ஆன்லைன் உள்ளடக்கத்தின் சிறந்த வாசகர்களாகத் திகழ இளம் நபர்களுக்கு உதவுதல்

இணையமும் சமூக ஊடகங்களும் தகவல்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் துல்லியமானவை அல்லது நம்பகமானவை என்று அர்த்தமல்ல. நல்லதில் இருந்து கெட்டதை பிரித்தறிய, தங்கள் பதின்மவயதினர் ஆன்லைன் மீடியா பற்றிய கல்வியறிவைக் கட்டமைத்திட பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.

பெரியவர்களைப் போலவே, எந்தத் தகவல்கள் நம்பகமானவை, எது தவறானது, மீடியா அல்லது படங்கள் மாற்றப்பட்டுள்ளபோது அல்லது திருத்தப்பட்டுள்ளபோது ​​உண்மை இல்லாத அல்லது உறுதிப்படுத்தப்படாத விஷயங்களை ஆன்லைனில் பகிராமல் இருப்பது போன்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்கவும் பதின்மவயதினருக்கு திறன்கள் தேவை.

மீடியா கல்வியறிவைக் கட்டமைப்பதற்கான உதவிக்குறிப்புகள்

நீங்கள் பார்க்கும் தகவல்கள் நம்பகமானவையா என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஆஃப்லைன் உலகத்தைப் போலவே, எது துல்லியமான, நம்பகமான தகவல், எது துல்லியமான, நம்பகமான தகவல் அல்ல என்ற உணர்வை இளம் நபர்கள் வளர்த்துக் கொள்ள நீங்கள் சில அடிப்படைப் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

அடிப்படை விஷயங்களுடன் ஆரம்பிக்கலாம்: உள்ளடக்கத்தில் ஈடுபடுவதற்கு முன் அல்லது உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு முன், பதின்மவயதினர் சில கேள்விகளைத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள உதவுங்கள், இது அந்த உள்ளடக்கத்தைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தக்கூடும்: பிரபலமான ஐந்து பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்: யார்? என்ன? எங்கே? எப்போது? மற்றும் ஏன்?

  • இந்த உள்ளடக்கத்தைப் பகிர்ந்தவர் யார்? அவர்கள் உங்களுக்குத் தெரிந்தவரா? ஆம் எனில், அவர்களை உங்களுக்கு எப்படி தெரியும்? அவர்கள் அதை வேறொரு ஆதாரத்திலிருந்து பகிர்ந்திருந்தால், அது என்ன ஆதாரம்? அசல் ஆதாரத்தை நீங்கள் நெருங்க நெருங்க, அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • மற்ற ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? எதையும் பகிர்வதற்கு முன், அதைப் பற்றி மேலும் ஆராயவும், அதே கருத்தைச் சொல்லும் மற்ற புகழ்பெற்ற ஆதாரங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கவும். பிற நம்பகமான ஆதாரங்களால் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • அது எங்கிருந்து வந்துள்ளது? தங்கள் பத்திரிகை நேர்மை குறித்து தீவிரமாக இருக்கும் செய்தி ஆதாரங்கள் தங்கள் தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற விஷயத்தில் வெளிப்படையாக இருக்கும். உங்கள் பதின்மவயதினருக்கு இது குறித்து எடுத்துரைக்கும்போது, அந்த ஆதாரத்திற்கு “அறிமுகம்” பக்கம் இருந்தால், அவற்றைப் பார்வையிட்டு, அது எவ்வளவு காலமாக இருக்கிறது, அவற்றின் பின்னணித் தகவலில் அவற்றை நம்புவதற்கான காரணம் ஏதுமிருக்கிறதா என பார்க்கச் சொல்லவும்.
  • அது எப்போது உருவாக்கப்பட்டது? சில நேரங்களில் பழைய படங்கள், மேற்கோள்கள் அல்லது கதைகள் புது விதத்தில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன, இதன் விளைவாக தவறான தகவல் பரவுகிறது. ஏதோவொரு தகவல் முதலில் எப்போது உருவாக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம், அதைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம், இது அதன் நம்பகத்தன்மைக்கு இன்னும் கொஞ்சம் சமிக்ஞையை அளிக்கிறது.
  • அது ஏன் உருவாக்கப்பட்டது? அந்த உள்ளடக்கம் உருவாக்கப்பட்ட மற்றும் பகிரப்பட்டதற்கான காரணத்தைப் பற்றி சிந்தியுங்கள். சில உள்ளடக்கங்கள் நமக்குத் தகவல்களைத் தெரியப்படுத்துவதற்காகவும், மற்றவை நம்மை சிரிக்க வைப்பதற்காகவும், சில உள்ளடக்கங்கள் காரணமே இல்லாமலும் இருக்கும். ஒருவர் ஏன் ஓர் உள்ளடக்கத்தை உருவாக்கினார் என்பதற்குப் பின்னால் உள்ள காரணங்களை நீங்கள் உணர்ந்தால், அது நம்பகமானதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.

இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஓர் ஆரம்பம் மட்டுமே. இணையத்தில் எந்தத் தகவல்களை நம்பலாம், எந்தத் தகவல்களை நம்பக்கூடாது என்கிற நல்ல உணர்வை பதின்மவயதினர் வளர்த்துக் கொள்வதற்கு நேரம் பிடிக்கும். அவர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் நேரத்தைச் செலவிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவர்கள் ஆன்லைனில் என்ன படிக்கலாம், எதனை உருவாக்கலாம், எதில் ஈடுபடலாம் அல்லது எதைப் பகிரலாம் என்பது குறித்து நல்ல தேர்வுகளைச் செய்ய, சுயமாக முடிவெடுக்க உதவும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

உதவி செய்வதற்கான கூடுதல் வழிகள்

ஐந்து பிரபலக் கேள்விகளைக் கேட்டு, அந்த உள்ளடக்கம் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதுடன், ஆன்லைனில் நல்ல மீடியா வாடிக்கையாளராக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கான சுயாதீனத் திறமையை வளர்த்துக்கொள்ள பதின்மவயதினருக்கு மற்றும் இளம் நபர்களுக்கு உதவ இன்னும் சில படிநிலைகள் உள்ளன.

உரையாடலைத் தொடர்தல்

மீடியா கல்வியறிவு வீட்டிலிருந்தே தொடங்குகிறது. இது ஒரு முறை செய்தால் அத்துடன் முடிந்து விடும் விசயம் அல்ல. பதின்மவயதினர் மற்றும் இளம் நபர்கள் ஆன்லைன் தகவல்கள் உலகை கையாளுவதற்கு பெற்றோர் தரப்பில் இருந்தும் நேரமும் முயற்சியும் பங்களிக்கப்பட வேண்டும். இதில் அவர்களையும் சேர்த்துக்கொண்டு, உரையாடல் போல் நிகழ்த்தினால் அது அவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். பின்வருவன போன்ற விஷயங்களை அவர்களுடன் பேசுங்கள்:

  • அவர்கள் ஆன்லைனில் யாரைப் பின்தொடர்கிறார்கள்?
  • அவர்கள் எந்த வகையான உள்ளடக்கத்தைப் பார்க்கிறார்கள் மற்றும் பகிர்கிறார்கள்?
  • அவர்கள் பார்க்கும் விஷயங்களை மதிப்பிடுவதற்கு என்னென்ன திறன்களைப் பயன்படுத்துகிறார்கள்?
  • நம்பமுடியாத தகவல்களைக் கண்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?
  • ஓர் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு முன் அதைப் பற்றி சிந்திக்க அவர்கள் நேரம் எடுத்துக்கொள்கிறார்களா?

மீடியா கல்வியறிவுக்கான பயிற்சிகள்

நம்பகமான ஆதாரங்களைக் கண்டறிவதற்கு உங்கள் பதின்மவயதினருடன் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி இதோ இங்கே. ஆன்லைனில் நீங்கள் காணும் ஆதாரங்கள் மற்றும் தகவல்களைச் சரிபார்ப்பதைப் பயிற்சி செய்ய இந்தச் செயல்பாடு உதவும்.

  • தகவல்களைக் கண்டறிய நீங்கள் அல்லது உங்கள் பதின்மவயதினர் பயன்படுத்தும் வலைதளம் அல்லது தளத்தைப் பார்வையிட முயற்சி செய்யவும்.
  • ஒன்றாகப் பார்க்க ஒரு கட்டுரை, வலைப்பூ, காணொளி அல்லது தகவல்கள் தரும் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • அது குறித்து பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: யார்? என்ன? எங்கே? ஏன்? அந்த உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, நம்பகமான தகவல்களைக் கண்டறிவதற்கான கட்டமைப்பை உருவாக்கவும்.

இது நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய விஷயம் ஆகும்.

இதற்கு நேரம் எடுக்கும், ஆனால் சிறிய பயிற்சி மற்றும் உங்கள் ஆதரவுடன், உங்கள் பதின்மவயதினர் ஆன்லைனில் தான் பார்க்கும் தகவல்களைப் பற்றி விமர்சிக்கத் தேவையான திறன்களைக் கற்றுக் கொள்ளலாம், மேலும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க உதவலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்