ஆன்லைன் கொடுமைப்படுத்துதலைக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள்

ஆன்லைனில் கொடுமைப்படுத்துதல். ஒரு நீடித்திருக்கும் பிரச்சினை

உங்கள் பதின்மவயதினரின் பள்ளியின் மதில் சுவர்களுக்குள் மட்டுமே கொடுமைப்படுத்துதல் அடங்கிவிடுவதில்லை. பல மாணவர்கள் தங்கள் வகுப்புத் தோழர்களுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆன்லைனிலும் அழுத்தம் அல்லது துன்புறுத்தலை உணரக்கூடும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்கள், உரை மெசேஜ்கள்,செயலிகள் அல்லது காணொளி கேம்கள் மூலமும் கூட ஆன்லைன் கொடுமைப்படுத்துதல் நிகழக்கூடும். ஒருவரை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல்களைப் பதிவிட்டு (அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல்) நேரடியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவது முதல் அல்லது தேவையற்ற அல்லது தீங்கிழைக்கும் நடத்தை என அனைத்தையும் கூட இது உள்ளடக்கியிருக்கலாம்.

ஆன்லைன் கொடுமைப்படுத்துதலைக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள்

ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலராக, இந்த உதவிக்குறிப்புகள் மூலம், உங்கள் பதின்மவயதினர் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவ முடியும் அத்துடன் அது அவர்களுக்கு நிகழ்ந்தால் ஆதரவாக இருக்க முடியும்.

இந்தப் பட்டியல் சர்வதேச கொடுமைப்படுத்துதல் தடுப்பு சங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

  • ஆன்லைனில் உங்கள் பதின்மவயதினரின் அனுபவங்களைப் பற்றிய உரையாடலை வெளிப்படையாக மேற்கொள்ளும் வகையில் வைத்திருங்கள். நல்லுறவு மற்றும் ஆதரவை முன்கூட்டியே கட்டமைப்பதன் மூலம், சம்பவங்கள் நிகழும்போது பதின்மவயதினர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்த நீங்கள் உதவலாம். அவர்கள் ஆன்லைனில் பார்த்த ஒரு விஷயத்தைப் பற்றிய புகாருடன் உங்களிடம் வரும்போது, ​​அதனை அசட்டையாய் ஒதுக்க வேண்டாம்.
  • உங்கள் பதின்மவயதினரின் ஆன்லைன் செயல்பாடு பற்றி மேலும் அறிக. உங்கள் பதின்மவயதினர் அணுகும் செயலிகள் மற்றும் வலைதளங்கள் உங்களுக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உங்களுக்கு கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தவும். உங்கள் பதின்மவயதினர் அடிக்கடி பயன்படுத்தும் தளங்களில் பெற்றோர் கருவிகள் அல்லது அமைப்புகளை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.
  • உங்கள் பதின்மவயதினருடனான நம்பிக்கை உணர்வை கட்டமைத்திடுங்கள். இணையப் பயன்பாட்டிற்கான தற்போதைய விதிகளை விளக்கி, அவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள். இளம் வயதினர் விதிகள் மீதான தங்கள் கருத்து இருப்பதாக உணரும்போது, அவர்கள் அவற்றை மதிக்கவும் பின்பற்றவும் வாய்ப்புகள் அதிகம்.
  • பதின்மவயதினரின் தொழில்நுட்பத்தை அகற்றப் போவதாக அச்சுறுத்த வேண்டாம். தொழில்நுட்பத்தை அகற்றப் போவதாக அச்சுறுத்துவதற்குப் பதிலாக, அதைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள் மற்றும் அதைத் தாங்களாகவே ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்வது எப்படி என்பது குறித்து உரையாடுங்கள்.
  • உங்கள் பதின்மவயதினர் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டு அசட்டையாக இருந்துவிட வேண்டாம். இளம் நபர் மீதான கொடுமைப்படுத்துதலின் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும். பதின்மவயதினர் உங்களிடம் பேச வரும்போது மதிப்பளித்து அவர்களது விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்வது முக்கியம். பிரச்சினை சிறியதாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றினாலும் கூட. அவர்களுடன் அமைதியாகவும் தெளிவாகவும் உரையாடுவது முக்கியம், மேலும் அவர்கள் கூறும் விஷயத்தை நிராகரித்துவிட வேண்டாம்.
  • உங்கள் பதின்மவயதினர் விரும்பும் திரைக்கு அப்பால் உள்ள விஷயங்களைச் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கவும். நிஜ வாழ்கையில் (IRL) நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இணைவதற்கு இசை, விளையாட்டு மற்றும் பிற பொழுதுபோக்குகள் சிறந்த வழிகளாகும்.

