், ஒரே மாதிரியான கருத்துகளை வலுப்படுத்துகிற வார்தைகள் அல்லது தற்கொலை பற்றி மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று பரிந்துரைத்தல் போன்ற தீர்மானிக்கும் விதமான சொற்றொடர்களைப் பயன்படுத்த வேண்டாம்.
- உண்மையான தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி பற்றிய விரிவான தகவல்களை வழங்க வேண்டாம்.
- தற்கொலை முறைகள் அல்லது தற்கொலை நடந்த இடம் பற்றிய தகவல்களை வழங்க வேண்டாம்.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ‘ஹாட் ஸ்பாட்’ இடத்தில் பல தற்கொலைச் செயல்கள் நடந்திருந்தால் அதனை அங்கீகரிக்க வேண்டாம்.
சமூக ஊடகங்களில் பதின்மவயதினரின் தற்கொலை எண்ணம் தொடர்பான நடத்தைகளைக் கவனியுங்கள்
தற்கொலை எண்ணம் தொடர்பான நடத்தைக்கான ஓர் எச்சரிக்கை அறிகுறி என்பது உங்கள் பதின்மவயது பிள்ளை "நான் வாழ விரும்பவில்லை" அல்லது "இதை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்" போன்ற விஷயங்களைச் சொல்வது. அவர்கள் நம்பிக்கையற்றவராகவும், உதவியில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கலாம் அல்லது மற்றவர்களுக்குச் சுமையாக இருப்பதாகக் குறிப்பிடலாம். அவர்கள் வழக்கமாகச் செய்யும் செயலில் ஆர்வத்தை இழக்கலாம் அல்லது திடீரென உணர்ச்சிவசப்படும் வகையில் செயல்படலாம்.
Oxygen குறிப்பிட்டுக்காட்டியுள்ளபடி, ஓர் இளம் நபர் தற்கொலை எண்ணம் கொண்டவராக இருக்கக்கூடும் என்பதற்கான பிற அறிகுறிகள் பின்வருமாறு:
- தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுதல்
- தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகளைத் தேடுவது (எ.கா. மாத்திரைகள், ஆயுதங்கள் அல்லது பிற வழிகளை அணுகுவது)
- வேண்டுமென்றே தன்னைதானே காயப்படுத்திக் கொள்ளுதல் (அதாவது கிழித்துக்கொள்ளுதல், வெட்டிக்கொள்ளுதல் அல்லது எரித்துக்கொள்ளுதல்)
- மரணம், இறந்து போதல் அல்லது தற்கொலை ஆகியவை குறித்து பேசுவது அல்லது எழுதுவது
- நம்பிக்கையின்மை
- ஆத்திரப்படுதல், கோபமடைதல், பழிவாங்க முயற்சித்தல்
- கவனக்குறைவாகச் செயல்படுதல் அல்லது ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல், சிந்திக்காமல் இருப்பது போல் தோன்றுதல்
- சிக்கலில் இருந்து வெளியேற வழியே இல்லாததுபோல் சிக்கிக்கொண்ட உணர்வுடன் இருத்தல்
- மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தல்
- நண்பர்கள், குடும்பம் அல்லது சமூகத்திலிருந்து விலகுதல்
- பதற்றம், கலக்கம், உறக்கநிலை அல்லது பசியார்வத்தில் ஏற்படும் மாற்றங்கள்
- மனநிலையில் வியத்தகு மாற்றங்கள்
- வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லாமல் இருத்தல், வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல் இருத்தல்
இவ்வாறான நடத்தை இருப்பதைக் கவனித்தால், இவை தற்கொலை எண்ணத்தின் நடத்தைக்கான அறிகுறிகளைக் காட்டும் பதின்மவயதினருக்கு உதவியளிக்க பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகளாகும்.
