Deepfake என்றால் என்ன?
ஆன்லைன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பிரபலங்களின் போலியான ஆபாசப் படங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியபோதுதான் "deepfake" ("ஆழ்ந்த கற்றல் + போலியான விஷயம்") என்ற சொல் உருவானதாகத் தெரிகிறது. இவற்றை உருவாக்க, நம்பமுடியாத அளவிற்கு உண்மையானவைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட உட்பொருளை (எ.கா., படங்கள் மற்றும் வீடியோக்கள்) உருவாக்கிட செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட முக அமைப்புகள் மற்றும் உடல் பாவனை/நிலைகளை உன்னிப்பாகக் கவனித்து, ஒரு நபரின் கணிசமான அளவு தகவல்களை (எடுத்துக்காட்டாக: ஒருவரின் பல மணிநேர வீடியோக்கள், ஆயிரக்கணக்கான புகைப்படங்கள்) கணினித் திறனைக் கொண்டு பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்தக் கற்றல் மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன.
அடுத்து, இந்தக் கற்றல் மாதிரியானது, ஒருவர் மாற்றியமைக்க அல்லது உருவாக்க விரும்பும் படங்கள்/ஃபிரேம்களுக்கு அல்காரிதம் முறையில் பயன்படுத்தப்படுகிறது (உதாரணமாக, ஒரு நபர் சொல்லாத ஒன்றைச் சொன்னது போல் காட்டுவதற்காக, அசல் வீடியோவில் உதட்டசைவுகளைப் பொருத்துதல் மற்றும் ஒலியைச் சேர்த்தல்). உண்மையானது போன்ற தோற்றத்தை உருவாக்கிட, 'கிளிட்சிங்' (இயல்பாகத் தோன்றும் சிறிய பிழைகள்) போன்ற நுட்பங்களைச் சேர்ப்பது அல்லது மாஸ்கிங்/எடிட்டிங் போன்ற கூடுதல் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கிடைக்கும் இறுதி முடிவுகள் வியக்கத்தக்க வகையில் நம்பத்தகுந்ததாக இருக்கின்றன. Deepfake எடுத்துக்காட்டுகளை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், அவை எந்தளவுக்கு உண்மைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் பிள்ளையை ஏதேனும் deepfake பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும், எது உண்மை எது பொய் என்று பிரித்தறிய அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Deepfakesஐ அடையாளம் காண்பது எப்படி
தொழில்நுட்பம் வளர வளர deepfakes அதிகளவில் உண்மையானவை போலவே தெரிந்தாலும், படம் அல்லது வீடியோவில் உள்ள சில தகவல்களை (உதாரணமாக, இயற்கையாக இமைக்காத கண்கள்) கூர்ந்து கவனிப்பதன் மூலம் அவற்றை அடிக்கடி கண்டறிய முடியும். வாய், கழுத்து/காலர் அல்லது நெஞ்சுப் பகுதியைச் சுற்றியுள்ள இயற்கைக்கு மாறான அல்லது மங்கலான விளிம்புகளை பெரிதாக்கி உற்றுப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அசல் படைப்பு மற்றும் மிகைப்படுத்தப்பட்ட படைப்பு ஆகியவற்றுக்கு இடையே தவறான சீரமைப்புகள் மற்றும் பொருத்தமின்மைகள் பெரும்பாலும் தென்படக்கூடும்.
வீடியோக்களில், ஒருவர் அந்தக் கிளிப்பின் வேகத்தைக் குறைத்து, சாத்தியமான உதடு ஒத்திசைவின்மை அல்லது நடுக்கம் போன்ற காட்சி முரண்பாடுகளைக் கண்டுபிடிக்கலாம். மேலும், சொல்லப்படுவதற்கு ஏற்ற உணர்ச்சிகளைக் காட்சியில் தோன்றுபவர் வெளிப்படுத்தாமல் இருப்பது, வார்த்தையைத் தவறாக உச்சரிப்பதைப் போல தோன்றுவது, அல்லது வேறு ஏதேனும் வித்தியாசமான முரண்பாடுகள் தென்படும் தருணங்களில் கவனம் செலுத்துங்கள். இறுதியாக, படங்களில் ரிவர்ஸ் இமேஜ் தேடல்களை (அல்லது வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் தேடல்களை) இயக்குவது அவை மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பான அசல் வீடியோவை உங்களுக்குச் சுட்டிக்காட்டலாம். அந்த நிலையில், எது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்க இரண்டு படைப்புகளையும் கவனமாக ஒப்பிட்டுப் பாருங்கள். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், உங்கள் உணர்வுகள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும்; இடம்பெறும் விஷயங்களை மிகக் கவனமாகப் பார்ப்பதற்கும் கேட்பதற்குமான வேகத்தை நாம் குறைக்கும் போது, பொதுவாக ஏதோ ஒரு விஷயம் தவறாக இருப்பதை நம்மால் உணர முடியும்.
