AI என்பது பதின்மவயது பிள்ளை தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கற்றுக்கொள்ளும், உருவாக்கும் மற்றும் ஆய்ந்தறியும் விதத்தின் ஒரு பெரும் பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், ஒரு பெற்றோராகப் புதிய மாற்றங்களைத் தெரிந்துகொள்வது பெரும் சவாலாகத் தோன்றலாம். ஆனால் நல்ல விஷயம் என்னவெனில், உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் AI பற்றி அர்த்தமுள்ள உரையாடலை மேற்கொள்ள, நீங்கள் AI இல் ஒரு நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஆர்வத்துடனும், திறந்த மனதுடனும், கேட்க விரும்பும் மனப்பான்மையுடனும் இருந்தால் போதும். நீங்கள் இப்போதே செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், பேசத் தொடங்குவதுதான்.உரையாடலைத் தொடங்கும் விஷயங்களை உருவாக்க நாங்கள் இணைய வழி கொடுமைப்படுத்துதல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பணியாற்றினோம்: உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் நீங்கள் கேட்கக்கூடிய விரிவான பதிலுக்கான கேள்விகள், அவை AI உடனான அவர்களின் அனுபவங்களைப் பற்றிய தீர்மானம் ஏதும் இல்லாத உரையாடலைத் தொடங்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்வியும் எதற்குத் தீர்வுகாண உருவாக்கப்பட்டது மற்றும் அதை எப்படி அணுகுவது என்பதை விளக்கும் வழிகாட்டுதலுடன் வருகிறது.
1. AI உங்களுக்கு உதவிய மிகவும் பயனுள்ள விஷயம் என்ன?
நேர்மறையாகத் தொடங்குங்கள். பதின்மவயதினர் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பெரியவர்களிடமிருந்து ஏளனப் பார்வையைப் பெறுகிறார்கள், எனவே உண்மையான ஆர்வத்துடன் தொடங்குவது உரையாடலின் முழு உணர்வையும் மாற்றுகிறது. இங்கு ஒரு குறிப்பிட்ட பதிலைப் பெறுவது உங்கள் நோக்கமல்ல. கவனியுங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளை தோள்களைக் குலுக்கினாலோ, உறுதியாகத் தெரியவில்லை என்று சொன்னாலோ, பள்ளிக்காக ஒரு விஷயத்தைக் கண்டறிய அல்லது அவர்கள் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கேள்விக்குப் பதிலளிக்க AI எப்போதாவது உதவியதா என்பதை அறிய நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் யோசிக்கத் தொடங்க உதவுங்கள். அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது அவர்கள் இந்தக் கருவிகளை உண்மையில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி உங்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும்.2. AI காரணமாக ஒருவர் சுவாரசியமான சூழ்நிலையில் இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பள்ளியில் அல்லது நண்பருக்கு நடந்தது போல் தெரிகிறதா?
உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் அவர்களின் சொந்த விருப்பங்களைப் பற்றி நேரடியாகக் கேட்பதை விட அவர்களின் நண்பர்கள் அல்லது வகுப்புத் தோழர்களைப் பற்றி விசாரிப்பது பெரும்பாலும் எளிதாக இருக்கும். பெரும்பாலானோரிடம் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும் அல்லது குறைந்தபட்சம் தங்கள் சகாக்கள் குழுவில் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். அந்தக் கதையைக் கேட்டுப் பெற்றுவிட்டால், அதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தார்கள், அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நீங்கள் கேட்கலாம். கல்விசார் நேர்மை, அளவுக்கு அதிகமான தகவல்களைப் பகிர்தல் அல்லது AIக்குப் பதிலாக ஒருவரிடம் நேரில் உதவி கேட்க வேண்டிய நேரத்தை அறிதல் போன்ற தலைப்புகளை ஆராய்வதற்கான இயல்பான இடம் இதுவாகும். நீங்கள் அவர்களைத் துருவித் துருவி விசாரிக்காதீர்கள். அவர்கள் செயல்படும் ஆன்லைன் உலகின் நிலை குறித்து அறிந்திட நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறீர்கள்.3. AI உங்களை அசௌகரியமாக உணர வைக்கும் அல்லது வினோதமாக உணர வைக்கும் விஷயத்தை எப்போதாவது கூறியிருந்தால், அதைப் பற்றி என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா?