பதின்மவயதினருக்கு உதவியாக இருக்க பெற்றோர்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகள்:
உங்கள் பதின்மவயது பிள்ளை எச்சரிக்கையைத் தெரிவிக்கக்கூடிய அறிகுறிகளைக் காட்டிய பிறகு அல்லது உங்களுடன் பேச விரும்புவதாகச் சொன்ன பிறகு எப்படித் தொடங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய சில வழிகள் உள்ளன. Forefront தெரிவித்த, தாங்கள் செய்த பணியின் ஒரு பட்டியல் இதுவாகும்: தற்கொலைத் தடுப்பில் புத்தாக்கம்.
- புரிந்துகொண்டு, செவிமடுத்திடுங்கள். உங்களின் முழு கவனத்துடன் அவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்வுகளை வழங்க வேண்டாம் அல்லது எல்லாம் சரியாகிவிடும் என அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டாம்; அவர்களின் கருத்தைக் கேட்பதே தற்போது முக்கியமாகும். அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், அவர்களை மதிப்பிட வேண்டாம். “இப்போது பல்வேறு பிரச்சினைகளுடன் போராடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நாம் பேசலாமா? நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்பது போன்று அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய கேள்விகளைக் கேளுங்கள்.
- தற்கொலையைப் பற்றிக் கேளுங்கள். "தற்கொலையைப் பற்றி நினைக்கிறீர்களா?" எனத் தெளிவாக, நேரடியாகக் கேட்பதன் மூலம், நீங்கள் அவர்கள்மேல் அக்கறையாக இருப்பதையும், அவர்கள் எந்த அளவிற்கு மனச்சோர்வாக உள்ளனர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பதையும் தெரியப்படுத்தலாம். நேரடியாகக் கேட்பதன் மூலம், தன்னையே ஒருவர் கொலைசெய்து கொள்வதற்கான அபாயம் அதிகரிக்காது. அவர்கள் "ஆமாம், நான் தற்கொலையைப் பற்றிதான் நினைக்கிறேன்" எனக் கூறினால், பதட்டமடைய வேண்டாம். இதை அவர்கள் கூற அவர்களுக்கு எவ்வளவு தைரியம் வந்தது என்பதை அவர்களிடமே கூறி, தொடர்ந்து உரையாடுங்கள். அவர்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதைக் கூற ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் தனிமை உணர்வைக் குறைக்கலாம்.
- அபாயத்தை அகற்றுங்கள். தற்கொலையைப் பற்றி நினைப்பதாக அவர்கள் கூறினால், அவர்களிடம் அது பற்றிய திட்டம் உள்ளதா எனக் கேளுங்கள். ஆம் எனக் கூறினால், மருந்து, ஆயுதம் அல்லது கயிறு போன்றவை அவர்களிடம் உள்ளதா எனக் கேளுங்கள். இந்தப் பொருட்களை அவர்களிடம் இருந்து தூரமாக வைப்பது முக்கியமாகும் அல்லது பிற நண்பர்கள் அல்லது காவல் துறையை உதவிக்கு அழைத்திடுங்கள்.
- இன்னும் கூடுதலான பாதுகாப்பை அவர்கள் பெறுவதற்கு உதவுங்கள். உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசுவது முக்கியமானதாகும், மேலும் அவர்களை ஆலோசகர், உடல்நலப் பராமரிப்பு நிபுணர் அல்லது உதவி எண்ணைத் தொடர்புகொள்ள செய்வதும் சிறந்ததாகும்.
தற்கொலைத் தடுப்பு
தேசிய தற்கொலைத் தடுப்பு உதவி எண் 1-800-273-8255
Crisis Text Line 741-741
ஆபத்தான ஆன்லைன் "சவால்களுக்கு" பதிலளித்தல்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல், மக்களுக்குக் கொடுக்கப்படும், பெரும்பாலும் அடுத்தடுத்து தீவிரத்தன்மை அதிகரிக்கக்கூடிய ஆன்லைன் "தற்கொலை சவால்கள்" அல்லது "கேம்கள்" பொதுவாகத் தீங்கிழைக்கும் தொடர்ச்சியான பணிகளைக் கொண்டவையாக இருக்கும். இந்தச் சவால்களைப் பற்றி விவாதிக்கும் உட்பொருள் Metaவின் கொள்கைகளுக்கு எதிரானதாகும் . Meta இந்தப் பகிர்வை நீக்கிவிடும் மற்றும் சில சூழ்நிலைகளில், அதனைப் பதிவிட்ட கணக்குகளையும் நாங்கள் அகற்றக்கூடும்.
