மெட்டா
மேற்பார்வ
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள

Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகள்: உள்ளமைந்த பாதுகாப்புகள் உங்கள் பதின்மவயது பிள்ளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் விதம்

Meta படைப்பு

ஏப்ரல் 8, 2025

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
வெளிப்புறச் சூழலில் மற்றவர்கள் அருகில் பேசிக் கொண்டிருக்கையில், மல்லாந்து படுத்துக்கொண்டு ஃபோனைப் பயன்படுத்தும் ஒருவர்.
13+ வயதுடையவர்களுக்கான உள்ளடக்க அமைப்புகள் உட்பட, Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகளின் பாதுகாப்புகள், பெற்றோருக்கு மன அமைதியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, பாதுகாப்பு அமைப்புகள் அதுவாகவே செயல்படுத்தப்படும் என்பதால் – பெற்றோர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
13+ வயதுடையோருக்கான உள்ளடக்க அமைப்புகள் இந்த ஆண்டு முழுவதும் Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகளில் கூடுதல் பாதுகாப்புகளுடன் பல கட்டங்களில் வெளியிடப்படும்.
பதின்மவயதினருக்கான உள்ளமைந்த பாதுகாப்புடன் கூடிய Facebook பதின்மவயதினர் கணக்கு அமைவு

பதின்மவயதினருக்கான உள்ளமைந்த பாதுகாப்புகள்

பதின்மவயதினர் பாதுகாப்பான மற்றும் மிகவும் நேர்மறையான ஆன்லைன் அனுபவங்களைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் பெற்றோரின் மிகப்பெரிய கவலைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில் Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகளை வடிவமைத்துள்ளோம். 13 முதல் 17 வயதுடைய Facebook மற்றும் Messenger பயனர்கள் பின்வரும் அனைத்து அம்சங்களையும் தானாகவே பெறுவார்கள்:
  • பார்வையாளர் கட்டுப்பாடுகள்: பதின்மவயதினர் கணக்கு அமைப்புகள் தானாகவே ‘நண்பர்கள்’ என அமைக்கப்படும், அவர்கள் பதின்மவயது பிள்ளையின் பதிவுகள், ஸ்டோரிகள், ரீல்ஸ், நண்பர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் பின்தொடரும் பக்கங்களைக் காணலாம்.
  • வயதுக்குத் தகுந்த கட்டுப்பாடுகள்: 13+ அமைப்பில் இருக்கும்போது பதின்மவயதினருக்குத் தகாத உள்ளடக்கத்தை முதன்மையாகப் பகிரும் சுயவிவரங்கள் அல்லது பக்கங்களின் உள்ளடக்கத்தைப் பின்தொடர, தேட, செயலை மேற்கொள்ள கட்டுப்படுத்தப்படுவார்கள் அல்லது பார்க்கும் திறன் குறைக்கப்படும்.
  • தேடல்: தற்கொலை, சுய-தீங்கு மற்றும் உணவுப்பழக்கம் சார்ந்த குறைபாடுகள் போன்ற சில பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகள் தொடர்பான தேடல் சொற்களை நாங்கள் ஏற்கெனவே தடுத்துள்ளோம். இப்போது 'ஆல்கஹால்' அல்லது 'கொடூரமானது' போன்ற பல்வேறு வயதுவந்தோருக்கான தேடல் சொற்களுக்கான உள்ளடக்க முடிவுகளைப் பார்க்கும் பதின்மவயதினரின் திறனைத் தடுப்போம்— மேலும் இந்தச் சொற்கள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் அவை தடுக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
  • மெசேஜிங் அம்சக் கட்டுப்பாடுகள்: பதின்மவயதினர் தானாகவே பாதுகாப்பான மெசேஜ் விநியோக அமைப்புகளைக் கொண்டிருப்பார்கள். Facebook நண்பர்கள் அல்லது பிற இணைப்புகள் (எ.கா. இதற்கு முன்பு அவர்கள் மெசேஜ் அனுப்பியவர்கள்) மட்டுமே அவர்களுடன் அரட்டையடிக்க முடியும். அவர்களின் ஃபோன் எண்ணை வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு மெசேஜ் கோரிக்கைகளை அனுப்பலாம். பதின்மவயதினருக்குத் தகாத உள்ளடக்கத்தை முதன்மையாகப் பகிரும் சுயவிவரங்கள் மற்றும் பக்கங்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்கான அல்லது அவற்றுடன் செயலை மேற்கொள்வதற்கான பதின்மவயதினரின் திறன் கட்டுப்படுத்தப்படும்.
  • உள்ளடக்கக் கட்டுப்பாடுகள்: பதின்மவயதினர் பொதுவாக 13+ வயதினருக்கானதாக மதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்தில் பார்ப்பதைப் போன்ற பதிவுகள், ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகள் போன்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பார்கள்.
  • நேரலை ஒளிபரப்புக் கட்டுப்பாடுகள்: 18 வயதுக்குட்பட்ட அனைத்துப் பதின்மவயதினருக்கும் நேரலை ஒளிபரப்பு அம்சம் இயல்புநிலையாக முடக்கப்பட்டிருக்கும். 16 வயதுக்குட்பட்ட பதின்மவயதினர் இந்த அம்சத்தை இயக்க பெற்றோரின் மேற்பார்வை அம்சம் தேவைப்படும்.
  • கட்டுப்படுத்தப்பட்ட கலந்துரையாடல்கள்: பதின்மவயது பிள்ளைகள் தங்கள் சுயவிவரத்தில் பதிவு தோன்றுவதற்கு முன்பு, அவர்கள் அடையாளமிடப்பட்ட பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும். பதின்மவயதினர் கணக்குகளில், "உங்கள் எதிர்காலப் பொது ரீல்ஸை எவரும் ரீமிக்ஸ் செய்ய அனுமதித்திடுக" என்ற அமைப்பும் முடக்கப்பட்டிருக்கும்.
  • கால வரம்பு நினைவூட்டல்கள்: பதின்மவயதினர் தினமும் Facebookஐப் பயன்படுத்திய 60 நிமிடங்களுக்குப் பிறகு மூட வேண்டும் எனக் கூறும் அறிவிப்புகளைப் பெறுவார்கள்.
  • உறக்கநிலை பயன்முறை செயல்படுத்தப்பட்டது: 10 PM முதல் 7 AM மணி வரை உறக்கநிலை பயன்முறை இயக்கப்படும், இது இரவு முழுவதும் Facebook அறிவிப்புகளை முடக்கிவிடும்.
உள்ளடக்கம், நேரம் மற்றும் மெசேஜ் அனுப்புதலுக்கான பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடுகளுடன் கூடிய Facebook பதின்மவயதினர் கணக்கு அமைப்பு.

Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகளில் மேற்பார்வையைப் பயன்படுத்துதல்

மேற்பார்வை என்பது Facebook மற்றும் Messenger இல் தங்கள் பதின்மவயதினரை (13-17 வயதினர் அல்லது சில இடங்களில் 14-17 வயதினர்) ஆதரிப்பதில் உதவ பெற்றோரும் பாதுகாவலர்களும் பயன்படுத்தக்கூடிய கருவிகள் மற்றும் புள்ளிவிவரங்களின் தொகுப்பாகும். பதின்மவயதினர் கணக்குகளில், மேற்பார்வையானது பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பதின்மவயதினருக்கான பாதுகாப்பு அமைப்புகளைப் பார்க்கவும், சில அமைப்புகளைக் குறைந்த பாதுகாப்புடையதாக மாற்றுவதற்கான அவர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க அல்லது மறுக்கவும் உதவுகிறது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நேர வரம்புகளையும் நிர்ணயிக்கலாம், மேலும் பதின்மவயதினருக்கான பிற பாதுகாப்பு அமைப்புகளை இன்னும் மிகுந்த பாதுகாப்புடையதாக மாற்றலாம்.
பதின்மவயதினர் கணக்குகளில் மேற்பார்வையை அமைத்ததும், பெற்றோர் செய்யக்கூடியவை:
  1. தினசரி வரம்பு மற்றும் உறக்கநிலை பயன்முறை மூலம் தங்கள் பதின்மவயது பிள்ளையின் Facebook நேரத்தை நிர்வகிக்கலாம்.
  2. சில அமைப்புகளைக் குறைந்த பாதுகாப்புடையதாக மாற்றுவதற்கான தங்களின் பதின்மவயது பிள்ளையின் கோரிக்கையை அனுமதிக்கலாம் அல்லது மறுக்கலாம்.
  3. பதின்மவயது பிள்ளைகளின் Facebook நண்பர்கள், Messenger தொடர்புப் பட்டியல் மற்றும் அவர்கள் யாரைத் தடுத்தார்கள் என்பதுடன் அவர்கள் Facebook மற்றும் Messengerஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.
ஒரு பதின்மவயதினர் கணக்கில் மேற்பார்வை அம்சம் அமைக்கப்பட்டிருந்தால், பதின்மவயதினர் தங்கள் அமைப்புகளை அவர்களாகவே மாற்றியமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படாத வரையில், குறைந்த பாதுகாப்புடைய அமைப்புகளை உருவாக்கும் மாற்றங்களைப் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அனுமதிக்க வேண்டியிருக்கும்.
மேற்பார்வைக் கருவி செயல்படும் விதம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம் பதின்மவயதினர் கணக்குகளுக்கான பெற்றோர் அல்லது பாதுகாவலர் மேற்பார்வை பற்றிய பொதுவான கேள்விகள்.
Facebook அல்லது Messenger இல் மெசேஜிங் அம்ச அமைப்புகளை மாற்றுவதற்கான பெற்றோர் அனுமதி அறிவிப்பைக் காட்டும் திரைகள்.