இது நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். நீங்கள் உண்மையில் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் பதின்மவயது பிள்ளை உங்களைத் தேடி வருவதற்கு அனுமதி மற்றும் ஊக்கத்தை அளிப்பது தான். பிறகு, நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்பதையும், நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிய விரும்புகிறீர்கள் என்பதையும் உடனடியாக அவர்களுக்கு நினைவூட்டுங்கள். உங்கள் பதின்மவயதினர் உங்களுக்கு மேலோட்டமான பதிலை வழங்கினால் அல்லது அதனைத் தவிர்க்க விரும்பினால், வற்புறுத்த வேண்டாம். அதை அப்படியே விட்டுவிடுங்கள். நீங்கள் ஒரு விதையை நட்டுள்ளீர்கள், அந்தத் தருணத்தில் அதிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அது முக்கியமானதாகும்.4. நீங்கள் AI இடம் ஒருபோதும் சொல்ல விரும்பாத விஷயம் ஏதேனும் உள்ளதா? நீங்கள் தனிப்பட்டதாகவே வைத்திருக்க வேண்டும் என விரும்பும் விஷயங்கள் போன்றவை?
இதைப் பற்றி நிறைய பயனர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் அந்தத் தருணத்தில் என்ன பகிர வேண்டும் என்பதைப் பற்றி முடிவுகளை எடுக்கிறார்கள், அந்தத் தருணங்கள் வழக்கமாக அவர்கள் மிகவும் தெளிவாகச் சிந்திக்கும் தருணங்கள் அல்ல. உங்கள் பதின்மவயதினர் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துவிட்டுப் பிறகு வருத்தப்படுவதற்கு முன்பாகவே இப்போது அதைப் பற்றிக் கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும். தயங்காமல் முதலில் நீங்கள் உரையாடலைத் தொடங்குங்கள். அமைப்புகள் உரையாடலின் முந்தைய பகுதிகளை நினைவில் வைத்திருந்து பிறகு குறிப்பிடலாம் என்பதை அறிந்து, AIஇல் டைப் செய்யும் விஷயங்களைப் பற்றி நீங்கள் கவனமாக இருக்க முயற்சி செய்வதாக நீங்கள் குறிப்பிடலாம். மேலும் தனிப்பட்ட தருணத்தில் நீங்கள் ஒரு சாட்பாட்டுடன் பேசுவது போல் உணர்வது எளிது, எனினும் நீங்கள் பகிர்வது என்பது இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும் தரவு என்பதை நினைவில்கொள்ள இது உதவுகிறது, அதைப் பற்றிக் கவனமாக இருப்பது புத்திசாலித்தனமான விஷயம். பிறகு உங்கள் பதின்மவயதினரின் எண்ணங்களை அறிந்துகொள்ள முயலுங்கள். இங்கு தவறான பதில்கள் என்று எதுவும் இல்லை, மேலும் இது பெரும்பாலான நபர்களுக்குச் சூழலைப் பொறுத்து மாறக்கூடிய விஷயமாக இருக்கும். நீங்கள் அதை முழுமையாக நீங்களே கண்டுபிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவது உரையாடலை நேர்மையானதாகவும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் வைத்திருக்கும்.5. உண்மையான நபரிடம் கேட்பதை விட எளிதாக இருப்பதாக உணர்ந்ததால், AI இடம் நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?
உங்கள் பதின்மவயது பிள்ளை இங்கே மனம் திறந்து வெளிப்படையாக பேசினால், இரண்டு விஷயங்களை உரக்கச் சொல்ல வேண்டும். முதல் விஷயமாக, அவர் தேடி வர விரும்பும் பாதுகாப்பான நபராக நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என்பதையும் நீங்கள் அவரைத் தவறாக நினைக்கமாட்டீர்கள் என்பதையும் கூறுங்கள். இரண்டாவதாக, அவர்கள் தானாகவோ நண்பர்கள் சேர்ந்தோ விஷயங்களைக் கண்டுபிடித்தால் அது முற்றிலும் சரியே. அது பெரியவர்களாக வளரும்போது நிகழும் சகஜமான விஷயம் தான், மேலும் அதில் AI பொருந்தும் இடம் என்பது முற்றிலும் நியாயமான உரையாடலை மேற்கொள்வதாகும். AI எல்லா விஷயங்களையும் எப்போதும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதையும், அந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட்டு வருகிறது என்பதையும் அவர்களுக்குக் கனிவுடன் நினைவூட்டுங்கள். உண்மையிலேயே பகிர வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்குமானால், அவர்கள் நன்கு அறிந்த, நம்பகமான ஒருவரிடம் நேரில் வெளிப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.6. Meta AI பெரியவர்களுக்குச் செயல்படுவது போல் அல்லாமல் உங்கள் வயதினருக்கு உண்மையில் வேறுபட்ட முறையில் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Meta AI சில தலைப்புகள் பதின்மவயதினருக்கு வேறுபட்ட முறையில் கையாளப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில கேள்விகள் திசைதிருப்பப்படும், மேலும் பிற தலைப்புகளில் Meta AI ஈடுபடுவதே இல்லை. மனநலம் போன்ற முக்கியமான தலைப்புகளைப் பொறுத்தவரையில், எடுத்துக்காட்டாக, Meta AI ஆனது உரையாடலை மேற்கொள்வதை விட வெளிப்புற உதவி விவரங்களைக் குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிருங்கள், பிறகு உங்கள் பதின்மவயது பிள்ளை தனக்குத் தெரிந்தவற்றைப் பகிர அனுமதியுங்கள். அவர்கள் அதைப் பற்றி யோசித்திருக்கக்கூடும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், நீங்கள் அவர்களுக்குச் சிந்திப்பதற்கான ஒரு விஷயத்தை வழங்கியிருக்கிறீர்கள்.7. நீங்கள் சமீபத்தில் [topic] குறித்து ஆராய்ந்து வருகிறீர்கள் என்பதை நான் கவனித்தேன். அந்தத் துறை குறித்து உங்கள் மனதில் என்ன உள்ளது?
குடும்ப மையம் வழியாக, கடந்த ஏழு நாட்களில் Meta AI மூலம் உங்கள் பதின்மவயது பிள்ளை ஆய்ந்தறிந்த பத்து பொதுவான தலைப்புத் துறைகள் வரை நீங்கள் பார்க்கலாம், அவை உடல்நலம் மற்றும் நலமுடன் வாழ்தல், தொழில்நுட்பம் அல்லது பயணம் போன்ற விஷயங்களாகும். வகைகள் பரந்த அளவிலானவையாக இருக்கும் என்பதுடன் ஒரு தலைப்பைப் பார்ப்பதால் மட்டும் அவர்கள் உண்மையில் கேட்ட விஷயம் குறித்துத் தெரிந்துகொள்ள முடியாது. மாறாக, இது உரையாடலைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதப்படுகிறது. நீங்கள் ஒருவராக ஆராய்வதை விட, உங்கள் பதின்மவயதினருடன் இணைந்து இந்தத் தலைப்புகளைப் பார்ப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைப் பகிரப்பட்ட செயல்பாடாக மாற்றுவது அவர்கள் தவறு செய்யும்போது கையும் களவுமாகப் பிடிக்க நீங்கள் முயற்சிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் நீங்கள் உண்மையான அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை நிரூபிப்பதே உங்கள் இலக்காகும், அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுப்பது அல்ல. பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம் ஏதாவது இருந்தால், உடனடியாகப் பதட்டமடையாமல் இருக்க முயலுங்கள். அதனை மேற்கொண்டு உரையாடலுக்கான ஒரு முக்கிய விஷயமாகப் பயன்படுத்துங்கள். கருவியைப் பற்றிய கூடுதல் தகவல்களை Meta உதவி மையத்தில் பார்க்கலாம்.8. AI உங்களுக்கு எப்போதாவது தவறான தகவலைக் கூறியுள்ளதா?
AI சில சமயங்களில் விஷயங்களைக் கற்பனை செய்கிறது, மேலும் அது முழு நம்பிக்கையுடன் அப்படிச் செய்கிறது. உங்கள் பதின்மவயது பிள்ளை இதற்கான சொல்லை ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும்: "தவறாக வழிநடத்தும் பதிலளிப்புகள்" எனினும், காலப்போக்கில் AI மாதிரிகள் தொடர்ந்து மேம்படும் போதிலும், தவறாக வழிநடத்தும் பதிலளிப்புகள் இன்னும் வழக்கமான முறையில் நிகழும். உங்கள் பதின்மவயதினர் AI என்பது தேடல் என்ஜினைப் போன்றது அல்ல என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது, மேலும் அது தங்களுக்குச் சொல்வதை இருமுறை சரிபார்ப்பது நல்ல, வழக்கமான நடைமுறையாகும். அது தவறான தகவல்களை உருவாக்கியதை தாங்கள் ஒருபோதும் கண்டறியவில்லை என்று அவர்கள் கூறினால், அது தவறான தகவலை உருவாக்கியிருந்தால் அதை அவர்கள் எப்படிக் கண்டறிவார்கள் என்று கேளுங்கள். மேலும், நண்பர்களுடன், வகுப்பில் அல்லது வீட்டுப்பாடத்தில் நம்பிக்கையுடன் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு, அந்த விஷயம் AI முற்றிலும் கற்பனையாக வழங்கியது தான் என்பதைப் பிறகு தெரிந்துகொள்ளும்போது எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்பதைப் பற்றி அவர்களை மெதுவாகச் சிந்திக்க வையுங்கள்.9. பள்ளிப் பணிக்காக AIஐப் பயன்படுத்துவது பற்றி உங்கள் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? எது நிச்சயமாக ஏற்கத்தக்கது மற்றும் எது நிச்சயமாக ஏற்கத்தக்கது அல்ல என்பதைப் பற்றி உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? வரம்பு எங்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
மற்றவர்களைப் பற்றிக் கேட்பது உங்கள் சொந்தப் பதின்மவயது பிள்ளையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. யோசனைகளைப் பரிமாறிக் கொள்ள உதவுவதற்காக AIஐப் பயன்படுத்துவதற்கும், அவர்களுக்காகப் பணியைச் செய்ய AIஐப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். எளிதான பதில் என்று எதுவும் இல்லை, அதனால்தான் நீங்கள் இருவரும் அதைப் பற்றிப் பேச வேண்டும். இந்தத் தலைப்பில் உங்கள் தனிப்பட்ட நிலையை வலியுறுத்துவதை விட ஆர்வத்துடன் இருக்க மறக்காதீர்கள். நீங்கள் அவர்களின் கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்ளலாம், மேலும் சில இடங்களில் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்கலாம். அவர்களும் அதைச் செய்யலாம். அது உரையாடலை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது.10. AI என்பது அனைவரும் அடிக்கடி பேசும் ஒரு விஷயமாகும். இதைப் பற்றி உங்களுக்குத் தயக்கத்தையோ கவலையையோ ஏற்படுத்தக்கூடிய எதையேனும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா படித்திருக்கிறீர்களா அல்லது இப்போது உங்களுக்குப் புரியாத விஷயம் ஏதேனும் உள்ளதா?
இந்தக் கேள்வியுடன், அவற்றுக்கான சரியான பதில்களைக் கூற வேண்டும் என்ற அழுத்தத்தை நீங்கள் பெருமளவில் உணரக்கூடும். அதற்கான தேவை எதுவுமில்லை. நாம் ஒரு மாற்றம் நிகழும் தருணத்தில் உள்ளோம், மேலும் அதிகமான விஷயங்கள் அறியப்படாமல் உள்ளன. நமது சமூகத்திலும் நமது வாழ்க்கையிலும் AIஇன் அதிகரித்து வரும் இருப்பைப் பற்றிய உரையாடலுக்கு இப்போதும் எதிர்காலத்திலும் பாதுகாப்பான இடத்தை உருவாக்க முயற்சி செய்கிறோம். உங்களை ஈர்க்கும் அல்லது உங்களுக்குக் கவலை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் தயங்காமல் எடுத்துரையுங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளை உண்மையில் உதவிகரமான மற்றும் புத்துணர்வை ஏற்படுத்தும் அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம், அது அந்த விஷயத்தில் உங்கள் குழப்பங்கள் தீர்ந்து தெளிவுபெற உதவக்கூடும். இதைக் கண்டுபிடிக்காமல் இருப்பது பரவாயில்லை, காலப்போக்கில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எந்தக் கேள்விக்கும் விடை காணலாம் என்பதே எங்களின் விருப்பம்.11. நீங்கள் உண்மையில் AIஐ எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. எப்போதாவது எனக்கு அதைக் கற்றுக்கொடுக்க முடியுமா?
உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுக்குமாறு நீங்கள் கேட்டால், அவர்கள் இப்போது உங்களுக்குப் பதிலாக அதிகாரத்தில் இருப்பதால், முழு நிலையும் மாறுகிறது. சரியான நேரத்தில் நீங்கள் அவர்களிடம் சொல்லித்தருமாறு கேட்டால், உங்கள் பதின்மவயது பிள்ளை இந்தக் கோரிக்கைக்குச் சாதகமாகப் பதிலளிப்பார்கள். இந்தக் கருவிகளுடன் அவர்கள் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான காட்சியை இது உங்களுக்கு வழங்கும் - இதை வேறு எந்த வழியிலும் பெற முடியாது. ஒருவேளை நீங்கள் இருவரும் அவர்களுக்குப் பிடித்த காஃபி அல்லது ஐஸ்கிரீம் கடைக்குச் சென்று தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டே அமர்ந்தவாறு அவர்கள் AIஐ எப்படி ஏற்றுக்கொண்டு, அதன் நன்மைகளைப் பெற்று மகிழ்கிறார்கள் என்பதை அவர்கள் உங்களுக்கு விளக்குவார்கள். அந்தத் தருணத்தில் அவர்கள் கற்றுத்தர ஒத்துக்கொண்டால், நாள்காட்டியில் உடனடியாக ஒரு நாளைக் குறித்துக்கொள்ளுங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளை சிறிது நேரத்திற்கு உங்களை அவர்களின் உலகிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பை நீங்கள் தவறவிடக் கூடாது.அம்சங்கள் மற்றும் கருவிகள்
தொடர்புடைய உதவி விவரங்கள்
விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான குடும்ப வழிகாட்டி
மேலும் படித்திடுக