உங்கள் பதின்மவயது பிள்ளை இந்த வகையான படைப்பைப் பகிர்வதை நீங்கள் கண்டால் (அல்லது அவர்கள் அதைப் பகிர்வதை வகுப்புத் தோழர்கள் பார்த்ததாகச் சொன்னால்), அடுத்து என்ன செய்வது என்பது குறித்த சில பரிந்துரைகள் இங்கே உள்ளன:
- ஆபத்தைப் புரிந்து கொள்ளுதல். ஆபத்தை நிராகரிக்க வேண்டாம். இந்தப் பகிர்வு பரவுவதைத் தடுப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.
- செவிமடுப்பதில் தீவிரமாக இருங்கள். இளம் வயதினர் தாங்கள் ஆன்லைனில் பார்த்த விஷயங்கள் அல்லது நண்பர்கள் அல்லது மற்றவர்கள் செய்த பதிவுகள் அல்லது கருத்துகளைப் பற்றி ஏதேனும் கவலைகள் அல்லது கவலைகளை வெளிப்படுத்தினால், அதைச் செவிமடுத்துக் கேட்டு உதவியளிப்பது முக்கியம்.
- தாக்கத்தைக் கருத்தில் கொள்ளுதல். ஆன்லைன் சுய-தீங்கு மற்றும் தற்கொலை சவால்கள் பற்றிய எச்சரிக்கைகளை முன்னனுப்புவது கூட சிலருக்குத் தூண்டுதலாக இருக்கலாம். மக்கள் தொடர்ந்து தகவலறிந்து இருப்பது முக்கியம், ஆனால் தற்கொலை தொடர்பான தலைப்புடன் நீங்கள் எதைப் பகிர்கிறீர்கள் என்பதையும் அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
- அது குறித்து புகாரளித்திடுங்கள். சமூக ஊடக சேனல்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது துன்பம் தரக்கூடிய பொருத்தமற்ற ஆன்லைன் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். தளங்கள் தங்கள் கொள்கைகளுக்கு எதிரான பகிர்வை மதிப்பாய்வு செய்து அகற்றும்.
- அதைப் பற்றிப் பேசுங்கள். உங்களுக்கு பதின்மவயதினர் இருந்தால் (அல்லது இளம் வயதினருடன் பணிபுரிபவராக இருந்தால்), அவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் ஆன்லைன் செயல்பாட்டைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்கான வழிகளைக் கண்டறியுங்கள். சவாலைப் பற்றி நேரடியாகக் கேட்பது பலனளிக்கவில்லை என்றால், அதைக் கண்டறிய மறைமுகமான வழிகளை முயற்சி செய்யுங்கள். இளம் வயதினர் தங்கள் பெற்றோரிடம் நம்பிக்கை வைக்கலாம் என்பதியும், நேர்மையாக இருப்பதற்காகத் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
உதவி வளங்கள்
Meta தொழில்நுட்பங்களில் நலமுடன் வாழ்தல் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு பற்றிய கூடுதல் ஆன்லைன் உதவி வளங்களுக்கு, எங்களின் தற்கொலைத் தடுப்புக்கான கேந்திரம்அல்லது எங்களின் பாதுகாப்பு மையத்துக்கு செல்லுங்கள்.
எங்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்குச் சிறந்த முறையில் உதவ, இந்த நிபுணர் நிறுவனங்களுடன் Meta இணைந்து செயல்படுகிறது:
அமெரிக்கா
தேசிய தற்கொலைத் தடுப்பு உதவி எண் 1-800-273-8255
Crisis Text Line 741-741
அம்சங்கள் மற்றும் கருவிகள்
தொடர்புடைய உதவி விவரங்கள்
தற்கொலை குறித்த உரையாடல்களுக்கான பெற்றோர் மற்றும் பராமரிப்பாளருக்கான வழிகாட்டி
மேலும் படித்திடுக