உங்கள் பதின்மவயதினர் கொடுமைப்படுத்துபவராக இருந்தால்

ஆன்லைன் கொடுமைப்படுத்துதலின் இலக்காக பதின்மவயதினர் இருக்கலாம் என்பது போல, மற்றவரை கொடுமைப்படுத்தும் ஒருவராகவும் அவர்கள் இருக்கக்கூடும். இது நிகழும்போது, ​​மற்றவர்களை எப்போதும் கனிவுடனும் மரியாதையுடனும் நடத்துவது குறித்த அந்தக் கடினமான உரையாடல்களை மேற்கொள்வது முக்கியம் ஆகும்.

உங்கள் பதின்மவயதினரின் கொடுமைப்படுத்தும் நடத்தை பற்றி அவர்களிடம் பேச உதவக்கூடிய சில குறிப்புகள் இங்கே உள்ளன:

  • அர்த்தமுள்ள உரையாடலுக்குத் தயாராகவும்: என்ன நடந்தது என்பது பற்றி, குறிப்பாக அவர்கள் தங்கள் நடத்தை மூலம் உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தால், உங்களுக்கு அதனைப் பற்றி யூகங்கள் இருக்கும். எதுவாயினும், இந்த யூகங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது முக்கியமானதாகும். சரியான நேரத்தையும் இடத்தையும் கண்டறிந்து, பின்னர் உரையாடலை மேற்கொள்ளுங்கள். அமைதியாக இருப்பதுடன் தீர்வுகளை நோக்கி விவாதத்தை வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • உரையாடலைத் தொடங்கி வைத்து, ஆதரவாக இருங்கள்: உங்களுடன் வெளிப்படையாகவும் உண்மையுடனும் இருப்பதற்கு உங்கள் பதின்மவயதினர் பாதுகாப்பாக உணர வேண்டியது அவசியமாகும். குறுக்கிடவோ விமர்சிக்கவோ வேண்டாம். அவர்கள் முழுக் கதையையும் சொல்ல அனுமதிக்கவும் பிரச்சனையைத் தீர்க்க நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவும். உங்கள் பதின்மவயதினரின் நடத்தையால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், யூகங்களைத் தவிர்க்கவும். நிலைமை எவ்வளவு தீவிரமானதாக உள்ளது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
  • நடந்தது என்ன என்பதைக் கண்டறியவும்: நன்றாக செவிசாய்த்து கேட்பவராக இருங்கள், இதனால் முடிந்தவரை அதிகத் தகவல்களை உங்களால் அறிந்துகொள்ள முடியும். உங்கள் பதின்மவயதினரின் இந்த நடத்தை புதியதா அல்லது நீங்கள் அறியாத வகையில் கடந்தகால நிகழ்வுகள் உள்ளனவா என அறியவும்.
  • நெறிகளைத் தெரியப்படுத்தவும்: கொடுமைப்படுத்துதல் நடத்தையானது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் உங்கள் பதின்மவயதினருக்குத் தெரிவிக்கவும். உறுதியாகவும், நிலையாகவும் இருக்கவும்.
  • தீர்வுகளைக் கண்டறியுங்கள்: மன்னிப்பு கேட்பதற்கு உங்கள் பதின்மவயதினரை ஊக்குவிக்கவும். மன்னிப்பை எழுத்துபூர்வமாக எழுதிட அல்லது வாய்மொழியாகச் சொல்வதற்குச் சரியான வார்த்தைகளைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு உதவவும். கொடுமைப்படுத்துதல் ஆன்லைனில் நிகழ்ந்திருந்தால், தொடர்புடைய பதிவுகளை உங்கள் பதின்மவயதினரை அகற்றுமாறு செய்யவும். பள்ளியில் கொடுமைப்படுத்துதல் நடந்திருந்தால், உங்கள் பள்ளியின் முதல்வரைப் போன்ற அதிகாரி ஒருவரிடம் விஷயத்தைக் கொண்டு செல்வதை கருத்தில் கொள்ளுங்கள். பள்ளியின் கொள்கை மீறல்கள் தொடர்புடைய எந்தப் பின்விளைவுகளிலும் பள்ளியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு உறுதியளியுங்கள்.

