எல்லா நேரத்திலும் அவர்களுக்காக உடனிருங்கள்
பாலியல் ரீதியான மிரட்டலை எதிர்கொள்ளும் இளைஞர்கள், சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பயத்தில் இருக்கலாம். தங்கள் பெற்றோரைச் சங்கடப்படுத்துவது அல்லது பள்ளியில் இருந்து நீக்கப்படுவது, நண்பர்கள் தவறாக நினைப்பது, காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்வது குறித்து அவர்கள் கவலை கொள்ளலாம். தவறான செயலைச் செய்பவரே இதுபோன்ற பயங்களைக் கூறி அவர்களைக் கட்டுப்படுத்தலாம், கவலையளிக்கும் விதமாக, இது நிகழ்கிறது. இந்தப் பயங்களால் இளைஞர்கள் வாயடைத்துப் போகிறார்கள், அது விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
உங்கள் பயமும் கவலையும் சாதாரணமானதுதான், ஆனால் கடினமான சூழல்களில் நீங்கள் அவர்களுடன் எப்போதும் உடனிருப்பீர்கள் என்பதை உங்கள் பதின்மவயதினருக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள் என நீங்கள் நினைத்தாலும், இதுபோன்ற உரையாடல்களை மேற்கொள்வது அவர்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், இதனால் ஏதேனும் தவறாக நிகழும்போது தங்கள் அனுபவத்தை உங்களுடன் பகிர்வார்கள்.