பெற்றோர்கள் தங்களின் மன அமைதியை வளர்க்க உதவும் உதவிக்குறிப்புகள்

உங்கள் பதின்மவயது பிள்ளைகளுக்குப் பதின்மவயதினர் கணக்குகள் ஒரு சிறந்த தொடக்கமாகும், எனினும் உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் அவரது ஆன்லைன் பயன்பாடு குறித்த வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்கள் அவர்களின் ஆன்லைன் அனுபவங்கள் நேர்மறையானவை என்பதை உறுதிசெய்வதற்கு எப்போதும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளாகும். நீங்கள் தொடங்குவதற்கான சில வழிகள் இங்கே:
  • ஆன்லைன் பாதுகாப்பு குறித்து உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் பேசுங்கள்: உங்கள் பதின்மவயது பிள்ளைகள் தாங்கள் உருவாக்குபவை, மற்றவர்களுடன் பகிர்வதைப் பற்றிக் கவனத்துடனும் பொறுப்புடனும் இருக்குமாறு ஊக்குவித்திடுங்கள்.
  • எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைத்திடுங்கள்: உங்கள் பதின்மவயது பிள்ளையின் திரை நேர வரம்புகளை நிர்ணயிக்கவும், அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மேற்பார்வைக் கருவிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துங்கள்.
  • ஈடுபாட்டுடன் இருங்கள்: உங்கள் பதின்மவயது பிள்ளையின் ஆன்லைன் வாழ்க்கையில் தீவிர அக்கறை எடுத்து, அவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் அவர்களின் அனுபவங்களைப் பற்றித் தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள்.

கூடுதல் உதவி வளங்கள்

Meta குடும்ப மையத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பதின்மவயதினரைக் கொண்ட பெற்றோருக்காக டஜன் கணக்கான கட்டுரைகள் உள்ளன. கூடுதல் உதவிக்கு, எங்கள் உதவி வளக் கேந்திரத்தை பார்வையிடுங்கள் அல்லது கீழே உள்ள கட்டுரைகளில் ஒன்றைப் பார்வையிடுங்கள்:
  • உங்கள் பிள்ளைக்கு ஆன்லைனில் உதவியாக இருப்பதற்கான 5 படிநிலைகள் | குடும்ப மையம்
  • ஆன்லைனில் வயதுக்குத் தகுந்த உள்ளடக்கம்: பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
  • உங்கள் குழந்தைகளுடன் அவர்களின் டிஜிட்டல் ஆளுமையைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்குதல் | குடும்ப மையம்
  • சமூக ஊடகம் குறித்து பிள்ளை வளர்ப்புக்கான உதவிக்குறிப்புகள் | குடும்ப மையம்
  • ஆரோக்கியமான ஆன்லைன் கலந்துரையாடல்கள் பற்றிப் பதின்மவயதினருடன் பேசுதல் | குடும்ப மையம்
Metaவில், உங்கள் பதின்மவயது பிள்ளையை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகள் மூலம், உங்கள் பதின்மவயது பிள்ளை மிகவும் பாதுகாப்பான மற்றும் நேர்மறையான டிஜிட்டல் சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள் மற்றும் கருவிகளால் பாதுகாக்கப்படுவர். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், உங்கள் பதின்மவயது பிள்ளை ஆரோக்கியமான ஆன்லைன் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், பாதுகாப்பான ஆன்லைன் அனுபவத்தைப் பெற்று மகிழ்ந்திடவும் எங்களால் உதவ முடியும்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Facebook லோகோ
Facebook இல் குடும்ப மையம்
Facebook லோகோ
Facebook இல் மேற்பார்வையை அமைத்தல்
Messenger லோகோ
உங்கள் பிள்ளையின் பதின்மவயதினர் கணக்குக்கு உதவுதல்
Messenger லோகோ
Messenger இல் மேற்பார்வையை அமைத்தல்

தொடர்புடைய உதவி விவரங்கள்

பதின்மவயதினர் கணக்குகளில் இப்போது நூற்றுக்கணக்கான பதின்மவயதினர் உள்ளனர், அத்துடன் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் உதவியைச் சேர்த்து வருகிறோம்
மேலும் படித்திடுக
மாணவர்கள் ஆன்லைனில் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க உதவும் வகையில் Meta மற்றும் Childhelp, பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன
மேலும் படித்திடுக
பாலியல் ரீதியான மிரட்டல் மற்றும் அந்தரங்கப் படத்தைத் தவறாகப் பயன்படுத்துதலில் இருந்து பாதுகாக்க உதவும் புதிய கருவிகள்
மேலும் படித்திடுக

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2026 Meta
இந்தியா