கொடுமைப்படுத்துதலைத் தடுக்கும் திறன்கள்

ஆன்லைன் கொடுமைப்படுத்துதலை நிறுத்த உதவுவதற்கு உங்கள் பதின்மவயதினருக்கு நீங்கள் கற்பிக்கக்கூடிய சில வழிகள் இங்கே உள்ளன. இந்தப் பட்டியல் சர்வதேச கொடுமைப்படுத்துதல் தடுப்பு சங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

  • ஒருவரிடம் கூறவும். ஆன்லைன் கொடுமைப்படுத்துதல் ஓர் அதிகாரத்தில் உள்ள நபரின் பார்வைக்கு அப்பால் நடைபெறலாம் என்பதால், நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் கூறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் அது நிகழ்ந்ததற்கான பதிவு இருக்கும்.
  • பதிலடி கொடுக்க வேண்டாம். ஆன்லைனில் கொடுமைப்படுத்துவதை நீங்கள் பார்த்தால், திரும்பவும் பதிலுக்கு ஏதாவது சொல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக, மெசேஜ்களை முடக்கவும் அல்லது அவற்றைப் படிப்பதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.
  • தொடர்புடைய தகவல்களை சேமிக்கவும். சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண உதவுவதற்கும், கொடுமைப்படுத்துதல் தொடர்வதிலிருந்து தடுப்பதற்கும் மெசேஜ்கள் அல்லது கருத்துகளைச் சேமிப்பதை உறுதிப்படுத்தவும்.
  • உடந்தையாக இருக்க வேண்டாம். அதன் சொந்த நோக்கத்திற்காக கொடுமைப்படுத்துதல் நிகழ்வுகளைப் பகிரவோ, முன்னனுப்பவோ வேண்டாம். இது சூழ்நிலைக்கு உதவியாக இருக்காது என்பதுடன் தீங்கைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக தீங்கைப் பரப்பக்கூடும்.
  • இணையத்தைப் பயன்படுத்தும் போது தனிப்பட்ட முறையில் இருங்கள். உங்களின் முகவரி அல்லது அலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர வேண்டாம்.
  • வலுவான தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்தவும். ஆன்லைன் செயலிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்க்கவும், எனவே உங்கள் பதிவுகளை நீங்கள் உத்தேசித்த பார்வையாளர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  • தெரியாத நபர்களிடமிருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். நீங்கள் கிளிக் செய்யும் இணைப்புகள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் போன்ற உங்களுக்குத் தெரிந்த மற்றும் நம்பத்தகுந்த நபர்களிடமிருந்து வந்தவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஆன்லைனில் ஆரோக்கியமான மற்றும் கனிவான நடத்தையை ஊக்குவிக்கவும்

இளைஞர்களுக்கான ஆரோக்கியமான ஆன்லைன் சமூகங்களைப் பேணுவதற்கு சிறந்த வழி என்பது நேர்மறையாகச் செயல்படுவதும், எதிர்மறையான விஷயங்களை ஊக்கப்படுத்தாமல் இருப்பதும் ஆகும்.

