ஆன்லைனில் கொடுமைப்படுத்துதல்: ஒரு நீடித்திருக்கும் பிரச்சினை
உங்கள் பதின்மவயது பிள்ளையின் பள்ளியின் மதில் சுவர்களுக்குள் மட்டுமே கொடுமைப்படுத்துதல் அடங்கிவிடுவதில்லை. பல மாணவர்கள் தங்கள் வகுப்புத் தோழர்களுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆன்லைனிலும் அழுத்தம் அல்லது துன்புறுத்தலை உணரக்கூடும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்கள், எழுத்து மெசேஜ்கள்,செயலிகள் அல்லது வீடியோ கேம்கள் மூலமும் கூட ஆன்லைன் கொடுமைப்படுத்துதல் நிகழக்கூடும். ஒருவரைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல்களைப் பதிவிட்டு (அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல்) நேரடியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவது முதல் அல்லது தேவையற்ற அல்லது தீங்கிழைக்கும் நடத்தை என அனைத்தையும் கூட இது உள்ளடக்கியிருக்கலாம்.