உங்கள் பிள்ளைக்குப் பதிலளித்து அவருக்கு உதவுதற்கான 5 படிநிலைகள்.
பல பிள்ளைகளின் வாழ்வில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. இது அவர்களுக்குக் கற்கும், தொடர்புகொள்ளும் மற்றும் கேளிக்கையில் ஈடுபடும் உலகைத் திறக்கிறது. ஆனால் ஆன்லைனில் இருப்பதில் ஆபத்தும் இருக்கிறது. பிள்ளைகள் ஆன்லைனில் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தலை எதிர்கொள்ள நேரலாம், தகாத பகிர்வைப் பார்க்கலாம் அல்லது அவர்களுக்கு வருத்தம், அசௌகரியம் அல்லது பயத்தை ஏற்படுத்தக்கூடிய பிற அனுபவங்களைக் கொண்டிருக்கலாம். உங்கள் பிள்ளை இதனை ஆன்லைனில் எதிர்கொண்டால், அவர்களுக்கு உதவ நீங்கள் எடுக்கக்கூடிய ஐந்து படிநிலைகள் இதோ இங்கே.