உங்கள் பதின்மவயதினர் ஆன்லைனில் ஒருவர் துன்புறுத்தப்படுவதைப் பார்க்க நேர்ந்தால், ஆதரவை வழங்க அவர்கள் சௌகரியமாக உணரும் வழியைக் கண்டறிய உதவுங்கள். அவர்கள் தனிப்பட்ட அல்லது பொது மெசேஜ்களை, அல்லது மக்களைக் கனிவுடன் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தும் பொதுவான அறிக்கையைப் பகிரலாம்.

உங்கள் பதின்மவயதினர் தங்கள் ஆன்லைன் சமூகத்தில் பகிரப்படும் நம்பத்தகுந்ததாகவோ துல்லியமாகவோ இல்லாத எந்தவொரு தகவல்களையும் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவர்கள் சௌகரியமாக உணர்ந்தால், அவர்கள் - மரியாதையுடன் - பதிவைத் திருத்தலாம்.

இளம் வயதினர் தங்களின் அன்றாட ஆன்லைன் செயல்பாடுகளில் கனிவுடனும் பச்சாதாபம் கொண்டவராகவும் இருப்பதன் மூலம், தங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சமூகங்களில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்.

மேலும் விஷயங்களைக் கண்டறிய, உங்கள் பதின்மவயதினரிடம் நீங்கள் வழக்கமாக இதுபோன்ற கேள்விகளைக் கேட்கலாம்:

  • ஆன்லைனில் ஒருவர் துன்புறுத்தப்படுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
  • உங்கள் ஆன்லைன் சமூகங்களில் கனிவுடன் நடந்துகொள்ள மக்களை ஊக்குவிக்க நீங்கள் செய்யக்கூடிய சில செயல்பாடுகள் யாவை?
  • ஒருவர் தற்செயலாக தவறான தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்தால் நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
  • அது துல்லியமானதாக இல்லை என்று நீங்கள் காட்டிய பிறகும் அவர்கள் பின்வாங்கவில்லை என்றால் என்ன செய்வது?

Instagram இல் உங்களுக்கும் உங்கள் பதின்மவயதினருக்கும் கொடுமைப்படுத்துதலைக் கையாள்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்க உதவக்கூடிய கருவிகளும் உதவி விவரங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்யக்கூடியவை:

