மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்

பொறுப்புமிக்க சமூக ஊடகப் பயன்பாடு பற்றி LGBTQ+ பதின்மவயதினரிடம் பேசுதல் | LGBT Tech

வழங்குபவர் LGBT Tech

மார்ச் 14, 2024

  • Facebook ஐகான்
  • Social media platform X icon
  • கிளிப்போர்டு ஐகான்
இரண்டு நபர்கள் ஒன்றாக ஃபோனைப் பார்த்தவாறு புன்னகைத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
பதின்மவயதினருடன் அவர்களின் மெசேஜ் அனுப்புதல், சமூக ஊடகங்கள் மற்றும் செல்ஃபோன் பயன்பாடு பற்றிய உரையாடலை உருவாக்குவது என்பது இந்த வயதில் உள்ளவர்களுக்கான பொறுப்பேற்கும் பெரும்பாலான பெரியவர்களுக்குச் சவாலான காரியமாக இருக்கலாம். பெரும்பாலான சமூக ஊடகச் செயலிகள் தங்கள் பயனர்கள் குறைந்தபட்சம் 13 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்ற தேவையைக் கொண்டிருந்தாலும், இளைஞர்கள் ஒரு கணக்கைப் பதிவுசெய்வதற்காக உண்மைக்கு மாறான வயதைத் தெரிவிக்கக்கூடும். அமெரிக்காவில் சராசரியாக ஒரு நபர் 10 வயதில் தனக்காக ஒரு செல்ஃபோனைப் பெறுகிறார், மேலும் தங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் அணுகல் இருப்பதாக 95% பதின்மவயதினர் தெரிவிக்கின்றனர். எனவே, நம்பகமான பெரியவர்கள் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சமூக ஊடகங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து தங்கள் பதின்மவயதினருடன் வெளிப்படையாக உரையாடுவது முக்கியமாகிறது.

பதின்மவயது பிள்ளையின் வாழ்வில் உங்களுடைய உறவுநிலை என்னவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் வாழ்வில் அதிக சுதந்திரத்தையும், பொறுப்புடைமையும், தனியுரிமையையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், மேலும் இதில் ஃபோன்களும் சமூக ஊடகங்களும் பெரும் பங்கை வகிக்க முடியும். LGBTQ+ இளைஞர்களுக்கு, அவர்கள் தங்கள் பாலியல்பு, சமூகத்தைக் கட்டமைத்தல், உடல் நலன் குறித்த தகவல்கள் மற்றும் பொதுவான பாதுகாப்புக் கவலைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்பதால் அவர்களின் ஃபோன் பல சூழ்நிலைகளில் உயிர்நாடியாக இருக்கும். எனினும், அவர்களின் ஆன்லைன் பாதுகாப்புடன் அதைச் சமநிலைப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். பின்வரும் பரிந்துரைகள் அனைத்துப் பதின்மவயதினருக்கும் முக்கியமானவை, என்றாலும் அதிகளவு பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் குறித்த ஆபத்தில் உள்ள LGBTQ+ இளைஞர்களுக்கு இந்த உரையாடல்களை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறான சில சமயங்களில்-கடினமாகத் தோன்றும் உரையாடல்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


பரிந்துரை #1 - பூஜ்ஜியம்-சகிப்புத்தன்மைக் கொள்கையானது சில சமயங்களில் மிகக் குறைந்த அளவிலேயே வெற்றிகரமாக இருக்கக்கூடும்.


ஒரு பதின்மவயது பிள்ளை டிஜிட்டல் அல்லது சமூக ஊடகக் கணக்கை வைத்திருக்கும் அளவுக்குப் போதுமான முதிர்ச்சியடைந்தவராகவோ, பொறுப்புணர்வுடனோ இல்லாமல் இருக்கக்கூடும் என்பதைக் குறிப்பிட்டு, அதன் மூடுதலைக் கோருவதற்குப் பதிலாக, Netsmartz.org பரிந்துரைக்கப்பட்டபடி சில கலந்துரையாடலைத் தொடங்குவதற்கான விஷயங்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அவற்றில் சில பின்வருமாறு:

  • உங்களுக்குப் பிடித்த வலைதளம் அல்லது செயலி எது?
  • நீங்கள் அங்கு என்ன செய்ய விரும்புவீர்கள்?
  • ஆன்லைனில் நீங்கள் பார்க்க விரும்பாத ஒன்றை எப்போதாவது பார்த்ததுண்டா?


LGBTQ+ இளைஞர்களுக்குப் பிற பதின்மவயதினரைச் சென்றடையவும், தொழில்முறை உதவியைப் பெறுவதற்காகவும் பாதுகாப்பு தொடர்பான உதவி வளங்களின் பட்டியலையும் நீங்கள் வழங்கலாம்.

சராசரி LGBTQ+ இளைஞர்கள் தங்கள் வயதை ஒத்த எதிர்பாலின ஈர்ப்புடைய சகாக்களை விட ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் அதிகமாக ஆன்லைனில் செலவிடுகிறார்கள் என்பது தெரியவருவதால், பதின்மவயதினர் யாருடன் பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும், அவர்கள் எப்போதாவது தகாத மெசேஜ்கள், படங்கள் அல்லது தகவல்களைப் பகிர்ந்துள்ளார்களா அல்லது பகிருமாறு அணுகப்பட்டுள்ளார்களா என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் தனியுரிமை மற்றும் பொறுப்புடைமையைக் கொண்டிருக்கூடிய ஒரு பகுதி என்பது ஆன்லைன் நடத்தையில் எது சரி, எது சரியில்லை என்பது பற்றிய அறிவை வெளிப்படுத்துவதே ஆகும் என்பது தொடர்பாகக் கலந்துரையாடுங்கள்.

பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பதின்மவயதினருடனான ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அவர்களைக் கண்காணிப்பதன் மூலமாகவோ, ஃபோன்/இணைய வசதியைத் துண்டித்தல் மூலமாகவோ மட்டுமே நிர்வகிக்கத் தூண்டப்படக்கூடும். இயல்பாகவே, இது இளையோரின் தரப்பில் எதிர்ப்பை உருவாக்க வாய்ப்புள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் சில சமயங்களில் பயனுள்ளதாக இருந்தாலும், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான வெளிப்படையான தகவல்தொடர்பு மற்றும் உரையாடலுடன் இணைத்து அவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவை நேரெதிர் வளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பதின்மவயதினர் கண்டறிந்த பெற்றோரின் கட்டுப்பாடு அல்லது பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்கான ஒரு மாற்றுத் தீர்வு என்பது எளிதில் கிடைக்கக்கூடிய விலை மலிவான “பர்னர்” அல்லது “ட்ராப் ஃபோன்களை” பயன்படுத்துவதாக உள்ளது. தொழில்நுட்பம் அல்லது டிஜிட்டல் அனுபவங்களை அகற்றுதல் பெரும்பாலும் பயனுள்ளதாக இருப்பதில்லை; அதற்குப் பதிலாகப் பதின்மவயதினருக்கு ஆன்லைனில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து கற்பிப்பதற்கான வழிகளில் பெற்றோர்கள் கவனம் செலுத்தலாம்.

பரிந்துரை #2 – உங்கள் பதின்மவயது பிள்ளையின் டிஜிட்டல் தடயத்தைப் பாதுகாக்க உதவுங்கள்.


ஆன்லைனில் எதைப் பகிர வேண்டும், எதைப் பகிரக்கூடாது என்பதைப் பற்றி உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் பேசுவது, குறிப்பாக இது பாலியல் ரீதியான மேசேஜ்கள் தொடர்புடையது என்பதால் பேசுவது முக்கியமாகும். பதின்மவயதினர் பிற பதின்மவயதினருடன் தகாத உறவுநிலைகளில் சிக்கிக் கொள்ள நேரலாம், அத்துடன் அவர்களின் தனிப்பட்ட படங்கள் அல்லது தகவல்களைத் தேடும் பாலியல் வெறியர்களால் பாதிக்கப்படவும் நேரலாம். பாதிக்கப்பட்ட பதின்மவயதினருக்கு அவர்களின் வாழ்வில் அக்கறையுள்ள பெரியவர்கள் மற்றும் மனநல நிபுணர்களின் உதவி தேவைப்படும். “பாலியல் ரீதியான மேசேஜ்களைப் பற்றிப் பதின்மவயதினரிடம் பேசுதல்” இளைஞர்களுடன் இந்த உரையாடல்களை எப்படிப் பேசுவது என்பது பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது, மேலும் Netsmartz குடும்பங்களுக்கு உதவக்கூடிய உதவி வளங்களை வழங்குகிறது.

பரிந்துரை #3 – உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் பகிரும் அடையாளம், இருப்பிடம் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களைப் பற்றிப் பேசுங்கள்.


பதின்மவயதினர் கேமிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ஆன்லைன் அணியினர் அல்லது எதிரணியினருடன் தங்கள் தனியுரிமை அமைப்புகள் பற்றியும், என்னென்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்பதைப் பற்றியும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உலக அளவில் பரவிய தொற்றுநோயின் தாக்கத்தின் போது, ஆன்லைன் ஈர்ப்பு கிட்டத்தட்ட 100% உயர்வைக் கண்டது. கேமிங், சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜிங் அம்சச் செயலிகள் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக இளைஞர்கள் அணுகப்படும்போது தான் இவை நிகழ்ந்தன. ரோல் ப்ளே, உரையாடல் அல்லது உறவுநிலையைக் கட்டமைப்பதன் மூலம் இளைஞர்கள் "பாலியல் ரீதியாகத் தயார்படுத்தப்பட்டிருக்கலாம்" அல்லது மிரட்டல் அல்லது விற்பனை/வர்த்தகத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ஆபாசப் படங்கள்/இமேஜ்களை அனுப்ப ஊக்குவிக்கப்படலாம். LGBTQ+ இளைஞர்கள் மேலும் ஆபத்தில் உள்ளனர், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் பாலியல் அடையாளத்தைத் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லாதபோது பல்வேறு உதவி வளங்களில் இருந்து தகவல்கள் அல்லது உதவியைத் தேடுகிறார்கள். HRC.org வழங்கும் Being an LGBTQ+ Ally போன்ற உதவி வளங்கள் இந்த நிலையில் உள்ள LGBTQ+ இளைஞர்களுக்கு உதவியளிக்க விரும்புபவர்களுக்கு உதவும்.

பரிந்துரை #4 – ஆன்லைனில் "கேலி" செய்வது ஒரே கிளிக்கில் இணைய வழி கொடுமைப்படுத்துதலைச் செய்பவராக ஆக்கிவிடும் என்பதை உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் பதின்மவயது பிள்ளை கொடுமைப்படுத்தப்பட்டாலோ, வேறு ஒருவரைக் கொடுமைப்படுத்தினாலோ, ஆன்லைனில் பகிரப்பட்ட விஷயங்கள் நிஜத்தில் ஒருபோதும் மறைந்துவிடாது. LGBTQ மாணவர்களில் 48.7% பேர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இணைய வழி கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்கின்றனர். ஆன்லைனில் ஒருவரைக் காயப்படுத்தும் வகையிலான விஷயத்தைப் பகிர்வது அல்லது “விருப்பம் தெரிவிப்பது” கூட கொடுமைப்படுத்துதலை ஊக்குவிக்கிறது. Stopbullying.gov தளம் இணைய வழி கொடுமைப்படுத்துதலை வரையறுத்து, அதனை எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதில் இவ்வாறான சூழ்நிலைகளில் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு உதவியளிப்பதற்கான வழிகளைக் கண்டறியலாம்.

பரிந்துரை #5 – உங்கள் பதின்மவயது பிள்ளை தங்கள் நண்பர்கள் யார் என்பதை அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


பதின்மவயது பிள்ளையின் சமூக ஊடகப் பக்கத்தில் புதிய நண்பர்களையும் பின்தொடர்பவர்களையும் உறுதிப்படுத்துவதும் பெறுவதும் உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கும். நண்பரின் நண்பர் விடுக்கும் நட்புக்கான அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பாதிப்பில்லாதது என்பதுடன் புதிய மற்றும் நேர்மறையான உறவுநிலைகளுக்கு வழிவகுக்கலாம், ஆனால் பதின்மவயதினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் வீடியோ கேம்கள் என்பன பெரியவர்கள் பெரும்பாலும் கண்காணிப்பு தேவை என்பதைக் கருத்தில் கொள்ளாத ஆனால் கருத்தில் கொள்ள வேண்டிய ஆன்லைன் தகவல்தொடர்புக்கான மற்றொரு மூலமாகும். வீடியோ கேம்கள் பல பதின்மவயதினருக்கான பிரபலமான சமூக அவுட்லெட்டாகும் (அவர்கள் ஃபோனில் இல்லாதபோது), மேலும் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடும்போது புதிய ஆன்லைன் நண்பரை உருவாக்கியதாகக் கூறுகிறார்கள். சமூகத்தைக் கட்டமைத்தல், புதிய நண்பர்களைக் கண்டறிதல் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் LGBTQ+ இளைஞர்களுக்குப் பயனளிக்கும் சாத்தியத்தை ஆன்லைன் கேமிங் கொண்டுள்ளது, எனினும் கேமிங்கில் ஈடுபடும் அதே வேளையில் பதின்மவயதினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதும் முக்கியம்.

புதிய நண்பர்கள் அல்லது பின்தொடர்பவர்களின் பதிவுகளைக் கண்காணிக்குமாறு உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு நினைவூட்டுவது முக்கியம். கணக்குகள் ஹேக் செய்யப்படலாம் என்பதுடன் தங்கள் கணக்குகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்கும் பதின்மவயதினர் தங்களை மட்டுமல்லாமல், அவர்களின் உண்மையான நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களையும் பாதுகாக்க உதவுகிறார்கள். பயன்படுத்தப்படும் சமூக ஊடகத் தளத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறும் தனிநபர்களின் கணக்குகளை – வெறுமனே புறக்கணிப்பது மட்டுமல்லாமல் – தடுக்கவும், புகாரளிக்கவும் உங்கள் பதின்மவயது பிள்ளையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

பரிந்துரை #6 - உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் எதிர்வினையாற்றும் வகையிலான உரையாடல்கள் அல்லாது தடுப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் உரையாடல்கள், சங்கடமான அல்லது அசௌகரியமான உரையாடல்களைக் குறைக்கலாம்.


LGBTQ+ இளைஞர்கள் ஆன்லைன் சூழ்நிலைகளில் தனக்குத்தானே எவ்வாறு உதவிக்கொள்வது என்பது குறித்த கல்வியறிவு இல்லாமல் இருந்தால் அவர்கள் எளிதில் ஆபத்துக்கு உள்ளாகும் நபர்கள் ஆகக்கூடும். LGBTQ+ பதின்மவயது பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு நம்பகமான பெரியவராக, முன்னோக்கிச் செயல்பட்டு பொறுப்பான டிஜிட்டல் பயன்பாட்டினைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும். ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான LGBTQ+ பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் உள்ள அசௌகரியத்தால் இந்த உரையாடல்களைப் புறக்கணிக்காதீர்கள்; அதற்குப் பதிலாக, இந்தப் பொறுப்பை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி, குறிப்பாகப் பூஜ்ஜியம்-சகிப்புத்தன்மைக் கொள்கை நடவடிக்கைகள் நேரெதிர் வளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அது குறித்த கல்வி மூலமாக உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு உதவிகரமாக இருங்கள். உங்கள் சொகுசு வட்டத்திற்கு வெளியே உள்ள தலைப்புகளுக்கு, கீழே உள்ள உதவி வளங்களின் மூலம் உதவியை நாடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பதின்மவயதினரைப் பற்றியும் அவர்களின் டிஜிட்டல் நலமுடன் வாழ்தல் பற்றியும் நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உதவி வளங்கள்



  • LGBTQ+ பதின்மவயதினரின் பாதுகாப்பு மற்றும் ஆன்லைனில் தனியுரிமையைப் பற்றிக் குடும்பங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
  • Being an LGBTQ Ally
  • LGBTQ இளைஞர்களுக்கான நேரடி ஆன்லைன் மற்றும் ஃபோன் வழி உதவிக்கான சேவைகள்
  • LGTQ+ இளைஞர்களுக்கான The Trevor Project உதவி வளங்கள்
  • இணைய வழி கொடுமைப்படுத்துதல் தொடர்பான பெற்றோருக்கான வழிகாட்டி
  • Stopbullying.gov
  • பாலியல் ரீதியான மிரட்டலை நிறுத்துதல்


அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Instagram லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்