பதின்மவயதினரிடம் அவர்கள் ஆன்லைனில் பதிவிடும் அனைத்தும் deepfakeஐ உருவாக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம். அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளில், மற்றவர்கள் அவர்களின் அனுமதியின்றி அணுகக்கூடிய மற்றும் மாற்றியமைக்கக்கூடிய படைப்புகளின் களஞ்சியத்தை அவர்கள் உருவாக்கியிருக்கலாம். அவர்களுடைய முகம், அசைவுகள், குரல் மற்றும் பிற பண்புகள் திருடப்பட்டு வேறொரு நபரின் முகச்சாயலில் பொருத்தப்படலாம் – குறிப்பாக ஒருவரின் நற்பெயருக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை இது உருவாக்கும். இது சம்பந்தமாக உரையாடலை எளிதாக்க, சரி-தவறு என்றில்லாத, புரிந்துகொள்ளும் வகையிலான அவர்களிடம் கேட்கக்கூடிய சில கேள்விகள் இதோ இங்கே:
Deepfakes ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிரீதியான, உளவியல் ரீதியான மற்றும் நற்பெயர் சார்ந்த பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது அவை பதின்மவயதுப் பிள்ளைகளின் நலனைச் சீர்குலைக்கும் ஆற்றல் கொண்டவை. செவி வழியான, காட்சி வழியான மற்றும் தற்காலிக முரண்பாடுகள் மனிதப் பார்வையில் கவனிக்கப்படாமல் போகலாம் என்றாலும், படம் அல்லது வீடியோவில் இடம்பெறக்கூடிய சீரற்ற தன்மையைக் கண்டறிந்து கொடியிடும் வகையிலான மென்பொருள் துல்லியமாக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருவதால், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காகப் பணியாற்றும் பிற பெரியவர்கள் deepfakes இன் உண்மைத்தன்மைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவை உருவாக்கப்படுவதாலும் பரப்பப்படுவதாலும் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கவும் முயற்சிக்க வேண்டும். அதே சமயம், உங்கள் பதின்மவயதினர் ஏதேனும் deepfake சூழ்நிலையில் (மற்றும், அவர்கள் எதிர்கொள்ளும் வேறு ஏதேனும் ஆன்லைன் தீங்கில்) சிக்கிக் கொண்டால், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் கண்டறிய உதவுவதற்கு நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டுங்கள்.
- நீங்கள் சில நபர்களை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில், அவர்கள் உங்களோடு முரண்படுவது அல்லது போட்டிப்போடுவது சாத்தியமா?
- உங்களைப் புண்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைக்காத ஒருவரால் நீங்கள் எப்போதாவது புண்பட்டிருக்கிறீர்களா? அது மீண்டும் நடக்குமா?
- புதிதாக ஒருவர் பின்தொடர்ந்தாலோ புதிய நண்பர் கோரிக்கைகள் வந்தாலோ, அவர்கள் நம்பத்தகுந்தவர்களா என்பதை உறுதிப்படுத்த அவர்களின் சுயவிவரத்தைச் சரிபார்க்கிறீர்களா? அவர்களை நம்பலாமா?
- உங்கள் நண்பர்களின் பதிவுகள் எப்போதாவது மற்றொருவரால் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? இது உங்களுக்கு நடக்க வாய்ப்புள்ளதா?
Deepfakes ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிரீதியான, உளவியல் ரீதியான மற்றும் நற்பெயர் சார்ந்த பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது அவை பதின்மவயதுப் பிள்ளைகளின் நலனைச் சீர்குலைக்கும் ஆற்றல் கொண்டவை. செவி வழியான, காட்சி வழியான மற்றும் தற்காலிக முரண்பாடுகள் மனிதப் பார்வையில் கவனிக்கப்படாமல் போகலாம் என்றாலும், படம் அல்லது வீடியோவில் இடம்பெறக்கூடிய சீரற்ற தன்மையைக் கண்டறிந்து கொடியிடும் வகையிலான மென்பொருள் துல்லியமாக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருவதால், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காகப் பணியாற்றும் பிற பெரியவர்கள் deepfakes இன் உண்மைத்தன்மைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவை உருவாக்கப்படுவதாலும் பரப்பப்படுவதாலும் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கவும் முயற்சிக்க வேண்டும். அதே சமயம், உங்கள் பதின்மவயதினர் ஏதேனும் deepfake சூழ்நிலையில் (மற்றும், அவர்கள் எதிர்கொள்ளும் வேறு ஏதேனும் ஆன்லைன் தீங்கில்) சிக்கிக் கொண்டால், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் கண்டறிய உதவுவதற்கு நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டுங்கள்.
அம்சங்கள் மற்றும் கருவிகள்
தொடர்புடைய உதவி விவரங்கள்
பதின்மவயதினருக்கான Instagram 13+ பகிர்வு அமைப்புகள்
மேலும் படித்திடுக