  • ஒரு கணக்கை தனிப்பட்டதாக்குக: இயல்புநிலையாக, 16 வயதுக்குட்பட்ட பதின்மவயதினருக்கான Instagram கணக்குகள் அமெரிக்காவில் தனிப்பட்டதாக அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் பதின்மவயதினரின் கணக்கு தனிப்பட்டதாக இருந்தால், பின்தொடர்பவர்களின் கோரிக்கைகளை அவர்களால் அனுமதிக்கவோ மறுக்கவோ முடியும், மேலும் அவர்கள் பின்தொடர்பவர்களாக அனுமதித்தவர்கள் மட்டுமே அவர்களின் பதிவுகளைப் பார்க்க முடியும். அமெரிக்காவில், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Instagram கணக்குகள் பொதுவில் காட்டப்படுபவையாக தொடங்குகின்றன, அதாவது அவர்களின் சுயவிவரத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். தனியுரிமை அமைப்புகளில் இதை எளிதாக மாற்றலாம்.
  • உங்கள் சுயவிவரத்தின் தெரிவுநிலையைக் கட்டுப்படுத்துதல்
  • தனியுரிமை அமைப்புகள்
  • அவர்கள் தங்கள் நேரடி மெசேஜ்களைக் கட்டுப்படுத்த உதவுங்கள்: நேரடி மெசேஜ்கள் (நேரடி மெசேஜ்கள்) சமூக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வதற்கான வழியை வழங்குகின்றன. தனியுரிமை அமைப்புகளைப் பொறுத்து, "அனைவரும்,', நண்பர்கள்' (நீங்கள் பின்தொடரும், மீண்டும் உங்களைப் பின்தொடரும் படைப்பாளர்கள்) அல்லது 'ஒருவரும் இல்லை' என்பதிலிருந்து நேரடி மெசேஜ்களை அனுப்பலாம் மற்றும் பெறலாம். அவர்களின் நேரடி மெசேஜ் அமைப்புகள் அவர்கள் விரும்பும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்களைப் பின்தொடராதவர்களிடம் இருந்து வரும் கருத்துகள் அல்லது நேரடி மெசேஜ்களை ஃபில்ட்டர் செய்து மறைக்கவும்: கருத்து ஃபில்ட்டர்கள் இயக்கப்பட்ட நிலையில் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகள் தானாகவே மறைக்கப்படும். உங்கள் பதின்மவயதினரும் தனிப்பயன் குறிச்சொற்களின் பட்டியலை உருவாக்கலாம், எனவே அந்தச் சொற்கள் அடங்கிய கருத்துகள் தானாக மறைக்கப்படும். உங்கள் தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்வதன் மூலம் பொதுவாக உங்கள் காணொளிகளில் யார் கருத்து தெரிவிக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
  • உங்கள் கருத்துகள் மற்றும் நேரடி மெசேஜ் கோரிக்கைகளை வரம்பிடுதல்
  • மெசேஜ்களை ஃபில்ட்டர் செய்யவும்
  • குறிப்பிடல்கள் மற்றும் குறியிடல்களை நிர்வகிக்கவும்: ஆன்லைனில் மற்றவர்களை இலக்கிட அல்லது கொடுமைப்படுத்த மக்கள் குறியிடல்கள் அல்லது குறிப்பிடல்களைப் பயன்படுத்தக்கூடும். உங்கள் பதின்மவயதினரை அவர்களை யார் Instagram இல் குறியிடலாம் அல்லது குறிப்பிடலாம் என்பதை நிர்வகிக்க எங்களின் கருவிகளைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கவும்.
  • தங்கள் சுயவிவரத்தில் கட்டுப்பாடுகளைச் சேர்க்க அவர்களை ஊக்குவிக்கவும்: ‘வரம்பிடுதல்’ அம்சத்தின் மூலம், அவர்கள் தங்கள் கணக்கை தேவையற்ற கலந்துரையாடல்களிலிருந்து அமைதியான, நேர்த்தியான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். வரம்பிடுதல் இயக்கப்பட்டதும், தங்கள் பதிவுகளில் உள்ள அவர்கள் வரம்பிட்ட நபரின் கருத்துகள் அந்த நபருக்கு மட்டுமே தெரியும். கருத்தை அங்கீகரிப்பதை, நீக்குவதை அல்லது நிராகரிப்பதை அவர்கள் தேர்வுசெய்யலாம்.
  • வரம்பிடுதல்
  • பின்தொடர்பவரைத் தடுக்கவும்: உங்கள் பதின்மவயதினர் ஒருவரிடமிருந்து பதிவுகள் அல்லது கருத்துகளைப் பார்க்க விரும்பவில்லை என்றால், அந்தப் பின்தொடர்பவரை அவர்கள் எந்த நேரத்திலும் அகற்றலாம் அல்லது அவர்களின் உள்ளடக்கத்தைப் பார்வையிடுவதிலிருந்து அல்லது அவர்களுக்கு மெசேஜ்களை அனுப்புவதிலிருந்து அந்தக் கணக்கை நிரந்தரமாக தடுக்கலாம்.
  • பயனர்களைத் தடுத்தல்
  • வன்கொடுமையைப் புகாரளிக்கவும்: பதிவுகள், கருத்துகள் அல்லது கொடுமைப்படுத்துபவர்களைப் புகாரளிப்பதில் உங்கள் பதின்மவயதினருக்கு உதவ எங்களது உள்ளமைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் அறிக

ஆன்லைன் கொடுமைப்படுத்துதலைக் கையாளும்போது, ​​உங்களுக்கும் உங்கள் பதின்மவயதினருக்கும் ஆதரவளிக்கும் பிற Meta கருவிகளைப் பற்றி மேலும் அறிக:

தனியுரிமை அமைப்புகள்

வன்கொடுமை குறித்த உதவி விவரங்கள்

தொடர்புடைய தலைப்புகள்

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக